தோழிக்கு!.....

நலமாய் இருப்பதாக இருவருமே நடித்துக்கொண்டிருப்பதால் சம்பிரதாயங்கள் தவிர்த்து நேராகவே விசயத்துக்கு வந்து விடுகிறேன்.

கடித தொடர்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஹாஸ்டலில் படிக்கும் காலத்தில் ஒன்று, இரண்டு என நம்பரிட்டு அப்பாவிற்கு ஒரே சமயத்தில் 5 கடிதம் வரை எழுதுவேன். அவசர உலகின் மாற்றமா அல்லது உடனுகுடன் பதில் தந்த குறுசெய்திகளின் அழுத்தமா தெரியவில்லை முன்னை போன்ற கடிதம் எழுதுவதே அலுப்பளிக்கும் செயலாகமாறிவிட்டது.

ஒரு மனிதருக்கு சகமனிதனே சலிப்புளிக்கும் காலத்தில் செயல்கள் சலிப்படைவது இயல்பு தானே, கடமைக்கு பேசுறோம், கடமைக்கு வேலை செய்யுறோம், கடமைக்கு காதலிக்கிறோம், கடமைக்கு குடும்பம் நடத்துறோம் என்றாகிவிட்டது இயந்திர உலகில்.

கவிதா சொர்ணவள்ளி என்ற தோழர்,  தோழர் குமரகுருபரனை காதலித்தார். குமரகுருபரன் சமீபத்தில் இறந்து விட்டார். ஆனால் இன்றும் தோழர் கவிதா சொர்ணவள்ளியின் நினைவுகூறுகள்களை பார்க்கும் பொழுது உன்னை போல் யாரும் காதலிக்க முடியாது என்ற வார்த்தை எனக்கு பொருத்தமா என சந்தேகம் வருகிறது. தோழர் குமரகுருபரன் மீது பொறாமை வருகிறது.  உயிரோடுயிருக்கும் போது... சும்மா சும்மா உங்கிட்டவே பேசிகிட்டு இருப்பாங்களா? உன்னையே பார்த்துகிட்டு இருந்தா சலிப்பா இருக்காதா? நீ என்ன சின்ன குழந்தையா என் முத்தானைய பிடிச்சிகிட்டே திரியிற என்று கூறும் காதலர்கள் வாழும் மத்தியில் இறந்த ஒருவரின் காதலுயுடன் அந்த நினைவுகளுடன் வாழும் தோழர் காதலின் உச்சமாகவே உயர்ந்து நிற்கிறார்.

சோக தருணங்களை நினைத்து மன அழுத்தம் ஏற்படுத்திக்கொள்ளாதே என நண்பர்கள் சொல்வார்கள், எனக்கோ சந்தோச தருணங்களை நினைத்தால் தான் விழிதிரை நீர்படலத்தில் மறைகிறது.

தனிமையே துணையாக வாழ உன் போல் மனதிடம் என்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அதில் காயப்பட எங்கே இடம் இருக்கிறது என்ற மனதில் தான் அந்த திடம் உருவாகும்.

என் வருத்தமெல்லாம் உன் காயத்திற்கு என்னால் மருத்தளிக்க முடியாமல் போய்விட்டதே என்று தான்....

1 வாங்கிகட்டி கொண்டது:

Tamizh Pudalva said...

அருமையான நினைவு,பகிர்வு

!

Blog Widget by LinkWithin