ஓரினைபிரியமும் இயற்கையே.......

ஏற்கனவே பலமுறை எழுதியுள்ளேன். பக்தி என்பதை ஒழுக்கம் சார்த்த நடவடிக்கையில் சேர்த்து கொண்டதால் தான் அது மாயை என பலமுறை நிரூபிக்கப்பட்டாலும் தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக்கொள்ள மனிதம் தன்னை பக்தி மிகுந்த மதவாதியாக அடையாளப்படுத்திக்கொள்கிறான்.
ஒரினைசேர்க்கைக்கு எதிராக காட்டிக்கொள்வதும் அப்படியான ஒழுக்கவாதி வேசம் கட்டவே..

உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகளிடம் ஓரினைசேர்க்கை பழக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இனபெருக்கத்திற்கென்று பருவம் வைத்துள்ள விலங்குகள் அந்த சமயத்தில் துணை கிடைக்காத பொழுது ஓரினைசேர்க்கையில் தேவையை தீர்த்துக்கொள்கின்றன, மனிதனில் ஓரினைசேர்க்கை இயற்கை இல்லை என எதிர்பவர்கள் விலங்குகளுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என எதும் சட்டம் இயற்றியுள்ளனரா?



மனிதர்கள் அனைவருமே கருவாக உருவாகும் பொழுது பெண் கருவாக தான் உருவாகிறார்கள். ஆணில் இருந்து செல்லும் ஒய் குரோம்சோம்கள் தூண்டப்படும் பொழுதே கரு ஆணாக உருவெடுக்கிறது, தன்னை ஆண்மகன் என மார்தட்டிக்கொள்ளும் அனைவரும், நான் உட்பட உருவாகும் பொழுது பெண் கருவே

ஒருவர் ஓரினைபிரியர்களாக உருவாக பல காரணிகள் இருக்கின்றன, அவை அனைத்தும் இந்த சமூகத்தாலே உருவானவை, இந்த சமூகம் என்பது நீங்களும் நானும் தான், ஒழுக்கம் போதிக்கும் நீங்களே ஒருவரை ஒழுக்கவிதிகளை கட்டுடைக்க தூண்டுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் போதிக்கும் எந்த ஒழுக்கவிதிகளையும் நீங்களே கடைப்பிடிப்பதில்லை.



அவன் என்னவோ பண்ணிட்டு போறான், என்னை ஏன் தொந்தரவு பண்றான் என்பது பலரின் தற்காப்பு வாதமாக இருக்கிறது. பேருந்து நிலையத்திலோ, பொது வெளியிலோ ஒரு பெண்ணை கண்டால் அவளை சைட் அடிக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றுவது எந்த அளவு இயற்கையோ அதே விதி தான் அவர்களுக்கும், ஒரு பெண்ணை கலவிக்கு இசையவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளை தான் அவர்களும் செய்கிறார்கள், போக அவர்கள் உங்களை ஒருபொழுதும் வன்புணரபோவதில்லை.

ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் தருகிறீர்கள், பலர் முன்னிலையில் அந்த பெண் உங்களை செருப்பால் அடித்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வீர்களா?
நான் என் விருப்பதை தெரிவித்தேன், உங்களுக்கு விருப்பமில்லையெனில் நாகரிகமாக சொல்லியிருக்கலாம் என்பது தானே உங்கள் கருத்து, அதுவே தான் ஓரினை பிரியர்களுக்கும்

உலகில் 26 வளர்ந்த நாடுகள் ஓரினைசேர்க்கை சட்டபூர்வமாக அங்கிகரத்துள்ளது. அவர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. ஒரு தனி மனிதன் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ உரிமை உண்டு என்றால் அதே தனி மனித உரிமை ஒரு மனிதன் ஓரினைபிரியராக வாழவும் உள்ளது.



உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்பதற்காக அதை ஒழுக்கம் கெட்ட செயல் என வெளிகாட்டுவது தன்னை ஒழுக்கவாதியாக காட்டிக்கொள்ளும் வேசமே தவிர அதில் உண்மை எள்ளளவும் இல்லை. ஏனெனில் உங்கள் ஆதர்ஷ நாயகனை திரையில் காணும் பொழுது நீங்களும் ஆர்கஸம் அடைகிறீர்கள்.

இவ்வுலகில் அனைவரும் பை-செக்ஸுவல் தான்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin