சிங்கிள் பேரண்டிங்....

சிங்கிள் பேரண்டிங் அவ்ளோ ஒரு கடினமான கரியமா எனக்கு தெரியல.

இந்தியாவில் பல லோயர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் கணவன் குடிப்பதையே தொழிலாக வைத்துக்கொண்டு தன் வருமானத்தை முழுவதும் அதற்கே செலவு செய்கிறான், மனைவி கார்மெண்டில் தைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள், மனைவி அரசு வேலை செய்யும் குடும்பத்தில் கணவன் வேலைக்கு போகாமல் மனைவியிடம் குடிப்பதற்கு பாக்கெட்மணி வாங்கிக்கொண்டு, நான் எப்படி வாழ்ந்த ஆள் தெரியுமா, என்னை சும்மா சும்மா திட்டிகிட்டே இருக்கான்னு மனைவியை குறை சொல்லிகிட்டு இருக்கான், இந்த குடும்பங்கள் கூட சிங்கிள் பேரண்டிங் தான் என்னை பொறுத்தவரை

குழந்தைகளின் முதல் ரோல்மாடலே நாம் தாம். அதை புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும், நாம் பார்த்தது, கேட்டது, பாராட்டு வாங்கியது, அடி வாங்கியது என எல்லாத்தையும் ஃபேஸ்புக்கில் அனத்திட்டு போறோம், செய்யாத தப்புக்கு டீச்சரிடம் திட்டு வாங்கிட்டு, நண்பர்களிடம் சண்டையிட்டு யாரிடம் சொல்வது, யார் தான் நம்மை புரிந்துக்கொள்வார்கள் என குழந்தைகள் ஏங்குவார்கள்

ஹவ் வாஸ் யுவர் டே? என்ற ஒற்றை வார்த்தை கதவை திறந்து விடும். அதனால் அவர்கள் எந்த மாதிரி சூழலில் இருக்கிறார்கள்., அவர்களுக்கு எது பிடித்துள்ளது, எது பிடிக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடியும், மேலும் உளவியல் ரீதியாக என்ன விதமாக அவர்களை அணுகினால் அவர்களுக்கு சரியான பாதையை காட்டமுடியும் எனபதையும் கண்டுபிடிக்கலாம். இல்லைனா சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி எனக்கு எது நல்லாயிருக்கும்னு பார்த்திங்க, எது பிடிச்சிருக்குன்னு பார்த்திங்களா கதையாகிரும்

குழந்தைகள் என்ன ஆடிகார் வாங்கிக்கொடு, தங்க ஒட்டியானம் வாங்கிக்கொடுன்னா கேட்கப்போறாங்க. அதிகபட்சமா ஜீன்ஸ் பேண்டோ, சூவோ அல்லது என்னை ஓவிய வகுப்பில் சேருங்கள் என்றோ, டான்ஸ் கிளாஸில் சேருங்கள் என்றோ கேட்கப்போறோங்க., பட்ஜெட் போடும் போது அருகில் வைத்துக்கொண்டால் போதும், எது நமக்கு தகுதியானது என்பதை அவர்கள் உணர்வார்கள்

டைரி எழுதும் பழக்கம் வைத்துக்கொள்ளலாம். இன்று என் மகள்/மகன் செய்தது எனக்கு பெரிய மன வருத்ததை தந்தது, இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, அவள்/அவன் தான் என் உலகமே. என்னை தூக்கி எறிந்து பேசிட்டான்/ள் என எழுதி அவர்கள் கண்ணில் படும் படி வைத்து விட்டால் போதும்., அது வரை தன்பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் கூட. அடடே நம்ம அம்மாவை/அப்பாவை கஷ்டபடுத்திடமேன்னு வருந்துவார்கள்

அதிக நேரம் கண்ணாடி முன் நிற்பது, அழகாக உடை அணிய நினைப்பது, பாத்ரூமில் அதிக நேரம் செலவழிப்பது, நண்பர்களும் அரட்டை அடிக்க நினைப்பது எல்லாமே அவர்கள் வயதில் நாம் செய்தது தான், இயல்பிலே அந்த வயதில் தோன்றக்கூடிய உணர்வுகள் தான், அந்த யாதர்த்தை புரிந்துக்கொண்டால் போதும்., குழந்தைகள் நம் அடிமைகள் அல்ல, அவர்களுக்கும் கண்கள் உண்டு, அவர்கள் கண் வழியே பார்க்கும் உலகம் வேறாக இருக்கலாம், அவர்கள் வாழ்வை அவர்களை வாழ விட வேண்டும்

இதனால் தான் என்னால் ஒரு நல்ல அப்பாவாக இருக்க முடிகிறது

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin