லுங்கி ஆண்களின் பொது உடையா!?பத்தவச்சது இங்கே,

பத்திகிட்டது இங்கே!(இதை படிச்சிட்டு வாங்க)
இப்போ வெடிக்கிறது நம்ம வலையில


************************

ஒரு பெண் சொல்லவேண்டிய சொல்லவிருந்த மனதுக்குள் ஆறாத ரணமாய் இருந்த என்னுடைய கருத்துகளை அண்ணன், வலை உலக மன்னன் கிழையகவி ஸாரி இளையகவி இங்கே குமுறி இருக்கிறார்.

என்ன செய்தால் இந்த லுங்கி காலாச்சாரம் ஒழியும் என சிந்திக்கையில்

1) லுங்கி உற்பத்தி செய்பவரோ அல்லது விற்பனை செய்வரோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் மேலும் அவர் லுங்கி அணிந்த ஆண்களுடன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கலாம்.

2) மனைவி பார்க்கும் நேரமெல்லாம் கணவன் லுங்கி அணிந்திருந்தால் கணவனுக்கு குமட்டில் ஒரு குத்தும், இடுப்பில் ஒரு எத்தும் விட அனுமதி அளிக்கலாம்.


3) முழு நேரமும் லுங்கியுடன் இருக்கும் ஆணை மனைவி விவாகரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு எனவும் மேற்ப்படி வழக்கு தொடரும் போது விசாரணை ஏதும் இன்றி விவாகரத்து வழங்கலாம் எனவும் , மனைவிக்கு ஆயிரம் நைட்டியை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு போடலாம்.

4) லுங்கி அணியும் ஆண்களுக்கு இனிமேல் சிகரெட் கட் செய்யப்படும் எனவும் சரக்கடிக்க தடை எனவும் அறிவிக்கலாம்.

5) லுங்கி அணியும் ஆண்கள் வீட்டிற்க்கு உள்ளே வருவது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கலாம்.

6) லுங்கி கிழிந்து போணாலும் மீண்டும் மீண்டும் அணியும் ஆண்களின் வீட்டில் உள்ள அனைத்து லுங்கிகளையும் அரசு கையகப்படுத்தும் என அறிவிக்காலாம்.அப்பா, அண்ணா, தம்பி, மொத்த ஆண்வர்க்கங்களே தயவு செய்து வீட்டில் தூங்கும் போதும் அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!..... தயவுசெய்து.........

54 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

தமிழ்மணத்தில் இணையவில்லை!
யாராவது ஹெல்ப் பண்ணுங்க நண்பர்களே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பெண்ணிய பிதா மகன் வாலு,
வாழுக!

கபிலன் said...

"4) லுங்கி அணியும் ஆண்களுக்கு இனிமேல் சிகரெட் கட் செய்யப்படும் எனவும் சரக்கடிக்க தடை எனவும் அறிவிக்கலாம்."

ஹா...ஹா...இது தாங்க வால்ஸ் கொஞ்சம் இடிக்குது!

அபி அப்பா said...

எதிர் பதிவா? கிழிஞ்சுது போங்க நைட்டியும் கைலியும்:-))))

மனுநீதி said...

//தமிழ்மணத்தில் இணையவில்லை!
யாராவது ஹெல்ப் பண்ணுங்க நண்பர்களே!//

வால், தமிழ்மணம் அட்மினுக்கு ஒரு மெயில தட்டி உடுங்க.

SUBBU said...

இல்லை :)))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு,
டவுசர் பாண்டிகளுக்கு ஏதும் தண்டனை இல்லையா? உங்க கோர்டுல!

தமிழ் அமுதன் said...

ஆண்கள் எல்லாம் நைட்டி போட்டுகிட்டா? எப்டி இருக்கும்!

நட்புடன் ஜமால் said...

பதிவ தூக்கிட்டு மீண்டும் பப்ளிஷ் பன்னிட்டு தமிழ்மணத்திற்கு அனுப்பி பாருங்கள்.

மேவி... said...

லுங்கி, நைட்டி எல்லாம் பின் நவீன உடைகள்......

இனிமேல் ஆண்கள் எல்லோரும் கோவணமும், பெண்கள் கிராமத்து ஸ்டைல் ல "புடவை மட்டும்" அணியும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.....

ஆபீஸ் ல dress code யாக இதை கொண்டு வந்தால் நல்ல இருக்கும்

கபிலர் கூட இதை பற்றி எழுதிருக்கார்.....
(எந்த கபிலர்ன்னு ன்னு கேட்க கூடாது..)

குசும்பன் said...

கடைசி போட்டோவில் கைலி இல்லை என்றால் பஸ் ஸ்டாண்டில் ஒட்டி இருக்கும் மூலம் பெளவுத்திரம் போஸ்டர் மாதிரி இருந்திருக்கும்!

மேவி... said...

"வால்பையன் said...
தமிழ்மணத்தில் இணையவில்லை!
யாராவது ஹெல்ப் பண்ணுங்க நண்பர்களே!"

எதுக்கு ......
லுங்கி சரியாக அணிவதற்கு க்கா ?????

ஹி ஹி ஹி ஹி ஹி

யாத்ரீகன் said...

>> மூலம் பெளவுத்திரம் போஸ்டர் மாதிரி இருந்திருக்கும் <<<

:-)))))))))))))))))))

Anbu said...

நல்ல எதிர்பதிவு வால்..

கலக்குங்க..

VIKNESHWARAN ADAKKALAM said...

வேட்டி ஓகே தானே :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//VIKNESHWARAN said...
வேட்டி ஓகே தானே :))//


வேட்டி ஓகே தான்
வெட்டி தான் ஆகாது!

அப்துல்மாலிக் said...

வால்
கைலிலே உள்ள சுதந்திரம் அனுபவித்தால்தான் தெரியும்

கபிலன் எந்தளவிற்கு வெறுத்துப்போய்ருக்காருனு நல்லாவேதெரியுது

pudugaithendral said...

கைலி கட்டுங்க வேணாம்னு சொல்லலை.
அதையும் ராஜ்கிரண் ஸ்டைலில் மடித்து கட்டுதல், முட்டி வரை மட்டும் ஏற்றி கட்டுதல்னு இருப்பதை குறைச்சுகிட்டா சரி.

பாக்கிறவங்க கண்ணு பனால் ஆயிடுமேன்னு நினைப்பே இருக்காதோ!!!

pudugaithendral said...

வீட்டில் தூங்கும் போதும் அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!.....//

என்ன ஒரு வில்லத்தனம். எங்க ஃப்ரெண்டை பத்தி இப்படி சொல்லிட்டீங்க. போராட்டம் வெடிக்கும். ஹைதையில் பந்த் நடக்கும்.

இப்படிக்கு
கார்பரேட் கம்பரின் ரசிகர் மன்றம்
ஹைதை கிளை

ஆயில்யன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பெண்ணிய பிதா மகன் வாலு,
வாழுக!/

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

Anonymous said...

நல்ல வேலை நான் ஷாட்ஸ் தான் யூஸ் பண்ணுறேன்...
பொசுக்குனு சிகரட் , தண்ணி கொடுக்க மாட்டேனுட்டங்கன்னா...

தீப்பெட்டி said...

:))

கலையரசன் said...

என்ன பாஸ் இது?
கூட்டத்துல கைலியை அவுத்துடீங்களே!!
(கைலி கட்டாம திரியிறவங்களுக்கு ஒரு பதிவ போடுங்க!)

நந்தாகுமாரன் said...

லுங்கி ஒரு காலத்தில் எனக்கு மிகப் பிடித்த உடையாக இருந்தது ... சொய்ங் என்று மேலே தூக்கிக் கொண்டு ஒரு சில காரியங்களை சௌகரியமாக முடித்ததும் சொய்ங் என்று கீழே இறக்கிவிட்டு நல்ல பிள்ளை போல நகர்ந்துவிடலாம் ... ஆனால் இப்போது பட்டன் வைத்த எலாஸ்டிக் ஷார்ட்ஸ் தான் மிகப் பிடிக்கிறது ... சௌகரியமாக இருக்கிறது

நர்சிம் said...

வால்..உங்க பெயர்ச்சொற்கள்,வினைச்சொற்கள் கமெண்ட்டுக்கே இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன்.. கலக்கல் போஸ்ட் தல..

உங்களிடம் ஒரு வேண்டுகோள்..அந்த கால்பந்தாட்டம் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து.. நினைவிருக்கிறதா? அது போல ஒரு கதை மீண்டும் எழுத வேண்டும் என வேண்டுகிறேன்..


//புதுகைத் தென்றல் said...
வீட்டில் தூங்கும் போதும் அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!.....//

என்ன ஒரு வில்லத்தனம். எங்க ஃப்ரெண்டை பத்தி இப்படி சொல்லிட்டீங்க. போராட்டம் வெடிக்கும். ஹைதையில் பந்த் நடக்கும்.

இப்படிக்கு
கார்பரேட் கம்பரின் ரசிகர் மன்றம்
ஹைதை கிளை
//

அமைதி அமைதி.. அலைகடலென திரளும் அனைவரும் அமைதி..

pudugaithendral said...

அமைதி அமைதி.. அலைகடலென திரளும் அனைவரும் அமைதி..//

தல சொல்லிட்டதால் அம்புட்டு பேரும் அமைதியா கலைஞ்சு தூங்கப் போறோம்.

Raju said...

அடங்கொய்யால..!
இந்தாளு இப்ப எல்லாம் கவுஜக்கிதான் எதிர் கவுஜ எழுதுனாப்புல..!
இப்போ பதிவுக்குமா,...?
இந்தா யூத்து தொல்ல தங்க முடியலடா சாமி..!
அப்டியே அந்த கிழைய ஸாரி இளையகவியையும் "பொடாவுல" உள்ள தூக்கிப் போடுங்கய்யா..!

Athisha said...

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி..?

Unknown said...

//.. அதிஷா said...

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி..?..//

கோர்த்தது கோதாவரியா..??

//.. குசும்பன் said...
கடைசி போட்டோவில் கைலி இல்லை என்றால் பஸ் ஸ்டாண்டில் ஒட்டி இருக்கும் மூலம் பெளவுத்திரம் போஸ்டர் மாதிரி இருந்திருக்கும்!..//

எனக்கும் அப்படித்தான் தோன்றியது..!!

வீணாபோனவன் said...

அப்படி பார்த்தால், வேஷ்டிக்குத் தான் முதலில் தடை விதிக்கனும். இங்கே கேரள நண்பர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் :-) ஏன்னா ஒரு ஒப்பன் சிஸ்டம்டா சாமி!.

-வீணாபோனவன்.

மேவி... said...

அந்த காலத்தில் பர்மாவில் இருந்து தப்பி இங்கே தமிழகம் வந்தவார்கள் ..... அவர்கள் கலாச்சாரத்தில் இருக்கும் லுங்கியை இங்கே பரப்பி விட்டார்கள். அதற்குமுன் எல்லோரும் வேட்டி தான்.....

லுங்கி பிரபலம் ஆனது ஒரு ஐம்பத்து வருடங்களுக்குள் தான்.....

லுங்கி என்பது இருபலர்களும் அணியும் ஒரு உடை......

இதை ஆண்கள் உடை என கருத கூடாது

மேவி... said...

"அதிஷா said...
கிழிஞ்சுது லம்பாடி லுங்கி..?"


சார் லம்பாடி லுங்கி தானே கிழிந்தது .....

உங்க லுங்கி கிழிந்த மாதிரி பீல் பண்ணுரிங்க .......

நீங்க போய் அதை தைக்க going அஹ

மேவி... said...

"வீணாபோனவன் said...
அப்படி பார்த்தால், வேஷ்டிக்குத் தான் முதலில் தடை விதிக்கனும். இங்கே கேரள நண்பர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் :-) ஏன்னா ஒரு ஒப்பன் சிஸ்டம்டா சாமி!.

-வீணாபோனவன்."


தைத்த வேஷ்டி யின் வடிவமே லுங்கி சார் ........

ஓபன் சிஸ்டம் ல எல்ல ஆண்களும் கவர்ச்சி கண்ணனாய் இருப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்

மேவி... said...

வேஷ்டி அளவுக்கு லுங்கியில் கவர்ச்சி இல்லை ; அதனால் எல்லோரும் லுங்கி யை சப்போர்ட் செய்ய வேண்டும்

மேவி... said...

"அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பெண்ணிய பிதா மகன் வாலு,
வாழுக!"


அன்று ஒரு ராஜா மோகன் ராய் .....

இன்று எங்கள் வாலு
he he he

மேவி... said...

"ஜீவன் said...
ஆண்கள் எல்லாம் நைட்டி போட்டுகிட்டா? எப்டி இருக்கும்!"

அருமையாய் இருக்கும்

Anonymous said...

browsing க்ளோஸ் பண்ணிட்டு திரும்பவும் ட்ரை பண்ணுங்க.

வீட்டில் தூங்கும் போதும் அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!.....//


தமாசு..தாமசு..

Anonymous said...

இன்றைய டென்சன் வாழ்க்கைக்கு இந்த மாதிரி பதிவு ரொம்ப தேவை.. தேங்க்ஸ் வாலு

ஜீவா said...

வால் .வால் . ரொம்ப வாலு

துளசி கோபால் said...

இது இது இதத்தான் எதிர்பார்த்தேன்

சூப்பர் போங்க:-))))))0

ப்ரியமுடன் வசந்த் said...

எத்தனை பொண்ணுகளோட வாழ்த்துக்கள்

பெற்றீரோ தெரியவில்லை

சரியான எதிர் பதிவு

கடைக்குட்டி said...

ம்ம்.. எதிர் பதிவு நான் போடலாம்னு இருந்தேன்...

உங்க அளவுக்கு கலாசி இருக்க முடியாது..

செமங்க..

ஆனா கடைசில நர்சிம் அண்ணன தாளிச்சிட்டீங்களே????

:-)முடியல...

பட்டாம்பூச்சி said...

ada edhirpadhiva?
kalakkal ponga :)

Rajeswari said...

