சென்னை சந்திப்பு..(17.08.08)


சுருக்க சொல்லுதல் உண்மையிலேயே குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பதை விட கடினமானது. அதானாலேயே அந்த சந்திப்பை பற்றி எழுத முடியவில்லை.
சரி வேற யாராவது எழுதுவாங்க, நாம போய் உள்ளேன் ஐயா போட்டு வந்துறலாம்னு பார்த்தா, எல்லாருமே நம்ம மூடுல தான் இருப்பாங்க போலிருக்கு.

சென்ற சனிக்கிழமை பரிசல் என்னை அழைத்து சென்னை செல்லலாம் என்று சொன்ன போது, உண்மையிலேயே எனக்கு செல்லும் யோசனை இல்லை. நிறைய வேலை இருக்கு என்று சொல்வதற்க்கெல்லாம் ஒன்றுமில்லை. ஏனென்றால் விடுமுறை நாட்கள் தான். உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான், அதையும் பரிசலிடம் சொல்லி விட்டேன்.

கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார். எனக்காக திருப்பூரிலேயே சென்னை வரை செல்ல பயணச்சீட்டும் எடுத்து விட்டார். வழக்கம் போல தாமதமாகவே ரயில்நிலையம் சென்றேன். எனக்காக தயாராக காத்திருந்த பரிசலும் அவரது நண்பரும் என்னை ரயிலுக்குள் தூக்கி போட்டார்கள்.

சிறுது நேரம் பேச்சு, சிறுது நேரம் மௌனம், அப்புறம் தூக்கம்.
வந்து விட்டது சென்னை, நேராக ரமேஷ் வைத்யா அவர்களின் வீடு,
அன்பான உபசரிப்பு, சூடான காப்பி, கொஞ்சம் பேச்சு, கிளம்பி விட்டோம் சமத்துவபுரத்துக்கு,

நண்பன் தியாகுவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ரொம்ப நல்லவன், அநியாயத்துக்கு எல்லோரையும் நம்புவான், அவனிடம் இரு சக்கர வாகனம் எடுத்து செல்லலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் சென்னை முன்ன மாதிரி இல்லை, பத்து மீட்டருக்கு ஒரு இடத்தில் வாகன சோதனை, நமக்கேன் இந்த சோதனை என்று நொந்து கொண்டு, நண்பனுக்கு நன்றியை மட்டும் கொடுத்து விட்டு வேறெதுவும் வாங்காமல் வந்துவிட்டேன்.

எனது நண்பர் ஒருவர் சென்னையில் காவல்துறையில் வாகன ஓட்டியாக இருக்கிறார்.(அரசியல் கருதி பெயர் வேண்டாம்), அவரிடம் கார் கிடைக்குமா என்று கோட்டோம். உடனடியாக ஒன்றை பிடித்து வந்து விட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை பயணம், வழியில் கொஞ்சம் வெஜ் பிரியாணி, நூடுல்ஸ்

சென்றதின் காரணம், அங்கொரு கிராமத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் மீனவராக இருக்கிறார், படகில் கடலுக்குள் செல்லலாம் என்று அழைத்து சென்றார். அலை அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் உள்ளே செல்ல முடியாது, காலையில் வாருங்கள் என்று கையை விரித்து விட்டார். பரிசலின் பதிவில் இருக்கும், கடற்கரையில் சிறுவர்கள், குழாயில் குளிக்கும் சிறுவன் படங்கள் அங்கே எடுக்கப்பட்டது தான்.

அங்கிரிந்து மெரீனா, நண்பருக்கு காந்தி சிலை என்று சொன்னது சரியாக புரியவில்லை போலும், எங்களை உழைப்பாளர் சிலைக்கு அழைத்து சென்று விட்டார். அங்கிருந்து மீண்டும் ஒரு ஆட்டோ காந்தி சிலைக்கு, சுற்றும் முற்றும் தேடும் வேளையிலேயே பதிவுலக சிங்கம் லக்கியும், குட்டி சிங்கம் அதிஷாவும். கை குலுக்கும் நேரத்தில் பின்னால் வெண்பூவும், அப்துல்லாவும்.


