ரவியண்ணே கொஞ்சம் ப்ரேக் விடுங்க!


நண்பர் ஜீவ்ஸ் விட்ட பஸ் இது.

முதலில் ரவியண்ணன் பற்றி சில தகவல்கள்.

அவுங்கப்பா ஒரு ரிட்டயர்டு புரபஸர், ரவியண்ணன் ஈரோட்டில் கேபிள் நடத்தி கொண்டிருந்த போது எனக்கு பழக்கம், ஆதியிலேயே டெக் வைத்து கேபிள் போட்ட காலத்திலிருந்து கேபிள் நடத்தியவர் பின் அதை விற்று விட்டு கிளம்பிவிட்டார், அவர் ஒரு இயற்கை விரும்பி, வனப்பிரியர். கோவையில் இருக்கும் மேல்முடி என்ற மலையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.

நீள்வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சூரியனில் இரண்டு முறை குளிர்காலமும், இரண்டுமுறை வெப்பகாலமும் வரவேண்டுமே என எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தவர், இரண்டு அங்குல பி.வி.சி பைப் துண்டுகளை வைத்து டெலஸ்கோப் செய்து சிறுவயதில் எங்களை அசத்தியவர். இன்று அவர் நம்பும் ஒன்றை புரியவைக்க மிகவும் கடினப்படுகிறார்!

பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் அவரது புரிதல்கள் பற்றி பதிவாய் எழுத, அவரது கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் அது எனக்கு புரிந்திருந்ததே அதற்கு காரணம்!
அவரது கருத்தை எனது புரிதலில் சொல்ல வேண்டுமானால் “ஒரு மரம் சாய அதிலிருந்த குருவி கூடு தான் காரணம் என்கிறார்” . கேயாஸ் தியரி மாதிரி என்றேனும் ஒருநாள் என்னுடய புரிதல் தவறு என்றோ, அல்லது அதற்கு வேறு விளக்கமோ அவர் சொல்லக்கூடும், மேலும் அவரது புரிதல்களை விளக்குவது பதினான்கு ரீல் படத்தில் இடையில் ஒரு ரீல் மட்டும் காட்டுவது, அதை புரிந்து கொள்வதற்கு என்னை போல் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்க வேண்டும்!

என்னுடய புரிதல்களை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்!
அதற்கு முன் சில முன்கதை சுருக்கங்கள்!


சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை, நமக்கு பின் இருக்கும் செவ்வாய் கிரகம் பூமியை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடயது என்பதை இவ்விடத்தில் நியாபகபடுத்துகிறேன்!


பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பூமியை சுற்றி பரந்த தூசி படலம் சூழ்ந்தது, சூரியனின் வெப்பம் நேரடியாக தாக்க முடியாமல் பூமி குளிர்ந்தது, இறுக்குநிறை கொள்கையின் படி குளிர்ந்த பூமியின் எடை கூடியவுடன் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமானது, பூமியை சுற்றிய ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஒன்றினைது நீராக உருவெடுத்தது, தொடர்ச்சியான மழை பூமியை மேலும் குளிர்வித்தது.

அணுவின் உட்கருவாக நியூட்ரான், தன்னை தானே பெருக்கிக்கொள்ளும் நியூக்கிளியஸாக மாறிய தற்செயல் நிகழ்வு பிரபஞ்ச வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது(அதை பற்றி யாரும் ஆராய்ச்சி பண்றாங்களா தெரியாது). ஊடுருவிய சூரியஒளியை பயன்படுத்தி பச்சையம் மூலம் ஒளிச்சேர்கை செய்து ஆக்சிஜனை வெளிவிடும் தாவரங்கள் முதலில் தோன்றின, ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து தொடர்ச்சியான மழையை பூமியில் உருவாக்கின!ஒருகாலத்தில் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் உள்ளிருக்கும் அவுட்டர்கோரில் ஏற்பட்ட அழுத்தவிசையின் காரணமாக எரிமலைகள் தோன்றி புது புது தீவுகளை உருவாக்கின, தற்போதிருக்கும் நிலப்பரப்பு தோன்றியது, தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஆவியாதல் வினை நிலப்பரப்பில் மழையாக பெய்தது, ஆறுகளாக அடித்து செல்லப்படும் நீரில் மண்ணில் இருக்கும் உப்புகள் பல கோடி ஆண்டுகளாக கடலில் போய் சேர்ந்தது(கவனிக்க - எந்த வேதத்திலும் கடல் உப்பு நீராகவே படைக்கட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, அப்படியே படைத்திருந்தாலும் அது ஏன் என்ற காரணமும் இல்லை).இதிலிருந்து ரவியண்ணன் என்னிடம் சொன்னதின் என் புரிதல்

வெப்பம் குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் உறைநிலையை அடைந்தது,  இது எல்லாருக்கும் தெரிந்த அறிவியல் விதி, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும். வட தென் துருவங்களில் சேர்ந்திருக்கும் தொடர்ச்சியான பனிபடலங்கள் பூமியின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்கிறது என்பது அவரது வாதம், நிலப்பரப்பில்லாத வடதுருவ ஆர்டிக் பிரதேசத்திலும் அதே நிலை அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்(இங்கே தான் நான் முதன்முதல் முரண்பட்டேன்).

அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது, அதாவது குளோபல் வார்மிங் காரணமக பூமி வெப்பமடையவில்லை, குளிர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறார். பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.

 உதாரணமாக அழுத்தம் காரணமாக அதாவது ஒரு கால்பந்தின் மீது காலை வைத்து அழுத்தினால் அதன் விரிவு விசை நடுப்பகுதில் செயல்படும் என்பது போல் பூமி தட்டுகள் நகர்ந்து பூகம்பத்தையும்(சுனாமி) எரிமலையையும் உருவாக்குகிறது என்கிறார்!

இது உண்மையாகவே இருந்தாலும் இதை எப்படி தடுக்கப்போகிறார் என்று என்னிடம் சொன்னதில்லை, இவர் முனிசிபால்டி வாட்ச்மேனிலிருந்து நாசா விஞ்ஞானி வரைக்கும் அனுப்பிய மடல்களுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை, ஆனால் பாவம் மனுசன் தனியா கத்திகிட்டே இருக்கார்.

அவர் சொன்னதிலிருந்து எனது புரிதல்களை எழுதியிருக்கேன், இதில் அவருக்கு மாற்று கருத்தும் இருக்கலாம், அதை அவரே வந்து விளக்கி சொன்னால் தான் ஆயிற்று!, இது தான் பிரச்சனை என்றால் இதற்கான தீர்வையும் அவர் தான் சொல்ல வேண்டும்!

***************

ரவியண்ணன் உலக விஞ்ஞானிகளுக்கு விடுத்துள்ள அறைக்கூவல்

அண்ணா, ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்திங்க, இன்னைக்கு எழுதிட்டேன் சந்தோசமா!

81 வாங்கிகட்டி கொண்டது:

K.MURALI said...

ரவி அண்ணன் தியரி.
:)

உண்மை said...

//, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும்//

தப்பான வாதம். இந்த சுட்டியை பார்க்கவும்.

http://science.howstuffworks.com/nature/climate-weather/atmospheric/road-salt.htm

ப.கந்தசாமி said...

தலை சுற்றுகிறது. இன்னும் நல்லாப் படிச்சுட்டு அப்புறம் புரிஞ்சுதுன்னா கருத்து சொல்றேன்.

pseudo science அப்படீன்னு ஒண்ணு உண்டு. இதுதான் அதுவான்னு சந்தேகமா இருக்கு. படிச்சுட்டு சொல்றேன்.

வால்பையன் said...

//, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும்//

தப்பான வாதம். இந்த சுட்டியை பார்க்கவும்.

http://science.howstuffworks.com/nature/climate-weather/atmospheric/road-salt.htm

*****

அண்ணே, இது நான் சொன்னது அல்ல, ரவியண்ணன் சொன்னது!

நீச்சல்காரன் said...

//இறுக்குநிறை கொள்கையின் படி குளிர்ந்த பூமியின் எடை கூடியவுடன் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமானது//
இப்படி ஒரு கொள்கையை விளக்கும் சுட்டியிருந்தால் கொடுங்களேன். எனக்குத்தெரிந்து எடை மாறாது.

நீச்சல்காரன் said...

//அண்ணே, இது நான் சொன்னது அல்ல, ரவியண்ணன் சொன்னது!//
rightu

Santhini said...

http://www.enchantedlearning.com/subjects/astronomy/planets/earth/Oceans.shtml


The oceans are about 3.5% salt (by weight). Salinity is generally reported in terms of parts per thousand (abbreviated o/oo), the number of pounds of salt per 1,000 pounds of water; the average ocean salinity is 35 o/oo.

The saltiest water is in the Red Sea and in the Persian Gulf, which have a salinity of about 40 o/oo (due to very high evaporation rates and low fresh water influx). The least salty seas are in the polar regions, where both melting polar ice and a lot of rain dilute the salinity.

Santhini said...

தமிழில் ...
துருவபகுதிகளில் உள்ள கடல் நீரின் உப்புத்தன்மை குறைவு. உருகும் பனி மற்றும் அதிக மழை யின் காரணமாக இது நிகழ்கிறது.
அப்படி இருக்கும்போது அதிக உப்புத்தன்மை அதிக பனிக்கட்டிகளை உருவாக்குகிறது என்பது, அடிப்படை உண்மைக்கு வெகு வெகு முரணான வாதம்.
அடிப்படை விளக்கம் கூட அளிக்க முடியாத ரவி -அண்ணன் என்பவரையும் மதித்து போஸ்ட் எழுதிய வால் பையனின் பெரிய மனதுக்கு ........பாராட்டுக்கள் .

Rajan said...

செந்தழல் ரவிய சொல்றீங்களோ! என்னவோ ஏதோனு வந்தேன்! அடப்போங்கய்யா! புள்ள குட்டிய படிக்க வைங்க!

எல் கே said...

சத்தியமா புரியலை வால்

சி.பி.செந்தில்குமார் said...

ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி ... இருக்கு

வெண்பூ said...

//
அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது,
//

என்ன கொடுமை சார் இது? அதிக பனிக்காலத்துல அமெரிக்காவோட five great lakes உறைஞ்சிடும். ஆனா கடல் உறையாது, ஏன்னா கடல்ல இருக்குற உப்புதான் காரணம்.

துருவப்பகுதிகளில் இருக்குற தண்ணி உப்பு இல்லாம இருக்குறதுக்கு காரணம் அங்க இங்க நடக்குற ப்ராசஸ் நடக்குறதே இல்லை (ஆறுகள் முலமா உப்பு சேர்றது).

என்னவோ போங்க. இப்பக்கூட பாருங்க, நீங்க இவ்ளோ தெளிவா எழுதி இருக்குறதுனாலதான் பேசவோ செய்யுறோம். அவரு வந்து ஒவ்வொரு வரியில “உப்புதான் காரணம்”னு சொன்னா கடுப்பாகுதுல்ல.

வெண்பூ said...

For Followup

வால்பையன் said...

//இப்பக்கூட பாருங்க, நீங்க இவ்ளோ தெளிவா எழுதி இருக்குறதுனாலதான் பேசவோ செய்யுறோம். அவரு வந்து ஒவ்வொரு வரியில “உப்புதான் காரணம்”னு சொன்னா கடுப்பாகுதுல்ல. //


இப்பவும் அவர் இதை தான் சொல்லிகிட்டு இருக்கார்!, துருவபகுதிகளில் உள்ள உப்பின் அளவை பற்றி அப்பொழுது தெரியாது என்றாலும், எனக்கு எதோ ஒன்று முரண்பட்டு கொண்டே இருந்தது, அதை நானும் எனது பாஸ் கார்திக்கும் பலமுறை அவரிடம் கேட்டிருக்கோம்!

இவரது இந்த கருத்துகள், சில ஆன்மீக புத்தகத்தின் வாயிலாக வந்திருக்கோ என எனக்கு சந்தேகம் உண்டு, இவர் தீவிர கடவுள் பக்தர், எங்கேயோ தன்னை பூமியை காக்க வந்த வந்த அவதாரம் என சொல்லி கொண்டதாக கேள்வி, நான் இன்னும் அதை படிக்கவில்லை!

ரவியண்ணன் என்ன சொன்னாலும் சின்ன வயசுல இருந்து அவரை நான் அண்ணன் மாதிரி தான் பாக்குறேன், கருத்து வேறுபட்டாலும் அதில் எந்த குறையும் இருக்காது, பஸ்ஸில் கோபமாகி சிலர் பேசியது இங்க பேசற அளவுக்கு போகாதுன்னு நினைக்கிறேன்!

வெண்பூ said...

வால்,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இப்ப நீங்களும் ராஜனுமே கூட நாத்திகம் சும்மா பேசாம அது சம்பந்தப்பட்ட ஆதாரங்களோட பேசுறீங்க. ஆத்திகம் பேசுறவங்க அவங்க சம்பந்தப்பட்ட ஆதாரங்களோட பேசுறாங்க. ஒரு வாசகனா அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

ரவி சாரோட கருத்துகள் சரியில்லாததா இருக்கலாம், ஆனா அவர் அதை தெளிவா விளக்கினால் ஒழிய பாக்குற எல்லாருக்கும் அவர் சொல்றது முட்டாள்தனமாத்தான் தெரியும். அந்த பஸ்லயே பார்த்திருப்பீங்க அவர் திரும்ப திரும்ப சொல்றது எல்லாம் “என் வீடியோ பாருங்க” “உப்புதான் காரணம்” “விஞ்ஞானிகள் முட்டாள்கள்” இவ்ளோதான்.

அவர் உங்கள் நண்பர் என்றால் அவர்ட்ட சொல்லுங்க. எந்த கருத்துகளையும் கேட்க, ஆரோக்கியமா விவாதிக்க வலையுலகம் ரெடியாவே இருக்கு. ஆனா சரியான முறையில வெளிப்படுத்தப்பட வேண்டும்.

வால்பையன் said...

//ஆரோக்கியமா விவாதிக்க வலையுலகம் ரெடியாவே இருக்கு. ஆனா சரியான முறையில வெளிப்படுத்தப்பட வேண்டும். //

வெண்பூ!

பலவருசமாக நாங்களும் கேட்டுகிட்டு தான் இருக்கோம்!, ஒருவேளை விசயகாந்த் மாதிரி சொன்னா காப்பி அடிச்சிருவாங்கன்னு பதுக்கி வச்சிருக்காரோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டியது கட்டாயம் என அறிந்து,

அண்ணே சும்மா கட்டுரையா எழுதாதிங்க, கேள்விகளுக்கு தனிதனியா பதில் சொல்லுங்க, அப்ப தான் எல்லாருக்கும் புரியும்னும் சொல்லிட்டேன், ஏன் பண்ண மாட்டிங்கிறார்னு தெரியல!

துளசி கோபால் said...

ஐயோ......எல்லா துயரத்துக்கும் காரணம் உப்புதானா!!!!!!!!

வால்பையன் said...

//எனக்குத்தெரிந்து எடை மாறாது.//

ஒரு பொருளின் எடை, பூமியில் ஒருமாதிரியும், சந்திரனில் ஒருமாதிரியும் அதே போல் மற்ற கிரங்களில் ஒவ்வொரு மாதிரியும் இருப்பது உண்மை என்று நீங்கள் ஒப்பு கொண்டால் என்னிடம் சுட்டி கேட்க மாட்டீர்கள்.

சில கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஒருநாள் என்பது 68 மணிநேரம் என்பது உங்களுக்கு தெரியுமா? அவ்வளவு மெதுவாக சுற்றி கொண்டிருந்தது.

அஞ்சா சிங்கம் said...

மிகவும் தவறான வாதம் ....... அவருக்கு பூமியின் மைய கருவை பற்றியும் தெரியாது என்று நினைக்கிறேன் .......

suneel krishnan said...

இப்படிதான் எனக்கு வேதியல் நடத்திய வாத்தியார் ஒருவர் சொன்னார் - நிலவு சூரியனை விட தொலைவு என்று ,எங்களிடம் சொன்னால் பரவா இல்லை ,சொன்னது பிர்லா கொளரங்கத்துல..அதுக்கு உஷ்ணம் குளிர்ச்சின்னு சில தத்துவ விளக்கங்கள் காரணமா சொன்னாரு ..நாங் கேட்டோம் நிலவுக்கு மனுஷன் போயிட்டு வந்துட்டானே அப்புறம் என்னனு ,அதுக்கு அவரு சொன்னாரு - நாம பாக்குற நிலவுல அவன் காலடி வெச்சான்னு என்ன ஆதாரம்னு ..தெரிஞ்சு பேசுறாரா தெரியாம பெசுராரானு புரியாம வந்துட்டோம் ,இது நடந்தது நான் பதினொன்னாவது படிக்கும் பொழுது ,அவரு msc படிச்சவர் ..
ரவி அவர்களயும் சரி ,இவரையும் சரி நான் பாராட்டுவேன் -இது தவாறான கோட்பாடாகவே இன்றைக்கு பட்டாலும் ,இதை நம் கல்விமுறை மீறி அவராக பெற்ற சிந்தனை -அதை தயங்காமல் கூறுகிறார் என்பதால் ,இத்தகைய தனி சிந்தனைகள் மலர்தல் நன்றே

MANO நாஞ்சில் மனோ said...

என்னமோ போங்க....

vinthaimanithan said...

வாலு, பூமியின் எடை என்பது எப்போதுமே மாறாததுதான். ஏனெனில் எடை என்பது ஈர்ப்புவிசை சார்ந்த ஒன்று. பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக இருப்பதால் இங்கு ஒரு பொருளின் எடை அதிகமாகவும், நிலவின் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால் அதில் எடை குறைவாகவும் இருக்கும். ஆனால் பூமியானது இறுகி இருந்தால் அதன் அடர்த்தி அதிகரித்து இருக்கும், அடர்த்தி அதிகரித்தால் நிறை அதிகரிக்கும், ஈர்ப்புவிசையும் அதிகரிக்குமென்று எண்ணுகிறேன். நீங்கள் நிறையையும் எடையையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்றெண்ணுகிறேன்.

வால்பையன் said...

//நீங்கள் நிறையையும் எடையையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். //

இரண்டும் ஒன்று தான் என்று எண்ணி தான் அவ்வாறு எழுதினேன், இல்லையா!?

மாத்தி/மாறிக்கிறேன் தல!

vinthaimanithan said...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88

இதை ரெஃபர் பண்ணுங்க தல

வால்பையன் said...

//நிறை என்பதை எடை (weight) என்பதற்கு இணையாக ஈழத்தில் பயன்படுத்துகிறார்கள்.//


அதே தான் :)

ராவணன் said...

ரவியண்ணா என்றவுடன் மருதத்தில் படித்த மேட்டர் கதை நினைவிற்கு வருகின்றது.

இந்த ரவியண்ணா வேறா?

அருள் said...

// //அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது, அதாவது குளோபல் வார்மிங் காரணமக பூமி வெப்பமடையவில்லை, குளிர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறார். பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.// //

மிகத்தவறான கருத்து.

1. வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி அதிகரிப்பதால்தான் பூமியின் மேற்பரப்பு வெப்பம் ஆண்டுக்காண்டு அதிகமாகி வருகிறது. இதற்கும் உப்பிற்கும் தொடர்பில்லை. பூமி குளிர்வதாக சொல்வது தவறு

2. துருவப்பகுதி பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் உப்பின் அடர்த்தி குறையத்தான் வாய்ப்பு உண்டு. கடல்நீரின் உப்பு அடர்த்தி குறைந்தால், Ocean current என்கிற கடல்நீர் சுழற்ச்சி பாதிக்கும். இப்போது குளிர்ப் பகுதிக்கு வெப்பத்தையும், வெப்பப் பகுதிக்கு குளிரையும் இடமாற்றம் செய்வது Ocean currentதான்.

ஒருவேளை கடல் உப்பளவு குறைந்தால் அதனால் Ocean current பாதிப்படைந்து ஐரோப்பிய நாடுகள் பனியில் உறைந்தும், இந்தியா போன்ற வெப்ப நாடுகள் மிக அதிக வெப்பத்தால் வெந்து போகவும் வாய்ப்பு உண்டு

பொன் மாலை பொழுது said...

//பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.//

இந்த உப்புக்கள் எல்லாம் முன்னரே பூமியில் இருந்தவைதானே? வெளியில் இருந்து வேற்று கிரங்களில் இருந்து வரவில்லையே?
சரி, இப்படி சேர்ந்த உப்பை எங்கே எடுத்துசென்று கொட்டுவது என்று கேட்டீர்களா?
மேலும் துருவப்பகுதிகளில் உப்புக்கள் சேர சான்சே இல்லையே வால்?? அப்பகுதிகளில் நீர் உப்பு இல்லாமல் இருபதாலேயே அவைகள் பனிக் கட்டிகளாக உள்ளனன என்பது அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு புரியுமே!

பொன் மாலை பொழுது said...

One of the most famous equations in physics, E=mc^2, actually tells us another way for total mass to change.
Albert Einstein put forth the idea that matter and energy are just different forms of the same thing.
Matter can be changed to energy, and vice versa. It doesn't happen much on Earth,

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பாலா said...

