ரிவர்ஸ் சைக்காலஜி!

நீங்கள் என்ன சிந்திக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்வதாக நினைக்கிறீர்களா?

இல்லை. அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்

ஒரு பழைய கதை உண்டு.

குணப்படுத்த முடியாத ஒரு நோய்க்காக ஒரு செல்வந்தன் மருத்தவரை நிறம்ப தொந்தரவு செய்வான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு மருந்து கொடுங்கள் என்பான். யோசித்த மருத்துவர் அவன் கையில் ஒரு மருத்து கொடுத்து இந்த மருத்தை சாப்பிடும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக்கூடாது என்பார்.

அங்கே குரங்குக்கு என்ன வேலை?

இதை தான் ரிவர்ஸ் சைக்காலஜி என்பர்.

உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை உங்கள் தலையில் கட்டும் விளம்பர உலகம் இந்த உத்தியை தான் வெகு காலமாக செய்து வருகிறது.

முதலில் உங்கள் மூளையில் அதுவே சரியானது என ஏற்ற வேண்டும். உதாரணம் வெள்ளையா இருந்தா தான் அழகு. வெள்ளையாக இருப்பவர் பின்னே எதிர்பாலினர் படையெடுத்து வருவார்கள்.

இனி வெள்ளையாக மாட்டுசாணியை வித்தாலும் அதை விலை கொடுத்து வாங்க தயாராய் இருப்பீர்கள்.

ஒரு காய்ச்சல் மருந்தை விற்க நடிகர் நாசர் டாக்டர் கோட் அணித்து வந்து விளம்பரம் செய்கிறார். நாசருக்கும் டாக்டர் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பரிந்துரைக்கும் மருந்துக்கு என்ன உத்திரவாதம்?போகஸ் என்ற ஆங்கிலப்படம். வில்ஸ்மித் நடித்தது. படத்தின் மையம் உங்களை என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்க வைப்பதே. ஒரே எண்ணை மீண்டும் மீண்டும் அவன் கண் முன் காட்டும் பொழுது அவன் மனதில் அந்த எண் பதிந்து விடுகிறது, அந்த எண் அவனுக்கு பரிட்சியமான ஒன்றாகிவிடுகிறது.

அந்த ப்ராண்ட் சைக்காலஜி வைத்து தான் அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. யார் வேட்பாளர் என்று உங்களுக்கு அக்கறையில்லை. அவருக்கும் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் நினைவெல்லாம் என்ன சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இன்னமும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானிப்பதாக நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் முற்றிலுமாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளீர்கள். பிறர் சொல்லும் நல்லது உங்கள் மண்டையில் ஏறவே ஏறாது

#வால்பையன்
#உளவியல்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin