நான் ஒரு முட்டாள்!

பிறப்பால் ஒருவர் அறிவாளி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனக்கு நாலு விசயம் தெரியும்னா அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு
ஒன்று 3 வயதிலேயே எனக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கு போட சொல்லிக்கொடுத்து யோசிக்க வைத்தது. இரண்டு சும்மா சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதன்னு என்னை மொன்னையாக்காமல் விட்டது. பகுத்தறிவின் பாலபாடமே இது இரண்டும் தான் என்பது என் புரிதல்.

அதிகபட்ச சாத்தியகூறுகள் இல்லாத எதையும் நம்பிக்கை அடிப்படையில் நான் ஏற்பதில்லை. அதன் சாத்தியகூறுகளை அறிய பகுத்தறிவு வேண்டும். மதம் சார்ந்த கேள்விகளையும், புரிதலையும் பயபடாமல் எழுது என எனக்கு கையை பிடித்து ஆனா போட கத்து கொடுத்தது தருமி அய்யா, ஆனால் அவர் மதம்/கடவுள் சார்ந்த விவாதங்களுக்கு மட்டும்  அறிவியலை துணைக்கழைப்பார். ஒருவேளை அரசியல் பேராசியராய் இருந்ததால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை போல.

முகநூலில் பாபு மற்றும் ராஜ்சிவா நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதுவாங்க. எனக்கும் அறிவியல் மேல் தீராத காதல் உண்டு. அரசியல்/மதம் சார்ந்த விசயங்கள் அப்போதைய பிரச்சனை குறித்து தான் எழுதுவேன். அறிவியல் மட்டும் தான் இறந்த காலத்தில் தொடங்கி எதிர்காலத்தை நோக்கி பயணத்திக்கொண்டே இருக்கும்.

ஆனால் முகநூல் நண்பர்கள் இரண்டு வரி பதிவுகளையே விரும்புகின்றனர். ஒரு கமெண்டை படிக்கும் போதே அதற்கு பதில் அளிக்க எனக்குள் பல விவாதங்கள் நடக்கும். ஒரு கமெண்டுக்கே அப்படினா ஒரு பதிவு எழுத எவ்ளோ யோசிக்கனும். ஆனாலும் படிக்கும் நாற்பது நண்பர்களோ போதும்னு திருப்தி அடைஞ்சிட்டேன். அதில் சந்தேகம் கேட்பவர்களையும், புரிதல் கொண்டவர்களையும் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்கிறேன்.

ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று பலர் ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தம் தான். ஒரு நண்பர் வானவியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவார். நாசா கண்டுபிடித்த புதிய கோள்கள். அதன் தன்மை என பல சுட்டிகளோடு. ஆனா கடைசியில் தென்னாட்டுடைய சிவனே போற்றின்னு முடிச்சிருவார். பதிவை விட்டுட்டு அந்த ஒரு வரிக்காக அவருடன் விவாதிப்பேன். கடைசி வரை கடவுள் இருக்குன்னு அவரால் நிரூப்பிக்கமுடியவில்லை ஆனால் எனக்கு கடவுள் வேணும்னு முடிச்சிட்டார். ஒருவருக்கு என்ன வேணும், வேண்டாம் என்பது அவர்களது தனிபட்ட உரிமை. கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன் ஏன் படிக்கலன்னு யார் சட்டையையும் நான் பிடிக்கமுடியாது.

அதை படிக்காமல் போகின்றவர்கள் அறிவாளியாகக்கூட இருக்கலாம். என்னை போன்ற கற்றும் ஆர்வமுள்ளவர்கள் சிறிதேனும் நாமும் அறிவாளி என நினைக்கத் தொடங்கினால் அன்றோடு கற்கும் ஆர்வம் போய்விடும். கற்றல் இல்லாத மனிதம் ஒரே இடத்தில் தேங்கிய குட்டை போன்று. நான் நதியாக இருக்க விரும்புகிறேன். அதனால் என்னை முட்டாள் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.



எழுத்தாளர் ஆகனும்னு நான் சின்னவயதில் நினைத்ததில்லை. கற்றலும், எழுத்தும் சிறந்த ஆர்த்துபடுத்தனராக அறிந்தபொழுது எனது அறிவியல் கட்டுரைகளை அச்சில் ஏற்றவேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் சில தகவல்கள் என்ற ஹேஷ்டேக்கில் அறிவியல் துணுக்குகள் எழுதினேன். இனி அந்த அறிவியல் செய்தியில் இருக்கும் சாத்தியகூறுகளையும் சேர்த்து புரியும்படி எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

நான் கேள்வி-பதில் பகுதி எழுதியது எனக்கு எல்லாம் தெரியும் என்று அல்ல. உங்கள் கேள்வி ஒரு புது விசயத்தை படிக்க என்னை தூண்டும் என்ற ஆவலினால் தான். அதே போல் தான் விவாவத்தையும் விரும்புவேன். இவையெல்லாமே என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பவை.

சாத்தியகூறுகளுடன் எழுத இருக்கும் சில விசயங்கள்

எந்திரன் பட ரோபோ போல் அவ்வளவு வேகமாக படித்து ஞாபகம் வைத்திருப்பது சாத்தியமா?

காலபயணம் சாத்தியமா?

மேலும் உங்கள் கேள்விகளுக்கும் சாத்தியகூறுகளுடன் எழுத முயற்சிக்கிறேன்

2 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

எல்லாரும் அறிவாளியாகப் பிறப்பதில்லை...
நானும் ஒரு முட்டாள்தான்... கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சமே எழுத கற்றிருக்கிறேன்.
தங்களின் கேள்வி பதில்கள் நிறைய விவரம் அறியத் தரும்.

Atheist said...

அறிவியல் நல்லதுதான். ஆனால் அறிவியல் வளர்ந்ததன் ஒரு பக்க விளைவுதான் விவசாயிகளின் சாவுக்குக் காரணம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?

It takes an estimated 39,090 gallons of water to make a car. It's unclear if that includes the more 2,000 gallons used to make its tires--each tire takes 518 gallons to make.
இந்தியாவில் 2016 ஆம் வருடம் உற்பத்தி ஆன கார்களின் எண்ணிக்கை 4,488,965. இதற்கு செலவிடப் பட்ட தண்ணிரின் அளவு 179558600000 கேலன்கள். அதாவது 24 டிஎம்சி . நம்ப முடிகிறதா? ஆமாம்...மோடியாலும் நம்ப முடியவில்லைதான்! இப்படி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய தண்ணீரை உபயோகித்து இந்தியா வல்லரசாவதால் மழை பொய்த்துச் சாவது யார்? முட்டாள் மோடி அரசாங்கத்துக்கு இது புரியுமா?

உடனடியாக கார் கம்பெனிகள் எல்லாம் விவசாயிகளின் கடனைக் கட்ட முன் வரவேண்டும்! மோடியால் தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. தண்ணீரை வீணடிக்கும் எல்லாத் தொழில் நிறுவனங்களும் விவசாயிகளின் துயரங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்! இதற்கு ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டும். கார்பன் ஃபுட் ப்ரிண்ட் பிறகாரம் வரி கட்டும் முறை உருவாக வேண்டும்.ஆடைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வீணடிக்கும் நீர் இதே அளவிலானது! இதற்கான உண்மையான செலவுகள் எல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து தான் மறைக்கப்படுகின்றன. இப்படி இந்தியா முன்னேறித்தான் ஆக வேண்டுமா?

!

Blog Widget by LinkWithin