சாதீ!

நான் ஐந்தாவது வரை மதுரையில் தான் படித்தேன். குறிப்பா ஐந்தாவது படித்தது கருப்பாயூரணி பக்கத்தில் இருக்கும் மதுரை கிழக்கு ஊராட்சி ஆரம்ப நடுநிலைபள்ளி. ஒரு பெரிய ஹால். நாலு பக்க சுவற்றிலும் கரும்பலகை இருக்கும். அதிலேயே பிரித்து ஒன்னுயிலிருந்து ஐந்து வரை வகுப்பு நடத்துவார்கள். என்னுடம் படிச்சது 3 பெண்கள், 5 ஆண்கள்.

அதில் சோஃபியா வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார்கள். மற்ற அனைவரும் தலித்துகள் என்று நினைக்கிறேன். நினைக்கிறேன் அம்புட்டு தான் மத்தபடி இன்று வரை எனக்கு யாரிடமும் சாதி கேட்கும் பழக்கம் இல்லை. நான் பேசிக்கா சோம்பேறி மதியம் சத்துணவு சாப்பிட தட்டு எடுத்துட்டு போக மாட்டேன். நானும் என் வகுப்பு தோழனும் ஒரே தட்டி சாப்பிடுவேன். அது வீட்டில் தெரிந்து அவன் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் கடைசி வரைக்கும் அவன் கூட தான் சாப்பிட்டேன்.

நேற்று மாவீரன் கிட்டு படம் பார்த்தபொழுது எனக்கு அது ஞாபகம் வந்தது. இயற்கையாக நமக்கு தோற்றும் உணர்வுகள் தவிர மற்ற அனைத்துமே திணிக்கப்பட்டதே. அதில் சாதி/மதமும் அடங்கும். எனக்கு சாதி/கடவுள் மறுப்பு யாரும் சொல்லிதரவில்லை. எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. ஏன் என்ற கேள்வி மட்டுமே சாத்தியமில்லாத அனைத்தையும் மறுக்க வைத்தது.

படம் எம்.ஜி.ஆர் காலத்து கதை போல் எடுத்திருந்தாலும் படத்தில் காட்டப்பட்டது போல் சென்ற வருசம் தலித் பிணத்தை பொது வழியில் எடுத்துச்செல்லகூடாது என்று தர்மபுரி பக்கம் ஒரு சர்ச்சை கிளம்பியது. கோர்ட் தலையிட்டும் அனுமதி மறுத்தி காவலரே பிணத்தை எடுத்து சென்றனர். சென்ற மாதம் பெற்ற மகளையே ஆணவ கொலை செய்த பெற்றோருக்கு மரண தண்டனை விதித்தது நெல்லை நீதி மன்றம்.

இவ்வளவு கல்வி அறிவும், அறிவியலும் உலக மயமாக்கலும் மனிதர்களுக்கு மனிதத்தை சொல்லிக்கொடுக்க வில்லை. சாதி அரசியலும் மதவாதமும் மேலும் மேலும் வெறுப்பை மட்டுமே மனிதர்களுக்குள் விதைக்கிறது. எந்த அடிப்படை ஆதாரதாமும் இல்லாத சாதி எந்த வகையிலும் உங்களுக்கு பயன் தரபோவதில்லை.

உங்கள் குழந்தைகளுக்கு மனிதம் சொல்லிக்கொடுங்கள்
மதமும் சாதியும் வேண்டாம்

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin