காதலே வலியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறது!

தோல்வியும், அவமானங்களையும் தாண்டி அதிக பாதிப்பையும், வலியையும் நிராகரிப்பில் தான் நான் உணர்ந்தேன். நிராகரிப்பு என்ற ஒன்றை வார்த்தைக்குள் நீ எதுக்குமே லாயக்கில்ல என்ற ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்துள்ளது.

நிராகரிப்பின் வலி தாழ்வு மனப்பான்மையும், இயலாமையும் உருவாக்கும், இயலாமை கோவமாக மாறும். முடிந்த வரை எதிர்தரப்பை குற்றம் சொல்லி திட்டித்தீர்ப்போம். புலம்பி தள்ளுவோம். என்ன தான் அறிவியல், உளவியல் படித்து, பேசி வந்தாலும் நிராகரிப்பின் அந்த கணம் சுயத்தை இழக்கச்செய்வது உண்மை தான்.

எனக்கு உண்மை சூழலை அறிய ஒரு மாதம் பிடித்தது. சரியான போன வருடம் இதே நாள் பழைய சாட்டுகளை படித்துள்ளேன்.

”நான்” உன்னை எவ்ளோ காதலிச்சேன் தெரியுமா?
“நான்” இல்லாமல் நீ இருந்திருவியா?
“என்னை” நீ ஏமாத்திட்ட. “என்” வாழ்க்கையை நாசம் பண்ணிட்ட. “எனக்கு” வலிக்குது.

நான், என்னை, என், எனக்கு... எல்லாமே முதல் தரப்பை சுற்றியே யோசிக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பின் நியாயங்கள் சிறிதும் பரிசீலிக்கபடவில்லை. பழைய சாட்டை படித்தபொழுது தான் எனக்கு தெரிந்தது, ஈகோ தப்புன்னு சொல்ற நான் எவ்ளோ ஈகோ காட்டியிருக்கேன்னு. என் முகத்தில் காறி துப்பிக்கொள்ளனும் போல தோன்றியது.



இந்த சின்ன வயதில் இவ்வளவு அறிவா என நான் பிரமிக்கும் ஒரு சிலரில் என் மாப்ளையும் ஒருவன். ஏற்கனவே பிரிந்திருந்தாலும் நேத்து போய் திரும்ப கதவை தட்டியிருக்கான். என்னால மறக்க முடியல. திரும்ப லவ் பண்ணலாம்னு

அவர்கள் இருவருமிடமும் செம ஈகோவை நான் உணர்ந்திருக்கேன். ஒரு பிரச்சனையில் இருவரையும் ஸாரி கேட்க சொன்னதுக்கு ஒரு தரப்பு அவன் பண்ண தப்புக்கு நான் ஏன் ஸாரி கேட்கனும் என்றும். எத்தனை தடவை தான் ஸாரி கேட்பது என இன்னொரு தரப்பும் சொல்லுது. அப்பவே சொன்னென். உங்களுக்குள் ஒத்து வராது. பேசி புரிதலுடன் நண்பர்களாக பிரிந்து விடுங்கள்னு

நான் கண்ணம்மாவிடம் சொல்வேன், நாம் தான் வாழ போகிறோம். சண்டையென்றாலும் எப்படியும் பேசி தான் ஆகவேண்டும். ஈகோ பார்த்து நாலு நாள் பேசாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. கோவமா இருந்தா திட்டு, நாலு அடி கூட அடி. ஆனால் பேசாமல் இருப்பதால் எதுவும் சரியாகப்போவதில்லைன்னு. இவர்கள் இருவரும் அடிக்கடி நாட்கணக்கில் பேசாம இருந்துள்ளார்கள். உன்னை வச்சு காலம் தள்ளமுடியாது என ஒரு தரப்புமே அடிக்கடி சண்டை போட்டுள்ளது.

காதல் ஒரு ஹார்மோன் விளையாட்டு,
மூணாம் காதல் முழுமையடையுமடா,
டாக்டர் பொண்ணு நோ சொன்னா, நர்ஸ் பொண்ண காதலின்னு அட்வைஸ் பண்ணும் தகுதி எனக்கில்லை. இதெல்லாம் தெரிந்தும் இன்னும் அவ நல்லாருக்காளான்னு அடிக்கடி எட்டி பார்த்திகிட்டு தான் இருக்கேன்.



காதலிப்பது என்பது என்ன? நான் உன்னை சந்தோசமா வச்சுகுவேன் என்பது தானே, உன்னுடன் இருப்பதை விட உன் இல்லாமை உனக்கு சந்தோசம் தருதுன்னா அவள் கேட்கும் இடத்தை அவளுக்கு கொடுத்து அவள் மகிழ்வை கண்டு ரசிப்பதே காதல்.

நீ அவளை உண்மையிலயே காதலிப்பதாய் நினைச்சேனா, அவள் மகிழ்வை கெடுக்காதே!

1 வாங்கிகட்டி கொண்டது:

Nagendra Bharathi said...

உண்மை

!

Blog Widget by LinkWithin