இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்.

அவனுக்கு முன்னால் ஒரு பத்து, பதினைந்து பேர் அமர்ந்திருந்தார்கள், அனைவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருந்தது, சிலபேர் கையில் கேமரா, அவர்கள் அடையாள அட்டை அவர்கள் நிருபர்கள் என்று சொல்லியது.

பல கேமரா ப்ளாஷ்க்கு மத்தியில் அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்,

அவர் போலி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

எதையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் எங்கள் வேலை.

அவரை கைது செய்ததால் பல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதே அதை பற்றி?

உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்.

எல்லோரும் கோரஸாக "அவரை போலி என்று எப்படி நிரூபித்தீர்கள்".

சொல்கிறேன்.
வெகு சாமர்த்தியமாக எல்லோரையும் ஏமாற்றி வந்த கருப்பானந்தா என்ற சாமியார் ஒரு போலி என்று எங்களுக்கு ஆரம்ப்பதிலேயே புகார் வந்தது, ஆனால் சட்டத்தின் முன் சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் நிறுத்த முடியாது.

அதனால் நானும் எங்களது டிபார்மென்டை சேர்ந்த சிலரும் பொதுமக்கள் போல் வேடமனித்து கருப்பானந்தாவின் பூசைகளுக்கு சென்று வந்தோம்.

மோதிரம் கொடுப்பது, லிங்கம் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்த அகில உலக புகழ் சாய்பாபாவே டுபாக்கூர் என்று இங்கே நிருபித்ததால், அவன் அந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு வேறு ஒரு புது மாதிரியான மோசடி செய்தான்.
இதனால் மக்களுக்கு அவன் மேல் சந்தேகம் வரவில்லை.

அதாவது மக்களுடைய குறைகளை அவர்கள் கையாலேயே ஒரு துண்டு சீட்டில் எழுதி வாங்கி, அதை சுருட்டி அவன் முன் ஒரு குடுவையில் வைப்பார்கள்.
அதை ஒன்றை கையில் எடுக்கும் அவன், அதை பிரிக்காமலேயே எழுதியவரின் பெயர் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சொல்லியதால் அவன் மேல் மக்களுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டது.

வெகுநாட்கள் இதிலுள்ள சூட்சமம் தெரியாமல் நாங்களே விளித்து கொண்டிருந்தோம்.
தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நான் ஒரு நாள் கவனித்தேன், முதலில் எழுந்திரிக்கும் ஆளின் நடவடிக்கையில் ஒரு நாடக தன்மை தெரிந்தது.
பக்தியில்லாமல் ஒரு கடமைக்கு வேலை செய்வது போல் இருந்தது அவன் செயல்.
மேலும் அவன் நடந்து போகையில் கருப்பானந்தா அந்த சீட்டை பிரித்து படிப்பதையும் நான் பார்த்து விட்டேன்.

அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி தோன்றியது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.

அதன் பின் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலத்தில் மட்டுமே குறைகளை எழுத வேண்டும் என்ற புதிதாக ஒரு சட்டம் போட்டார்கள்.
அந்த நேரத்தில் தான் பெங்களூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் கைபேசிகளுக்கு உபயோக படுத்தும் infrared என்ற தொழில் நுட்பத்தை பற்றி கூறினார்.
அவருடைய திட்டத்தின் படி குறைகளை எழுதும் காகிதத்தின் பின்னே infrared கதிர்களை பிரதிபலிக்கும் ரசாயனத்தை தடவினேன், மேலும் infrared கதிர்களை உள்வாங்கும் கேமராக்களையும் பொருத்தி வைத்தோம்,

எங்கள் திட்டபடியே அவன் மாட்டி கொண்டான்.

அதையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்!

கருப்பானந்தா தொழில் ரீதியாக பல ஊர்களுக்கு திரிந்தவன், அதனால் இந்திய மொழியில் பல அவனுக்கு தெரிந்திருந்தது.
கருப்பானந்தாவின் ஏமாற்றுவேலை என்னவென்றால், மக்களின் குறைகளை எழுதி போடும் சீட்டில் முதல் சீட்டை எடுத்து பிரிக்காமல் அவன் படிக்கும் பொது எழுபவன் அவனுடைய ஆள்.

அதாவது நீண்ட நாள் வயிற்றுவலிக்காக வந்திருக்கும் கண்ணன் யார் என்று கேட்டால்
எழுந்திருப்பவன் அவனுடைய ஆள், அவனை அருகில் அழைத்து விபூதி கொடுக்கும் பொது அந்த சீட்டில் எழுதியிருப்பதை படித்து விடுவான் கருப்பானந்தா, அதையே அடுத்த சீட்டிற்கு வாசிப்பான், அப்படி தொடர்ச்சியாக வரும்போது மக்கள், சாமியார் அவருடைய சக்தியால் தான் இதை செய்கிறார் என்று நம்புகிறார்கள்.

அப்படியா கேட்பதற்கே பயங்கர சுவாரிஸ்யமாக இருக்கிறது. இப்போது எங்கே அந்த போலி சாமியார்,

விசாரணை நடக்கிறது, உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் இம்மாதிரியான போலிகளை ஆதரிக்காதிர்கள், விளைவுகள் உங்களுக்கும் பாதகமாக தான் இருக்கும்,
போலிகளுக்காக பிரச்சாரம் செய்யாதிர்கள்.

மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது

23 வாங்கிகட்டி கொண்டது:

dondu(#11168674346665545885) said...

//எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.//
என்னை வைச்சு ஏதும் காமெடி பண்ணல்லையே? :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//என்னை வைச்சு ஏதும் காமெடி பண்ணல்லையே?//

காமெடியா!!அதுக்கு தான் முயற்சி பண்றேன் ஆனால் எல்லாம் சீரியஸா போயிருதே!!

வால்பையன்

Anonymous said...

Anonymous has left a new comment on your post "இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்க...":

***** கண்ணாந்தா என்ற சுவற்றில் கிறுக்கி **** சொல்லும் சாமியும் மாட்டி கொண்டாரேமே

வால்பையன் said...

அனானி அவர்களுக்கு!
என் பதிவுகள் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப நகைசுவையாகவும்!
அதே நேரம் என்னால் முடிந்த விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் இருக்கு வேண்டும் என்று நினைக்கிறேன்,

அதனால் நீங்க நேரடியாக எழுதின சில பெயர்களை edit செய்திருக்கிறேன்,
உங்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட்டமைக்கு மன்னிக்கவும்

வால்பையன்

கூடுதுறை said...

மிக நல்ல பதிவு.

தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்

எனது புதிய புகைப்பட பதிவை பாருங்கள்.

http://putthunarchi.blogspot.com

எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....

Anonymous said...

மிக நல்ல பதிவு.

தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்

எனது புதிய புகைப்பட பதிவை பாருங்கள்.

http://putthunarchi.blogspot.com

எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....

சிறில் அலெக்ஸ் said...

அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று வாங்கினேன் அதிலே இந்த முறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வால் பையன்,

அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத்தெட்டல்ல இவ்வாறு ஆறாயிரத்தெட்டு உண்மைக் கதைகள் எழுதக்கூடிய அளவுக்கு எங்கள் சாமியார்களைது லீலைகள் உள்ளன.

அவற்றையெல்லாம் அறிந்து படிந்து ரசித்துவிட்டு மீண்டும் அவர்களிடமே சரணாகதி அடையும் புத்திசாலித்தனமும் எங்கள் சமூகத்திடம் உள்ளது.

g said...

எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில்லா மக்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது மிஸ்டர் வால்.

ezhil arasu said...

