குவியல்! (19.06.09)

சென்ற வார ஆனந்தவிகடனில் மூன்று பதிவர்களின் சிறுகதையும், குறுங்கதைகளும் வெளியாயிருந்தது, இனி ஆனந்தவிகடன் என்றாலே நாம் தான் என்றாகிவிட்ட நிலையில் சும்மா சும்மா வாழ்த்து சொல்வது, சொறிந்து கொள்வதை விட கேவலமாக இருக்கும் என்பதால் நிறுத்திவிட்டேன், ஆனால் இந்த வாரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனின் ”அழுக்கின் அழகு” குறுங்கதையை படித்தவுடன் அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என தோன்றியது.

கதை என்ற பெயரில் எதையாவது கிறுக்கி தள்ளாமல் இது போன்ற கதைகளை எல்லா பதிவர்களும் எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம், குறுங்கதைகள் மேல் ஒரு மரியாதை கிடைக்கும்,

********************************

சென்ற வாரம் தோழர் அதிஷாவின் சகோதரி திருமணம் கோவையில் இனிதே நடந்தேறியது, வாரநாட்களில் வந்து விட்டதால் நிறைய நண்பர்கள் செல்ல முடியவில்லை என்பதை அறிந்தேன், நானும் அப்படியே!

வரும் வாரம் நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் மதுரையில் நடக்க இருக்கிறது. சுற்றமும் சூழமும் வந்து வாழ்த்த நண்பரே அனைவருக்கும் பத்திரிக்கை நேரில் சென்றும், தபாலில் அனுப்பியும் அழைத்துள்ளார், இங்கேயும் அதே சூழ்நிலை தான், புதன்கிழமை திருமணம்

இருதம்பதியினருக்கும் நமது வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்வோம்

*********************************

சென்ற ஜூன் பத்தாம் தேதி எனக்கு ஏகப்பட்ட போன், அனைவரும் பதிவர்கள்,
அதிர்ச்சிக்குள்ளாக்கும் கேள்வியோடு, அந்த கேள்வி ”சரக்கடிக்கிறத விடப்போறிங்களாமே”
என்னாடா இது வம்பாப்போச்சுன்னு கேட்டா, எழுத்தாளார் வாமு.கோமு அவரது ப்ளாக்கில் இப்படி ஒரு திரியை கிள்ளி போடிருக்கிறார். அது வதந்தி நம்பாதிங்கன்னு நண்பர்களுக்கு புரியவைக்கும் முன்னர் ஒரு ஃபுல்லு காலியா போச்சு!

**********************************

நான் வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே அபூர்வம், அப்படியே வந்தாலும் அது எதாவது வாழ்த்து பதிவாக இருக்கும், ஆனாலும் தினமும் நூறுக்கு மேல் ஹிட்ஸ் வருவது ஆச்சர்யமாக இருக்கும், பிறகு தான் தெரிந்தது சென்னையை சேர்ந்த ஒரு பதிவருக்கு ரீடர் என்றால் என்னவென்றே தெரியாது போல, நான் எதாவது பதிவு போட்டிருக்கிறேனா என்று தினமும் நூறுதடவை எட்டிபார்த்து எனக்கு ஹீட்ஸ் தருகிறார், அவருக்கும், ரீடர் என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கும்,

http://www.google.co.in/reader/


இதை கிளிக் பண்ணுங்க, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஐடியில் லாகின் பண்ணுங்க, add a subscription என்ற இடத்தில் கிளிக் செய்து தேவையான உரலை போட்டு சேமித்து கொள்ளுங்கள், அவர் என்ன பதிவு போட்டாலும் உங்களுக்கு மிஸ் ஆகாது, நெருங்கிய நண்பர் என்றால் அவருக்கு ப்லோயர் ஆகிவிடுங்கள், அதுவும் உங்களுக்கு ரீடரில் அப்டேட் ஆகிவிடும்,
இல்லை தினமும் நூறுதடவை எட்டி பார்த்து ஹிட்ஸ் கொடுப்பேன் என்றால் அதற்கும் ஒரு நன்றி.(இதுவரைக்கும் நூறு நன்றி சொல்லியிருப்பேனா உங்களுக்கு)

*****************************

சென்ற குவியலில் ப்ளாக்கை சேமிக்க தவறுதலாக டெம்ப்ளெட் சேமிக்கும் வழியை கொடுத்து விட்டேன்.

dashboard--> settings--> basic--> blogtools--> export blog

இது தான் சரியான முறை, சேமித்து வைத்து கொள்ளுங்கள்
(என்ப்ளாக் 15MB இருக்கிறது)

*****************************
இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்
(கவிதையாமா)


அது இருத்தலின் ரகசியம்
இது தொலைதலின் ஏக்கம்

அது இயல்பின் உண்மை
இது நிறம் மாறும் தன்மை

அது வெற்றிடமாய் நிரம்பிகிறது
இது வெற்றிடத்தை நிரப்புகிறது

அது இயல்பின் உச்சகட்டம்
இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
நம் வாழ்க்கையை போல

எழுதியது
ஹிஹிஹி நான் தான்
16 oct 2008 வலைச்சரத்தில்

51 வாங்கிகட்டி கொண்டது:

SUBBU said...

1

SUBBU said...

//ஒரு ஃபுல்லு காலியா போச்சு!
//


:))))))))))))

SUBBU said...

/நான் எதாவது பதிவு போட்டிருக்கிறேனா என்று தினமும் நூறுதடவை எட்டிபார்த்து //

:((((((((((

SUBBU said...

//நான் எதாவது பதிவு போட்டிருக்கிறேனா என்று தினமும் நூறுதடவை எட்டிபார்த்து //

நானும்ந்தான்
:((((((((((

Mahesh said...

வர வர குவியல் சூப்பராயிட்டு வருது !!

Raju said...

நீங்க ஆதி அங்கிளயா சொல்றீங்க அங்கிள்..!

Anonymous said...

குவியல் அவியலாயிருந்தது...எல்லாம் நற்செய்திகளே.....

நையாண்டி நைனா said...

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் உங்களுக்கு நன்றி நண்பா..

கார்க்கிபவா said...

:))

Rajeswari said...

நல்ல குவியல்..

☀நான் ஆதவன்☀ said...

//டக்ளஸ்....... said...

நீங்க ஆதி அங்கிளயா சொல்றீங்க அங்கிள்..!//

ஆமா டக்ளஸ் அங்கிள்..ஐய்ய இது கூட தெரியல இந்த அங்கிளுக்கு

மணிஜி said...

”குவியல்” குற்றாலக் குளியல்...

அப்பாவி முரு said...

வர வர குவியல் சூப்பராயிட்டு வருது !!

Thamira said...

நன்றி வாலண்ணே.. அது அழுகு இல்லைண்ணே.. அழகு.! ஹிஹி..
அப்புறம் குவியல் வழக்கம் போல.!

வால்பையன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி வாலண்ணே.. அது அழுகு இல்லைண்ணே.. அழகு.! ஹிஹி..
அப்புறம் குவியல் வழக்கம் போல.!//


மாத்திட்டேன் அண்ணே!
சுட்டிகாட்டியமைக்கு நன்றி!

கே.என்.சிவராமன் said...

4 வாழ்த்துகள் :-)

1. ஆதிக்கு.

2. அதிஷாவின் சகோதரிக்கும், மாப்பிள்ளைக்கும்.

3. கார்த்திகைப்பாண்டியனின் சகோதரிக்கும், மாப்பிள்ளைக்கும்.

4. தினமும் பதிவு எழுதாமலேயே நூறு ஹிட்ஸ் பெறும் அன்பு வாலுக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வெண்பூ said...

//
dashboard--> settings--> basic--> blogtools--> export blog

//

நல்ல ஆப்ஷன்.. நன்றி வால். உடனே பேக் அப் எடுத்துட்டேன்.. (ஹி.ஹி.. 165 கேபி தான் என்னோடது)

Anonymous said...

ஒரு பாசக்கார பய இருந்த உங்களுக்கு பிடிக்காதா??

நூறு தடவை பார்த்த என்ன..

Anbu said...

:-))

Anbu said...

//ஒரு ஃபுல்லு காலியா போச்சு!
//


புல் மட்டும் தானா அண்ணா.

கம்மியா இருக்கே..

நான் வேணும்னா ஸ்பான்ஸர் பண்ணட்டுமா..

Anbu said...

குவியல் சூப்பர் வால்

மணமக்களுக்கு இந்த சிறுவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தினேஷ் said...

நான் கூட நீங்க சரக்க விட்டுவீங்களோனு ஒரு நிமிடம் மலைச்சு போய்ட்டேன்.. சரக்கு இல்லாம பதிவுக்கு சரக்கு எப்படி வரும் ...

Unknown said...

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்..

கலக்கல் குவியல்..

வசந்த் ஆதிமூலம் said...

வாலு.... ஹிட்ஸ் அடிக்கிற வித்தைய கொஞ்சம் எங்களுக்கும் சொல்லி கொடுப்பா... அப்படியே சிங்கிளா புல் அடிக்கிற டெக்னிக்கையும் சொல்லி கொடுப்பா.

கிரி said...

//சும்மா சும்மா வாழ்த்து சொல்வது, சொறிந்து கொள்வதை விட கேவலமாக இருக்கும் என்பதால் நிறுத்திவிட்டேன்,//

அருண் நல்ல காரியம் செய்தீங்க..

தேவன் மாயம் said...

வரும் வாரம் நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் மதுரையில் நடக்க இருக்கிறது. சுற்றமும் சூழமும் வந்து வாழ்த்த நண்பரே அனைவருக்கும் பத்திரிக்கை நேரில் சென்றும், தபாலில் அனுப்பியும் அழைத்துள்ளார், இங்கேயும் அதே சூழ்நிலை தான், புதன்கிழமை திருமணம்///

அப்ப வரலியா?

சுந்தர் said...

கவிதை நல்லா இருக்கு அண்ணே!!!

நந்தாகுமாரன் said...

கவிதை நல்லாயிருக்கே

Maximum India said...

கவிதை ரொம்ப நல்லாவே இருக்கு.

வாழ்த்துக்கள்.

நன்றி.

Arun Kumar said...

நல்லா குவியலை குவிச்சு இருக்கீங்க..
கவிதை கவிதை அருமை

சென்ஷி said...

நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

கவிதை கதி கலங்க வைக்குது ;)

நல்லாருக்கு தலைவா!

Suresh said...

இருதம்பதியினருக்கும் வாழ்த்துக்கள்

Suresh said...

//ஒரு ஃபுல்லு காலியா போச்சு!
//


அப்போ விடவில்லை ஹீ ஹீ ;) விட்டு தான் பார் அட இங்கயும் பார் வருது ;0

Suresh said...

நான் பரிசல் மற்றும் கேபிள் கதை படித்தேன் ஆனால் அதி கதை படிக்கவில்லை இதோ படித்து விடுகிறேன்..

பரிசல் கதை படிச்சிட்டு லாஸ்ட் லைன் புரியாம அப்புறம் கதை திரும்ப படிச்சு ஆஹா இங்க தான் பஞ்ச் ஆ அந்த குருக்கள் தான் அப்பாவா...

Suresh said...

கேபிள் கதை ;) இளமையோடு ஒரு மெல்லிய சோகம் சூப்பர்

நசரேயன் said...

குவியல் கும்முது

அன்புடன் அருணா said...

கவிதை நல்லருக்கே! கவிதை கூட எழுதறதுண்டா???

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் வால்

கலையரசன் said...

வயிற்றை நிறைக்க அவியலு...
ஹிட்சை குவிக்க குவியலு...
ம்..ம்...

மேவி... said...

antha blogger naana???

அ.மு.செய்யது said...

ஆனந்த விகடன் மட்டுமில்ல..இப்ப குங்குமம் கூட நம்ம ஆதிக்கம் தான்.

கடந்த வாரங்கள்ல வெளிவந்த நம்ம தேவா,நசரேயன் பத்தி கூட எழுதிருக்கலாமே !!!

பரிசல்காரன் said...

//பரிசல் கதை படிச்சிட்டு லாஸ்ட் லைன் புரியாம அப்புறம் கதை திரும்ப படிச்சு ஆஹா இங்க தான் பஞ்ச் ஆ அந்த குருக்கள் தான் அப்பாவா..//

நன்றி Suresh...!

வாலு... வெச்சுக்கறேன்யா ஒன்ன!

R.Gopi said...

கதி கலங்கும் கவிதை படைத்த அண்ணன் வால் அவர்கள் வாழிய பல்லாண்டு....

நேரம் கிடைக்கும் போது, இங்கே வந்து பார்க்கவும்.

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

பட்டாம்பூச்சி said...

இருதம்பதியினருக்கும் வாழ்த்துக்கள்.

Prabhu said...

உங்க ப்ளாக்கே 15mbனா எங்களோடதுலாம் 15kbதான் வரும் போலயே.

Tech Shankar said...

நான் வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே அபூர்வம், அப்படியே வந்தாலும் அது எதாவது வாழ்த்து பதிவாக இருக்கும், ஆனாலும் தினமும் நூறுக்கு மேல் ஹிட்ஸ் வருவது ஆச்சர்யமாக இருக்கும், பிறகு தான் தெரிந்தது சென்னையை சேர்ந்த ஒரு பதிவருக்கு ரீடர் என்றால் என்னவென்றே தெரியாது போல, நான் எதாவது பதிவு போட்டிருக்கிறேனா என்று தினமும் நூறுதடவை எட்டிபார்த்து எனக்கு ஹீட்ஸ் தருகிறார், அவருக்கும், ரீடர் என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கும்,

s u p e r.... technology post

pudugaithendral said...

present

நட்புடன் ஜமால் said...

இருதம்பதியினருக்கும் நமது வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்வோம்\\


வாழ்த்துகள்!.

cheena (சீனா) said...

2458 KB காட்டுது என்னோட பிளாக்

மணமக்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள் -

வால்பையன் said...

நன்றி சுப்பு

நன்றி மகேஷ்

நன்றி ட்க்ளஸ்

நன்றி தமிழரசி

நன்றி நையாண்டிநைனா

நன்றி கார்க்கி

நன்றி ராஜேஸ்வரி

நன்றி நான் ஆதவன்

நன்றி தண்டோரா

நன்றி அப்பாவி முரு

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி பைத்தியகாரன்

நன்றி வெண்பூ!

நன்றி மயில்

நன்றி அன்பு

வால்பையன் said...

நன்றி சூரியன்

நன்றி பட்டிகாட்டான்

நன்றி வசந்த ஆதிமூலம்

நன்றி கிரி

நன்றி டாக்டர் தேவன்மயம்

நன்றி தேனீ-சுந்தர்

நன்றி நந்தா

நன்றி மேக்ஸி இந்தியா

நன்றி அருண்குமார்

நன்றி சென்ஷி

நன்றி சுரேஷ்

நன்றி நசரேயன்

நன்றி அன்புடன் அருணா!

நன்றி T.V.Radhakrishnan

நன்றி கலையரசன்

நன்றி மேவீ

நன்றி அ.மு.செய்யது

நன்றி பரிசல்காரன்

நன்றி கோபி

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி பப்பு

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி புதுகைதென்றல்

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி சீனா ஐயா!

!

Blog Widget by LinkWithin