லைக்கினால் என்ன பயன்?.....

உங்கள் பதிவுக்கு ஒருவர் லைக்கிட்டாலோ, கமெண்ட் செய்தாலோ அந்த பதிவு உங்கள் நண்பர்களின் டைம்லைனில் முன்னால் வந்து நிற்கும், உதாரணத்திற்கு இரண்டு வருடத்திற்கு முன் நீங்க பதிவிட்ட எதாவது ஒரு பதிவிற்கோ, போட்டோவிற்கோ யாராவது லைக்கோ, கமெண்ட்டோ இட்டால் அது உங்கள் நண்பர்களின் டைம்லைனில் வந்து நிற்கும்

இதில் இன்னொரு விசயம் இருக்கு, அந்த பதிவிற்கு யாரெல்லாம் லைக் இடவில்லையோ அவர்கள் டைம்லைனில் தான் வந்து நிற்கும், உங்களின் ஒரு பதிவிற்கு நான் லைக் இட்டுருந்தால் உங்கள் டைம்லைனில் வந்து தேடினாலும் நான் லைக் இடாத பதிவுகளை மட்டுமே காட்டும், அதுவே கமெண்ட் செய்திருந்தால் என் கமெண்ட்டுக்கு அடுத்து வரும் கமெண்டுகள் அனைத்தும் எனக்கு நோடிபிகேசன் காட்டும், (பெரும்பாலும் நான் பெண்களுக்கு கமெண்ட் போடாமல் இருக்க காரணம் இந்த நோடிபிகேசன் அலர்ஜி தான்)தெரிந்தோ, தெரியாமலோ அதிக லைக் வாங்குவது பிரபலம் ஆக ஒரு தகுதியாக பெரும்பாலான முகநூல் பதிவர்களால் பார்க்கப்படுகிறது. அதனால் தன் பதிவுக்கே தானே லைக் போடும் பதிவர்களும் இருக்கிறார்கள், என்னை எனக்கே பிடிக்கலைனா எப்படின்னு என்ற லாஜிக் பதிலும் வைத்துள்ளார்கள். (நான் இதுவரை என் பதிவுக்கோ, என் கமெண்டுக்கோ லைக் இட்டுக்கொண்டதில்லை)

அதிக லைக் வாங்குவது எப்படி?

முகநூல் மட்டுமல்ல, இந்த மொத்த சமூகமும் கண்ணாடி மாதிரி தான், நீங்க கண்ணாடியை பார்த்து சிரித்தால் அது உங்களை பார்த்து சிரிப்பது போல் இந்த சமூகமும் எதிர்வினை ஆற்றும் அதனால் உங்கள் டைம்லைனில் நீங்கள் கடக்கும் பதிவுகளுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் லைக் போட்டு விடுங்க, கூடவே நல்ல பதிவுகளுக்கு கமெண்டும் போடுங்க, நானெல்லாம் கமெண்ட்டாலே இத்தனை நண்பர்களை சேர்த்தேன் ப்ளாக் காலத்தில் இருந்து.தினமும் உங்கள் நட்பு வட்டத்தில் யாருக்கு பிறந்தநாள் என்று பார்த்து வாழ்த்து சொல்லுங்கள்., அப்படியே அவர்கள் ஆக்டிவா இருக்காங்களா அல்லது அவரது நண்பர்கள் டேக் பண்ண பதிவு மட்டும் அவர் டைம் லைனில் இருக்கா, அதுக்கு அவர் லைக்காவது போட்டு வைத்திருக்காரான்னு பார்த்து ஆக்டிவா இல்லைனா அவரை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிடுங்கள், ஆக்டிவா இருக்கும் புது நண்பர்களை சேருங்கள்

அதிக லைக் வேண்டுமென்றால் பெரும்பான்மைக்கு சொறிந்து கொடுக்கும் மானக்கேடான செயலையெல்லாம் நாம் செய்ய வேண்டியிருக்கும், அதனால் உங்கள் எழுத்து உங்கள் ஆளுமையின் வெளிப்பாடா இருக்கனும்னு மட்டும் நினையுங்கள் ஆட்டோமெடிக்கா லைக் மேல் இருக்கும் மோகம் போய்விடும்.

எனக்கு 4800 நண்பர்கள், 8000 ஃபாலோர்ஸ் இருக்காங்க, அதில் 98% ஸ்லீப்பர் செல்ஸ் தான், லைக் போட்டா எங்க இவன் கூட சேர்த்து நம்மையும் களி திண்ண வச்சிருவானோன்னு பயந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் 😂😂😂😂💪💪💪💪💪💪

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin