இந்திய பொருளாதாரம் உயர்கிறதா?

இன்றைய தினதந்தி தலையங்கத்தில், ரூபாய் மதிப்பு சரிந்தாலும், பெட்ரோல் விலை உயர்ந்தாலும் நாட்டில் ஜிடிபி அபார வளர்ச்சி அடைந்துள்ளது என எழுதியுள்ளனர். ஊடகங்கள் அப்படி தான் எழுதும், ஆனால் உண்மை என்ன என்பதை எழுத வேண்டியது நம் கடமை ஆயிற்றே.

ஜிடிபி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என பொருள் கொள்ள வேண்டும். அதை எவ்வாறு கணக்கிட முடியும்? மற்ற தொழில்களில் விற்பனை ஆகும் பொருட்களுக்கு செலுத்தும் வரியை கொண்டு உற்பத்தியை கணக்கிடலாம், ஆனால் விவசாய உற்பத்தி அடைந்துள்ளது என்பதை எதை கொண்டு புள்ளி விபரம் சொல்கின்றனர்.

வரி வருவாய் கொண்டே ஜிடிபி அளவிடபடுகிறது என்பதற்கான சான்று

காய்கறி அல்லாத விவசாய பொருட்கள் பெருமளவு அரசால் கொள்முதல் செய்யப்படும். அதற்கு அரசு நிர்ணயதுள்ள விலை விவசாயிகளுக்கு கொடுக்கப்படும், பல வருடங்களாக கரும்புக்கு விலை உயர்த்த கோரி விவசாயிகள் சண்டையிட்டு கொண்டிருப்பது நீங்கள் அறியலாம்.

பெட்ரோல் விலை உயர்ந்தாலும் நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழல், பொது போக்குவரத்தும் உரிய அளவு சேவையில் இல்லாததால் நாம் சொந்த வாகனமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். 75 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் போது அரசுக்கு கிடைத்த வரி வருவாயை விட 83 ரூபாய்க்கு விற்கும் பொழுது அதிகமாக கிடைக்கும், அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்து வளர்ச்சியாக காட்டுவது சரிதானா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என உறுதியளித்த மோடி மற்றும் அவரது வகையறா தற்பொழுது சொல்வது முத்ரா வங்கி மூலம் 13000 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பெற்றவர்கள் அனைவரும் சுயதொழில் செய்து கொண்டிருக்கிறனர், இதுவும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது தான் என்று

முத்ரா வங்கியில் 83% கடன் பெற்றவர்கள் 50000 ரூபாய்க்கும் கீழே தான் வாங்கியுள்ளார்கள், அவர்களால் அதை வைத்து என்ன தொழில் செய்ய முடியும்? மகளிர் குழுவில் கூட பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றனர், ஆனால் முத்ரா வங்கியோ புள்ளி விபரத்துக்காவே செயல்பட்டு வருகிறது.


ஜிடிபி உயர்ந்தாலும் விலைவாசி உயர்வையும், வங்கி இருப்பு குறைவையும் காட்டும் படம்.

EPF பிடித்தம் முதலில் ஒரு நிறுவனத்தில் 20 பேர் வேலை செய்தால் கட்டாயம் பிடிக்கவேண்டும், ஆனால் மோடி வந்த பிறகு அதை பத்தாக குறைத்தார், 10க்கும் மேல் வேலை செய்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு EPF பிடித்தது, அதனை மோடி உருவாக்கிய வேலை வாய்ப்பாக காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.

பணமதிப்பை திரும்ப பெற்றதால் கருப்பு பணம் ஒழியும் என்றார்கள், 99.3% பணம் திரும்ப வங்கிக்கே வந்து விட்டது. அந்த சமயமே பணமில்லா வர்த்தகம், டிஜிட்டல் இந்தியா என மடை மாற்றினாலும் இந்த்துவா ஆதரவாளர்கள் தவிர மோடிக்கு ஓட்டு போட்டவர்களே துக்ளக்கு பின் மோடி என கிண்டல் செய்யும் அளவுக்கு ஆட்சி இருக்கிறது.

பொய்யான புள்ளி விபரங்களோ, வெறும் வாக்குறுதிகளோ நாட்டை உயர்த்தாது, நீண்ட கால பயன் உள்ள வகையில் முறையான செயல் திட்டம், மக்கள் நலன், அவர்களது உரிமை பாதுக்காக்கப்படும் நாடுகள் மட்டுமே உலக அளவில் மக்கள் வாழ தகுதியுள்ள நாடாக அறியப்படும். அன்றைய ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர் ஹீரோயாக இருக்கலாம், இன்றைய இந்த்துவாவாதிகளுக்கு மோடி ஹீரோவாக இருப்பது போல்.

ஆனால் ஹிட்லரின் முடிவை யாரும் மறக்கமுடியாதே

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin