நந்து f/o நிலா அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள நந்து F/O நிலா அவர்களுக்கு !

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் படங்கள் அரும்பாக இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் போட்டோக்கள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது போட்டோக்களை இயன்ற அளவில் பார்த்து வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)


கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது தங்களின் எப்போதோ போட்ட பழைய பதிவு ஒன்று. அதில் நீங்க ஒன்று சொல்லியிருந்தீர்கள். 30%க்கும் அதிகமாக பணி தொடர்பாகத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் தொழிலில் கவனச் சிதறல் ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த போட்டோ எடுக்கும் வேலை என்பதும் ஒரு வகையான போதை போன்றதே. எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்

ஆனால் நீங்கள் போட்டோ எடுப்பது என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்துடன் ஊர் சுற்றி அனுபவிக்க வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில் போட்டோ எடுத்தல், ப்ளிக்கரில் ஏற்றுதல் போன்ற பணிகளையும் அவ்வப்போது செய்யுங்கள்.நண்பர்களுக்கு அவ்வபோது டிப்ஸ் கொடுங்கள் . உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு கேமிரா கண்ணாயிரமாக கூட வரமுடியும். (கேமிரா கண்ணாயிரம் நம் ஊருக்கு வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

போடோகிராபி ஒரு மிரேஜ். சில பிளாக் ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு பதிவு ஹிட்டானால் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் பதிவு மொக்கையா போச்சுன்னா புது வரவுக்குப் கும்மி அடிக்க போய் விடுவார்கள். அதைப் போல போடோகிராபியிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் கேமிரா வாங்கி போட்டோ எடுக்க ஆரம்பித்த போதே தல மோஹன்தாஸ் இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் எதை போட்டோ எடுப்பது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?

2) எத்தனை பேர் நமது போட்டோவை பார்த்து என்ன சொன்னார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?

3) செயற்கை காட்சிகள் நீங்கலாக அனைத்தையும் போட்டோ எடுத்து குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

4) நண்பர்களுடன் சேர்ந்து ஆற அமர்ந்து சினிமா பார்த்து கதையடித்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?

5) எப்போதடா போட்டோ எடுக்க கேமிராவை தூக்கலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?

6) பிளாக்குல எடுத்த படத்தையெல்லாம் போஸ்ட் செய்ய ஆவலாக இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவி்லும் நெடு நேரம் உங்களை மொட்டைமாடியில் நிலாவை(நிஜ நிலாவை உங்கள் மகளை அல்ல) போட்டோ எடுக்க காத்திருப்பதை காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் மொட்டைமாடியில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இருக்கிறது. இங்கே வேண்டாம்.)

பகல் பூராவும் நிலாவுக்கு(இப்போ உங்க பொண்ணு) செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த மொட்டைமாடியில் ஆவி போல நடனமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து சினிமா கம்பெனியில் போட்டோகிராபராக இருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கேமரா வாங்கி இன்று சினிமாவுக்கு படம் எடுக்கிறார் . ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு டிஜிடல் SLR கேமராவில் படம் எடுத்து , அடுத்த வாரமே சினிமாவில் போட்டோகிராபி ஆனார்.

போட்டோ எடுப்பதை அவ்வப்போது செய்யுங்கள். அதிகமா போட்டோ எடுப்பவர்களை சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு கேமராவும் , சில லென்சும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது சுட்டு கொண்டிருப்பவர்கள்.

போட்டோ எடுப்பதை தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது போட்டோ எடுக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் கேமிரா முன்னேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு கேமிரா திரை ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் ஏதாவது போட்டோ எடுத்து கொண்டேயிருப்பார்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்கள் படங்களை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்கள் படங்களை மற்றவர்கள் திட்ட வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது போட்டோகிராபி அவதாரம். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! போட்டோ எடுப்பதை விட போட்டோவை பார்ப்பவர்கள் அவதானிப்பவர்கள்.

விழியன் போன்றோர் மாதிரி அளவாக, செறிவாக வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்துக்கொரு முறை போட்டோ எடுக்க செல்லுங்கள்.

நந்து அண்ணா! மீண்டும் சொல்கிறேன். போட்டோகிராபி என்ற போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்ல நிலா(உங்க பொண்ணு)படங்கள் எடுத்திருப்பதை தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் போட்டோகிராபி உலகம்!

52 வாங்கிகட்டி கொண்டது:

Tech Shankar said...Ahaa.... -:) (:-

Tech Shankar said...

சர்வ சதா காலமும் எதையாவது சுட்டு கொண்டிருப்பவர்கள்.

what are we doing?

Vizhiyan is Gr8.

then veru enna solla?

Tech Shankar said...

adhu vandhukkitte irukkum.. comment moderation pannunga appu

spam comments daily varudhu

i am getting 10 or 15 spam comments from stock,lovestock etc.,

please do comment moderation first..

but enable anonymous comments

thanks

Tech Shankar said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

போட்டோ கண்ணாயிரம் இல்லைய்யா அவர் பேர் ஜீவ்ஸ்

மங்களூர் சிவா said...

போட்டோ கண்ணாயிரம் இல்லைய்யா அவர் பேர் ஜீவ்ஸ்

இது கூட தெரியாம பகிரங்க கடிதம் எழுத வந்துட்ட

:))))))))))))

மங்களூர் சிவா said...

கலக்கல் வால்!!

பரிசல்காரன் said...

//When time warrants we wear an entirely different mask. //

வாலு.. உண்மையச் சொல்லுங்க இதுக்கு என்ன அர்த்தம்?

பரிசல்காரன் said...

கலக்கல்யா!

வெரி ஈஸி, வெரு எஃபக்டீவ்-ங்கறது இப்போதைக்கு பகிரங்கக் கடிதம்தான்!

அப்படியே கட், பேஸ்ட் பண்ணி கொஞ்சம் எடிட் பண்ணினா போதும்!

அங்கிள் சொன்ன மாதிரி, இப்போ டைம் சேவ் ஆகுதுப்பா!

வால்பையன் said...

//When time warrants we wear an entirely different mask. //
வாலு.. உண்மையச் சொல்லுங்க இதுக்கு என்ன அர்த்தம்? //

தெரியலேயபா
(கிழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது)

VIKNESHWARAN ADAKKALAM said...

லதானந் அங்கில 2 நாட்களாக பதிவுலகத்தின் பக்கம் காணவில்லை...

பரிசல்காரன் said...

சுய பரிசோதனையில் விடுபட்டவை:-

7) அவ்வப்போது பஞ்சாபி தாபா சென்று நண்பர்களுடன் கயிற்றுக் கட்டிலில் அமர முடியவில்லையா?

பரிசல்காரன் said...

// VIKNESHWARAN said...

லதானந் அங்கில 2 நாட்களாக பதிவுலகத்தின் பக்கம் காணவில்லை...//

அன்பர்களே.. அவர் தமது பணிஉயர்வு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்!

இரவு கவி said...

bore adikkuthuppaaaa :-(

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணா ,

நிச்சயமாக இக்கடிதம் பாண்டிக்கு மட்டுமல்ல என்னைப் போல புகைபட அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,

பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )

நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

VIKNESHWARAN ADAKKALAM said...

எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது புகைபடம் என்றாலும் ( நான் நந்துவை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

VIKNESHWARAN ADAKKALAM said...

வால் பையன் அவர்களுக்கு....

உங்களின் கடிதம் புகைபட போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...

நன்றி

பரிசல்காரன் said...

இருங்கடி வெச்சுக்கறேன் எல்லாரையும்..

நாளைக்குப் பாருங்க ஒரு பதிவு வருது!!

பரிசல்காரன் said...

விக்கி..

எல்லா பின்னூட்டத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்க போல... எல்லாப் பக்கத்துலயும் போய் இதே கும்மிய அடிச்சுட்டு வர்றீங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

மொத்த பதிவும் சூப்பர்.நந்து மட்டுமில்லாமல், எல்லோரும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் கணிணிக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கேமிரா) கையுமா உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..

இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க.... இது நந்துவிற்கு மட்டும் அல்ல பலருக்கும் தான், நான் உட்பட.

சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்...

வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

பரிசல்காரன் said...

//இரவு கவி said...

bore adikkuthuppaaaa :-(//

அடுத்த கடிதம் ரெடி பண்ணுங்கப்பா...

இரவுகவிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் (அ)

போரடிப்பவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

VIKNESHWARAN ADAKKALAM said...

//விக்கி..

எல்லா பின்னூட்டத்தையும் காப்பி பேஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்க போல... எல்லாப் பக்கத்துலயும் போய் இதே கும்மிய அடிச்சுட்டு வர்றீங்க...//

நமக்கு தொழில் கும்மி, பதிவுலகிற்குழைத்தல்.
இமை பொழுதும்
கும்மியடிப்பதை
மறக்காமலிருத்தல்
--விக்கினேஸ்வரபாரதி---

VIKNESHWARAN ADAKKALAM said...

@பரிசல் தமிழ்மணத்தில் ஒரு சுனாமிய வரவெச்சிட்டு கூட சேர்ந்து கை தட்டுனா என்ன அர்த்தம்... இந்தக் கடிதம் எழுதும் பித்தத்தை நிறுத்த 10 கடிதங்கள் எழுதுங்கள்.

யட்சன்... said...

அடங்க மாட்டீங்களா...

எனக்கு யாரு பகீரங்க கடிதம் எழுதப்போறாங்களோன்னு திகிலோட உக்காந்திருக்கேன்.

ஹி..ஹி...ம்ம்ம்ம்

நல்ல முயற்சி வால்பையன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

கலக்கல்யா!

வெரி ஈஸி, வெரு எஃபக்டீவ்-ங்கறது இப்போதைக்கு பகிரங்கக் கடிதங்களின் கமெண்ட் தான்!

அப்படியே கட், பேஸ்ட் பண்ணி கொஞ்சம் எடிட் பண்ணினா போதும்!

அங்கிள் சொன்ன மாதிரி, இப்போ டைம் சேவ் ஆகுதுப்பா!

VIKNESHWARAN ADAKKALAM said...

//தெரியலேயபா
(கிழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது)//

வாலு.. உண்மையச் சொல்லுங்க இதுக்கு என்ன அர்த்தம்?

இரவு கவி said...

// அடுத்த கடிதம் ரெடி பண்ணுங்கப்பா...

இரவுகவிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் (அ)

போரடிப்பவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் //

ada adutha kadithamaa ayyaa aala vidunkappaaa saamiiiii :-)

Saminathan said...

யோவ்வ்வ்...என்னய்யா நடக்குது இங்கே..??

ஆளாளுக்கு பகிரங்க கடிதம் எளுதித் தள்ளறீங்க...

யாரவது ஒருத்தர், ஜார்ஜ் புஷ்ஷுக்கோ, முஷரஃப்க்கோ, மன்மோகன்ஜிக்கோ, இல்ல...ஜே.கே.ரீத்திஷுக்கோ பகிரங்க கடிதம் எழுதலாம்ல...

ராஜ நடராஜன் said...

வர வர வெட்டலும் ஒட்டலும் பஞ்ச் அதிகமாகிட்டே வருதே:))) எப்படியோ மூலப் பதிவரை பங்ச்சர் ஆக்கிடுவீங்க போல இருக்குதே!எடுங்கள் இதை எளிமையாக (take it easy).மொக்கைச்சாமிகள் கலாய்த்தலுடன் தோள் கொடுப்பார்கள் எனவும் மனசுக்குப் படுகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னய்யா எங்கப் பாத்தாலும் ஒரே பகிரங்கக் கடிதமா இருக்குது.

பதிவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பகிரங்கக் கடிதம் எழுதிக் கொள்வதுதான் பாக்கி :)

லதானந்த் யோசிப்பாரு, ஏண்டா இதை ஆரம்பிச்சோம்னு :)

கூடுதுறை said...

அப்பாடி நான் தப்பிச்சேன்....

நந்து f/0. நிலா மாட்டிக்கிட்டார்...

MSK / Saravana said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னய்யா எங்கப் பாத்தாலும் ஒரே பகிரங்கக் கடிதமா இருக்குது.

பதிவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பகிரங்கக் கடிதம் எழுதிக் கொள்வதுதான் பாக்கி

லதானந்த் யோசிப்பாரு, ஏண்டா இதை ஆரம்பிச்சோம்னு //

ரிப்பீட்டேய்.......

KARTHIK said...

// கூடுதுறை said...

அப்பாடி நான் தப்பிச்சேன்....

நந்து f/0. நிலா மாட்டிக்கிட்டார்...//

கூடுதுறை அவரு உங்களுக்குத்தான் போடுறேன்னாறு (அதாவது உங்களையும் உங்க ஷேர் பத்தியும்)
நான் தான் வேணம் அவரு பாவம் வேரையரையாவது போடுங்கன்னு சொன்னேன்.அதுக்கு ஒரு 1/4 செலவாகும்னு வேற சொன்னாரு.உங்கள காப்பாத்தப்போயி எனக்கொரு Mc செலவு.

கூடுதுறை said...

நன்றி கார்த்திக்

அது சரி mc ன்னா என்ன?

நந்து f/o நிலா said...

இன்னைக்கு போணி நான்தான் போல? நடத்துங்க நடத்துங்க. ஐடியா கொடுத்தது கார்த்திக்கா?

இன்னும் எத்தனை கடிதம் வரப்போவுதோ ஆண்டவா

KARTHIK said...

// அது சரி mc ன்னா என்ன?//

உங்க நண்பர் வாலுகிட்டையே கேளுங்க.

// ஐடியா கொடுத்தது கார்த்திக்கா? //

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆயில்யன் said...

//
பரிசல்காரன் said...

அங்கிள் சொன்ன மாதிரி, இப்போ டைம் சேவ் ஆகுதுப்பா!//


தெய்வமே எங்கயோ போயீட்டீங்க!

பரிசல் அண்ணா! எப்படி உங்களாலமட்டும் இப்படி??????

வெண்பூ said...

யோவ்... இதெல்லாம் டூ மச்..

படிச்சிட்டு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. நல்லா காமெடி வால். வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

//நந்து f/o நிலா said...
இன்னைக்கு போணி நான்தான் போல? நடத்துங்க நடத்துங்க. ஐடியா கொடுத்தது கார்த்திக்கா?

இன்னும் எத்தனை கடிதம் வரப்போவுதோ ஆண்டவா
//

அச்சச்சோ.. நந்து சார்.. உங்களுக்கு விஷயமே புரியல.. இதுக்கு பதில இங்க சொல்லக்கூடாது. உடனே உங்க ப்ளாக்ல போயி ஒரு பதிவ போட்டுறணும். தலைப்பு "புகைப்படம் எடுப்பதிலிருந்து விடைபெறுகிறேன்" அப்படின்னு இருக்கலாம். 2 நாள் கழிச்சி "சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா" அப்படின்னு மாத்திடலாம்.

ஆரம்பிக்கிறது கீழ இருக்குறமாதிரி இருந்தா உத்தமம்.

//
இதைப் படிச்சுட்டு போட்டோகிராபிய‌ யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்!

என்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப போட்டோகிராபியில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை (ஷட்டர் ஸ்பீடு அல்ல) என்று முடிவெடுத்துவிட்டேன்!

நான் என் தம்பி ஸ்தானத்தில் மதிக்கும், வால்பையன் நந்து f/o நிலாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்...

...

//

வெண்பூ said...

சொல்ல மறந்துட்டனே நந்து சார். அந்த பதில் பதிவ போட்டதுக்கப்புறம் மூணு விசயம் பண்ணனும்

1. ரெண்டு நாளைக்கு கேமராவையே தொடக்கூடாது
2. ரெண்டு நாள் கழிச்சி "*****கு ஒரு பகிரங்க கடிதம்" அப்படின்னு யாரோ ஒரு பதிவருக்கு கடிதம் எழுதி அதை உங்க வலைப்பக்கத்துல ஏத்தணும்
3. மூணாவது நாள்ல இருந்து கேமிராவும் கையுமா வழக்கம்போல இருக்கணும்.

வெண்பூ said...

வால்பையன் Lapடாப்பில் இருப்பதால் இப்போதைக்கு கும்மியடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். யார் lap என்று கேட்காதீர்கள். :)

M.Rishan Shareef said...

என்னங்க இது? எங்க பார்த்தாலும் ஒரே லெட்டர் மயமா இருக்கு ? :O

சின்னப் பையன் said...

முடியல... என்னாலே முடியல.....

சின்னப் பையன் said...

பதிவு போடறது இவ்ளோ சுலபமா... யாராவது ஒருத்தர பிடிச்சிக்கவேண்டியது.. இந்த கடிதத்தை அப்படியே fஐன்ட் & ரெப்லcஎ செஞ்சி போடவேண்டியது... அட்றா... அட்றா...

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
போட்டோ கண்ணாயிரம் இல்லைய்யா அவர் பேர் ஜீவ்ஸ்//

அவரை நந்து அண்ணாவுக்கு ஏற்கனவே தெரியும் நான் எப்படி அறிமுகபடுத்தி வைக்க!
நான் சொல்லும் ஆள் உங்களுக்கு தெரியாது.
அவர் போட்டோ எடுப்பதில் பெரிய ஆள்,
கேமரா இல்லாமலேயே போட்டோ எடுப்பார்னா பாத்துக்கேங்க்களேன்

ILA (a) இளா said...

//நந்து அண்ணா! மீண்டும் சொல்கிறேன். போட்டோகிராபி என்ற போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். //
மாம்ஸுக்கு, போட்டோகிராபி மட்டுமே போதைன்னா ராத்திரியானா ஏத்துற சரக்குக்கு என்னா சொல்ல?

ஆமாம். வால்பையனைத் தொடர்ந்து நானும் சொல்கிறேன். வேண்டான் நிறுத்துங்க. (அவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்தறேன்னு சொல்லப்படாது)

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

போட்டோகிராபி போதைன்னா சரக்கு எதுங்க? ஊறுகாய் எதுங்க?

வால்பையன் said...

இந்த பதிவு முழுக்க முழுக்க கும்மியா போயிட்டதால
யாருக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியல!
வந்து விழாவை சிறபித்த அனைவருக்கும் நன்றி

வால்பையன்

!

Blog Widget by LinkWithin