குவியல் (30.08.16)

ஃபோகஸ்னு ஒரு ஆங்கில படம் பார்த்தேன் பெருசா சொல்லிகிற மாதிரி எதுவும் இல்ல, அலுப்பு தட்டாத திரைகதைன்னு வேணும்னா சொல்லலாம்.
படத்தில் அமெரிக்கன் ஃபுட்பால் நடக்கும் போது ஒரு பந்தயம் நடக்குமே. அதான் இப்ப பேசப்போகும் பொருள்.



ஒரு நபர் எதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என திட்டமிடல். இதை தான் மலையாளத்தில் திருஷ்யம் என்ற பெயரில் எடுத்தார்கள். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கெடுத்தார்கள்.

நம் மண்டைக்குள் ஒன்றை புகுத்துவது இன்று நேற்று நடப்பதல்ல, ஆண்டாண்டு காலமாய் நாம் ப்ராண்டுக்கு அடிமையாகி கிடப்பதே அப்படித்தான். செலிபிரடி ஒர்சிப் சிண்ட்ரோமையும், எதிர்பால் கவர்ச்சியையும் உங்களுக்கு தூண்டில் இரையாக்கி அவர்கள் விருப்பதற்கு உங்களை தலையாட்ட வைக்கிறார்கள்.

நாம் அன்றாடம் தெரு சுவர்களில் பார்க்கும் இரட்டை இலை, உதயசூரியன் கூட ப்ராண்ட் புரமோசன் தான்.
அந்த கட்சியின் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் யார் என கூட அறியாமல் இன்னும் சின்னத்திற்கு ஓட்டு போடும் ஆட்களை ஆட்டுமந்தைகள் என நீங்கள் அழைப்பீர்களேயானல். விளம்பரத்திற்கு பலியாகி அந்த பொருளை மட்டுமே பயன்படுத்துவேன் என்பவர்களும் ஆட்டு மந்தைகள் தான்!

விளம்பரத்தில் தவறான தகவல்களை பரப்புவோர், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பது போன்றவைகளை செய்தால் அதில் நடிப்பவருக்கு தண்டனை மற்றும் அபராதம் என மத்திய அரசு சட்ட திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றயுள்ளது.

கூடவே கங்கை நீர் புனிதம், மாட்டு மூத்திரம் புரோட்டின் மிகுந்தது போன்ற டுபாக்கூர் விளம்பரங்களுக்கு நடிவடிக்கை என்பார்களா என்றால் நிச்சயம் இருக்காது. இந்த சட்ட திருத்த மசோதாவே உள்ளூர் சிறு வியாபாரிகளை நசுக்கி வெளிநாட்டு கார்ப்ரேட்களை உள்ளே கொண்டு வரும் கார்ப்ரேட் அடிமைகளின் முயற்சியே!

நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை. அதன் தரம் பேசும்


#குவியல்

1 வாங்கிகட்டி கொண்டது:

Senthil said...

தரமில்லாதவை கூட விளம்பரங்களால் ஹிட் அடிக்கும்

Happy Diwali Images

!

Blog Widget by LinkWithin