நடிகர்கள் உண்ணாவிரதம்!! 3அழைக்கும் முன்னரே ராதாரவிக்கு பதட்டம். அவர் மன்சூர் அலிகான்.
மன்சூரின் நக்கலுக்கு தான் சரியான கைத்தட்டல். பெரிதாக உணர்சிவசப்படுவார் என ராதாரவி முன்னரே எச்சரிக்கை விடுத்ததும்,மைக்கின் முன் வந்தவுடன் பேச முடியாத ஊமை போல் நடித்து அசத்தினார். பின்னர் என் சகோதரனின் துயரத்தை பேசகூடமுடியவில்லை என்று சூடாக பேசினார். ஆவேசமாக பேச கூடாது என்ங்கிரீர்களே,பின் ஏன் சினிமாவில் கதாநாயகன், வில்லனை அடிக்க வேண்டும். ஐயா ஐயா நீங்க ரொம்ப நல்லவரு தயவுசெய்து ஹீரோயின விட்ருங்க என்று கெஞ்ச வேண்டியது தானே என்றார். பாயிண்ட் எனக்கு சரியா தான் படுது. ஒரு வில்லன் நடிகருக்கு இருக்கும் மனிதநேயம் கதாநாயகர்களுக்கு இல்லை. 

நடிகரல்லாது ஆனாலும் நடிகர்களை பாராட்ட வந்த வெள்ளையனை எல்லா நடிகர்களும் பாராட்டினர்.

அஜித் உண்மையிலேயே சாப்பிடால் வந்திருப்பார் போல,அவரால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை.

மற்றவர்கள் பேவதை காட்டிலும் ரஜினி,கமல் தங்களுக்குள் பேசி கொண்டிருப்பதே அடிக்கடி காட்டி கொண்டிருந்தார்கள்.

ரஜினி எந்திரனுக்கு தயாராகி விட்டார் போல மழுமழு என்று வளித்து கொஞ்சம் வயதை குறைத்திருந்தார்.

மனோரமா ஆச்சி காலை ஏழு மணிக்கே வந்திருந்து தன் இனத்தின் மீதுள்ள பாசத்தை காட்டியுள்ளார்.

ராதாரவி யாரையும் சூடாக பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு பயங்கர சூடாக பேசினார்.  அரிதாரம் பூசியர்கள் கூட்டத்திற்க்கு வர வேண்டாம் என்று சொன்னவர்களை சாடினார். அது யாரென்று தெரியவில்லை.  இயக்குனர்கிங்க்கே வெளிச்சம்.

பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி விளம்பரம் போட்டு உயிரை வாங்கிய சன் நிறுவனத்துக்கு திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையை தரக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

மீண்டும் ராதாரவி
 இலங்கை வாழ் தமிழர்களுக்கு இன ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக ஒருவன் தூக்குமேடையிடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறான். அவனுக்காக இந்தியாவே குரல் கொடுக்கிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் சகோதரனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே குரல் கொடுக்கப்படுகிறது. அதனால் இனி அவனை ஈழதமிழன் என்று அழைக்கவேண்டாம். அவனை இலங்கை வாழ் இந்தியன் என்று அழைப்போம் என்றார்.

திருமாவளவன்
ராதாரவி சொன்னது போல் இலங்கை வாழ் தமிழர்கள் வந்தேறிகள் அல்ல!
அவர்களது பூர்வீகமே இலங்கை தான். சிங்களர் தான் வந்தேறிகள் என்றார். 

திருமா சொல்வது உண்மையென்றாலும் நமது பக்கத்து நாட்டில் கண்முன்னே நடக்கும் இன படுகொலைகளை பார்த்து கொண்டிருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு அழகல்ல

20 வாங்கிகட்டி கொண்டது:

சயந்தன் said...

சிங்கள இராணுவத்தின் அனுபுள்ளம் பற்றி சத்யராச் உருக்கமாக பேசினார்.

Arun Kumar said...

வழக்கம் போல சத்யராஜ் கேவலமாக பேச ஆரமித்து விட்டார். டிவியை mute போட்டு விட்டேன்

வால்பையன் said...

இப்போ தான் சத்தியராஜ் பேசி கொண்டிருக்கிறார்

வால்பையன் said...

அட முழுசா கேளுங்க நண்பர்களே

Arun Kumar said...

//அட முழுசா கேளுங்க நண்பர்களே//
சத்யராஜ் கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டுவாரு எதுக்கு வம்பு :))

சயந்தன் said...

சத்யராச்சின் நையாண்டியைத் தான் குறிப்பிட்டேன்

வால்பையன் said...

