உணவும், அரசியலும்

டிஸ்கவரியில் MAN VS WILD
NAKED AND AFRAID மாதிரியான புரோகிராம் பார்ப்பிங்களா? நான் நேத்து ஒன்னு பார்த்தேன். லூதியானா சதுப்பு நில காடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமா 21 நாள் இருந்தாங்க. வந்த முதல் நாளே 2 பாம்பு உணவா கிடைந்த்தது. அட பரவாயில்லையே பார்த்தா அங்க சுத்தியும் பாம்பா தான் இருக்கு. எல்லாமே விச பாம்புகள்

பத்தாதுக்கு நாலாம் நாள் அடிச்ச மழையில் தங்க இடமில்லை. நெருப்பில்லை, அதனால் உணவும் இல்லை. அப்படியே எட்டு நாட்கள் இருப்பாங்க. அப்புறம் அங்கிருந்து போய் இன்னொரு இடத்தை கண்டுபிடிச்சு தங்க ஏற்பாடு பண்ணுவாங்க. அங்கேயும் உணவு இல்லை. கடைசி ரெண்டு நாள் முன்னாடி ஒரு பன்றி கிடைக்கும். இதை அடிச்சி சாப்பிடுட்டு சவாலை முடிப்பாங்க.

மனசுகுள் ஆசையா இருக்கும். இந்த மாதிரி சாகசத்தில் நாமளும் கலந்துகனும்னு ஆனா நிச்சயமா இந்திய ஆண்களால் இந்த நிர்வாண நிகழ்ச்சியில் கலந்துக்க முடியாது. பாலியல் வறட்சி மிக்க நாடு, மறை பொருள்கள் அனைத்துமே கவர்ச்சி பொருளாக விளம்பர படுத்தும் நாடு. முதல் தடவை ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது ஆணின் மானம் தான் போகும்.

இன்னும் விசயத்திற்குள்ளயே போல அதுகுள்ள மூணு பாரா ஆகிருச்சு. அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் அவர்களால் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடிவதை கவனிச்சிங்களா. அப்படியே சாப்பிட்டாலும் சின்ன புழு, மீன், பாம்புன்னு கிடைப்பதை புரதம்னு சாப்பிடுவாங்க. நம்மால் ரெண்டு நாள் சாப்பிடலைனா மயக்கம் வந்துரும். ஏன் தெரியுமா. அவர்களுக்கு உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைன்னு சாப்பிடுவாங்க. நாம வயிற்றை ரொம்பனும்னு சட்டிசோறு சாப்பிடுவோம். உடலுக்கு தேவையான அனைத்தும் இருக்கா என்ற கேள்விகெல்லாம் இடமில்லை. வயிற்றுபானை நிரம்பியதா என்பதே நமக்கு கவலை.

அவன் தொப்பைய பார்த்தியா, நிறைய குடிப்பான் போலன்னு சொல்லும் சிலரை பார்த்திருக்கேன். திரவம் எப்படியா தொப்பை போட வயிற்றில் கொழப்பு சேர்க்கும். கொஞ்சமாச்சும் லாஜிக் வேணாமா. தொப்பை போட காரணம் அதன் பிறகு வயிற்றுகுள் போடும் குப்பைகள் தான். நம் உடல் தேவை புரதமே. நாம வேட்டையாட சோம்பேறிதனபட்டு விவசாயம் பண்ணிட்டு இன்னைக்கு அதன் அரசியல் புரியாம சைவம் என்றால் பெருமையா கருதுறோம்

வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல தான் கறி சாப்பிடுபவன் வக்கிர குணத்தோட இருப்பான்னு கிளப்பி விட்டது. யார்னு தனியா சொல்ல தேவையில்ல.10000 வருசத்துக்கு முன் விவசாயம் வந்த பிறகு தான் அறிவு வளர்ச்சி அடைந்தது என்ற வாதத்தை என்னால் உடைக்க முடியும். அறிவு வளார்ச்சி கூட்டமாக வாழ்ந்து மொழியை உருவாக்கி தகவல் தொடர்பை வளர்த்து கொண்டதால் தான். இப்ப கூட நம்மை வெற்று கிரக வாசிகள் தொடர்ப்பு கொண்டு அவுங்க டெக்னாலஜியை கற்று கொடுத்தால் இன்னும் மேம்படுமே. அப்படி தான்.

சைவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பது எவ்ளோ பெரிய பொய் என்பதற்கு ஒரு உதாரணம் ஹிட்லர். சைவர்கள் பெரும்பாலும் உயர்வு மனப்பான்மையில் சிலரை அடிமை படுத்த நினைத்தார்கள் என்பதற்கு உதாரணமும் ஹிட்லர் தான். ஆனால் இப்பவும் சில சைவர்கள் தாங்கள் அறிவிலும் சாதியிலும் பெரியவங்க மாதிரி பேசிகிட்டு இருக்காங்க. ஆனா எங்கிட்ட பேச கூப்பிட்டா மட்டும் ப்ளாக் பண்ணிட்டு போயிர்றாங்க. என்ன டிசைனோ

இது பேலியோ ஆதரவு பதிவும் அல்ல நான் பேலியோ கடைபிடிப்பாளனும் அல்ல. எது உண்மையோ அதை எழுத வேண்டியது என் கடமை

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin