கேர்லெஸ் எக்கானமி....

இந்தியாவில் கேஸ்லெஸ் எக்கனாமி ஓரளவு நடைமுறைக்கு வரவே இன்னும் 50 வருசத்துக்கு மேலாகும் ஏன்னா இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அமைப்புசாரா தொழில்கள் அதிகம் இருக்கும், அந்த தொழிலுக்கு நிலையான வருவானத்துக்கு உத்தரவாதம் இல்லாததால் அதை அமைப்பில் சேர்க்கவும் முடியாது உதாரணத்துக்கு ஒரு ஹோட்டல் தொழிலை நீங்கள் அமைப்பில் சேர்க்கலாம், ஆனா கல்யாணத்துக்கு காலம் காலமா சமைக்கும் தொழிலை அமைப்பில் சேர்க்க முடியாது. அவர்களுக்கு ஒரு மாசம் வரும், ஒரு மாசம் வராது அரசியல்வாதிகள் பழக்கமெல்லாம் மேல்மட்ட லெவலில் தான் இருக்கும், 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு குடிப்பது. கூவத்தூரில் கூத்தடிப்பது. 10 லட்சத்துக்கு கோட் போடுவது என இருப்பவர்களுக்கு பூக்காரம்மா பத்தியோ மீன்காரம்மா பத்தி அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை இந்தியாவில் வரி வருவாயில் மும்பை முதலிடத்தில் இருக்க காரணம், இந்திய சினிமாதுறையில் 80% மும்பையை நம்பியுள்ளது. விவசாயத்துக்கு வரி இல்லாததால் அமிதாப் பச்சன் கூட தன்னை ஒரு விவசாயி என அடையாள அட்டை வாங்கி வைத்துள்ளார் தமிழகம் முடிந்த வரை தற்சார்பு கொள்கையுடைவர்கள் உள்ள மாநிலம். திராவிட கட்சிகள் தொழில் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம் முடிந்த வரை வேலை வாய்ப்பை உருவாக்கியது, அதை சார்ந்து பல தொழில்கள் உருவானது. பூக்காரம்மா 20 ரூபாய்க்கு பூ விற்க கிரிடிட் கார்ட் வாங்க முடியாது. வீடி தேடி வந்து விற்கும் பழகாரம்மாவோ, கீரைகாரம்மாவோ டெபிட் கார்ட்டில் பணம் வாங்க முடியாது, அம்மாதிரி தற்சார்பு, அமைப்பு சாரா தொழிலில் இருப்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம் அவர்களை இந்திய குடிமக்களாக மதிக்காவர்கள் தான் இன்னும் பணமில்லா வர்த்தகம் பற்றி பேச முடியும், கருப்பு பணத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க, தீவிரவாதத்தை ஒழிக்க என என்னமோ சால்ஜாப்பு சொன்னாலும் பணமதிப்பு இழப்பு கடைந்தெடுத்த முட்டாள்தனமாக முடிந்தது தான் உண்மை முட்டு கொடுப்பவர்கள் கொடுத்துட்டு தான் இருப்பாங்க. அவர்கள் கவலையெல்லாம் வருமான வரியை அரசு குறைக்குமா என்பதில் மட்டுமே, கட்டிட தொழிலாளியும், டீ மாஸ்டரும் அவர்கள் கவலையில் சேராது0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin