திராவிடமும் நீர்த்துப்போன கொள்கைகளும்!

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஒரு கோவிலில் கும்பிட்டு கொண்டு இருப்பதை கிண்டல் செய்து போஸ்ட் போட்ருந்தேன். ஏன் திமுகவில் இருந்தா சாமி கும்பிடக்கூடாதா என்ற கேள்வி கமெண்டாக வந்தது. அதை இன்னொரு திமுக அனுதாபி கேட்ருந்தா எப்படியோ நாசமா போங்கன்னு போயிருப்பேன். ஆனா கேட்டது ஒரு இந்துத்துவாவாதி. திராவிட கொள்கைகள் நீர்த்து நாசமாய் போவதில் வேற யார் அவ்வளவு மகிழ்வடைய முடியும்.

ஒரு கட்சியில் உறுப்பினர் ஆக அடிப்படை கட்டுமானமே கொள்கைகள் தான். பாஜகவிற்கு இந்துத்துவா கொள்கை, பாமகவிற்கு பாட்டாளி மக்கள் எழுச்சி கொள்கை(அப்படின்னு சொல்லிகிறாங்க) திராவிர கட்சிகளுக்கு சமூகநீதி கொள்கை பொதுவா இருந்தாலும் திராவிட கட்சிகளின் வேர் பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு, அதை அதிமுக தண்ணீரில் கரைத்தது. இப்ப திமுக காற்றில் கரைக்குது.

நான் பெரியாரிஸ்ட், இப்பொழுது தமிழ்தேசியவாதி. என் கடவுள் முருகன் என்று தன் கொள்கைகளை மாற்றிகொண்ட ஒருவரை மற்ற பெரியாரிஸ்டுகளால் ஏற்றமுடியவில்லை. இருக்காது எங்கிறார்கள்/. பெரியார் அடிமை அதாவது பெரியார்தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட சேஷாசலம்  அப்துல்லாவாக மாறியது மறந்துபோய்விட்டது போல. இந்த கொள்கை முரணுக்கு அடிப்படை சிக்கல் என்ன என்பதை பெரியாரிஸ்டுகள் யோசிக்கவேயில்லை

பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றது சுற்றி நடந்த அவலங்களால். அவரின் அடிப்படை கேள்விக்கு பதில் இல்லாத காரணத்தால் ஆனால் அவருக்கு அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்புக்கு ஆதாரம் எதுவும் இருந்திருக்காது. பெருவெடிப்பு கொள்கையே 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே காலத்தில் வாழ்ந்த பெரியாருக்கு உலகம் எப்படி தோற்றியது என்று அதிக பட்ச சாத்தியகூறுகளாக விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று  இருக்கு என்பதே தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.மக்கள் பெரும்பாலும் பொதுபுத்தி கொண்டவர்கள். என்னிடம் கடவுள் இருப்பை நிரூபிக்கமுடியாத சிலர். அந்த ஜட்ஜ் சாமி கும்பிடுறார், அந்த டாக்டர் சாமி கும்பிடுறார் அவர்களெல்லாம் முட்டாளா என்பார்கள். திராவிட இயக்கத்தில் மட்டுமல்ல, இடதுசாரிகளில் இருப்பவர்களுக்கு கூட பிரிவினை வாதத்திற்கு எதிர்பாகதான் கடவுள் மறுப்பு உள்ளது. கடவுள் மறுப்பு என்ற பதத்தை உடைக்க சில சலுகைகளும், சில தேவைகளும், சில தேற்றல்களும் போதுமானதாய் இருக்கிறது.

உங்களால் ஆணிதரமாக கடவுள் மறுப்பு கொள்கையில் நிலைக்கமுடியவில்லை என்றால் நீங்கள் நாத்திகன் என்ற மதத்தை உருவாக்கி வருகிறீர்கள் என்ற உண்மையை திராவிர கட்சிகள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக திகவும், திமுகவும். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்றது, கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்றது சிறுபான்மையினர் நலன்னா ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் சப்பி கோர்த்து கொடுக்கலாம். ஏன்னா பார்ப்பானும் சிறுபான்மையினர் தான் இந்தியாவில்.

ஓட்டை காசுக்கு விற்பதும், கொள்கையை ஓட்டுக்கு விற்பதும் ஒன்று தான். தமிழகத்தில் இருக்கும் திராவிர கட்சிகளை அழிக்க வெளியே இருந்து ஆள் தேவையில்லை. உள்ளிருக்கும் நீங்களே போதும்..

2 வாங்கிகட்டி கொண்டது:

உசிலை விஜ‌ய‌ன் said...

திராவிடக் கொள்கை என்றால் கடவுள் மறுப்பு என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். கடவுள் நம்பிக்கையை குறைசொல்ல்வதில்லை திராவிடம். இல்லத கடவுளைக்காட்டி உங்களை அடிமைப்படுத்தும் சதிகளை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.

பிறப்பால் உயர்ச்சி என்பதன் மூலம் உங்களை சிறுமைப்படுத்தி தாழ்த்தி பிற்ப்படுத்துவதன் பித்தலாட்டத்தை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.

அறிவும் புத்திசாலித்தனமும் படிப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் வருவதில்லை, இவைகள் ஒரு இனத்துக்கு மட்டுமே இயற்கையாக பிறாப்பால் வருதுன்னு பொய் சொல்லி மற்ற இனத்தினரை நம்பவைத்து உளவியல் தாக்குதல் மூலம் அவர்களை படிக்க மற்றும் முன்னேற விடாமல் செய்யும் ச்திகளை பகுத்து அறிந்து கோள்ள அறிவுறுத்துவதுதான் திராவிடம்.

உலகிலேயே தமிழர்கள் மட்டுமே கோவில், சர்ச், பள்ளி வாசல், மற்றும் அனைத்தும் மத கோவிலுக்கும் போய் உன்மையான பக்த்தியுடன் வனங்குவர்.

கடவுள் பக்த்தி அதிகமாக இருக்காத மற்ற மாநிலங்களில் "கவுளைக் கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி" என்று சொல்லி உயிருடன் இருக்க முடியாது. ஆனால் கடவுள் பக்த்தி அதிகமாக உள்ள தமிழ்நாட்டில்தான் இதை கோவில் வாசல்களில் கூட எழுதி வைக்க முடியும்.. பகுத்தறியும் உத்தியினைக்கற்ற தமிழர்கள் உன்மையான திராவிடத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.

பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவுத்தீ என்றைக்குமே நீர்த்துப்போகாது. இதை தமிழர்கள் என்றுமே அறிந்து வைத்துதான் இருக்கின்றனர்.

Selvam said...

நல்ல சிந்தனை.பெரியாரின் கடவுள் மறுப்பு ஒரு சந்தர்ப்பவாதம்.இங்கு கடவுள் மறுப்பாளாராக அறியப்பட்டவர்,கேரளா வைக்கத்தில் போய் ஏன் ஆலயப் பிரவேச போராட்டம் நடத்த வேண்டும்?

!

Blog Widget by LinkWithin