வருமானவரி!

வருமான வரி முன்பு 2.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை 10% ஆக வைத்திருந்தது. அதை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை 5% ஆக குறைத்துள்ளது முதலில் வருமான வரி என்றால் என்னான்னு பார்த்துட்டு பிறகு சாதக பாதகங்களை அலசலாம்.

உங்களுக்கு மாச சம்பளம் 25,000 என்றால் வருடத்திற்கு 3 லட்சம். உங்களுக்கு அளித்திருக்கும் உச்சவரம்பாக 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள 50 ஆயிரம் ரூபாய்க்கு அரசு நிர்ணத்தியுள்ள 5% அதாவது 2500 ரூபாய் நீங்கள் வரிவாக கட்ட வேண்டும். சென்ற வருசம் உச்ச வரம்பு 2.5 லட்சமாகவும் வரி 10%ஆகவும் இருந்தது. இதையே சென்ற வருடம் நீங்கள், 5 ஆயிரம் கட்டியிருக்க வேண்டும்.

2006 ஆம் ஆண்டு 1 லட்சமாக இருந்த உச்ச வரம்பு படிபடியாக உயர்ந்து இப்பொழுது 2.5 லட்சத்தை அடைந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1.பணவீக்க அடிப்படையில் உங்களது சம்பளம் உயர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக இப்பொழுது 30 ஆயிரம் சம்பளம் நீங்கள் 2006 ஆம் ஆண்டு 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டு இருப்பீர்கள். 2.இந்தியாவில் 3 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துவதாக புள்ளி விபரம் சொல்கிறது. நாட்டிற்கு தேவையான மொத்த வரிசுமையையும் இவர்கள் மேல் திணிப்பது அவர்களுக்கு அயர்ச்சியை உண்டு பண்ணும். வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ளது.

நம் நாட்டில் விவசாயத்திற்கு வரி விதிப்பு இல்லை. போலயே முறை சாரா தொழில் செய்பவர்களும் அந்த வேலை செய்பவர்களுக்கும் வரி நிர்ணயம் செய்வது கடினம் அதன் காரணங்கள் 1. அவர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது. 2.இதுதான் இவர்களது நிலையான வருமானம் என்றும் வகை படுத்தமுடியாது. உதாரணத்திற்கு ஒரு கொத்தனார் தினம் 1000 ரூபாய் சம்பளம் பெறலாம் ஆனால் அவரும் வருடம் முழுவதும் வேலை இருக்கும் எனவோ, இதே சம்பளம் கிடைக்கும் எனவோ உறுதி அளிக்க முடியாது.

வரி கட்டும் 3 கோடி இந்தியர்களில் 2 கோடி பேர் அரசு பணியில் இருப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் அவர்கள் கட்டாயம் வருமான வரி கட்டவேண்டும். இதில் எம்.பி, எம்.எல்.ஏகளும் அடங்கும். கார்பேர்ட் கம்பெனியில் இருப்பவர்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் நிச்சயமாக அதிக சம்பளம் பெறுவர் அதில் 75 லட்சம் இந்தியர்கள் வரை வரி செலுத்துவார்கள்.

மீதி இருப்பவர்கள் சுய தொழில் செய்வோர். அதில் வரி ஏய்ப்பும் இருக்கலாம். அதாவது தனது வருமானத்தை குறைவாக காட்டலாம். எனக்கு முருகன் என்று ஒரு நண்பன் மதுரையில் இருக்கிறான். கட்டிடங்களுக்கு ப்ளம்பிங் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்வான். அவன் தொழில் முறைசாரா தொழிலில் தான் வருகிறது. சில நாட்கள் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் வேலை நடக்கும். சில நாட்கள் வேலையே இல்லையென வீட்டில் இருப்பான். ஆனாலும் அவன் வருடத்திற்கு 4 லட்சம் வருமானம் காட்டி வரி கட்டி வருகிறான்/ ஏன் கட்டிகிட்டு இருக்கான்னு யோசிக்கும் போது தான் தெரியுது அவனுக்கு வங்கிகளில் 30 லட்சத்திற்கு கடன் இருக்கு. நமது வங்கிகள் வருமான வரி கட்டுவோற்கு கடன் கொடுக்க முன்னுரிமை அளிக்கும். ஆக மீதி லட்சம் இந்தியர்களில் இதற்காக எத்தனை பேர் கட்டுறாங்கன்னு தெரியல.

குறுங்தொழில்களான டீக்கடை, உணவகம், மளிகைகடை ஆகியவற்றை அரசு பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைக்கிறது. அது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் மக்களிடையே பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்கிவித்து சிறு கடைகளை தவிர்த்து பெரிய பெரிய மால்களுக்கு போக சொல்கிறது. ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற ஒரு மால் நூறு சிறு மளிகைகடையின் வாழ்வாதரத்தை பாதிக்கும்.

எப்படியும் அரசு நடத்த வரி பணம் தேவை. வேறு மாற்று இருக்கின்றதா?

சென்ற ஆண்டு மத்திய அரசு கார்ப்ரேட்களுக்கு தள்ளுபடி அல்லது வராகடன் லிஸ்டில் சேர்த்தது மட்டுமே 1.17 லட்சம் கோடி. அதுவல்லாது கார்ப்ரேட்களுக்கு கொடுக்கும் வரி சலுகைகள் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி. மத்தியில் எந்த அரசு வந்தாலும் இதில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கின்றது

இது போக வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சுமார் 2 கோடி வரை இருக்கலாம். அவர்களில் 95% பேர் பண மதிப்பை திரும்ப பெற்ற பொழுது ஆதரித்தவர்கள். எல்லையில் ராணுவவீரன் கஷ்டபடுறான் நீங்க கியூவில் நின்றால் என்ன என்று பொங்கியவர்கள். அரசு புள்ளி விபரபடி இவர்களில் 10% குறைவான இந்தியர்களே வருமான வரி கட்டுகிறனர்.  இவர்களில் 99.99% பேர் இணைய பயன்பாடு கொண்டவர்கள். இவர்கள் தான் பாஜகவின் அனைத்து செயல்களையும் ஆதரிப்பவர்கள். ஏன்னா இங்கே வறுமையில் சாகும் விவசாயிகளோ, பணம் மதிப்பை இழந்த பொழுது இறந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களோ மனிதர்களே அல்ல!

#வால்பையன்

2 வாங்கிகட்டி கொண்டது:

இராய செல்லப்பா said...

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், அந்தந்த நாட்டில் வருமானவரி செலுத்தியாகவேண்டும் என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது. இரண்டு நாடுகளில் வருமானம் உள்ளவர்கள், அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 'வரி தவிர்ப்பு' ஒப்பந்தங்களின்படி, ஏதேனும் ஒருநாட்டில் மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. எனவே தான் NRI இந்தியர்களில் மிகச் சிலரே இந்தியாவின் வருமானவரியைச் செலுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், சிறுதொழில் என்ற பெயரில் -அதாவர்து ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் பற்றுவரவு உள்ளவர்கள் - எந்த வரியும் செலுத்தாமல் நாட்டை ஏய்ப்பதுதான். மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்கள்மீதுதான் இவர்கள் செலுத்தாமல் விட்ட வரியை திணித்துவிடுகிறார்கள். சென்னை நகரில் தள்ளுவண்டிக்காரகள் கூட ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை ச்மபாதிக்கமுடிகிறது. அவர்கள் செலுத்தும் வரி எவ்வளவு? அதே தொகையை மாதச் சம்பளமாக வாங்குபவன், வரி காட்டாமல் ஏமாற்ற முடியுமா?

-இராய செல்லப்பா (சென்னை வாசிதான்; தற்போது நியூஜெர்சியில்).

வால்பையன் said...

வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் எதோ ஒரு பக்கம் வரி கட்றோம் தான். ஆனால் நீங்கள் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கிங்க. உங்களை சார்ந்திருக்கும் குடும்பம் இந்தியாவில் இருக்கு. அவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு தான் செய்துக்கொடுக்க வேண்டும். அதற்கு குறைந்த அளவாவது வரி செலுத்துதல் நல்லது தானே.

கையேந்தி பவன் எல்லாமே முறை சாரா தொழிலில் தான் வரும். நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு அது நிரத்தர வருமானமோ, அதற்கான உத்திரவாதமோ ஏதுமில்லை. அவர்களையும் முறைபடுத்த நம்மிடம் அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லை

!

Blog Widget by LinkWithin