பத்தவச்சதுக்கும்.பத்திக்கிட்டதுக்கும் எதிர்பதிவா இங்க..
//அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!..... //

ஹா ஹா


பதிவு கலக்கல் தல

நசரேயன் said...

நான் டவுசர்க்கு மாறிட்டேன், பதிவை படிச்ச உடனே

VISA said...

nighty apuram lungi varaikum vanthaachu apadiyea koncham ulla poei kalakunga thalaivarkalaa

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா சண்டை இழுத்து உடரீங்கப்பா?

rapp said...

:):):) super

Subash said...

ஃஃநர்சிம் said...

வால்..உங்க பெயர்ச்சொற்கள்,வினைச்சொற்கள் கமெண்ட்டுக்கே இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன்.. கலக்கல் போஸ்ட் தல.. ஃஃ

நானும் இதையேதான் சொல்ல வந்தேன்.

வேலையில் ஒன்னுமே சரியாவரல. டென்சன் + வெறுபபோடு பதிவு திறந்து பார்த்தேன். எல்லாம் ஒடிப்பொட்டு. இனி இன்னும் கொஞ்சம் சந்தோசமா வேல செய்யலாம். நன்றிங்க

ராஜ நடராஜன் said...

கடைசிப் படத்துல இருக்கிற அண்ணாத்தே ஸ்டைல்ல ஒரு ரெடிமேடு லுங்கி கடையில தொங்குறதப் பார்த்தேன்.

கல்லூரி விடுதிகளின் நாட்களை தவிர்த்து இந்த லுங்கி விசயம் நமக்கு ஒத்துக்கிறதில்லை.

கிரி said...

//வால்பையன் said...
தமிழ்மணத்தில் இணையவில்லை!
யாராவது ஹெல்ப் பண்ணுங்க நண்பர்களே!//

ஒரு வேளை கைலிய கட்டிட்டு போஸ்ட் போட்டு இருந்தா சரியா வந்து இருக்குமோ! :-)))))))


ஒரு ரணகளமே நடந்து இருக்கு ...

//புதுகைத் தென்றல் said...
கைலி கட்டுங்க வேணாம்னு சொல்லலை.
அதையும் ராஜ்கிரண் ஸ்டைலில் மடித்து கட்டுதல், முட்டி வரை மட்டும் ஏற்றி கட்டுதல்னு இருப்பதை குறைச்சுகிட்டா சரி.

பாக்கிறவங்க கண்ணு பனால் ஆயிடுமேன்னு நினைப்பே இருக்காதோ!!!//

ஹா ஹா ஹா


//கலையரசன் said...
என்ன பாஸ் இது?
கூட்டத்துல கைலியை அவுத்துடீங்களே!!
(கைலி கட்டாம திரியிறவங்களுக்கு ஒரு பதிவ போடுங்க!)//

:-)))))))))))

அருண் உங்க போஸ்ட் கூட சேர்ந்து இதில் உள்ள கமெண்ட்ஸ் படித்து சிரித்து ஒரு வழி ஆகிட்டேன் :-))))

செம காமெடி

SUFFIX said...

ஹலோ, ஹிங்கி, பிங்கி...எல்லோரும் கேட்டுக்கோங்க...... லுங்கி லுங்கித்தான்!!

வால்பையன் said...

நன்றி ஜோதிபாரதி!
நன்றி கபிலன்
நன்றி அபி அப்பா
நன்றி மனுநீதி
நன்றி சுப்பு
நன்றி ஜீவன்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி மேவி
நன்றி குசும்பன்
நன்றி யாத்ரீகன்
நன்றி அன்பு
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி புதுகைதென்றல்
நன்றி ஆயில்யன்
நன்றி இங்கிலீஷ்காரன்
நன்றி தீப்பெட்டி
நன்றி கலையரசன்
நன்றி நந்தா
நன்றி நர்சிம்
நன்றி டக்ளஸ்
நன்றி அதிஷா
நன்றி பட்டிகாட்டான்
நன்றி வீணாப்போனவன்
நன்றி மயில்
நன்றி ஜீவா
நன்றி துளசிகோபால்
நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி கடைகுட்டி
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி ராஜேஷ்வரி
நன்றி நசரேயன்
நன்றி விசா
நன்றி ஸ்ரீதர்
நன்றி ராப்
நன்றி சுபாஷ்
நன்றி ராஜநடராஜன்
நன்றி கிரி
நன்றி ஷ‌ஃபிக்ஸ்.

பித்தனின் வாக்கு said...

galin pavadai designil mayangi anngal kandu piditha design sarakku lungi, enakku puditha dress athan, neenga sattam kondu vanthalum nanga thirutu lungi kattuvam

!

Blog Widget by LinkWithin