இடமிருந்து வலமாக
அப்துல்லா,வெண்பூ,பரிசல்,அதிஷா,லக்கி,வாலை ஒளித்து வைத்து கொண்ட பையன்.

உண்மையில் யாரும் வரமாட்டார்கள் சும்மா தான் திரும்ப போகிறோம் என்று தான் நினைத்தேன். இவர்களெல்லாம் வருவார்கள் என்று பரிசல் கூட என்னிடம் சொல்லவில்லை, அந்த இடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்தோம். சத்தியமாக போண்டா, பஜ்ஜி, கடலை எதுவும் எனக்கு தரப்படவில்லை, நேரமின்மை காரணமாக மற்றவர்களை அழைக்க முடியவில்லை போலும்.

அங்கிருந்து ஒரு உணவகத்திற்கு சென்றோம், அப்துல்லா சைவமாம், லக்கி குறைவாக சாப்பிட்டார், மற்ற அனைவரும் திருப்தியாக சாப்பிட்டார்களோ என்னவோ தெரியவில்லை, நான் புல் கட்டு. அன்னைக்கு அப்துல்லாவுக்கு ராசிபலனில் செலவு என்று இருந்திருக்கும் போல, பில்லு வந்தவுடன் அதை மெய்பிக்கும் வகையில் பாதியிலேயே பிடுங்கி கொண்டார்.

முடித்தவுடன் பரஸ்பர பிரியாவிடை, லக்கியும் அதிஷாவும் எங்களுக்கு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்கள்.

நாங்கள் அனைவரும் கருத்தினால் ஒன்றுபட்டோமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அன்பினால் ஒன்றுபட்டோம். ரமேஷ் வைத்யாவின் உரிமையான அன்பு, அப்துல்லா, வெண்பூவின் சகோதர அன்பு, லக்கி அதிஷாவின் தோழமை அன்பு.
அன்பிற்கு நிகரேது, இந்த உலகம் உள்ளவரை.

விடுபட்டவை:
நண்பர் பரிசலுடன் வந்திருந்த நண்பர் கனலி, சென்னையில் மேலும் ஒரு நண்பர் கலந்து கொண்டார், அவர் பெயர் செந்தில் இவர்கள் இருவரும் பரிசல் தனது பதிவில் சொன்ன பரிசல் குழுவில் உறுப்பினர்கள்.

56 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

Well for me its better to be more realistic.

Athisha said...

நான்தான் பஸ்ட்டு

லோட்டோ ஆட்டையில் இல்லை

மங்களூர் சிவா said...

போட்டோ சூப்பர் அந்த கேமராவுக்கு திருஷ்டி சுத்தி கேமராவை தூக்கி எங்கயாச்சும் போடுங்க

Anonymous said...

/
அதிஷா said...

நான்தான் பஸ்ட்டு

லோட்டோ ஆட்டையில் இல்லை
/

அதெல்லாம் செல்லாது செல்லாது

Athisha said...

டோண்டு சார் பற்றி குறிப்பிடாதமைக்கு கண்டனம்

விஜய் ஆனந்த் said...

// சுருக்க சொல்லுதல் உண்மையிலேயே குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பதை விட கடினமானது //

ஆனாலும், நீங்க வெற்றிகரமா சொல்லிட்டீங்க!!!

விஜய் ஆனந்த் said...

// சென்னை முன்ன மாதிரி இல்லை, பத்து மீட்டருக்கு ஒரு இடத்தில் வாகன சோதனை, நமக்கேன் இந்த சோதனை //

இது அந்த சோதனைதான???

விஜய் ஆனந்த் said...

// கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார் //

பாசக்கார பரிசல்காரர்!!!!

விஜய் ஆனந்த் said...

// வாலை ஒளித்து வைத்து கொண்ட பையன் //

நா நம்பிட்டேன்பா....

விஜய் ஆனந்த் said...

// சத்தியமாக போண்டா, பஜ்ஜி, கடலை எதுவும் எனக்கு தரப்படவில்லை //

என்னக்கொடும சார் இது???

விஜய் ஆனந்த் said...

// நாங்கள் அனைவரும் கருத்தினால் ஒன்றுபட்டோமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அன்பினால் ஒன்றுபட்டோம் //

க்ளைமாக்ஸ்ல, சென்டிமென்டலா ட்ட்டச்ச்ச் பண்ணிட்டீங்க...

விஜய் ஆனந்த் said...

// அதிஷா said...
டோண்டு சார் பற்றி குறிப்பிடாதமைக்கு கண்டனம் //

என்ன இப்படி பண்ணிட்டீங்க வால்???

விஜய் ஆனந்த் said...

பரிசல் குழு உறுப்பினர்களுக்கு வணக்கங்ஙளும், வாழ்த்துக்களும்!!!

முரளிகண்ணன் said...

சொல்லவே இல்லை

கோவி.கண்ணன் said...

//மங்களூர் சிவா said...
போட்டோ சூப்பர் அந்த கேமராவுக்கு திருஷ்டி சுத்தி கேமராவை தூக்கி எங்கயாச்சும் போடுங்க
//


அதே அதே !

அப்துல்லா, வெண்பூ மற்றும் அதிஷா ஆகியவர்களின் திருமுகத்தைப் பார்க்கத் தந்ததற்கு மிக்க நன்றி வால்பையன் ! (மத்தவங்களின் படங்களைப் பார்த்து இருக்கோம்ல)

சின்னப் பையன் said...

சரக்கு மேட்டர்லே ஆரம்பிச்சி, சென்டிமென்ட்லே முடிச்சிட்டீங்க.... சூப்பர்...

கோவி.கண்ணன் said...

//முரளிகண்ணன் said...
சொல்லவே இல்லை

August 21, 2008 10:33 PM
//

இவரு என்ன எல்லா பதிவிலும் சொல்லவே இல்லை ன்னு பின்னூட்டம் போடுறார். டெம்ளேட் பின்னூட்டமோ ?

சின்னப் பையன் said...

படம் சூப்பர். சிவா சொன்னது போலவே செய்துவிடவும்.....:-)))

வால்பையன் said...

//போட்டோ சூப்பர் அந்த கேமராவுக்கு திருஷ்டி சுத்தி கேமராவை தூக்கி எங்கயாச்சும் போடுங்க//

கேமரா பரிசலோடது அதனால இந்த பின்னூட்டம் பரிசலுக்கு பார்சல் செய்யபடுகிறது

வால்பையன் said...

//அதிஷா said...
டோண்டு சார் பற்றி குறிப்பிடாதமைக்கு கண்டனம்//

ஒரு பகிரங்க மன்னிப்பு கடிதம் எழுதிருவோம்

பரிசல்காரன் said...

//கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார்.//

அடப்பாவி! அப்ப திருப்பித்தரமாட்டியா?

பரிசல்காரன் said...

//போட்டோ சூப்பர் அந்த கேமராவுக்கு திருஷ்டி சுத்தி கேமராவை தூக்கி எங்கயாச்சும் போடுங்க//

யோவ்.. வாலு.. போடாதே.. போடாதேன்னு சொன்னேன் கேட்டியா? இப்படி மானத்தை வாங்கறியே..

சிவா.. இந்தக் காரணத்துக்காகதான் நான் இன்னும் சந்திப்பு பதிவு போடல...

இருட்டுல எடுத்தது.. சரி.. நல்ல எஸ்.எல்.ஆர் கேமராவா பார்த்து கிஃப்ட் அனுப்புங்க. இதைத் தூக்கிப் போட்டுடலாம்!

பரிசல்காரன் said...

இவர் பதிவுல விடுபட்டவை என் பதிவுல வருது கூடிய சீக்கிரம்..

அப்ப இருக்குடி ஒனக்கு..

பரிசல்காரன் said...

//முரளிகண்ணன் said...

சொல்லவே இல்லை//

திடீர் ப்ரோக்ராம் சார். ஆனா உங்களை நெனைச்சேன். அப்புறம் ஒரிஜினல் பதிவர் சந்திப்புக்கே குழைந்தையோட வந்தது ஞாபகம் வந்தது. சிரமப்படுத்துவானேன்னு விட்டுட்டேன். அன்னைக்கு ஒரு அரசியல் கட்சியோட அட்டகாசம் வேற தாங்கல மெரீனால...

சாரிங்க.

பரிசல்காரன் said...

நாந்தான் 25!

புதுகை.அப்துல்லா said...

சரி வேற யாராவது எழுதுவாங்க, நாம போய் உள்ளேன் ஐயா போட்டு வந்துறலாம்னு பார்த்தா, எல்லாருமே நம்ம மூடுல தான் இருப்பாங்க போலிருக்கு.
//

சத்தியமா உண்மை
:)

புதுகை.அப்துல்லா said...

உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான், அதையும் பரிசலிடம் சொல்லி விட்டேன்.
//
அதை ப.சிதம்பரத்துகிட்டல்ல சொல்லனும்!!!!!!

புதுகை.அப்துல்லா said...

கிளம்பி விட்டோம் சமத்துவபுரத்துக்கு,
//

ஊர்லேந்தே கிளம்பி வந்தது அதுக்குத்தான?

புதுகை.அப்துல்லா said...

லக்கி குறைவாக சாப்பிட்டார்
//

லக்கி எங்க சாப்பிட்டார்? வேடிக்கை பார்ப்பதிலேயே அவருக்கு வயிறு நிறைந்துவிடும் போலும்.

புதுகை.அப்துல்லா said...

நாங்கள் அனைவரும் கருத்தினால் ஒன்றுபட்டோமா என்று எனக்கு தெரியாது,//

கருத்தினால் யாரும் எவரோடும் முழுமையாக ஓன்றுபட முடியாது.


//ஆனால் அன்பினால் ஒன்றுபட்டோம்//

இது மேட்டரு

புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா, வெண்பூவின் சகோதர அன்பு,

டச் பண்ணிட்டீங்க அண்ணே

வால்பையன் said...

///கடன் தான்யா கொடுக்க மாட்டேன், சும்மா தர்றேன் வாய்யா!, என்று அன்போடு கடிந்து கொண்டார்.//
அடப்பாவி! அப்ப திருப்பித்தரமாட்டியா?//

அதெப்படி குடுத்தா எங்க பரம்பரைக்கே அவமானம்ல,
வேணும்னா ஒருக்கா உங்களை சென்னைக்கு கூட்டிட்டு போய்,
மறுக்கா திருப்பூர்ல கொண்டு வந்து விட்டுடுறேன், போதுமா

வெண்பூ said...

உள்ளேன் ஐயா...

முக்கியமான மேட்டர்லாம் எழுதாம விட்டுட்டீங்க :)

வெண்பூ said...
This comment has been removed by the author.
லக்கிலுக் said...

//முரளிகண்ணன் said...
சொல்லவே இல்லை
//

உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.

மறுநாள் காஞ்சிபுரத்தில் குலதெய்வம் கோயிலில் கூழ் ஊற்றும் விழா இருந்தது. அதை முடித்துவிட்டு நேரே பீச்சுக்கு தான் வந்தேன் (70 கிமீ அலுப்பூட்டும் இருச்சக்கர பயணம்)

இந்த சந்திப்பு ஏடாகூடமாக ஆர்கனைஸ் ஆகிவிட்டதால் மற்ற நண்பர்களுக்கு தகவல் சொல்ல முடியவில்லை :-(

கூடுதுறை said...

//உண்மையான காரணம் பொருளாதார பிரச்சனை தான்,//

2008ன் மிகப்பெரிய ஜோக்க்க்க்க்க்க்...

டோண்டு ஐயா இல்லாத சென்னை பதிவு சந்திப்பா??? வெட்கம்........

இருந்தாலும்....

நற,நற,நற,நற,நற,நறநற,நற,
நறநற,நற,நறநற,நற,நறநற,நற,
நறநற,நற,நறநற,நற,நறநற,நற,நற
நற,நற,நறநற,நற,
நறநற,நற,நறநற,நற,நற

இருங்கள் இருங்கள் விரைவில் வருகிறேன்....

புதுகை.அப்துல்லா said...

உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.
//

லக்கியண்ணே!

உங்களுக்காவது முதல் நாள் இரவு சொன்னார். எனக்கு மாலை 6 மணிக்கு வாங்கன்னு சரியா மாலை 4.40 க்கு சொன்னார்.

வெண்பூ said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
உண்மைதான். சந்திப்புக்கான கால அவகாசம் எதுவுமே வழங்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு பரிசல் போன் செய்து நாளை சந்திக்கலாமா? என்று திடீரென்று கேட்டார்.
//

லக்கியண்ணே!

உங்களுக்காவது முதல் நாள் இரவு சொன்னார். எனக்கு மாலை 6 மணிக்கு வாங்கன்னு சரியா மாலை 4.40 க்கு சொன்னார்.
//

மொத நாளே எனக்கு பரிசல் சொன்னாரு. நானும் காலையிலயே கூப்டுவாருன்னு பாத்தா மனுசன் மத்தியானமா ஃபோன் பண்றாரு. சரி போய் பாத்துட்டு வந்துடுவம்னு பாத்தா எல்லாரும் சமத்துவபுரத்துல இருக்காங்க அதுவும் பயங்கர சமத்துவமா ஒண்ணுகுள்ள ஒண்ணா :)

நாம ஒரு சமத்துவவாதி இல்லன்றதால (நெஜமாத்தாம்பா) சரி சாயங்காலமா வந்து பாக்குறேன்னு சொல்லிட்டேன். காலையில இருந்து வெளியில போகாததால தங்கமணிக்கு கோவம் அதவிட கோவத்துல இருக்காரு சின்னமணி. இது ஆகறதில்லன்னு ரெண்டு பேரையும் கெளப்பிட்டு அண்ணா நகருக்கு ஷாப்பிங் போனா, ஆறு மணிக்கு அப்துல்லா ஃபோன் பண்றாரு "எப்ப வர்றீங்கன்னு".

வந்துர்றேன்னு சொல்லிட்டு அவசர அவசரமா (?) ஷாப்பிங்க முடிச்சிட்டு, வீட்ல கொண்டு விட்டுட்டு 7.45க்கு போன் பண்ணா இன்னும் அரை மணி நேரத்துல வாங்க அப்படின்னு பரிசல் சொல்றாரு.

அடிச்சி புடிச்சி 8.15க்கு போய் சேந்தப்புறம்தான் தெரிஞ்சது அவங்களே எல்லாரும் 8 மணிக்குதான் வந்தாங்கன்றது. பாவம் அப்துல்லா 6 மணிக்கே வந்து காத்துட்டு இருந்திருக்காரு. அதுக்கு பரிகாரமா நைட் டின்னர் பில்லை அவரையே குடுக்க சொல்லிட்டோம். டின்னர் வென்யூ ராதாகிருஷ்ணன் சாலை அஞ்சப்பர். அப்துல்லாவுக்கு ஆனாலும் ரொம்ப பெரிய மனசு. (அவரு டின்னர் பில் கொடுத்ததாலோ இல்ல அவரு ஆர்டர் பண்ண நெய் ரோஸ்ட்ல எனக்கு கொஞ்சம் குடுத்தாரு அப்படின்றதுக்காவோ சொல்றேன்னு யாரும் நெனச்சிடாதீங்க.)

சாப்பிட்ட ஐட்டங்கள்:
அதிஷா .. காடை பிரியாணி (ஒரே ம‌ஜாவா த‌ல‌)
நான், கனலி, வால், செந்தில் (பரிசலின் நண்பர்).. சிக்கன் ஃபிரை, ரைஸ், ப்ரான் கிரேவி, ஃபிஷ் ஃபிரை, பட்டர் நான், ப்ளைன் நான், தோசை
அப்துல்லா... நெய் ரோஸ்ட், நம்ப முடியாத விசயம் அவரு சைவமாம். ஆனால் வீட்டுக்கு வந்தால் பிரியாணி போடுவதாக வால்பையன் தலையில் அடித்து செய்திருக்கிறார்.

புகழன் said...

//
lotto said...
Well for me its better to be more realistic.

August 21, 2008 10:06 PM

//
ரிப்பீட்டு..........

வால்பையன் said...

நன்றி விஜய் ஆனந்த், உங்கள் அன்பை போலவே பின்னூட்டமும் மலையாய் பொழிந்திருக்கிறது
***************
//முரளிகண்ணன் said...
சொல்லவே இல்லை//

எனக்கே சொல்லலைங்க, கண்ண கட்டி கூட்டிட்டு போய்ட்டாங்க

***************

நன்றி கோவிகண்ணன்,
நானும் அவர்களை நேரில் அப்பொழுது தான் முதல் முதலில் பார்த்தேன்

*************

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

************

பரிசல்,
நீங்க முதல்ல எழுதுங்க, நான் அப்புறம் எழுதுறேன்னு சொல்லும் போதே இதில எதோ உள்குத்து இருக்கும்னு நான் நினைச்சேன்.
என்னை ஆங்காங்கே அரை மப்பிலும் புல் மப்பிலும் எடுத்த போட்டோக்கள் உங்களிடம் குவிந்துள்ளது இதன் மூலம் தெரிகிறது. சீக்கிரம் வெளியிடுங்கள், அந்த குடிகார குரங்கை நானும் ஒருமுறை கட்சியாக பார்த்து கொள்கிறேன்

***************
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அப்துல்லா, வெண்பூவின் சகோதர அன்பு,
டச் பண்ணிட்டீங்க அண்ணே//

நன்றி அப்துல்லா பெரியண்ணே!

***************

//வெண்பூ said...
உள்ளேன் ஐயா...
முக்கியமான மேட்டர்லாம் எழுதாம விட்டுட்டீங்க :)//

நீங்களும் எழுதுரதற்கு ஏதாவது விட்டு வைக்கனும்ல

*****************

கூடுதுறை ஏன் இப்படி பல்ல கடிக்கிரிங்க,
சத்தம் எனக்கு இங்கே கேக்குது.
அடுத்த தடவை போகும் போது உங்களுக்கு கண்டிப்பா சொல்றேன்

****************

//வீட்டுக்கு வந்தால் பிரியாணி போடுவதாக வால்பையன் தலையில் அடித்து செய்திருக்கிறார்.//

அப்படியே இருந்தாலும், பிரியாணி எனக்கு மட்டும் தான்.
உங்களுக்கெல்லாம் தருவதாக எங்கேயும் சொல்லவில்லையே

***************

வாங்க புகழன்,
ரொம்ப நாளா எந்த பதிவையும் காணோம், நிறைய ஆணியோ

வால்பையன்

தமிழன்-கறுப்பி... said...

ஆமா சந்திப்புல என்ன பேசிக்கிட்டிங்க..?

Tech Shankar said...
I am the Last... +- 50
ஜெகதீசன் said...

//
lotto said...
Well for me its better to be more realistic.

//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

நல்லதந்தி said...

வால்!பெரிய ஆளாய்ட்டீங்க போலிருக்கு!.
என்ன இருந்தாலும் என்னோட குருநாதரோட திறமையே தனிதான்!.அதுக்குதான் அவரோட பேர் குருன்னு சொல்றது! :)

வால்பையன் said...

தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,
உங்கள் எழுத்து திறமைக்கு முன்னாள் நானெல்லாம் சின்னபையன்

நல்லதந்தி said...

//தலைவா என்ன இது! என்னை பொய் குரு அது இதுன்னுட்டு,
உங்கள் எழுத்து திறமைக்கு முன்னாள் நானெல்லாம் சின்னபையன்//

எதாலயோ சாங்கியம் பண்றதுன்னு நம்மூரு பக்கம் சொல்லுவாங்களே அதானா இது? :)

புதுகை.அப்துல்லா said...

வெண்பூ said...
//பாவம் அப்துல்லா 6 மணிக்கே வந்து காத்துட்டு இருந்திருக்காரு. அதுக்கு பரிகாரமா நைட் டின்னர் பில்லை அவரையே குடுக்க சொல்லிட்டோம். //

அடப்பாவிகளா!ஓரு முடிவோடத்தான் வந்தீங்களா?//அப்துல்லா... நெய் ரோஸ்ட், நம்ப முடியாத விசயம் அவரு சைவமாம். //

நம்புங்கய்யா..சத்தியமா எந்தவியாதியும் காரணம் இல்ல!
ஓருவேளை நான் சைவமாக இருப்பதால் தான் வியாதி இல்லாமல் இருகேனோ என்னவோ?? :))

தியாகு said...

தியாகுவை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், ரொம்ப நல்லவன், அநியாயத்துக்கு எல்லோரையும் நம்புவான், அவனிடம் இரு சக்கர வாகனம் எடுத்து செல்லலாம் என்று தான் நினைத்தேன்,
நெஞ்சநக்கிட்ட மாப்பள

புருனோ Bruno said...

தெரிவித்திருந்தால் வந்திருப்போம் :(

வெள்ளந்தி said...

உங்களுடைய படைப்புகளை சிறிது நாட்களாக படித்து வருகிறேன் . .

நன்றாக உள்ளது . . நானும் எதையாவது எழுதி விடலாம் என ஒரு வலைப்பூவை துவங்கி உள்ளேன் . அதன் முதல் பதிப்பை படித்து விட்டு கருத்து கூறுங்கள் .
http://enkarutthu.blogspot.com/

g said...

நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ஓரமா நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பேன். சூழ்நிலை வரமுடியாமல் போனது. மன்னிக்கவும்.

ஜிங்காரோ ஜமீன் said...

பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப்பு விடுக்காத வால்பையனின் வால்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

வால்பையன் said...

//புருனோ Bruno said...
தெரிவித்திருந்தால் வந்திருப்போம் :( //

மன்னிக்கணும், எனக்கும் உங்களைஎல்லாம் சந்திக்கனும்ன்னு ஆசை தான்.
எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் வந்துவிட்டதால் உங்ககளை அழைக்க முடியவில்லை.
அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக உங்ககளிடம் ஒரு ஊசி போட்டு கொள்கிறேன்

வால்பையன் said...

//வெள்ளந்தி said...
உங்களுடைய படைப்புகளை சிறிது நாட்களாக படித்து வருகிறேன் . .
நன்றாக உள்ளது . . நானும் எதையாவது எழுதி விடலாம் என ஒரு வலைப்பூவை துவங்கி உள்ளேன் . அதன் முதல் பதிப்பை படித்து விட்டு கருத்து கூறுங்கள் .
http://enkarutthu.blogspot.com/ //


வருகைக்கு நன்றி.
உங்களுடைய பிளாக்கில் படித்தேன்.
பைத்தியகாரனின் விமர்சினத்திற்கு சினத்துடன் பதிலளித்திருந்தீர்கள்.
ஆரம்பத்திலேயே பெரிய மலையுடன் மோதுவது நமக்கு தான் அடிபடும்.
பைத்தியகாரனின் பிளாக்கை முழுதாக படித்திருக்குரீர்களா.

அவர் கமலின் எதிரி கிடையாது.
பார்பனியத்தின் எதிரி.
உங்கள் பிளாக்கில் விரிவாக விவாதிப்போம்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
நான் வந்திருந்தாலும் அப்படியே ஒரு ஓரமா நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பேன். சூழ்நிலை வரமுடியாமல் போனது. மன்னிக்கவும்.//

ஏகப்பட்ட கூட்டம். நிக்க இடமில்லை, நல்லவேளை தப்பித்தீர்கள்,
சரி நீங்க எப்போதாவது ப்ளாக்கர் மீட்டிங்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துரிக்கிறீர்களா. சென்னை சந்திப்பு படங்களில் ஒன்றில் கூட உங்களை பார்த்ததில்லையே

வால்பையன் said...

//ஜிங்காரோ said...
பதிவர் சந்திப்புக்கு எனக்கு அழைப்பு விடுக்காத வால்பையனின் வால்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.//

என்னையவே கடத்தி தான் கூட்டிட்டு போனாங்க, உங்களை வேற மாட்டி விடணுமா
பரிசல் இத பத்தி பதிவு போட்டா, எல்லோரும் சேர்ந்து அவர கும்முங்க

!

Blog Widget by LinkWithin