மன்னிகவும் நண்பர்களே
வழக்கம் போல பவர்கட்

சத்தியராஜ் மட்டும் ராமேஷ்வரத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவரை சாடின அன்பு நண்பர்கள் நல்லதந்தியும், ப்ளீச்சிங் பவுடரும் இங்கே ஒரு புது விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர்கள் அதில் கலந்து கொள்ளாதிற்க்கு காரணம்,அவர்கள் இயக்குனர்களால் கேவலமாக பேசப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் போகிருக்கலாளே என்று கேட்கும் நண்பர்களூக்கு இங்கு ஏன் இயக்குனர்கள் வரவில்லை.

வால்பையன் said...

தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேடாரா செல்கிறது. இலங்கை தமிழன் இலங்கையின் பூர்வீககுடி மக்களாக இருந்தாலும் வரி கட்டும்தமிழன் என்ற முறையில் அதை இனி செய்ய கூடாது என்பது கடைசியாக நான் கேட்ட பேச்சு.

மடிக்கணிணியில் பவர் குறைவாக இருப்பதால் மீண்டும் பிறகு சந்திக்கிறேன்.

சயந்தன் said...

உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிறந்தே தீரும் - கமல்

Arun Kumar said...

சூப்பர் ஸ்டார் மிகவும் அற்புதமாக பேசினார்

Arun Kumar said...

தமிழனின் வரிப்பணம் இன்னொரு தமிழனை கொல்வதற்க்கு ரேடாரா செல்கிறது.

ரேடார் என்பது உயிர்களை கொல்வதற்க்கு உபயோகபடுத்தும் கருவி என்பதை சத்யராஜ் சொல்லி தான் கேள்விபடுகிறேன் :)))

Arun Kumar said...

சூப்பர் ஸ்டார் ரஜினி 10 லட்சம் நிதி உதவி, கமல் 5 லட்சம் கொடுத்தார்

Anonymous said...

பகுதி 4 வருமா??

kanaga said...

Friends. Please explain to me why you are collecting money for eelam tamils. Their problem is neither money nor food, but the shells and air bombing. Don't you or karunanitha know this fact? or do you want to pretend like an ostrich?

வால்பையன் said...

//சயந்தன் said...
உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிர வாதம் பிறந்தே தீரும் - கமல்//

இங்கே உரிமை உயிர்வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதில் இருக்கிறது.

வால்பையன் said...

நன்றி அருண்!
ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அதற்காக மற்ற நாட்டின் ரேடார்களை ந்மது நாட்டில் நிறுவ அனுமதிப்போமா?

வால்பையன் said...

நாலாவது பதிவு போட்டாயிற்று தூயா!

நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் உண்டு கனகா! தவறாக உபயோகப்படுத்த படாது என்ற நம்பிக்கையில் தானே எல்லொரும் பணம் கொடுக்கிறோம்.

நம்பிக்கை இழக்கவேண்டாம்
நல்லதே நினைப்போம்

Arun Kumar said...

//நன்றி அருண்!
ரேடார் உயிரை நேரடியாக கொல்லவில்லை, அதற்காக மற்ற நாட்டின் ரேடார்களை ந்மது நாட்டில் நிறுவ அனுமதிப்போமா?// நம் நாடு சுயசார்பு இந்த துறையில் அடையும் முன்பு நாம் சோவியத் ரழ்யாவில் இருந்து தான் ரேடார் வாங்கி வந்தோம். என்னை பொருத்தவரை ரேடார் போன்ற கருவிகளை தருவது தவறில்லை. நான் படித்த பொறியியலில் ரேடார் என்பது உயிர்கொள்ளும் கருவி இல்லை மாறாக சுற்றி உலவும் விமானங்கள் + மற்றும் பலவற்றினை தெரியபடுத்தும் கருவி.

இலங்கையால் சொந்தமாக ரேடார் தயாரிக்க முடியவில்லை அதான் நம்மிடம் வாங்குகின்றார்கள்.

வால்பையன் said...

ஆள் கண்காணிப்பு ஆய்தம் போன்றது தானே ரேடார்.
நாம் என்ன இலங்கைக்கு நாட்டாமையா? ஆயுதம் விற்ற ஆரம்பித்திருப்பது மோசமான பின் விழைவுகளை இந்தியாவிர்க்கு ஏற்ப்படுத்தலாம்.
தேவையென்றால் இலங்கை பிரச்சனையை பேசுவதும்,மற்ற நேரங்களில் தன் பாக்கெட்டை நிரப்பும் அரசியல்வாதிகளினால் இதில் எதுவும் செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

என் மொத்த கருத்து ஒன்றே ஒன்று தான் வன்முறை இதற்கு தீர்வாகாது.

வன்முறைக்கு துணை போவதும் தவறு தான்

வால்பையன் said...

கனகா எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் முதலில் உங்கள் கேள்விகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

உங்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது. இப்போதைய தேவை,உணவோ,பணமோ இல்லை.

அமைதி

அது கிடைக்க எதாவது செய்யவேண்டும்

!

Blog Widget by LinkWithin