சின்ன டோண்டு அல்லது டோண்டுவில் பாதி

தலைப்பின் காரணம் இறுதியில்.

ஒரு சம்பவம் அதன் பன்முக பார்வை என்பதற்கு உதாரணம். சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பாக தான் இருக்கும். அவரவர் பாணியில் இருக்கும் எழுத்துகளை படிக்கும் போது சுவையாக இருக்கிறது.அதன் காரணமாகவே ஏற்கனவே பரிசல் எங்கள் சந்திப்பு பற்றி பதிவிட்டு இருந்தாலும், என் பங்குக்கு நானும் கொஞ்சம் கொள்கிறேன் ஸாரி சொல்கிறேன்

பரிசல் ஈரோடு வருகிறேன் என்று சொன்ன போது சந்தோசமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு விருந்தோம்பலில் அனுபவம் இல்லை. யார் வந்தாலும் அவர்களை நேரடியாக சமத்துவரபுரத்துக்கு கூட்டி செல்வதே வழக்கமாக கொண்டுள்ளேன். என்னுடைய பெரும்பாலான சனி ஞாயிறுகள் அங்கே தான் கழியும்.

வந்து கொண்டிருக்கும் வழியிலே பரிசல் எனக்கு போன் செய்து தமிழ்மணத்தில் இருந்து பேசுகிறோம். உங்களை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்துள்ளோம், எழுத முடியுமா என்றார். ஏற்கனவே அடிச்ச ரெண்டு பெக் போன இடம் தெரியல. எதுவும் புரியாமல் தத்து பித்து என்று உளர ஆரம்பிக்கும் வேளையில் சிரித்து கொண்டே நான் பரிசல் பேசுகிறேன் என்று குட்டை உடைத்தார்.

பதிவர்களின் இன்னொரு விளையாட்டு பெயர் மாற்றி அறிமுகம் செய்து கொள்வது, பரிசல் தன்னை வெயிலான் என்று அறிமுகம் செய்து கொண்டார். வெயிலான் பரிசலாக, இதில் காமெடி என்னவென்றால் அவர்களுடன் வந்திருந்த நந்தகோபால் உண்மையை என்னிடம் சொல்லிவிட்டார். நானும் தெரியாதது மாதிரியே நடித்து கொண்டிருந்தேன். நான், வெண்பூ, பரிசல் மூன்று பெரும் சில நாட்களாக கும்மிகளில் கலந்து கொள்வதால் அது பற்றிய பேச்சு வரும் போது ஆள் மாறாட்ட உண்மையை ஒத்து கொண்டார்கள்.

பரிசல், லக்கிலுக் போன்றவர்கள் ஒற்றைநாடி சரீரம் என்று சொல்வார்கள், அவர்களாக சொன்னால் ஒளிய அவர்களின் வயதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைசுவையை தடவி தருகிறார் பரிசல், உடன் வந்த நண்பர்கள் கண்ணன், நந்தகோபால், வெயிலான் அனைவருக்கும் சேர்த்து அவரே பேசினார் என்றால் பாருங்களேன்.

எனக்கு மூளையில் இருக்கும் சில செல்கள் அழிந்து விட்டதால் சரியாக ஞாபக சக்தி இருப்பதில்லை, நாங்கள் எதை பற்றி பேசினோம் என்று நினைவில்லை. எப்படி வீட்டுக்கு போனேன் என்று கூட நினைவில்லை, திடீரென்று எழுந்து பார்த்தால் இருட்டி விட்டது, மீண்டும் அவர்களுக்கு போன் செய்து எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்து மீண்டும் பஜனையில் ஐக்கியமானேன். ஈரோட்டின் மூத்த பதிவர் நந்து அண்ணன் சிறப்புரை ஆத்தினார்.

வெகு சிறப்பாக சந்திப்பு நடந்தது, கூடுதுறை போன்று சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களை அழைக்க கால அவகாசம் இல்லை, அருகில் இருப்பவர்கள் தயவுசெய்து உங்களை வெளிக்காட்டி கொள்ளுங்கள். அடுத்த சந்திப்பு இதைவிட அருமையாக இருக்கவேண்டும்.

அப்புறம் என் படத்தை பரிசல் போட்டு விட்டதால் பரிசல் படத்தை போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்
படம் கீழே



சொல்ல மறந்துட்டேனே நம்ம வெயிலான் பார்க்க அமுல்பேபி மாதிரி இருக்கார்.

தலைப்பின் காரணம் கேட்கும் அன்பர்களுக்கு பரிசலுக்கு நான்கு மொழிகள் தெரியுமாம் -என்ன தலைப்பு சரி தானே

26 வாங்கிகட்டி கொண்டது:

சின்னப் பையன் said...

தலைப்பு சரிதான்.. தப்பே இல்லை...

சின்னப் பையன் said...

பரிசல் படம் சூப்பர்....

சின்னப் பையன் said...

//நான், வெண்பூ, பரிசல் மூன்று பெரும் சில நாட்களாக கும்மிகளில் கலந்து கொள்வதால் //
அவ்வ்வ்.... அதுதான் எனக்கு தெரியுமே!!!!!!!!!!

ஜோசப் பால்ராஜ் said...

Parisal sir can speak 4 languages in Tamil aah ?

Tech Shankar said...



Super Dude.

Anonymous said...

உங்களப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன்.

இங்கு கோவையில் 14 முதல் புத்தகக் கண்காட்சி என்பதால், இங்கேயே புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

Unknown said...

எங்களையும் கூப்பிட்டா நாங்களும் வந்திருப்போமில்ல. அடுத்த தடவையாவது சமத்துவபுரத்துக்கு கூட்டிட்டுப் போங்கப்பா.
அன்புடன்
சந்துரு

dondu(#11168674346665545885) said...

//தலைப்பின் காரணம் கேட்கும் அன்பர்களுக்கு பரிசலுக்கு நான்கு மொழிகள் தெரியுமாம் -என்ன தலைப்பு சரி தானே//

கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

பரிசல்காரன் said...

படம் இங்கே தெரியவில்லை..

பிறகு பின்னூட்டமிடுகிறேன்!

கூடுதுறை said...

சின்ன டோண்டு பேரு சூப்பர்...

டோண்டு ஐயாவையே அவ்வ்வ்வ்வ்வ்னு அழ வைச்சிட்டிங்களே....

புதுகை.அப்துல்லா said...

Parisal sir can speak 4 languages in Tamil aah ?
//

சரியாச் சொன்னீங்கண்ணே!ஹா..ஹா..ஹா

புதுகை.அப்துல்லா said...

Parisal sir can speak 4 languages in Tamil aah ?
//

சரியாச் சொன்னீங்கண்ணே!ஹா..ஹா..ஹா

புகழன் said...

உங்க பதிவை படிக்குறதுக்கு முன்னாடி டோண்டு பதிவ படிச்சாத்தான் நல்லா புரியும் போல

Tech Shankar said...



Top Ten in Tamilmanam. Congrats friend

g said...

பரிசல்காரனின் பரிசல் படம் சூப்பர்.

வால்பையன் said...

ச்சின்னப்பையன் எங்கள் கும்மிக்கு வேட்டு வைக்கும் வகையில் ஏற்கனவே லதானந்த் பரிசலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். நீங்களும் மொக்கையாக பதிவெழுதி எங்களை வேறுபேத்துரிங்க்களா

வால்பையன்

வால்பையன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
Parisal sir can speak 4 languages in Tamil aah ?//

யாரு கண்டா நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம்

வால்பையன்

வால்பையன் said...

//வடகரை வேலன் said...
உங்களப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன்.
இங்கு கோவையில் 14 முதல் புத்தகக் கண்காட்சி என்பதால், இங்கேயே புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.//

அப்படியா!
விடுங்கள் நாங்கள் அங்கே வருகிறோம். அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்

வால்பையன்

வால்பையன் said...

//தாமோதர் சந்துரு said...
எங்களையும் கூப்பிட்டா நாங்களும் வந்திருப்போமில்ல. அடுத்த தடவையாவது சமத்துவபுரத்துக்கு கூட்டிட்டுப் போங்கப்பா.
அன்புடன்
சந்துரு//

கடந்த ஒரு வருடமாக நீங்கள் பின்னூட்டம் போட்டு வந்தாலும், யாரென்று எங்களுக்கு தெரியாது, உங்களை அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்,
எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்
9994500540

வால்பையன்

வால்பையன் said...

//dondu(#11168674346665545885) said...
கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அன்புடன்,
டோண்டு ராகவன்//

இதுக்கே உணர்சிவசபட்டா எப்படி, இன்னும் கால் டோண்டு, முக்கா டோண்டு எல்லாம் வலையுலகக்கு அறிமுகபடுத்தனும்

வால்பையன்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
படம் இங்கே தெரியவில்லை..
பிறகு பின்னூட்டமிடுகிறேன்!//

உங்ககல ட்ரெஸ் இல்லாம எடுத்த படத்த போடல பயப்படாதிங்க

வால்பையன்

வால்பையன் said...

// கூடுதுறை said...
சின்ன டோண்டு பேரு சூப்பர்...
டோண்டு ஐயாவையே அவ்வ்வ்வ்வ்வ்னு அழ வைச்சிட்டிங்களே....//

பலபேரின் வேண்டுகோளுகிணங்க அடுத்து கலாய்க்க படபோவது நீங்கள் தான் என்று வட்டார செய்திகள் சொல்கின்றன

வால்பையன்

வால்பையன் said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
Parisal sir can speak 4 languages in Tamil aah ?
//
சரியாச் சொன்னீங்கண்ணே!ஹா..ஹா..ஹா//

வருகைக்கு நன்றி அப்துல்லா சார்

வால்பையன்

கூடுதுறை said...

//பலபேரின் வேண்டுகோளுகிணங்க அடுத்து கலாய்க்க படபோவது நீங்கள் தான் என்று வட்டார செய்திகள் சொல்கின்றன//

அந்த பலபேர் யாருங்க????

வால்பையன் நல்லவர்,வல்லவர், நாலும் தெரிஞ்சவர்... திறமையானவர் வணிகத்தில்...

போதுமா?

கூடுதுறை said...

மேலும்...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

வால்பையன் said...

// புகழன் said...
உங்க பதிவை படிக்குறதுக்கு முன்னாடி டோண்டு பதிவ படிச்சாத்தான் நல்லா புரியும் போல//

இது எந்த எதிர்வினை பதிவும் அல்ல, எதிர்வினை பதிவு அடுத்தது

!

Blog Widget by LinkWithin