அது ஒரு அழகிய கனாகாலம்!

Blog எழுத தொடங்கிய காலம் வசந்த காலம்னே சொல்லலாம். தருமி, கல்வெட்டு போன்றவர்கள் பதிவுகளில் விவாதித்து தான் வால்பையன் ப்ளாக்கே பேமஸ் ஆச்சு. நான், பங்காளி ராஜன், செந்தழல் ரவி, கும்மி நாலு பேரும் சேர்ந்து ஆள் இன் ஆள் அழகுராஜா ப்ளாக் நடத்தினோம். ஒரு மதம் விடாம கலாய்ப்போம்.

தமிழ் ஓவியான்னு ஒருத்தர், ஆதியில் பெரியார் எழுதியதை மட்டுமே காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருப்பார். ஏன் பெரியார் கண்ணில் உலகை பாக்குறிங்க. உங்க கண்ணில் உலகை பாருங்கன்னு அவரையும் கலாய்ச்சிட்டு வருவேன். அந்த காலத்தில்(இப்ப ஓப்பன் ஆகுதா தெரியல) என் ப்ளாக்கை அரபுநாடுகளில் தடை பண்ணியிருந்தாங்க (மாமியார் சிவகாமி மேல சத்தியமா)

இஸ்லாம் பத்தி எழுதினா நான் காவின்னு நினைச்சிகிட்டு கமெண்ட் போடுவானுங்க. அடுத்த கமெண்டில் ஆமாங்க விஷ்ணுவும் சிவனும் டொக்கு போட்டு அய்யப்பனை பெத்தாங்கலாம். அவனை பார்க்க விரதம் இருந்து கும்பிட போறாங்களாம் கிறுக்கு பயலுகன்னு கலாய்ப்பேன்இஸ்லாத்தையும், காவியையும் ஒருத்தன் கலாய்ச்சிட்டா அவனுங்க லிஸ்டில் பெரியாரிஸ்டா தான் இருக்கனும். அடுத்த கமெண்ட் மணியம்மைன்னு எழுதுவானுங்க. நல்லவேளை மணியம்மைக்கு குழந்தையில்ல இருந்திருந்தா குடை எடுத்துட்டு போய் கொக்கு சுட்ட கிழவன் கதையாயிருக்கும்னு பதில் போடுவேன்.

யார்றா இவன்னு தெறிக்கவிட்டுகிட்டு இருந்தேன். இங்க என்னடான்னா ஃபாஸ்ட் புட் மாதிரி ரெண்டு வரியில் நூடுல்ஸ் சமைச்சிகிட்டு இருக்கோம். ஆரம்பத்திலாவது சிலர் விவாவத்திற்கு வந்தாங்க. இப்பல்லாம் யாரையும் காணோம். அப்படியே யாராவது ஒரு கமெண்ட் கருத்து மோதலா போட்டுட்டாலும் ஜன்னல் வழியா ஒருக்கா கையை நீட்டி தம்பி, அவண்ட்ட வச்சுக்காத, ஓடிருன்னு அபாய சங்கு ஊதிருது.

என்ன தாண்டா பண்றது. வெளிநாட்டுக்கு எதும் போயிரலாமான்னு பார்த்தா எங்கிட்ட பாஸ்போர்ட் கூட இல்ல. கிஷோர்லாம் பாருங்க. ்ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டி கமெண்ட் போட்டாலும். அப்புறம் சார் நேத்து அடிக்க வர்றேன்னு சொன்னிங்க, வரவேயில்லன்னு தொடைச்சு போட்டு போய்ட்டே இருக்கான். இந்த சூடு, சொரணை, மான , ரோசத்தோடு வாழ எவ்ளோ இழக்க வேண்டியிருக்கு தெரியுமா?

9 வாங்கிகட்டி கொண்டது:

அது ஒரு கனாக் காலம் said...

நானும் அந்த நாட்களை ( கனா காலங்களை ) நினைத்து பார்க்கிறேன்

vic said...

அது ஒரு அழகிய கனாகாலம்!yes டோண்டு வ விட்டுட்டீங்க

தருமி said...

//.... பதிவுகளில் விவாதித்து தான் வால்பையன் ப்ளாக்கே பேமஸ் ஆச்சு.//

நாங்கல்லாம் நல்ல ஏணிகள்!!

வால்பையன் said...

எப்போதும் மறக்க மாட்டேன் தல! :-)

Nattarasan said...

இப்பதான் தெரியுது

Nattarasan said...

இப்பதான் புரியுது

Nattarasan said...

இப்பதான் புரியுது

கிரி said...

"தமிழ் ஓவியான்னு ஒருத்தர், ஆதியில் பெரியார் எழுதியதை மட்டுமே காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருப்பார்."

:-) அவர் எங்க போனாருன்னு தெரியல... ஏதாவது கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாமல் பெரியார் செய்திகளை 10 பின்னூட்டமாக இடுவார். ஒன்றுமே புரியாது.

ஆனால், மனுசன் எதையும் கண்டுக்காம போட்டுட்டே இருப்பார்..

பெரியாரை பின்பற்றிட்டு எப்படி வீரமணியை ஏற்றுக்கொள்கிறார் என்று புரியலை :-)

" ஆரம்பத்திலாவது சிலர் விவாவத்திற்கு வந்தாங்க. இப்பல்லாம் யாரையும் காணோம்."

ஆமாம்.. நிஜமாவே அது ஒரு கனாக்காலம் தான்.

அப்புறம் அருண்.. எப்படி இருக்கீங்க? :-)

வால்பையன் said...

நல்லா இருக்கேன் தல

ஃபேஸ்புக்கில் https://www.facebook.com/val.paiyan இந்த ஐடியில் பிஸியா மொக்கை போட்டுகிட்டு இருக்கேன் :-)

!

Blog Widget by LinkWithin