சாபம் பலிக்குமா?

கேள்வி:
கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?

பதில்:
எனக்கு தெரிந்த பெரியவர் ஒருத்தர் சொல்லுவார், நான் சொன்னா மழை வரும் தெரியுமான்னு, அதை என் போன்ல இருக்கும் அப்ளிகேசனே சொல்லுமேன்னு நான் சொல்லுவேன்

ஒரு படத்தில் சந்தானம் ஒரு ஹோட்டலில் வேலை செய்வார், சந்தானம் எதாவது தப்பு செய்யும் போது ஹோட்டல் முதலாளி வேலைய விட்டு போன்னு சொல்லுவார், தான் கருநாக்கு சொன்னால் பலிக்கும் மிரட்டியே சந்தானம் வேலையில் இருப்பார்

இப்படி சினிமாவையும், புத்தகத்தில் படித்தும் தான் மக்கள் மூடநம்பிக்கையை வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள், சீமான் கூட ஒருமுறை முப்பான் முருகன் தான் தமிழனத்தின் முதல் போராளி என்றார், எப்படி சொல்றிங்கன்னு கேட்டதுக்கு திருவிளையாடல் படம் பார்க்கலையான்னு கேட்டாரு, நான்ல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிச்சிகிட்டு இருக்கேன்சாபம் பற்றி

உங்களை யாராவது திட்டினால் நீங்கள் எதும் தவறு செய்யவில்லை என்றால் உங்களுக்கு கோவம் வரும், தவறு செய்திருப்பின் அமைதியாக இருப்பீர்கள். அது ஒரு எதிர்வினை.

உங்கள் முகத்துக்கு நேராக ஒருவர் சாபம் விடும் பொழுது, அவருக்கு நான் எதும் தீங்கிழைத்து விட்டமோ, நம்மால் அவர் பெரும் இழப்பை சந்திப்பு விட்டாரோ என உங்களுக்கு குற்ற உணர்வு வந்தால் அது மன உளைச்சலை உண்டாக்கும், மன உழைச்சல் உங்களை எந்த வேலையும் செய்ய விடாது, எல்லார் மீதும் எரிந்து விழுவீர்கள், உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் தண்டனையே சாபத்தின் பலனாக நீங்களே உணர்வீர்கள்.

உங்க மனசாட்சிபடி நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை, வேலையந்த வெட்டிபய எதோ சாபம் விட்டு போறான்னு நகர்ந்து சென்றால் அது உங்களை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

யாரும் சாபம் விடனும்னு அவசியமில்லை, குற்ற உணர்வே சாபம் தான், அதனால் முடிந்த வரை உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருங்கள். அதுவே நிறைவான வாழ்க்கை

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin