ஸ்மார்ட் ஒர்க்....

அதெல்லாம் ரொம்ப simple மச்சி என சொல்ல கேட்ருப்பிங்க, அதெல்லாம் ரொம்ப சுலபம் மச்சி என்பதாக அதை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம், இன்னைக்கு நாம பேசப்போவது. simplify அல்லது simplelize பற்றி அதாவது சுலபமாக்குதல்.

இந்த உலகில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் தேவையே காரணமாக இருக்கிறது, அந்த தேவையை ஆராய்ந்தால் சுலபமாக்குதல் பிரதானமாக இருக்கிறது

தூரத்தை கடக்க மனிதன் நடந்தான், உடல் உழைப்பையும், நேரத்தையும் மிச்சபடுத்த மிதிவண்டி கண்டுபிடித்தான், இன்னும் உடல் உழைப்பையும், நேரத்தையும் மிச்சபடுத்த மோட்டர் சைக்கிள் கண்டுபிடித்தான், அப்படியே கார், ட்ரெயின், விமானம், ராக்கெட்னு போயிட்டான்

சுலபமாக்குதல் மனிதனின் புத்தி கூர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது, மரம் வெட்டுபவர்கள் இரண்டு பேர் காட்டிற்கு மரம் வெட்ட சென்றனர். அதில் ஒருவர் ஒய்வே எடுக்காமல் மரம் வெட்டிக்கொண்டிருந்தார், ஒருவர் அடிக்கடி 5 நிமிசம் ஓய்வு எடுத்து மரம் வெட்டினார்

இறுதியில் ஓய்வு எடுத்தவரே அதிக மரம் வெட்டினார், காரணம் ஓய்வு எடுத்தது அல்ல, ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவர் தன் கோடாலியை தீட்டியது. முன்னவர் செய்தது ஹார்ட் ஒர்க் என்றால் ஒய்வு எடுத்தவர் செய்தது ஸ்மார்ட் ஒர்க்



இந்த ஸ்மார்ட் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும் தேவைபடுகிறது, அதை அலட்சிய படுத்துவதால் நாம் நம் அறிவை கூர்மைபடுத்தாது கடைசி வரை கடின வேலை செய்து கொண்டும், அதை பெருமையாக பேசிக்கொண்டும் இருக்கிறோம்

ஒரு ஸ்விட்ச் வேலை செய்யவில்லை என்றால் அதன் மேல் இது வேலை செய்தாது என எழுதி ஒட்டுவது ஸ்மார்ட் ஒர்க். திட்டமிடுதல் ஸ்மார்ட் ஒர்க், மாற்று கோணத்தை யோசிப்பது ஸ்மார்ட் ஒர்க். இதெல்லாம் கூட சிலருக்கு கஷ்டமா தெரியலாம். நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க தவறும் முக்கியமான ஸ்மார்ட் ஒர்க் ஒன்று இருக்கிறது

அது எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைப்பது.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin