சர்வாதிகாரம்!

மிடில்கிளாஸ் வர்க்கத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை பிடிங்கிகொள்வது கல்வி கட்டணம் தான். அந்த ஆதங்கதில் தான் யாராவது அனைவருக்குமான கல்வியை இலவசமா தர மாட்டாங்களான்னு எதிர்பார்க்க வேண்டியிருக்கு.

பாஜக போன்ற வலதுசாரி ஆதரவாளர்கள் முதலாளித்துவ சிந்தனையில் ஊறி போனவர்கள். அவர்கள் தொழ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரும்முதலாளி வேண்டும். யாரும் இல்லையென்றால் அவர்களே யாரையாவது உருவாக்குவார்கள். 5 வருசம் முன்னால் அதானி யாருனே எனக்கு தெரியாது.இன்னைக்கு அதானியை தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிரலாம்.

வலசு சாரிகள் வர்க்க சிந்தனையில் ஊறிபோனவர்கள். ஏழ்மைக்கு விதியே காரணம் என்பார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பார்கள். அவர்களின் தற்போதைய ஆயுதம் தேச பக்தி. அதை உங்கள் கழுத்தி வைத்து மிரட்டுகிறார்கள். மதவாதத்திற்கும், அதிகாரமையத்திற்கு எதிராக பேசுபவர்களையும் தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வர்க்க சிந்தனையை மறைமுகமாக பயன்படுத்துவது தான்.

நானும் இந்தியாவில் வரி கட்டும் இந்தியன் தான் என்ற பத்திரிக்கையளரை நீ எவ்ளோ வரி கட்ற, அந்த பணத்தை நான் தர்றேன்னு ஒரு தேசிய தலைவர் சொல்கிறார் என்றால் இங்கே கேள்வி கேட்கவே மறுக்கப்படுகிறது என்று அர்த்தம்.தனிமனித உரிமைக்காக போராடுவதை ஒடுக்குவதும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதும், கேள்வி கேட்கவே மறுக்கப்படுவதற்கும் இன்னொரு பெயர் உள்ளது. அதனை சர்வாதிரிகாரம் என்பார்கள். ஆனால் வரலாறு நமக்கு சொல்லிகொடுத்த பாடம் சர்வாதிரிகாரிகள் கடைசி காலத்தில் உயிர்பிச்சை கேட்டு அழைவார்கள்.

2 வாங்கிகட்டி கொண்டது:

Atheist said...

பூமியில் உயிர் வந்தது ஒரு விபத்தேயன்றி கடவுளால் அல்ல என்ற தெளிவுதான் இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கும். கடவுள் தந்தது என்ற மனநிலையில் இருப்பவர்களிடம் நம்மால் எதையும் புரிய வைக்க முடியாது! சகமனிதனை நினை என்பதே இவர்களுக்கு கடவுள் சொன்னால் தான் புரியும். பணம் சேர்ப்பவன் “I earned it" என நினைக்காமல் எனக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் சேர்த்த அறிவுச் செல்வம் மற்றும் சக மனிதர்களின் உழைப்பு என பலவும் எனக்கு இப்பொழுது இந்தச் செல்வத்தை அளிக்கின்றன என்று நினைத்தாலே போதும்...உலகில் ஏற்றத்தாழ்வு மறையும். ஆனால் இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! பல தொழிற்சாலைகள் தொடங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டு அதனால் மழை பொய்க்கும் போது விவசாயிகள் போராடுவதையும் தற்கொலை செய்வதையும் “அது விதி” எனக் கடந்து செல்லும் மனம் படைத்தவர்கள் வாழும் உலகம் இது.

வேகநரி said...

ஹாய்,
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு கொண்ட பல நாடுகளில் இலவச கல்வி மிகவும் நல்ல முறையில் அளிக்கபட்டு வருகின்றது என்பதை அறிந்து கொள்ளவும். உங்க நாட்டில் உள்ளவர்களும், மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காண்பிக்கும் விளையாட்டு தான் வேண்டும் என்று போராடாம, அத்தியாவசிய தேவைகள் மருத்துவம், கல்வி போன்றவற்றுக்காக மெரினாவில் போராட வேண்டும்.

!

Blog Widget by LinkWithin