நீ தான் நண்பன்!
உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
எனது பேச்சினைக் கேட்டு
மண்டை காய வேண்டியதில்லை!
உன் சரக்கைப் போல
உனது பேச்சு எனக்கு
போதை தராது
உனக்கும் எனக்குமிடையே என்றும்
கருத்து வேறுபாடுகளில்லை
எனது சரக்கு உனக்கும்
உனது சரக்கு எனக்கும் போதும்
சரக்கு மாற்றி நான் அடித்தாலும்
உனது சரக்கு தான் என்னிடம்
ராஜபோதை தந்து நிற்கும்.
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் சரக்கை ஓசியில் தரும்வரை.


ஒரிஜினல் கவிதைக்கு சொந்தகாரர்(இந்தவாரம் மாட்டியது)

65 வாங்கிகட்டி கொண்டது:

அகநாழிகை said...

வால்பையன்,
மிகவும் அருமையான கவிதை.
ரசித்துப் படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

//உன் சரக்கைப் போல
உனது பேச்சு எனக்கு
போதை தராது//

சிறப்பாகயிருக்கிறத.(சூப்பர் என்பதைத்தான் இப்படி சொல்லியிருக்கிறேன்)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ரமேஷ் வைத்யா said...

அப்பிடி ஆட்றா மணியைன்னானாம். சவாசு..!

ers said...

தல... ஒரு முடிவு எடுத்தாச்சு போல...
எனக்கும் கவித... எழுத தெரியுண்டா...
போட்டுப்பாக்கலாம்... வாடா... வாடான்னு பல பேரை போட்டிக்கு கூப்பிடுற மாதிரி இருக்கு.

என்னமோ வால்... சரக்கடிச்சா மாதிரியே இருக்கு.

ers said...

சிறப்பாகயிருக்கிறத...|||||


அகநாழிகை டாப்பு.

Bleachingpowder said...

//உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை//

ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசலைன்னா அப்புறம் அந்த சரக்குக்கு என்ன மரியாதை

Bleachingpowder said...

//உன் சரக்கைப் போல
உனது பேச்சு எனக்கு
போதை தராது//

ஏறினதும் இறங்கிடும்

Bleachingpowder said...

//எனது பேச்சினைக் கேட்டு
மண்டை காய வேண்டியதில்லை!//

அப்படி என்ன தல பேசுவீங்க

Bleachingpowder said...

அட இப்ப தான் ஒரிஜினல் படிச்சேன்..சூப்பர்...ஆனா உங்க அளவுக்கு இல்ல :)

Gowripriya said...

ha ha.. nice :)

Suresh said...

//எனது சரக்கு உனக்கும்
உனது சரக்கு எனக்கும் போதும்
சரக்கு மாற்றி நான் அடித்தாலும்//

ஹா ஹா

Anonymous said...

எல்லா கவிதைகளையும் சரக்கோட ஒப்பிடும் சரக்கு மாஸ்டர் வாலு வாழ்க

Suresh said...

/உனது சரக்கு தான் என்னிடம்
ராஜபோதை தந்து நிற்கும்.
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் சரக்கை ஓசியில் தரும்வரை.//

பெனல் டச் சூப்பர்

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆஹா சரக்கு சரக்கு... படத்தக் காட்டி ஆசையா ஏத்துறிங்களே...

நசரேயன் said...

நீங்க தான் என் தெய்வம்.. சரக்கு ஞாபகம் வந்து விட்டுது எனக்கு

VISA said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

மொழி - சரக்கு - எது சிறந்தது

நல்லாவே இருக்கு ரெண்டுமே

சரக்கடிப்பது என்பது நண்பர்கள் கூடினால் தான் சிறக்கும்

VISA said...

வால் பையன் அவர்களே பின்னி விட்டீர்கள்.
உங்கள் கவிதையை நான் வேறு ஒரு கோணத்தில் ஆராய்ந்தேன். இதமான மழை பெய்யும் மாலை பொழுதில் தேனீரும் லேப்டாபுமாக உங்கள் கவிதையை யோசித்தேன்.

சராசரி கவிஞர்களிடமிருந்து நீங்கள் எப்படி வேறுபட்டு விரிகிறீர்கள் என்பது கண்டு ஆச்சரியத்தில் விழுந்தேன். தேநீர் கொட்டியது . லேப்டாப் சரிந்தது.
நீங்கள் பலே கில்லாடி தான். மெய் பொருள் மறைத்து எப்படி உங்களால் பொய் பொருள் தர முடிகிறது.
ஒட்டகூத்தருக்கு இணையாக கூத்தடித்த பெருமானே....
நான் ஆராய்ந்தது இது தான்.


கவிதையில் "சரக்கு" என்ற வார்த்தைக்கு பதிலாய் ------ என்று போட்டு பார்த்தேன்...அடடா....ஆச்சரிய குறி.

சிப்பு வருதய்யா சிப்பு.

ஜெட்லி... said...

//உன் சரக்கை ஓசியில் தரும்வரை//


எவன் சிக்குனான் இன்னிக்கு?

தேவன் மாயம் said...

உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
எனது பேச்சினைக் கேட்டு
மண்டை காய வேண்டியதில்லை///

சரக்குக் கவிஞரிடம்
சரக்கு அதிகம்!!

அக்னி பார்வை said...

///உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் சரக்கை ஓசியில் தரும்வரை.
////

:)))))))))))

வினோத் கெளதம் said...

//ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசலைன்னா அப்புறம் அந்த சரக்குக்கு என்ன மரியாதை//

அதனா..!!

ஆ.சுதா said...

எதிர் கவிதை கலக்கல்

சென்ஷி said...

வர வர எதிர்கவிதை ஏகாம்பரம் ஆகிடுவீங்க போலருக்குதே...

கலக்கல் கரெக்டா சேர்ந்திருக்குது :)

சென்ஷி said...

மீ த 25 ;)

அ.மு.செய்யது said...

வாசு கவிதையை படிச்சிட்டு உங்க பின்னூட்டத்த பாத்து தான் வந்தேன்.

என்னா வில்லத்தனம் ??

செந்தில்குமார் said...

ஆகமொத்தம் சரக்கப்பத்தி எழுது பல பேரோட வெள்ளி இரவுக்கான பிளான் உறுதி பண்ணிட்டீங்க வால் !!

ஹ்ம்ம்... நல்ல அனுபவிச்சு எழுதின மாதிரி தெரியுதே... :)

செந்தில்குமார் said...

ஆஹா.. இப்போ தான் வாசு சாரோட கவிதைய படிச்சேன்.. .அதுக்கு இப்படி ஒரு எசப்பாட்டா... :))

RAMYA said...

நல்ல எதிர் கவிதை! Super :))

மாதவராஜ் said...

மொழியில்லாமல் சரக்கு இல்லை...
சரக்கு இல்லாமல் மொழியும் இல்லை
இரண்டும் இல்லாமல் கவிதையுமில்லை....
(இந்தப் பக்கம் வந்தாலே.... நானும் இப்படி ஆகிவிடுகிறேன்...)

Prabhu said...

சில மாதங்களாக நானும் உங்கள் வலை பூவில் வாசம் செய்கிறேன், பத்தில் ஓரி பதிவு கண்டிப்பாக சரக்கை பற்றி இருக்கிறது!!, எனக்கு அதை படிக்கையில் ஆனந்தம் மிகுதி!! :)
எனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லையெனினும் , நான் உங்கள் இந்த கவிதையை ரசிக்கிறேன், மேற்கத்திய நாடுகளில் எல்லாம் ரொம்ப டீசெண்டாக தண்ணி அடிப்பார்கள் என்பதெல்லாம் பொய், அவர்களும் நம்ம ஆட்களை விட செம கலீஜ்!!!.

Mahesh said...

ழொம்ப ழழ்ழா இழுழ்ழு.....

இவன் said...

வாங்க தண்ணியடிப்போம் தல... ஆனா இந்த கவிதை நான் சொன்னதா இருக்கட்டும்.... சைட் டிஸ் நான் வாங்குறேன்...

புதியவன் said...

எதிர் கவிதை அருமை...

Arun Kumar said...

உன் சரக்கைப் போல
உனது பேச்சு எனக்கு
போதை தராது

சூப்பர் கவிதை கவிதை

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.. இந்த வார சரக்குக் கவிதைக்கு ஊறுகாய் வாசுவா? அசத்தல் தல..

Anonymous said...

வாலுக்கும் காதல் வந்துவிட்டது.....சரக்கு மேல.....அதான் முறுக்கா எழுதி இருக்காரு.......அத சுருக்கா நறுக்குன்னு நொறுக்கி இருக்காரு.....

டி.ஆர். rangeக்கு முயற்சி பண்ணேன்.....

ஈஸ்வரன் said...

கொடுமைடா சாமி. இந்த கவிதை எழுதிய நேரத்தில் நீங்கள் வழாக்கம்போல் பல பின்னுட்டங்கள் போட்டிருக்கலாம். They are far better than this so called kavithai.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

చాలా బాకుంతి.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சாரி,மப்புல தமிழுக்கு பதிலா தெலுங்குல டைப் பண்ணிட்டேன்.

Tech Shankar said...This post Dedicated to Valpaiyan

வெற்றி-[க்]-கதிரவன் said...

சரக்குபோட்டு எழுதாத
கவிதையும்

சரக்கடிக்கும் பொழுது
கிடைக்காத சைடிசும்

குப்பை தொட்டியை
கோவிலாக கொண்டு
குடியிருக்க கடவது

****
காச்சின சரக்கோ
ஸ்காட்ச் சரக்கோ
போதையில்
பேதமில்லை

****
அடித்தபின்
போதையும்
காலையில்
தலைவலியும்
ஓல்டு மாங்க்கும்

*****

உன்னை இகழ்கிறார்கள்
இவர்களுக்கு எப்படி
தெரியும் உனக்கும்
எனக்குமான நட்பு

*****
போதை தரும்
பதிவை இடும்
கண்ணா

பின்னூட்ட
மன்னா

வாழ்க நீ பல்லாண்டு
வாழ்த்துவது
சரக்கு

-போதையுடன் பித்தன்

வசந்த் ஆதிமூலம் said...

நண்பா எங்கடா இருக்க நீ ? சரக்கு பத்தி கவித சொல்றது மாதிரி அடுத்த நாள் காலையில வர ஹாங் ஓவர் க்கும் ஒரு ஐடியா கொடு நண்பா .

நர்சிம் said...

வந்தா இப்பிடியா? எப்பிடிய்யா? கலக்கல் கலக்கல்

Thamiz Priyan said...

கலக்கல் வால் அண்ணே! மிக்ஸிங் செமய்யா இருக்கு!

நேசமித்ரன் said...

சூப்பருங்க !
தலை தட்டி புரை ஏறுகையில்
நினைக்கும் உறவெல்லாம்
அம்மா டாட்டர்

தலை தட்டி நுரை ஊறும்
உன் உறவுதான் டக்கர் குவார்ட்டர்

ஏதோ என் பங்குக்கு..
கி கி கி

ஸ்ரீ.... said...

அருமையான கவிதை. அடிக்கடி எழுதுவீர்களா?

ஸ்ரீ....

selventhiran said...

தமிழின் சிறந்த பத்து எழுத்தாளர்களுள் ஒருவராமே... வாழ்த்துக்கள்! வால்!

பீர் | Peer said...

50. சரக்கு கவிதை என்றதும், இது நமக்கான சரக்கு (சப்ஜக்ட்) என்று ஒதுங்க நினைத்தேன். சுவாரசியத்தில் படித்து முடித்ததும், அந்த சரக்கில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட ஆவல்.
அதுதான் வால்.

Vishnu - விஷ்ணு said...

எப்படி அண்ணா இப்படி.

Poornima Saravana kumar said...

உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
//
நல்ல நட்பு:):)

Poornima Saravana kumar said...

ஆமா நீங்க இந்த சரக்கு கவுஜைய எப்போ மாத்துவீங்க?

ஊர்சுற்றி said...

கலக்கலான கரு மாற்றம்!!!

நன்று நன்று.... ))))

லொள்ளு சபா said...

அருமை அருமை..

லொள்ளு சபா said...

அருமை அருமை..

Unknown said...

எப்படி எழுதினாலும், அத கொண்டுவந்து சரக்குலையே கலக்கறிங்க..

அருமை தல..

Thamira said...

செம.. ரசித்தேன் வால்பையன்.!

sakthi said...

அருமை அருமை

என்ன ஒரு கவிதை

வாழ்க உங்கள் தமிழ்பற்று+சரக்குபற்று

ny said...

சரக் சரக் சதக்!!

வால்பையன் said...

எதிர்வினைக்கு முதல் வினை தந்தமைக்கு நன்றி அகநாழிகை

*****************

ரமேஷ் வைத்யா said...
அப்பிடி ஆட்றா மணியைன்னானாம். சவாசு..!//

குருவே சரணம்

********************

tamilcinema said...
தல... ஒரு முடிவு எடுத்தாச்சு போல...
எனக்கும் கவித... எழுத தெரியுண்டா...
போட்டுப்பாக்கலாம்... வாடா... வாடான்னு பல பேரை போட்டிக்கு கூப்பிடுற மாதிரி இருக்கு.//

அப்படியெல்லாம் இல்ல தல!
ஒரே மாதிரி மொக்கை போட்ட போரடிச்சிடும் அதான்

வால்பையன் said...

//Bleachingpowder said...
//உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை//
ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசலைன்னா அப்புறம் அந்த சரக்குக்கு என்ன மரியாதை//

பேசுனா போதை இறங்கிறுமே, அப்புறம் யாரு வாங்கி தருவா

*************************

Bleachingpowder said...
அட இப்ப தான் ஒரிஜினல் படிச்சேன்..சூப்பர்...ஆனா உங்க அளவுக்கு இல்ல :)//

ஒரிஜினல நாம என்னைக்கு மதிச்சிருக்கோம்
:)
*************************

Gowripriya said...
ha ha.. nice :)//

நன்றி தோழி

வால்பையன் said...

நன்றி சுரேஷ்

நன்றி மயில்
நான் சரக்கு மாஸ்டரா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி தமிழர்ஸ்
இணைத்தேன்

நன்றி விக்னேஷ்வரன்
வாங்க வாங்க

நன்றி நசரேயன்
நீங்களும் வாங்க

நன்றி சி(ன்)னா ஐயா

நன்றி விசா
என்னேரமும் அதே நினைப்பில் இருப்பீர்களோ

நன்றி ஜெட்லி

நன்றி தேவன்மயம்
சரக்கு இப்போ ஸ்டாக் இல்லையே

வால்பையன் said...

நன்றி அக்னிபார்வை

நன்றி வினோத்கெளதம்

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

சென்ஷி said...
வர வர எதிர்கவிதை ஏகாம்பரம் ஆகிடுவீங்க போலருக்குதே...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி அ.மு.செய்யது

நன்றி செந்தில்குமார்

நன்றி ரம்யா

நன்றி மாதவராஜ்

நன்றி பிரபு
சரியா சொன்னிங்க

நன்றி மகேஷ்
கொஞ்சம் அதிகமோ

வால்பையன் said...

நன்றி இவன்

நன்றி புதியவன்

நன்றி அருண்குமார்

நன்றி கார்த்திகைப்பாண்டியன்

நன்றி தமிழரசி

நன்றி ஈஸ்வரன்

நன்றி ஸ்ரீதர்
:)

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி பித்தன்
அருமை தலைவா
எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டிங்க!

நன்றி வசந்த் ஆதிமூலம்

நன்றி நர்சிம்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி நேசமித்ரன்

வால்பையன் said...

நன்றி மேவி

நன்றி ஸ்ரீ

நன்றி செல்வேந்திரன்

நன்றி சில்பீர்

நன்றி விஷ்ணு

நன்றி பூர்ணிமாசரண்

நன்றி ஊர்சுற்றி

நன்றி லொள்ளு சபா

நன்றி பட்டிகாட்டான்

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி சக்தி

நன்றி கார்டின்
பெயர் சரிதானே!

!

Blog Widget by LinkWithin