குரு-சிஷ்யன் = டோண்டு-வால்பையன்

சமீபத்தில்! அட நம்புங்க உண்மையிலேயே சமீபத்தில் தான்
சென்ற மாதம் ஆரம்பத்தில் அண்ணாச்சி ஆஸிப் மீரான் அவர்களது இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். செல்லும் வழியிலே கவனக்குறைவால் அலைபேசியை தொலைத்து விட்டேன் என்பது வேறு கதை.

யாருடைய அலைபேசி எண்ணும் என்னிடம் இல்லை. தனியாக சென்றதால் பாதுகாப்பு கருதி மடிக்கணினியை எடுத்து செல்லவில்லை. யாரை அழைப்பது? எங்கே போவது?
வலைபூ நண்பர்களை அழைக்க அவர்களுடைய பதிவில் பின்னூட்டமிடலாம். ஆனால் பதில் மரியாதை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நிறைய பேர் என்னை நேரில் பார்க்காதவர்கள். என்னை பற்றி என்ன மாதிரியான கண்ணோட்டம் வைத்திருப்பார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்.

ஆனால் சென்னையில் நான் சந்தித்து பழகிய முக்கியமானவர் டோண்டு அவர்கள்.
அவரை அழைப்பதிலும் ஒரு வசதி இருக்கிறது. அவர் எந்நேரமும் கணினி முன் அமர்ந்திருப்பவர். உடனடியான பதில் அவரிடம் இருந்து வரும். அதனால் அவருக்கு பின்னூட்டம் இட்டேன். பதிவர்களை உறவினர் போல் பார்க்கும் டோண்டு அவர்கள் அடுத்த சில வினாடிகளில், நான் கொடுத்திருந்த தற்காலிக எண்ணுக்கு என்னை தொடர்பு கொண்டார். நாளை வருவதாகவும் என்னை மண்டபத்தில் சந்திப்பதாகவும் சொன்னார்.

இதெல்லாம் முன்னுரை! இப்போ மேட்டர் என்னான்னா
பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக் அவர்கள் அவருடைய இந்த பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

///க.ர.அதியமான், உண்மைத்தமிழன் வரிசையில் வால்பையனும் டோண்டு சாரின் அதிகாரப்பூர்வமான சீடனாக உருவெடுத்திருக்கிறார். “டோண்டு சார் வந்துருவாரு, நேத்தைக்கு கூட அவருக்கு என் மொபைல் தொலைஞ்சிடுச்சின்னு பின்னூட்டம் போட்டிருக்கேன்” என்று “இயேசு வருகிறார்” பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார்.///

வசிஷ்டரரே இப்படி எழுதினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
மல்லாக்க படுத்து இது பற்றி யோசித்து கொண்டிருந்த வேளையில் அதுவும் ஒரு வகையில் உண்மை தான் என்று தோன்றியது.

நான் சேவை சம்பந்த பட்ட துறையில் இருக்கிறேன். வாடிக்கையாளர்களிடம் தினமும் தொடர்பு கொள்ளவேண்டும், புதிதாக வாடிக்கையாளர்களை உருவாக்கவேண்டும். அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கவேண்டும். என்னை போல் சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு மேலும் இது பற்றி தெரியலாம்.

டோண்டு அவர்கள் பல ஆண்டுகளாக சேவைத்துறையில் தனி ஆளாக ராஜாங்கம் நடத்துபவர். அவரின் அனுபவம் கூட என் வயது ஆகியிருக்காது என்று சொன்னால் அது மிகையல்ல. அவருடன் நான் பல கருத்துகளின் உடன்படாமல் தனிப்பட்டு நின்றாலும், அவரின் இந்த திறமைகளை நான் மதிக்கிறேன்.

வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள அவருக்கு சிஷ்யனாக இருப்பதில் எனக்கு ஒன்றும் அவமானமல்ல.

கோமண கிருஷ்ணன் போன்றவர்கள் என்னை போட்டியாக நினைக்காமல் என்னை கற்று கொள்ள அனுமதிக்கவும்.

நன்றி

18 வாங்கிகட்டி கொண்டது:

நல்லதந்தி said...

//இதெல்லாம் முன்னுரை! இப்போ மேட்டர் என்னான்னா
பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக் //

:))) &????????????????:o)

நல்லதந்தி said...

//இதெல்லாம் முன்னுரை! இப்போ மேட்டர் என்னான்னா
பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக்//

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!

Anonymous said...

பெரியவருக்கு சொம்படிக்க எங்க சிங்கத்த இன்னாத்துக்கு வம்பிழுக்கறீங்க???

ILA (a) இளா said...

உங்களோட ஒரே காமெடிப்பா.
லக்கிலுக்குக்கோட உண்மையான பட்ட பேரு தெரியுங்களா? பதிவுலகின் குத்தூசி.

அவரு டர்பன் கட்டி இருக்க மாட்ட்டார்ர்ரூ. கொண்டை ஊசியால குத்த்தி சொல்ல்ல்லுவ்வாரு. அதான் அந்தப்ப்ப் பேர்ர்ரூ.(பல்ராம் நாயுடு மாதிரி படிச்சுக்குங்க)

Tech Shankar said...



Super Appu... Enjoy.


வால்பையன் said...

//நல்லதந்தி said...
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!//

நம்ம லக்கி நல்லா நகைசுவையா பதிவு எழுதுவாரு!
அங்க படிச்சிட்டு இங்க வந்து சிரிக்கிறிங்க

வால்பையன்

வால்பையன் said...

//Anonymous said...
பெரியவருக்கு சொம்படிக்க எங்க சிங்கத்த இன்னாத்துக்கு வம்பிழுக்கறீங்க???//

லக்கியின் வீரபடையை எனக்கு தெரியாதா!
நீங்க அவரில்லை!
உங்க சிங்கம் தான் இந்த குரங்குகிட்ட முதல்ல வம்புக்கு வந்துச்சு

வால்பையன்

Kanchana Radhakrishnan said...

அது என்ன..மல்லாக்க படுத்துக்கொண்டிருந்த வேளையில்....ஆனாலும் ரொம்ப குசும்பு தான்

குரங்கு said...

யாருப்பது என்ன இழுத்தது???

நான் மட்டுக்கு சிவனேனுதானே இருக்க்கேன்.

வால்பையன் said...

//ILA said...
உங்களோட ஒரே காமெடிப்பா.
லக்கிலுக்குக்கோட உண்மையான பட்ட பேரு தெரியுங்களா? பதிவுலகின் குத்தூசி.
அவரு டர்பன் கட்டி இருக்க மாட்ட்டார்ர்ரூ. கொண்டை ஊசியால குத்த்தி சொல்ல்ல்லுவ்வாரு. அதான் அந்தப்ப்ப் பேர்ர்ரூ.(பல்ராம் நாயுடு மாதிரி படிச்சுக்குங்க)//

ச்சே ச்சே, அப்படியெல்லாம் இருக்காதுங்க.
அவருக்கு பிடிக்காதவங்களுக்கு பதில் பின்னூட்டம் மட்டும் போடமாட்டார்ன்னு மட்டும் தெரியும்

வால்பையன்

வால்பையன் said...

//தமிழ்நெஞ்சம் said...
Super Appu... Enjoy.//

யார சொல்ரிங்கன்னே தெரியல!

வால்பையன்

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கூடுதுறை said...

//மல்லாக்க படுத்து இது பற்றி யோசித்து கொண்டிருந்த வேளையில் அதுவும் ஒரு வகையில் //

நீங்கள் எல்லாம் மல்லாக்க படுத்தாலே பதிவிட விசயம் கிடைத்துவிடுகிறது...

ஆனால் எனக்கெல்லாம் மல்லாக்க,குப்புற,தலைகீழாக படுத்தாலும் விசயம் இல்லாமால் தடுமாறி பாவனா பற்றி கிசுகிசு வையெல்லாம் பதிவேற்ற வேண்டியுள்ளது....

ம்ம்ம்ம்ம்...

கூடுதுறை said...

//பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக்//

இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா?

லக்கிலுக் கிண்டலடிக்கபடதாவர்கள் உண்டா???

வால்பையன் said...

//kanchana Radhakrishnan said...
அது என்ன..மல்லாக்க படுத்துக்கொண்டிருந்த வேளையில்....ஆனாலும் ரொம்ப குசும்பு தான்//

அப்ப தாங்க புது புது ஐடியாவெல்லாம் வருது

வால்பையன்

வால்பையன் said...

//குரங்கு said...
யாருப்பது என்ன இழுத்தது???
நான் மட்டுக்கு சிவனேனுதானே இருக்க்கேன்.//

இதெல்லாம் நல்லால!
இத்தன நாலா பெரிய வாலோடு நான் சுத்திகிட்டு இருக்கேன்
நேத்து வந்துட்டு இப்படி போட்டி போட கூடாது

வால்பையன்

வால்பையன் said...

கோவை விஜய்
சமுதாய நலனுக்காக நீங்கள் ஈடுபடும் சேவையில் பங்கெடுத்து கொள்ளவதில் பெரு்மகிழ்ச்சி அடைகிறேன்

வால்பையன்

g said...

/// குரங்கு said...
யாருப்பது என்ன இழுத்தது???

நான் மட்டுக்கு சிவனேனுதானே இருக்க்கேன்.///


உன்ன யாரு இழுத்தது வம்புக்கு? ஆனால் ஒன்று உன்னால சிவனேன்னு இருக்கமுடியாது. மரத்திற்கு மரம்...!

!

Blog Widget by LinkWithin