சினிமா, நட்டம் யாருக்கு?

பொதுவா சினிமா வெற்றியா, தோல்வியா என்பதை அதன் கலைக்சன் வைத்தெ கணிக்கிடுகிறார்கள். படம் வெளிவந்த மறுநாளே வெற்றிவிழா கொண்டாடுவது போல் சில படங்களுக்கு போலியாக ஒரு கலைக்சன் தொகையும் காட்டப்படுவதும் நடக்கிறது. சினிமாவில் நட்டம் யாருக்கு என பார்ப்பதற்கு முன் சினிமாவை பற்றி ஒரு பார்வை பார்க்கலாம்

மிக பெரிய பட்ஜெட் கொண்ட ஹாலிவுட் படங்களை கூட ஒரே நிறுவனம் எடுப்பதில்லை, நாலைந்து பேர் கூட்டு சேர்ந்து தான் எடுக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்கள் வட்டிக்கு கடன் வாங்கி தயாரிப்பாளரால் எடுக்கப்படுகிறது, அல்லது எடுக்கும் பொழுதே வேறு பெரிய நிறுவனத்துக்கு விலை பேசி அட்வான்ஸ் வாங்கி படத்தை எடுத்து முடிக்கப்படுகிறது

ஒரு சினிமாவுக்கு மிக மிக முக்கியம் திரைகதை. இயக்குனர் பாக்யராஜ் திரைகதை மன்னன் என பெயரெடுத்தவர், கதை என்பது எப்படியோ தப்பினான் என்பதாகவும், திரைகதை என்பது எப்படி தப்பினான்னு காட்டுவதாகும், அதுமட்டுமல்ல, ஒரு படத்திற்கு முழுமையாக திரைகதை எழுதி வைத்திருந்தால் மொத்த படத்தையும் ஒரே மாதத்தில் எடுத்து முடிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு நடிகர் முதல் காட்சியும், கடைசி காட்சியும் வருகிறார் என்றால் இரண்டு காட்சியையும் ஒரே நாளில் படம் பிடித்து ஒரு நாள் சம்பளத்தில் அந்த நடிகரின் வேலையை முடித்து விடலாம்

இவ்வாறு மிச்சம் பண்ணி கொடுக்கும் இயக்குனர்களை தான் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். நல்லகதையும் திரைகதையும் இருந்தால் காஸ்டிங் அதாவது பெரிய நடிகர்களை வைத்து அதிக சம்பளம் கொடுத்து எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இன்று சினிமா நட்டமடைய பெரிய காரணமே மொத்த படத்தின் செலவில் கணிசமான அளவு நடிகரின் சம்பளத்துக்கு போவது தான்புதிய இயக்குனர்களின் படங்கள் எடுத்து முடித்தபின் விநியோகிஸ்தர்களுக்கு போட்டு காட்டப்படும், மாவட்டவாரியாக விலை பேசப்படும். படத்தின் தன்மை பொறுத்து விலை படியும், பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்களின் படங்கள் பூஜை போடும் போதே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் பண்ணிருவாங்க. அப்படி நட்டம் அடைந்தவர்கள் தான் ஏராளம்

விநியோகிஸ்தர்கள், தியேட்டர் பேசுவார்கள், பெரிய நடிகர் படம் என்றால் டிக்கெட் விலையில் 60% விநியோகிஸ்தர்களுக்கு 40% தியேட்டருக்கு, வளர்ந்து வரும் நடிகர் என்றால் 50%-50%. ஒன்னுத்துக்கும் ஆகாது என்றால் ஒருநாளைக்கு இவ்ளோ வாடகை என்ற கணக்கில் அவர்களுக்கு உரிமை அளிக்கப்படும். ஆக தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், தொலைகாட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை என விற்றதன் மூலம் லாபத்துடன் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள்

முன்பெல்லாம் ஒரு படம் ஒன்று அல்லது இரண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகும், இப்பெல்லாம் ஈரோடு மாதிரியான குட்டி நகரத்தில் கூட பத்து திரையரங்கில் ரிலீஸ் ஆகுது, அதனால் முடிந்த வரை லாபம் பார்க்க டிக்கெட் விலை அதிகம் விற்கப்படுகிறது, அல்லது மொத்தமாக ரசிகர்மன்றத்துக்கு கூடுதல் கட்டணத்துடன் விற்கப்படுகிறது.

இதில் யாருக்கு நட்டம்?
தியேட்டர் கலைக்சனில் பாதி கொடுத்தால் போதும், விநியோகிஸ்தரின் பிரதிநிதி ஒருவர் தியேட்டரில் டிக்கெட் நம்பர் குறிக்க இருப்பார், ஆக தியேட்டருக்கு நட்டம் இல்லை. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் பெற்றுவிடுவர், அவர்களுக்கும் நட்டமில்லை. தயாரிப்பாளர் விநியோகிஸ்தருக்கு லாபத்திற்கு விற்றுவிட்டார் அதனால் அவருக்கும் நட்டமில்லை,படம் திரையரங்கில் நல்ல வசூலை பெறாவிட்டால் நட்டம் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகிஸ்தருக்கு தான், ஆனால் அவர்கள் தயாரிப்பாளரிடன் செல்லாமல் உங்களை நம்பி தான் அதிக விலை கொடுத்து வாங்கினோம் என்று நடிகர்களிடம் செல்கிறார்கள். சில சமயங்கள் தயாரிப்பாளரே விநியோகிஸ்தராக மாறுவார் அதாவது நேரடியாக ரீலிஸ் செய்வார், அப்படி செய்து ஊத்திகிட்டா அவருக்கு தான் நட்டம்

எனக்கு நினைவு தெரிந்து இதுவரை நான் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை, முதல் நாள் முதல் ஷோ பார்க்கனும்னு அவதிபட்டதில்லை. என்னை பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு, களைப்பில் இருந்தால் சின்ன டைவர்ஷன் அவ்ளோ தான், அதுக்காக அடிச்சிகிறது, என் ஆள் தான் பெருசுன்னு சண்டை போடுவதெல்லாம் சிறுகுழந்தைகளை விட கேவலாக நடக்கும் செயல்.அவனவன் அவன் வேலைய பார்க்குறான், நாம நம்ம வேலைய பார்ப்போம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin