கேள்வியும் எனது புரிதல்களும்! - 1


கேள்விகளை இன்னும் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி!,
உங்கள் கேள்விக்கான எனது புரிதல்களை அளித்திருக்கிறேன், அவையே இறுதி பதில் அல்ல!


//கும்க்கி said...

தல.,

நீங்க நல்லவரா...இல்ல கெட்டவரா?
(சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி...மனசாட்சிப்படி பதில் சொல்லவும்)//

பொதுவான பார்வை என்ன?
நல்லது  செய்தால்  நல்லவர், கெட்டது செய்தால் கெட்டவர்.
டெபாசிட் செய்தவருக்கு வங்கி கொடுக்கும் வட்டி, கடன் வாங்கிய ஒருவர் வங்கிக்கு கொடுத்த வட்டி, செயல்கள் என்றும் ஒற்றைதன்மையில் முடிவதில்லை, ஒருவருக்கு நல்லது மற்றொருவருக்கு கெட்டதாக இருக்கலாம். நான் நல்லவனா, கெட்டவனா என ஆராய்வதை விட மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்!.

அகத்தில் நல்லவனாக நினைத்துக் கொண்டும், புறத்தில் கெட்டவனாக நடித்துக் கொண்டும் வாழ்வதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு தல!

*********************

பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?//


பதிவுலகம் எதற்காக உருவாக்கப்பட்டது என அறிவீர்களா!? உண்மையில் முழுக்க முழுக்க மொக்கைக்காக தான். பதிவுலகின் பரிணாம வளர்ச்சி தான் சமூகசிந்தனைகளை வெளிப்படுத்துதல், ஒரே மாதிரியான சுவை சில நேரங்களில் சலிப்பு தட்டுவது போல், மொக்கைகளும்.. ஏன் சில நேரங்களில் சீரியஸ் பதிவுகளுமே சலிப்பு தட்டிவிடும்!, இங்கே யாருக்கும் எதையும் வலிய திணிப்பதில்லை, அவரவர்க்கு தேவையானதை எடுத்து கொள்ளும் உரிமை அவரவர்க்கு உண்டு! மொக்கை போடுவதும் அவரவர் உரிமை, நடிக்காமல் அவருக்கு தெரிந்ததை செய்கிறார் என்ற முறையில் நானாக இருந்தால் பாராட்டுவேன், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

***************




இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க..//

இது எனக்காக கேள்வியா அல்லது உங்கள் பதிவின் விளம்பரமா!?
என் காதலிகள் யார் வீட்டிலும் குட்டை சுவர் இல்லாததால் ஏறி குதிக்க வேண்டிய வேலை இல்லாமல் போயிற்று!. 

****************

/உங்களையும் இந்த வியாதி தொத்திக்கிச்சா?/

உடற்கூறில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்ய உடல் செய்யும் போரே காய்ச்சல், ஆனால் நாம் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடுகிறோம்!, எது வியாதி!?

//எங்களை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலயா?//

பாவம், புண்ணியம் பார்த்தா தொழில் பண்ண முடியுங்களா!?


//உங்களால ராஜன் கெட்டாரா? இல்லை ராஜனால நீங்க கெட்டீங்களா?//

என்னால் ராஜனும், ராஜனால் நானும் நிறைய கற்றோம்!


(கறிய ரெண்டு நாள் வெளிய வச்சா கெட்டு போயிரும். 
பாலை ஒரு நாள் வச்சாலே கெட்டு போயிரும். 
எப்படி கெட்டமோ.......தெரிஞ்சும் தேடி வந்த நல்லவுக நீங்க. நல்லா இருங்க ஆத்தா !!
( கெட்டவங்க கூட்டத்தில நல்லவங்களா வந்து சேருவாய்ங்க ....?   ஒரு டவுட்டு ) )


//உங்களைப் பத்தி ஒரு கிசுகிசு கேள்விப்பட்டேனே? உண்மையா?//

உரக்க சொன்னால் மட்டும் உண்மையில்லை, சில உண்மைகள் கிசுகிசு பாணியிலும் பரவும்!

***********************




இன்னைய சந்தை நிலவரப்படி... ஒரு ஓட்டு என்ன விலை?//

நான் ஓட்டுக்கு காசு வாங்குவதில்லை, அதனால் சந்தை நிலவரம் தெரியவில்லை. எனக்கு தெரிந்து ஒரு ஓட்டின் விலை உரிமை, சுயமரியாதை!

//ஓட்டுக்கு காசு கொடுக்காத கட்சி ஆட்சி அமைக்குமா?//

வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்யும் மனிதர்கள் இருக்கும் வரை ஆட்சி அமையும் வாய்ப்பு உண்டு தானே!

//காசு வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டவனின் அடுத்த அய்தாண்டு நிலை என்னவா இருக்கும்?//

உரிமை மறுப்பு, சுயமரியாதை இழப்பு!

********************




டோண்டுவை காலி பண்ணி அவர் இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறீர்களா?

யோசிச்சுப் பாருங்க, இந்த மாதிரில்லாம் கேள்விகள் வரும். உங்களுக்குத் தேவையா :)//

அதான் நீங்களே கேட்டுடிங்களே,
டோண்டு பதிவிலேயே அவருக்கு வரும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிகிட்டு இருப்பேன் பார்த்ததுண்டா!,
பதிலை தேட கேள்விகள் தூண்டுவதால் எனக்கு கேள்விகள் பிடிக்கும். இந்த பதிவில் எனது பதில்களின் மூலம் புரிந்து கொண்டு நண்பர்கள் உச்சபட்ச தேடலை எனக்களிக்கும் கேள்விகளை எனக்கு வழிக்கு ஒளிகாட்டியாக தருவார்கள் என நம்புகிறேன்!

//ரெண்டையும் ரெண்டையும் கூட்டினாலும் நாலுதான் வரும், பெருக்கினாலும் நாலுதான் வரும். ஆனா மூணையும் மூணையும் கூட்டினா ஆறு வரும், பெருக்கினா ஒம்பது வரும். இதுதான் சார் வாழ்க்கைன்னு யாராச்சும் உங்ககிட்ட தத்துவம் சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?//

நீங்க ரொம்ப புத்திசாலியாக இருக்கிங்க, உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு, அது இருக்கட்டும் உங்க ப்ராண்ட் ”ரம்” தானே என கேட்பேன்!




உங்களுக்குப் பிடிச்ச கதாநாயகி, கதாநாயகன், அரசியல் தலைவர் யார் யார்னு பட்டியல் போட முடியுமா?//

வந்த கேள்விகளிலேயே என்னை அவமானபடுத்தும்(நன்றி-சாரு) கேள்வியாக இதை நினைக்கிறேன், இருந்தாலும் என் பாணியில் பதில் சொல்வது தானே முறை!

கதாநாயகி- என் காதலி

கதாநாயகன் - நான் தான்

அரசியல் தலைவர் - அதுவும் நான் தான்!
சுயபுத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவன் சார்ந்த, அவனை சூழ்ந்த அரசியலில் தலைவன் தான், எவனொருவன் தனக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொள்கிறானோ அவன் தன்னை தலைவன் எனச்சொல்லும் தகுதியை இழக்கிறான்!




கொஞ்சம் ‘ஏ’டாகுடமான கேள்விகளையும் இங்கேயே கேட்கலாமா இல்லை தனிமடலில்தான் கேட்க வேண்டுமா?//

பதில் சொல்ல நான் தயாராக இருக்கும் பொழுது கேள்வி கேட்க உங்களுக்கு ஏன் தயக்கம் தல!




உங்க வாழ்க்கையில் நீங்க எதைப் பெரிய சாதனையாக நினைக்கறீங்க?//

வாழ்ந்து கொண்டிருப்பதை!

******************




என்னடா பதிவு எழுத வந்தோம் என எப்பொழுதாவது நினைத்ததுண்டா?//

குழந்தையாக இருக்கும்பொழுது நினைத்ததுண்டு!


இதான் குழந்தையா இருக்கச்ச எழுதிய அந்த பதிவு!




நீங்கள் ஏன் உங்களை இளமையாக காட்ட "டை" பயன்படுத்துவதில்லை..//

இளமையாக இருப்பவன் அதை ஏன் காட்ட வேண்டும்!?
(என் காதலிக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது)





உங்களுக்கு பிடித்த அமைச்சர் எ.வ.வாலுவா சாரி எ.வ.வேலுவா?//

யாரு வேலு!?




வால் பையன் - ஏன் இன்னும் வளரவே இல்லை.. (பெயரில்)

வருசத்துக்கு ஒருமுறை பெயர் மாத்திகிவிங்களா தல!?

*********************




நீங்க சரக்கடிக்க உட்கார்ந்தா எத்தனை ரவுண்ட் அடிப்பீங்க?
ஓசில சரக்கடிச்சது உண்டா?
சரக்கை சுட்டு(திருடி) குடித்த அனுபவம் உண்டா?//

ரவுண்ட், சதுரம், செவ்வகம்னு பல டிசைன்ல பல்டி அடிப்பேன், அதுக்கு முன்னாடி நான் ஏகப்பட்ட குஷியில் இருக்கனும்.

என் பாக்கெட்டில் இருக்குறதெல்லாம் என் காசுன்னு நினைச்சிங்களா, நான் எப்பவுமே உலகை சார்ந்து இயங்குபவன் தான். எல்லாமே எனக்கு ஓசியா தான் கிடைக்குது!

இவ்வுலகில் எதையும் யாரும் திருட வேண்டிய அவசியமில்லை, பொருள் சார்ந்த சமூக குணத்தில் வாழ்பவர்களுக்கு தான், இது என்னுடயது, அது உன்னுடயது, எனக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை உண்டு! நான் ஏன் திருடி சாப்பிடனும்!?

***********************************
மீதி கேள்விகளுக்கான எனது புரிதல்களை நாளை இடுகிறேன்!




படம் உதவி


23 வாங்கிகட்டி கொண்டது:

sathishsangkavi.blogspot.com said...

என் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி...

அடுத்த கேள்வி பதிலில் சீரிசான கேள்விகளாக கேட்கப்படும் தயாரா இருங்க..

sathishsangkavi.blogspot.com said...

..இவ்வுலகில் எதையும் யாரும் திருட வேண்டிய அவசியமில்லை, பொருள் சார்ந்த சமூக குணத்தில் வாழ்பவர்களுக்கு தான், இது என்னுடயது, அது உன்னுடயது, எனக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை உண்டு! நான் ஏன் திருடி சாப்பிடனும்!?..

அருண் நான் கேட்கவந்தது பசங்க குரூப்பா சரக்கடிக்கும் போது ஒரு கோட்டரை எடுத்து பின்னாடி வைத்திடுவோம் அப்புறம் அது எனக்கு உனக்கு என பேசிக்கொண்டு இருக்கும்போதே யாரும் பாக்கா வன்னம் ராவா அடிக்கிறது இந்த வகை அனுபவங்களைக்கேட்டேன்..

வால்பையன் said...

//அருண் நான் கேட்கவந்தது பசங்க குரூப்பா சரக்கடிக்கும் போது ஒரு கோட்டரை எடுத்து பின்னாடி வைத்திடுவோம் அப்புறம் அது எனக்கு உனக்கு என பேசிக்கொண்டு இருக்கும்போதே யாரும் பாக்கா வன்னம் ராவா அடிக்கிறது இந்த வகை அனுபவங்களைக்கேட்டேன்.. //


நான் ராவாகவும் அடிச்சதில்ல, மறைச்சு வச்சும் அடிச்சதில்ல தல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

raittu

சக்தி கல்வி மையம் said...

பதிவுலகம் இதுவரை சாதித்தது என்ன?

பதிவுலகினால் யாருக்கு நன்மை?

பதிவுலகம் ஒருவித போதை தானே?

abbeys said...

பங்குச்சந்தை தொடர்பான ப்ளாக் ஐ நிறுத்தியது ஏன் ?. தொடர்ந்தால் என்னை போன்றவர்களுக்கு உதவி ஆக இருக்கும் அல்லவா

krishnakrishna said...

நண்பா உங்களுக்கு பிடித்த பத்து தமிழ்புத்தகம் எது?

மங்குனி அமைச்சர் said...

இப்ப நான் உங்க கிட்ட எந்த கேள்வியும் கேட்கலைன்னா , அப்புறம் எனக்கு நீங்க எப்படி பதில் சொல்லுவிங்க ???

Ashok D said...

very Interesting (especially ans of jyov's)
Keep answering
uuuuuuuuuuu ROCKS MAN

HITTTTTTTTTTTTTTTT

செல்வா said...

அண்ணா என்னோட கேள்விக்கு பதில் சொல்ல மறந்திடாதீங்க ..

MANO நாஞ்சில் மனோ said...

என்னைய்யா இன்னைக்கு எங்கே போனாலும் கேள்வி பதிலா இருக்கே ஏன்?

Anonymous said...

அருண் வால்பையனிடம் கேட்க நினைக்கும் கேள்வி என்ன??? அதற்கான வால்பையனின் பதில் என்ன??

அருள் said...

டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

பிரதீபா said...

ஒரு ரூபா அடுத்தவங்கள நாம ஏமாத்தினா, நமக்கு வேற எதுலயாச்சும் ரெண்டு ரூபா எமாந்துருவோம்- இது எந்த அளவுக்கு உண்மை? உங்க சொந்த அனுபவம் ஏதும் உண்டா?

Sridhar's Spot said...

தல கலக்குறிங்க good Start keep it up.

Unknown said...

வால்,

டிசம்பர் நாலாம் தேதி மெனக்கெட்டு உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன். படிச்சீங்களா?
ஆமெனில் ஏன் ஒரு வார்த்தை பதில் கூட அனுப்பவில்லை? இல்லையெனில், ஏன் படிக்கவில்லை?

:))

MOON_LIGHT said...

தம்பி ரொம்ப நல்லா ஆடினேப்பா... அப்படியே எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாய் காப்பி தண்ணீ குடிச்சுட்டு போனீன்னா எனக்கு பெருமையா இருக்கும்பா....

முகவை மைந்தன் said...

ஓ, உங்களையும் கேள்விக்கலாமா? (முயலலாமா முயற்சிகலாமான்ன மாதிரி). கொள்கைன்னா என்ன? உயர்ந்த கொள்கைன்னா எம்புட்டு உசரம்?

sriram said...

//மீதி கேள்விகளுக்கான எனது புரிதல்களை நாளை இடுகிறேன்!//

எங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை?
நாங்க செஞ்ச குத்தம்தான் என்ன?
எங்களைப் பாத்தா பாவமா இல்லையா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பழமைபேசி said...

ஏன் என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கூறவில்லை??

சி.பி.செந்தில்குமார் said...

haa haa hஆஹா கலக்கல்

ரவி said...

கேட்பவன் கேனையாக இருந்தால் என்ன செய்வது ? இது தான் கேள்வி.

Kumky said...

அகத்தில் நல்லவனாக நினைத்துக் கொண்டும், புறத்தில் கெட்டவனாக நடித்துக் கொண்டும் வாழ்வதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு தல!


யாருக்கு..?

!

Blog Widget by LinkWithin