ரஜினியா, கமலா?

கமலும் சரி, ரஜினியும் சரி இவருமே மேல்தட்டு வர்க்க சிந்தனை கொண்டவர்கள்.
பிச்சை எடுத்து சாப்பிடுபவன் கூட ஒரு தீப்பெட்டி வாங்கினால் அதற்கு 18 பைசா மறைமுக வரியா கொடுக்குறான், ஆனால் மேல்தட்டு வர்க்கம் நேரடியாக வருமான வரி கோடிகணக்கில் கட்டுபவர்கள்.
அவர்கள் சிந்தனை நடுத்தரவர்க்க, அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்தார பிரச்சனைகள் பற்றி சிந்திக்காது, ஏன்னா அவர்களுக்கு அது தெரியாது. அரசின் புதிய மானிய கொள்கை, விலைவாசி உயர்வு இதெல்லாம் என்னான்னு கேப்பாங்க, அதற்கான நிவாரணமும் அவர்களுக்கு தெரியாது.
காமராஜர் போன்று அடிதட்டு வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து சிந்திக்க முடிந்தது, திமுகவும், அதிமுகவும் அதன் நீட்சியாக தொடர்ந்தார்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்காக பேசுறாங்களே தவிர அவர்களுக்கும் அந்த சிந்தனை அற்றுவிட்டது

காலை 8 மணிக்கு அரசு மருத்துவமனை போனால் தெரியும் எத்தனை ஆயிரம் மக்கள் ஆரோக்கியதிற்கு அரசை நம்பியுள்ளார்கள் என்று, ரேசன் கடை வாசலில் நின்று பார்த்தால் தெரியும் எத்தனை ஆயிரம் மக்கள் உணவுக்கு அரசை நம்பியுள்ளார்கள் என்று. மேல்தட்டு வர்க்க மக்கள் எதேனும் அவசரத்திற்காகவது அரசு மருத்துவமனை சென்றிருப்பார்களா?
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, அவர்கள் அனைவருக்கும் அரசே உத்திரவாதம் அளிக்கமுடியாது என்பது மொன்னைவாதம், எனக்கு கிடைக்குது எவனுக்கு கிடைக்காட்டி எனக்கென்ன என்ற சுயநலம், இந்த மக்கள் தொகை என்பது ஒரு சக்தி, அதை முறையாக பயன்படுத்த தெரியாத அரசின் கொள்கை சிக்கல் உள்ளது. அவர்கள் நலன் பேணுவது கார்ப்ரேட்டுகளுக்கு மட்டுமே
அடிதட்டு மக்களை நசுக்கும் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்பது தான் இதுவரை நான் கடந்து வந்த வரலாறு. இந்தியர்களின் பொறுமை ஆட்சிகளர்களுக்கு வசதியாக இருப்பது தான் நம் சாபக்கேடு. நம் உரிமையை விட்டு கொடுத்து வாழ்வது நம்மை நாமே அடிமையாக்கிக்கொள்வதற்கு சமம். முதலில் மக்கள் செலிபிரட்டி சிண்ட்ரோமில் இருந்து வெளியே வரணும்.
விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்

1 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்...
பார்க்கலாம்... அரசியல் என்பதை அடித்தட்டு மக்களுக்காக நடத்த இருக்கிறார்களா அல்லது ஆதாயத்துக்காகவா என்பதை...

!

Blog Widget by LinkWithin