பாம்புகள்

உலகில் 2900 வகையான பாம்புகள் உள்ளன. அதில் 375 வகை பாம்புகள் விசம் கொண்டவை. பாம்புகளுக்கு இமை கிடையாது. சில பாம்புகள் சாப்பிடாமல் இரண்டு வருடம் வரை கூட வாழும்.

அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியுசிலாந்தில் பாம்புகள் இல்லை. பாலைவனம், சதுப்புநிலம், தண்ணிர் இப்படி அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் வசிக்கின்றன.

அதிக விசம் கொண்ட முதல் பத்து பாம்புகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. பாம்புகள் இரையை மெல்லாது. அப்படியே விழுங்கிவிடும். தன் தலையின் அளவை விட மூன்று மடங்கு பெரிதான விலங்குகளை பாம்புகளால் விழுங்க முடியும். இருப்பினும் பரிமாணத்தில் பற்கள் மறையாமல் இருக்ககாரணம் பாம்புகள் இரை தப்பிசெல்லாமல் இருக்க பற்களால் கவ்வுகின்றன.

பாம்புகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் வழக்கம் கொண்டவை. பச்சை அனகோண்டா என்ற வகை பாம்புகள் 250 கிலோ வரை வளரக்கூடியவை.


Barbados thread என்ற பாம்பு தான் உலகில் மிகசிறிய பாம்பு. முதலில் புழு என்று நினைத்தார்கள். பாம்பை போலயே பிளவுபட்ட நாக்கு தான் இதை பாம்பென்று அடையாளம் காட்டியது.


சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் Titanoboa என்ற பாம்பு வகை வாழ்ந்துள்ளது. முற்றிலும் அழிந்து விட்ட இந்த வகை பாம்பு 42 அடி நீளம் இருக்கும். எடை 1100 கிலோ வரை இருக்கும். தென் அமெரிக்க நாடுகளில் இவை வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


பிரேசில் அருகே ஒரு தீவு உள்ளது. அதை பாம்பு தீவு என்றே அழைக்கிறார்கள். அங்கே ஆராய்ச்சிக்கு கூட செல்ல முடியவில்லை. இரண்டு சதுர அடிக்கு ஒரு பாம்பு என்ற வீதம் அங்கே பாம்புகள் வாழ்கின்றன!


உலகம் முழுவதும் பாம்பு கடியால் வருடதிற்கு ஒரு லட்சம் பேர் வரை இறங்கின்றனர். வெப்ப மண்டல காடுகளில் வாழும் பாம்புகள் வருடதிற்கு ஆறு முறை சட்டையை உரிக்கும்


சில வகை பாம்புகள் முட்டையிட்டும், சில வகைகள் குட்டியிட்டும் இனபெருக்கம் செய்கின்றன. பிறந்ததும் குட்டிகள் தாயை விட்டு பிரிந்து விடும். ஆப்பிரிக்காவில் வாழும் பாறை பைத்தான்(மலைபாம்பு) வகை மட்டும் தன் குட்டிகளை நான்கு மாதம் வரை பாதுகாக்கின்றது.

4 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

Nice Bro.

அருள்மொழிவர்மன் said...

சுவாரசியமான தகவல்! சிறுவயதிலிருந்தே பாம்புகள் பற்றிப் படிக்க மிகுந்த ஆர்வம்.
நியூசிலாந்தில் பாம்புகள் இல்லையென்பது இன்றுதான் தெரிந்தது, வியப்பாக உள்ளது. (கூகிளில் செக் செய்துவிட்டேன், நீங்கள் கூறியது சரிதான்).

Unknown said...

பாம்பின் நாக்கு பிளவு பட்டு இருப்பதற்க்கு ஏதும் காரணம் இருக்காங்க. அதன்மூலம் அதற்க்கு என்ன பயன்?

Unknown said...

mmmmm , aalumaa dollumaa

!

Blog Widget by LinkWithin