ஜல்லிகட்டு!

குரங்கினத்தின் ஒரு பிரிவாக நியாண்டர்தால் வளர்ந்தது. அதிலிருந்து ஹோமோ எரக்டஸ் உருவானது. வேட்டையாடப்படும் உயிரினமாக இருந்த நாம் வேட்டையாடும் உயிரினமாக மாறியது அப்பொழுது தான். நெருப்பை உருவாக்க கற்றக்கொண்டதும் இவர்கள் தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. கல், குச்சி ஆகியவற்றை ஆயுதாக பயன்படுத்தினர். பின் வந்த ஹோமோ சேபியன்ஸ் மேம்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர். தூரத்தில் இருந்தே தாக்கக்கூடிய வில் போன்ற ஆயுதங்கள் கொண்டு ஹோமோ எரக்டஸ் இனத்தை முற்றிலுமாக அழித்தனர். அதிலிருந்து மேம்பட்ட உயிரினமாக மாறிய ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் தான் நாம் அதாவது மனிதர்கள்.
மனித நாகரிகத்தின் தொடக்கம், ஒரே இடத்தில் தங்கி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய தொடங்கியது. அதை தான் நாம் விவசாயம் எங்கிறோம். குகையில் தங்கிய மனிதன் ஆற்றுபடுகைகள் குடியிருக்க வீடுகள் கட்ட தொடங்கினான். தகவல் தொடர்பு மொழியை வளர்த்தது. மொழி அறிவை வளர்த்தது. அறிவு அத்தனையும் கண்டுபிடித்தது. ஆக விவசாயமே அனைத்திற்கும் தொடக்கம். அதை மனிதன் தொடங்கவில்லையென்றால் இன்றும் நாம் வேட்டையாடி உண்டுகொண்டு இருப்போம். ஆதி பழகுடியினர் சிலர் தவிர நாம் அனைவருமே விவசாய பரம்பரைகள் தான்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை விவசாய மண், எனக்கு நைட்ரஜன் வேணும், பாஸ்பரஸ் வேணும், யூரியா வேணும் அதையெல்லாம் உரமாக போடு என கேட்கவில்லை. இன்றும் மழைகாடுகளிலிருந்து மனித தொல்லை இல்லாத வனபகுதிகள் எந்த செயற்கை உரமும் இல்லாமல் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றன. அவைகளின் உதிர்ந்த இலைகள், விலங்குகளின் சாணங்கள் மண்ணில் மக்கி நைட்ரஜனாகவும், பாஸ்பரஸாகவும் மண்ணை பாதுகாத்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடோ, மாடோ குட்டி ஈன்றால் அது பெண்ணாக இருந்தால் பாலுக்கும்/இனபெருக்கத்திற்கும், ஆணாக இருந்தால் உழுவுக்கும், பட்டி என இடத்தில் வைத்து சாண உரத்திற்கும் பாதுகாக்கப்பட்டது. ட்ராக்டர் என்ற சாதனம் காளைகளின் தேவையை பாதி ஒழித்தது. செயற்கை கருவூட்டல் மீதி ஒழித்தது. இன்று காளைகள் உணவுக்காக மாட்டுகறியாக ஏற்றுமதி செய்யவே வளர்க்கப்படுகிறது.


தனக்கு சோறு போட்ட விவசாயத்திற்கு மனிதன் செலுத்தும் மரியாதையே பொங்கல். அதை தமிழர் திருநாள் என்பதை விட உழவர் திருநாள்(பலர் அப்படி தான் சொல்வாங்க) என்பதே சரி. உணவு விவசாயத்தின் மூலமே கிடைக்கின்றன. அதை உண்ணும் அனைவரும் உழவர் திருநாளை கொண்டாடவேண்டும். அதன் ஒரு பகுதியான ஜல்லிகட்டை நடத்த வேண்டும்
நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்க சாதிகள் விவசாயம் செய்தும். சிறுபான்மையினர் விவசாய கூலிகளாகவும் இருந்தது உண்மை தான். ஆதிக்கசாதியினர் வளர்த்த மாடுகளை சிறுபான்மையினர் பிடிப்பதை விரும்பாமல் இருந்தது உண்மை தான். இன்றைய சமூகம் மாற்றம் அடைந்து வருகிறது. பெரும்பாலோர் பெயருக்கு பின்னால் அடைமொழியை சேர்த்துக்கொள்வதில். மூளை வளர்ச்சி அடையாத சில ஜந்துகள் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துக்கொண்டு அழைகிறார்கள். நீங்க என்ன ஆளுக என்று கேட்கும் பழக்கமும் மறைந்து வருகிறது.
காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையின் சமநிலை பாதுகாக்கப்படவேண்டும். உணவு சுழற்சி பாதுகாக்கபடவேண்டும். காளைகளை போற்றும் ஜல்லிகட்டு நடத்தப்படவேண்டும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

அருள்மொழிவர்மன் said...

சிறப்பான கட்டுரை, வாழ்த்துகள்!என்னுடைய ஆதரவும் அதுவே.
இங்குள்ள முக்கியப் பிரச்சனை யாதெனில் சரியான மஞ்சுவிரட்டைப் பற்றித் தெரியாததுதான்!! மாடு, காளைகளைத் துன்புறுத்தாமல் நல்ல முறையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். விலங்குகள் ஜல்லிக்கட்டில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

!

Blog Widget by LinkWithin