மதியம் செவ்வாய், அக்டோபர் 10, 2017

தனியார்மயம் ஒரு கவர்ச்சிபொறி!

low margin
huge turnover
high profit

போட்டி வியாபாரத்தில் இது ஒரு முக்கியமான சூத்திரம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க கண்ணன் டிபார்மெண்டல் ஸ்டோர் இருக்கு. அங்க ரெகுலரா ஷாப்பிங் போறவங்க யாராவது இருக்கிங்களா?

கவனித்ததுண்டா? பொருளின் மேல் MRP அச்சிடப்பட்டிருக்கும் பொருள் அனைத்தும் அங்கே விலை அதை விட குறைவாக இருக்கும். விட்டின் அருகில் இருக்கும் மளிகை கடையில் அதில் போட்டிருக்கும் விலை தான் இருக்கும்.

முதல் காரணம் பெரு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்வார்கள். அதற்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். விலை குறைவாக விற்பனை செய்வார்களே தவிர அது நட்டத்திற்கு இல்லை.

போக அவர்களிடம் வாங்கும் மளிகை பொருள்கள் அனைத்தும் விலை அதிகமாக இருக்கும், பருப்பு, சர்க்கரை போன்றவை, அதற்கு அவர்கள் வைப்பது தானே எம்.ஆர்.பி..

முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிடித்து தொங்கும் முக்கிய புள்ளி இதுதான். தனியார்மயம் மட்டுமே போட்டி வியாபாரத்தில் நுகர்வோருக்கு குறைந்தவிலையில் கொடுக்கமுடியும் என்பது. ஆனால் ஒரு பெருமுதலை குளத்தில் சிறு மீனும் இல்லாமல் அழித்து விடும் என்பது குறித்து அவர்களுக்கு அக்கறையில்லை



தனியார்மயம் என்பது ஒரு கவர்சியான பொறி. ஒரு கட்டத்தில் சிறு வணிகர்கள் அழிந்து அவர்கள் மட்டுமே நிற்கும் நிலையில் அவர்கள் வைத்தது தான் விலையாக இருக்கும். மறு கேள்வி இல்லாமல் நாம் வாங்கித்தான் ஆக வேண்டும்.

பொது விநியோக திட்டம் அழியும் நாள் நாடு முழுமையான முதலாளித்துவ சிந்தனையில் இயங்குகிறது என்று அர்த்தம். அதாவது நாட்டை மக்களை ஆட்சியாளர்கள் முதலாளிகளுக்கு விற்று விட்டார்கள் என்று அர்த்தம்

!

Blog Widget by LinkWithin