தமிழ்மணத்தில் தமிழச்சியின் பதிவை இன்று பார்த்தேன்.

அங்கே இருந்து கொஞ்சுண்டு எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறேன்
கோபித்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்





//தமிழச்சி என்று புனைபெயர் வைத்திருக்கிறீர்களே என்ன காரணம்?

இந்தக் கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசியில் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக என்னைச் சந்திக்கிற எல்லாருமே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதே இல்லை. சுமதி என்ற என் சொந்தப் பெயரிலேயே என் படைப்புகளை வெளியிடத்தான் எனக்கு விருப்பம். ஏற்கெனவே என் பெயரில் இன்னொரு சுமதி படைப் பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும்பொழுது, என்னை நான் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என யோசித்து, வேறொரு பெயரைத் தேடினேன்.

இந்த “அடையாளம்’ என்பது என்னைப் பிறரிடமிருந்து வித்தி யாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதமான மிகைத்தனங் களுமற்றுலி அதேசமயம் எனது வேர்களின் ஊடோடி இருந்தால் எனக்கு உவப்பானதாகவும், திருப்தி கரமாகவும் இருக்குமே என்பதால் தமிழ்க் கிராமத்திலிருந்து வருகின்ற ஒரு பெண் எனும் பொருள்படும் படியான ஒரு பெயரை யோசித்தேன்.//

மேலும் தகவல்களுக்கு இதை சுட்டவும்

பிரபல கவிஞரான இவர் சமிப காலமாக அரசியல் வட்டாரங்களிலும் பேசபடுகிறார்


கீழே அவர் புகைபடம்






10 வாங்கிகட்டி கொண்டது:

துளசி கோபால் said...

குமுதம்.காம் இல் இவரது பேட்டி வீடியோ இருக்கு.
நல்லா அழகா(வும்) இருக்காங்க.

Udhayakumar said...

வால் பையன், ஒரிஜினல் தமிழச்சி இவங்கதான் :-)

VSK said...

எல்லாருமே தமிழச்சிங்கதான்!

இத்துப்போன ரீல் said...

எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ?

Anonymous said...

கரிசல் மண் தந்த கவிதை... அக்கா தமிழச்சி தங்கபாண்டியன்.... கழகத்திற்கும், கனிமொழிக்கும் உதவியாக.... தென்பாண்டி தந்த ஆங்கில பேராசிரியர் + தமிழ் கவிதாயினி.....

uthayamathi

வால்பையன் said...

என்னையும் மனுசன மதிச்சி வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

வால்பையன்

Anonymous said...

நம்ப முடியல. நல்ல தமிழச்சியாக இருக்கிறார். நல்ல தமிழச்சியும் நம் சமுதாயத்தில் இருப்பது வரவேற்ககூடியது.

புள்ளிராஜா

Anonymous said...

இதுதாங்க ஒறிஜினல் தமிழச்சி.
நீங்க ஒறிஜினல் தமிழச்சியின் பதிவா என்று பார்த்து வாசியுங்க.
டுப்பிளிகற்றை நம்பி ஏமாற வேண்டாம்.
நல்ல தமிழச்சிக்கு சென்னையைத் தவிர வேறு இடங்களில் கிளைகள் இல்லை.

இத்துப்போன ரீல் said...

உங்கள மதிச்சி நாங்கள்லாம் வந்தோம்
என்னய மதிச்சி நீங்க வந்தீங்களா?
ஆனா ரூனா ண்னா? அண்ணா!

இத்துப்போன ரீல் said...

எங்க, அசலுக்கே வக்கில்லை அப்புறம்
தானே போலி.கட்டுரைய படிக்கலையா
என்ன நல்லா பாருங்க நல்லா பாருங்க
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா திருவிளையாடல் வசனமில்லை.
யோசனை பண்ணுங்க!
ஆனா நான் எழுதரத்திற்கே நீங்கதான்
காரணம்!............?

!

Blog Widget by LinkWithin