குவியல் (18.08.16)

கொஞ்சநாளா மழைய மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது. ஈரோட்டில் மழைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சோன்னு நினைக்கும் போது அதை தொட்டு அங்கிருந்து வானவில்லுக்கு போயி ஹைகூ மாதிரி ஒரு போஸ்ட் தேறுச்சு.

அவ்ளோ தான் கற்பனை, குதிரையில் ஏறி உட்கார்ந்துட்டா போதும் அது பாட்டுக்கு நம்மை கூட்டிட்டு போகும். நாம கவனிச்சா மட்டும் போதும்.

கவனித்தல் பத்தி சொல்லும் போது ஞாபகம் வருது. தமிழக சட்டமன்றத்தில் நாங்க மட்டும் தான் பேசுவோம், வேற யாரும் பேசக்கூடாதுன்னு நினைச்சிட்டாங்க போல.

அதே சட்டமன்றத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம் சொல்றேன். அப்ப காங்கிரஸ் ஆட்சி, எதிர்கட்சி தலைவராக பேரறிஞர் அண்ணா இருக்கார்.
காங்கிரஸ் தலைவர் பேசி அமர்ந்ததும் அண்ணா எழுந்து கை தட்டி அருமையான சொற்பொழிவு, இயேசுவின் மலை பிரசங்கத்திற்கு ஒப்பானதுன்னு சொல்ல

காங்கிரஸ் தலைவர் எழுந்து, இயேசு மாதிரி என்னையும் சிலுவையில் அறைந்துவிடாதீர்கள் என்றார். உடனே அண்ணா எழுந்து, இயேசுவை சிலுவையில் அறைய காட்டி கொடுத்து காரணமான இருந்த அந்த ஒருவன் அவர் கூடவே தான் இருந்தான்,. நீங்களும் கவனமா இருங்க என்றார்.

ஒருத்தர் கவனத்தை ஈர்ப்பது விளப்பரத்தின் யுக்தி தான், ஆனால் தவறான தகவலை கொண்டு சமகால பிரச்சனைகளை ஆயுதமாக்கி விளம்பரம் செய்வது சரியான மோடிதனம். அந்த மஞ்சகாமாலை மருத்தை தான் சொல்றேன்



மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ஷாக்சிமாலிக்குக்கு அரசு பணி கொடுத்து ஊக்க தொகையும் கொடுத்திருப்பது வரவேற்றதக்கது. மத்திய அரசின் ஊக்கதொகை கொடுக்கப்போவதாக மோடி அறிவித்துள்ளாராம். அப்படியே விளையாட்டு துறை மேல் கொஞ்சம் அதிக கவனம் கொடுத்தாம் நலம். அட இங்க கூட ஒரு கவனம்.

ஒரு படம் பார்த்தா அதை செமையா ரசித்து பார்க்கனும்,. காட் ஃபாதர் முதல் பாகம் பார்த்துட்டு இரண்டாம் பாகம் பார்க்க நேரம் கிடைக்காம வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன். கிடைக்கும் கொஞ்ச இடைவெளியில்
குச்சுனா கஹோ, குச்சு பீனா கஹோன்னு 1942 லவ் ஸ்டோரி பாட்டு கேட்க சரியா இருக்கு!

#குவியல்
#நான்லீனியர்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin