தல போல வருமா..!.(மீண்டும் எதிர்வினை)

வலையுலகம் வந்து இரண்டு வருடங்களுக்கு அருகில் ஆனாலும் இதுவரை எனக்கு "பாகச"வில் ஒரு பொறுப்பு கூட கிடைக்கவில்லை, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இன்று காலை உணவருந்தாமல் அரைமணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டேன், மனமிறங்கிய சென்ஷி அண்ணன் அவர்கள், தலயின் சில கவிதைகளை கொடுத்து அதை கவுஜயாக மாற்ற சொன்னார்!
அதை இங்கே கொடுத்திருக்கிறேன், நண்பர்களாக பார்த்து ஏதாவது பதவி போட்டு கொடுங்கள்.

********************************


மூலம்(மூலம்னா மூலக்கவிதை இருக்குமிடம்னு அர்த்தம்)

******************************

உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!

000

உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீவாங்கி கொடுத்த
சரக்கைவிட நீ அடித்த
சரக்கு காஸ்ட்லியென்று
தெரிந்து கொண்டேன்.

000

வாந்தியெடுக்காமல்
சரக்கடிக்கதெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு,
நம்ப மறுக்கும்கூமுட்டைகளுக்கு
வாந்தியை மட்டுமே
காட்டமுடிகிறது
நான் மப்பில் இருக்கிறேனென்று.

00

வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.

000

சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.

**************************

53 வாங்கிகட்டி கொண்டது:

ப்ரியமுடன் வசந்த் said...

//சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.//

ஒரு சரக்கு சரக்கடிக்கிறது

என்னே ஒரு கவுஜ

பின்னிட்டீங்க போங்க.....

SUBBU said...

உங்கள திருத்த முடியாதுடி, உங்ககள திருத்தவே ம்ழியாது #@!$~^&(&%^$#

சென்ஷி said...

வாலு கலக்கிட்டீங்க.. எல்லாமே அசத்தல் ரகம்..

பாகசவின் புதிய கவுஜை வள்ளலே
உனக்கான கோடிப்பொறுப்புகள்
கொட்டிக்கிடக்கின்றன..

நீ இருக்கும் இடத்திலிருந்தும்
நீ நம் தலயின் தளபதி
நீ வந்து சேர்ந்த பொழுதில்
கிடைத்ததோர் நிம்மதி

வாழ்க தல!
வளர்க அவர் தொண்டர்!!

g said...

///சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.///


மானங்கெட்ட மானிடருக்கே இவ்ளோவா...?

குரு said...

//உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!//

கலக்கிடீங்க பாஸ்!!!

கண்ணா.. said...

//உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!//

கவுஜ...கவுஜ..

எனக்கு எல்லாம் புரியுது.ஆனா பாகச ன்னா என்ன?

சென்ஷி said...

// Kanna said...

//உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!//

கவுஜ...கவுஜ..

எனக்கு எல்லாம் புரியுது.ஆனா பாகச ன்னா என்ன?//

ஆ! அவமானம்.. வெட்கம்..

அகில உலகத்தின் மிக மூத்தப்பதிவரான எங்கள் பாலபாரதியை லாய்க்கும் ங்கம் என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு பதிவரா!

ஆ!. வேதனை :)

இராகவன் நைஜிரியா said...

// வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது. //

கவுஜயின் உச்சம்.

உங்களுக்குத்தான் முதல் பதவி “பாகச” வில். எந்த பதவி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்க....

Unknown said...

//வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நீங்க இதை எழுதும்போது தண்ணீர் குடிச்சிட்டு தான் எழுதீனிங்க?

பாகச ? புரியலேயே...

சென்ஷி said...

// இராகவன் நைஜிரியா said...

// வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது. //

கவுஜயின் உச்சம்.//

உண்மைதான் ராகவன்.

வாலை பாராட்ட தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லை. அரபி கற்றுக்கொண்டு வருகிறேன் :)

கண்ணா.. said...

// சென்ஷி said...

அகில உலகத்தின் மிக மூத்தப்பதிவரான எங்கள் பாலபாரதியை கலாய்க்கும் சங்கம் என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு பதிவரா!

ஆ!. வேதனை :) //

சென்ஷி அண்ணா...பச்ச மண்ணு தெரியாம கேட்டுடுச்சு...அதுக்காக என்னை சங்கத்துல சேர்க்க மாட்டோம்னு மட்டும் சொல்லிறாதீங்க....

சென்ஷி said...

//பாகச ? புரியலேயே.../

அடச்சே! வரலாற மறுபடியும் எழுத வேண்டியதாயிருக்கும் போலருக்குதே :))

Anonymous said...

ஞாபகப் படுத்திட்டாங்களே...


//உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீவாங்கி கொடுத்த
சரக்கைவிட நீ அடித்த
சரக்கு காஸ்ட்லியென்று//
என்னத்தைச் சொல்ல...

Anonymous said...

பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கேன், சிரிப்பு அடக்க முடியலை...

சென்ஷி said...

// Kanna said...

// சென்ஷி said...

அகில உலகத்தின் மிக மூத்தப்பதிவரான எங்கள் பாலபாரதியை கலாய்க்கும் சங்கம் என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு பதிவரா!

ஆ!. வேதனை :) //

சென்ஷி அண்ணா...பச்ச மண்ணு தெரியாம கேட்டுடுச்சு...அதுக்காக என்னை சங்கத்துல சேர்க்க மாட்டோம்னு மட்டும் சொல்லிறாதீங்க....//

என்ன வார்த்த சொல்லிப்புட்டே நீயி...

நீ இங்க ஒரு கமெண்டு போட்டப்பவே உனக்கு பாகசவுல ஒரு சீட்டு ஒதுக்கியாச்சு. அதான் பாகச சிறப்பு..

தெரிஞ்சுக்கோ.. தல புகழ் பாடு :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தலை சுத்துது.மப்பு ஓவராயிடுச்சு போல .

SUBBU said...

//அகில உலகத்தின் மிக மூத்தப்பதிவரான எங்கள் பாலபாரதியை கலாய்க்கும் சங்கம் என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு பதிவரா!//

யாருப்பா அந்த பாலபாரதி ??????????

கிரி said...

//அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இன்று காலை உணவருந்தாமல் அரைமணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டேன், //

:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதையே சரக்காய்.. சரக்கே கவிதையாய்..தல.. நீங்க எங்கயோ போய்ட்டீங்க

Unknown said...

ஒவ்வொரு கவுஜையும் அருமை..

சரியான மொக்க..

பதி said...

:))))))))))))

Suresh Kumar said...

வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.///////////////


கலக்கல் மொக்கை

Anonymous said...

தள,

கவிதையெள்ளாம் என் அரிவுக்கு எட்டாது, நகைச்சுவையா எதாவது எலுது,

நீ அட்டெண்ட் பன்னின சென்னைப் பதிவர் சிந்திப்பு பத்தி எலுதேன்.

( டீ குடிச்சது கொசுகடிச்சது பத்தி பல சென்னைப் பதிவர்கல் எலுதியதைப் படித்திர்கிறேன். நள்ள காமெடியா இருக்கும்.)

சொள் அலகன்.

இராகவன் நைஜிரியா said...

//சென்ஷி said...

// இராகவன் நைஜிரியா said...

// வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது. //

கவுஜயின் உச்சம்.//

உண்மைதான் ராகவன்.

வாலை பாராட்ட தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லை. அரபி கற்றுக்கொண்டு வருகிறேன் :) //

அப்படியே மாண்டரின் கத்துகிட்டு, அதிலேயும் பாராட்டிடுங்க..

பட்டாம்பூச்சி said...

ஆ......ஊ......ஈ....
இது கூட கவிதையாங்கண்ணா?
சும்மா சும்மா :)

Athisha said...

கவிதை படிச்சு போதை ஆகி விட்டதால்.. மிக்ஸ்டு ஊருகாய்க்கு ஆதிமூலம் பதிவுக்கு செல்கிறேன்

வாழவந்தான் said...

ஒயே மப்பா கீதுபா..
'பாகச' அப்டீனா இன்ன அழ்தம்பா?

அப்துல்மாலிக் said...

//வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.

//

ஹா ஹா ரசிச்சது...

வடிவேலு கனக்கா பாகெட் வாட்டர் குடிப்பாராக்கும்

கவுஜைக்கு தண்ணீயா
தண்ணீக்கு கவுஜயா

நல்லாயிருக்கு தல (வால்)

Anbu said...

படித்ததில் பிடித்தது..

\\வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது\\\

அ.மு.செய்யது said...

//வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.//

ஹா..ஹா...எதிர்கவுஜ எக்ஸ்பர்ட்டே !!!! கலக்கல்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நாள் முழுவதும்
பிட்டிங் செய்கிறேன்
கட்டிங்குக்காக.

வாந்தி
காட்டிகொடுத்தது
மிக்ஸ்சிங்கில்
இலக்கண பிழை.

சரக்கடிப்பதன்
தீமைகளை
என்மனவியிடம் கேளுங்கள்
நன்மைகளை
என்னிடம் கேளுங்கள்.

அடிப்பது நீங்கள்
அழிவது நீங்கள்
திட்டுவது மட்டும்
என்னை
சரக்கு

குடிகாரன் பேச்சி
விடிந்தால் போச்சி
விடிவதற்கு முன்னே
சரக்கு அழைக்கிறது
அவப்பெயர் கூடாதென்று

-போதையுடன் பித்தன்

சிவக்குமரன் said...

///வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.///

ஹா ஹா ஹா அருமை

தினேஷ் said...

/சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.//

ஆவ்வ்வ்வ்வ்வ் , மானிட்டரே ராவா இறங்குதா .. அப்புறம் வயிறு டரியல் ஆயிடாதா ?

வியா (Viyaa) said...

கலக்கிட்டீங்க :)

cheena (சீனா) said...

அன்பின் வாலு

அருமை அருமை கவுஜ அருமை

பாகச விற்கு நீ தான் தலைவன்

உன்பங்கு என்பங்கை ஏளனம் செய்கிறது
அடித்த சரக்கு கொடுத்த சர்க்கினை விட காஸ்ட்லி
மப்பில் இருப்பதை நிரூபிக்க வாந்தி
கனியிருக்க காய் கவர்ந்த விதமாய் தண்ணீர் தீர்ந்து விட்டது
மானிட்டர் ராவாய் ......

தூள் கெளப்பிட்டே வால்

Sanjai Gandhi said...

அதைவிட இதான் சூப்பரு.. நிறைய எதிர்பார்க்கிறோம்.. :))

Vishnu - விஷ்ணு said...

"பார்" போற்றும் கவிதை.

நசரேயன் said...

கவுஜ...கவுஜ.. எல்லாமே எனக்கு பிடித்த இடங்கள், அட டாஸ்மாக் தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

"வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது."

நல்ல காமெடி

ஜெட்லி... said...

என்னங்க டாஸ்மாக்ல உக்காந்து சரக்கு அடிக்கும் போது
எழுதுனிங்களா?
நல்ல இருக்கு.

Beski said...
This comment has been removed by the author.
Beski said...

அனைத்தும் அருமை.

//சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.//
இதற்குள் பல அர்த்தங்கள் இருக்கும் போல இருக்கு... இது மட்டுமல்ல, எல்லாத்துலயும்தான்... இதுக்குனே தனியா உரை எழுதலாம் போல இருக்கே...

பாகச ல சேர தகுதிகள் என்னென்ன?

சென்ஷி said...

//பாகச ல சேர தகுதிகள் என்னென்ன//

இங்க கமெண்டு போட்டாச்சுல்ல.. அப்ப உறுப்பினர் ஆகிட்டீங்கன்னு தான் அர்த்தம்! :))

கீழை ராஸா said...

பதிவுலகிற்கு வந்த சோதனையா..?

சரக்கடித்து வந்த
கிரக்கத்தில் நீ தந்த
கவிகண்டு பதிவர்கூட்டம்
டாஸ்மார்க் நோக்கி...
இது தான் நீயூட்டன் விதியோ..?

மப்பில் நீ தந்தாய் கவி
மயங்கியது நாங்கள்...

Beski said...

ஐ....
கமெண்ட் போட்டுட்டேன், பாத்துகுங்கப்பா...
நானும் மெம்பர்தான்... நானும் மெம்பர்தான்...

வினோத்குமார் said...

இப்பவே போதை ஆயிடுச்சு

Bleachingpowder said...

:))) அனுபவிச்சு எழுதியிருக்கீங்க தல. வார வாரம் எதிர்பார்க்கிறோம்

Joe said...

//
சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.
//
அண்ணே, சைடிஷ் ஷேர் பண்ணுவீங்களா?

அய்யய்யோ, அடிக்காதீங்க, அடிக்காதீங்க!
நானே தனியா சரக்கும் சைடிஷும் வாங்கிக்கிறேன்.

வால்பையன் said...

நன்றி பிரியமுடன்.........வசந்த்

நன்றி சுப்பு
என்ன திட்டுறிங்க!

நன்றி சென்ஷி
பதவிக்காக தான் எல்லாம்! நான் மட்டும் விதிவிலக்கா!

நன்றி ஜிம்ஷா

நன்றி குரு

நன்றி கண்ணா

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றி தினேஷ்
சரக்கு பத்தி எழுத சொன்னா தூக்கத்துல கூட எழுதுவேன்

நன்றி pukalini

நன்றி மயில்

நன்றி ஸ்ரீதர்

நன்றி கிரி

வால்பையன் said...

நன்றி கார்த்திகை பாண்டியன்

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி பதி

நன்றி சுரேஷ்குமார்

நன்றி சொள் அலகன்

நன்றி பட்டாம்ப்பூச்சி

நன்றி அதிஷா

நன்றி வாழவந்தான்

நன்றி அன்பு

நன்றி அ.மு.செய்யது

நன்றி பித்தன்
சூப்பர் தல! கலக்கீட்டிங்க!

நன்றி இரா.சிவக்குமரன்

நன்றி சூரியன்
எங்களுக்கு ஒன்னும் ஆவாது

வால்பையன் said...

நன்றி வியா
உங்க கவிதையையும் ஒரு நாளைக்கு கலாய்க்கனும்

நன்றி சின்னா ஐயா

நன்றி சஞ்சய் அங்கிள்

நன்றி விஷ்ணு

நன்றி starjan

நன்றி ஜெட்லீ

நன்றி எவனோ ஒருவன்

நன்றி கீழை ராஸா

நன்றி வினோத் குமார்

நன்றி ப்ளீச்சிங்பவுடர்

நன்றி ஜோ!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அடேங்கப்பா! 'சரக்கு', அப்பிடின்னு சொன்னவுடன் எவ்வளவு பேர்டா சாமி!
நான் 52 வது.

Beski said...

//நன்றி வியா
உங்க கவிதையையும் ஒரு நாளைக்கு கலாய்க்கனும்//

அப்போ பேசாம பாபாகச (பாரபட்சம் பாக்காம கலாய்ப்பவர் சங்கம்) னு ஒன்னு ஆரம்பிச்சிருங்க... எல்லாரையும் கலாய்க்கலாம்... நீங்களே தலைவரா ஆய்டலாம், (தலைவராகனும்னா நம்மளே சங்கம் ஆரம்பிச்சாத்தான் உண்டு), அப்டியே ஐடியா குடுத்த எனக்கும் ஏதாச்சும் பதவி குடுத்தீங்கன்னா நானும் உங்க பேரச் சொல்லி கலாய்க்க வசதியா இருக்கும்.

!

Blog Widget by LinkWithin