கபட சன்யாசிகளின் முகத்திரையை கிழிக்கும் ஆற்றலுடன் எழுதப்பட்டுள்ள"இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு " மிகவும் சரியான நோக்கத்தில் எழுத்ப்பட்டுள்ளது.
இந்தியாவில் அநேகமாக (சொல்லுக்கும் செயலுக்கும் அதிக பேதமின்மை,ஒரு சில நல்ல சிந்தனை,நேர்மையான நடைமுறை உள்ள சில உண்மையான யோகிகளை தவிர்த்து) எல்லாச் சாமியார்களும் போலிதான் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளி வந்துள்ளதை இந்த நாடறியும்.தெரிந்த பிறகும் கன்ணை திறந்து கடும் இருட்டுக்குகைகுள் மீண்டும் மீண்டும் நுழைய யத்தனிப்பபரை காப்பாற்ற எத்துணை பகுத்தறிவு பகலவன்களும்,முற்போக்கு சிந்தனையாளர்களும்,புரட்சிகர எழுத்தாளர்களும்,கருத்துக் காட்சி ஊடங்களும் தேவையோ தெரியவில்லை."என்கடன் பணி செய்துகிடப்பதே" எனும் உங்கள் பதிவு நிச்சயம் பலன் தரும்.தொடருங்கள் நண்பரே.

Sen22 said...

அருமையான பதிவு...


Senthil,
Bangalore

வால்பையன் said...

//தங்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு எனது வந்தனம்//

மிக்க நன்றி சுந்தர் அவர்களே!

//எதோ தங்களின் மூலம் ஒரு விளம்பரம்தான்....//

இதில் விளம்பரம் ஒன்றுமில்லை! தமிழ்மணத்தில் இணைந்து விட்டால் உங்களுகேன்று ஒரு ரசிகர் கூட்டம் வரும் பாருங்கள்!

வால்பையன்

வால்பையன் said...

//அண்மையில் மேஜிக் செய்வது குறித்த புத்தகம் ஒன்று வாங்கினேன் அதிலே இந்த முறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது./

இந்த சாமியார்கள் செய்வது அனைத்தும் மேஜிக் தான் என்று மக்கள் எப்போது புரிந்து கொள்ளபோகிறார்களோ,
அந்த புத்தகம் பற்றி விளக்க பதிவு ஒன்று எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து

வால்பையன்

வால்பையன் said...

//அரேபிய ஆயிரத்தெட்டுக் கதைகள் போல, ஆயிரத்தெட்டல்ல இவ்வாறு ஆறாயிரத்தெட்டு உண்மைக் கதைகள் எழுதக்கூடிய அளவுக்கு எங்கள் சாமியார்களைது லீலைகள் உள்ளன.
அவற்றையெல்லாம் அறிந்து படிந்து ரசித்துவிட்டு மீண்டும் அவர்களிடமே சரணாகதி அடையும் புத்திசாலித்தனமும் எங்கள் சமூகத்திடம் உள்ளது.//

நமது சமூகத்தை குறை சொல்ல முடியாது நண்பரே!
அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட எதாவது வழி இருக்கிறதா என்று தான் தேடுகிறார்கள். இந்த போலிகள் தான் அவர்களை மேலும் துன்பத்திற்க்குள் இழுக்கிறார்கள். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று மக்கள் புரிந்து கொண்டால் போதும்

வால்பையன்

வால்பையன் said...

//எத்தனை போலி சாமியார்கள் இருந்தாலும், படிப்பறிவில்லா மக்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது மிஸ்டர் வால்.//

ஐயோ பிளேடு! படிச்சவன் தான் இதில் நிறைய ஏமார்றதே!
ஏழைகளிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் பணக்காரர்களிடம் நிறைய இருக்கிறது.
இந்த போலிகள் குறி வைப்பது பணக்கார படித்தவர்களை தான்!
ஏட்டு சுரைக்காய் கறிகொதவாது என்று இங்கே அப்பட்டமாக தெரிகிறது

வால்பையன்

வால்பையன் said...

//இந்தியாவில் அநேகமாக (சொல்லுக்கும் செயலுக்கும் அதிக பேதமின்மை,ஒரு சில நல்ல சிந்தனை,நேர்மையான நடைமுறை உள்ள சில உண்மையான யோகிகளை தவிர்த்து) எல்லாச் சாமியார்களும் போலிதான் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளி வந்துள்ளதை இந்த நாடறியும்.தெரிந்த பிறகும் கன்ணை திறந்து கடும் இருட்டுக்குகைகுள் மீண்டும் மீண்டும் நுழைய யத்தனிப்பபரை காப்பாற்ற எத்துணை பகுத்தறிவு பகலவன்களும்,முற்போக்கு சிந்தனையாளர்களும்,புரட்சிகர எழுத்தாளர்களும்,கருத்துக் காட்சி ஊடங்களும் தேவையோ தெரியவில்லை."என்கடன் பணி செய்துகிடப்பதே" எனும் உங்கள் பதிவு நிச்சயம் பலன் தரும்.தொடருங்கள் நண்பரே.//

நல்ல மனிதனாக இருப்பதற்கு சாமியாராக வேண்டியதில்லை!
சாமியார்கள் எல்லாம் நல்ல மனிதர்களும் இல்லை!
மனசிதைவுக்கு ஆளானவர்கள் நானே கடவுள் என்று பிதற்றுவது போல தான் இன்றைய சாமியார்களும்!
உண்மையான சாமியார் தன்னை விளம்பரபடுத்தி கொள்ளமாட்டான்.
அவனுக்கு பணம், புகழ் தேவையில்லை,
எல்லாம் விதி என்று நம்பும் சாமியார் எப்படி விதியை மாற்ற முடியும்!

மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா! அவனை பார்க்க இந்த ப்ரோக்கர்கள் தேவையில்லை என்று உணர வைத்துவிட்டால் போதும், மக்கள் கடவுளை தேடி கோயிலுக்கு போக மாட்டார்கள்! அவர்கள் இருக்கும் இடம் தேடி கடவுள் வருவான்

வால்பையன்

வால்பையன் said...

//அருமையான பதிவு...
Senthil,
பெங்களூர்//

வருகைக்கு நன்றி செந்தில்

வால்பையன்

Anonymous said...

சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு FIR எண் அனுப்பப்பட்டு விசா விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

வால்பையன் said...

//சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. மலேசிய எம்பசிக்கு FIR எண் அனுப்பப்பட்டு விசா விவரங்கள் கோரப்பட்டுள்ளது.//

உண்மையிலேயே அப்படி ஒரு சாமியார் மலேசியாவுல இருக்காரா!
ஆப்பு வைக்கிறதுன்னு முடிவாயிருச்சு பெருசா வச்சுருங்க!

வால்பையன்

புகழன் said...

சாய் பாபாவின் தகிடு தத்தங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கி்றேன். உங்கள் வலைதளம் மூலம் (நீங்கள் கொடுத்துள்ள இனைப்பின் மூலம் இன்று உண்மையை கண்டு களித்தேன். இணைப்பை வழஙகியதற்கு நன்றி.
இப்படிக்கு புகழன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி புகழன்!
சாய்பாபா மட்டுமல்ல சாமியார்கள் எல்லாம் போலி தான்.
நீங்கள் தான் கடவுள் யாரையும் நம்பாதிர்கள்.

வால்பையன்

புகழன் said...

வால்பையன் said...

//சாய்பாபா மட்டுமல்ல சாமியார்கள் எல்லாம் போலி தான்.
நீங்கள் தான் கடவுள் யாரையும் நம்பாதிர்கள்.//

சாமியார்கள் பின்னாடி ஏமாந்து போவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இரண்டையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்?

வால்பையன் said...

//சாமியார்கள் பின்னாடி ஏமாந்து போவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இரண்டையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்?//

மன்னிக்கவும், கண்மூடித்தனமாக என்று குறிப்பிடிருக்க வேண்டும்,
ஏதோ அவசரத்தில் மறந்துவிட்டேன்

வால்பையன்

!

Blog Widget by LinkWithin