ரவிக்கு முதல் தேவை.. ஒரு நல்ல டாக்டர். ஒரு நண்பர்ங்கற முறையில் அதுக்கு என்னப் பண்ண முடியும்னு பாருங்க.

jothi said...

அட்ட‌காச‌மான‌ ப‌டைப்பு, நல்ல‌ப‌திவை எடுக்க‌ எடுத்த‌ முய‌ற்சிக்கு பாராட்டுக்க‌ள்

jothi said...

//சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை,//

நீர் வேண்டுமானால் ஆக்ஸிஜ‌ன் தேவை. ஆக்ஸிஜ‌னை விட‌ ஹைட்ர‌ஜ‌ன் மிக‌ மிக‌ அதிக‌மாக‌ இருப்ப‌தாலும், நீர் த‌ரும் அள‌விற்கு ஆக்ஸிஜ‌ன் இல்லாத‌தாலும் ம‌ற்ற‌ கோள்க‌ளில் நீர் சொல்லும் அள‌விற்கு இல்லை. 18 கிலோ நீர் த‌ருவ‌த‌ற்கு 2 கிலோ ஹைட்ர‌ஜ‌னும், 16 கிலோ ஆக்ஸிஜ‌னும் தேவை. பூமியில் வாயு நிலையில் இன்னும் 21% ஆக்சிஜ‌ன் இருக்கிற‌து. மேல‌ சொன்ன‌ வாத‌ம் ஒத்துவ‌ர‌வில்லை

வால்பையன் said...

//நீர் வேண்டுமானால் ஆக்ஸிஜ‌ன் தேவை. ஆக்ஸிஜ‌னை விட‌ ஹைட்ர‌ஜ‌ன் மிக‌ மிக‌ அதிக‌மாக‌ இருப்ப‌தாலும், நீர் த‌ரும் அள‌விற்கு ஆக்ஸிஜ‌ன் இல்லாத‌தாலும் ம‌ற்ற‌ கோள்க‌ளில் நீர் சொல்லும் அள‌விற்கு இல்லை. 18 கிலோ நீர் த‌ருவ‌த‌ற்கு 2 கிலோ ஹைட்ர‌ஜ‌னும், 16 கிலோ ஆக்ஸிஜ‌னும் தேவை. பூமியில் வாயு நிலையில் இன்னும் 21% ஆக்சிஜ‌ன் இருக்கிற‌து. மேல‌ சொன்ன‌ வாத‌ம் ஒத்துவ‌ர‌வில்லை //


பூமியில் ஆக்ஸிசன் அதிகமாக தங்க அதன் தட்பவெப்ப நிலையே காரணம் என்று தான் சொல்லியிருக்கிறேன்!, மேலே நான் எந்த வாதமும் செய்யலைங்க!

jothi said...

//(கவனிக்க - எந்த வேதத்திலும் கடல் உப்பு நீராகவே படைக்கட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, அப்படியே படைத்திருந்தாலும் அது ஏன் என்ற காரணமும் இல்லை//

என்ன‌ த‌ல‌‌,.. நீங்க‌ளே முத‌ல்ல‌ வேத‌ங்க‌ள் எங்க‌யும் இல்ல‌ன்னு சொல்றீங்க‌, அப்புற‌ம் ப‌டைத்திருக்கிற‌து, ஏன் என்ற‌ ஆதார‌ம் இல்லைன்னு சொல்லிறீங்க‌,.. ஒரே கொய‌ப்ப‌மா இருக்கு,..

வேத‌ங்க‌ள் ந‌ம‌க்கு ரொம்ப‌ தூர‌ம்,.. ஏதோ பாத்து சொல்லுங்க‌

வால்பையன் said...

//என்ன‌ த‌ல‌‌,.. நீங்க‌ளே முத‌ல்ல‌ வேத‌ங்க‌ள் எங்க‌யும் இல்ல‌ன்னு சொல்றீங்க‌, அப்புற‌ம் ப‌டைத்திருக்கிற‌து, ஏன் என்ற‌ ஆதார‌ம் இல்லைன்னு சொல்லிறீங்க‌,.. ஒரே கொய‌ப்ப‌மா இருக்கு,..

வேத‌ங்க‌ள் ந‌ம‌க்கு ரொம்ப‌ தூர‌ம்,.. ஏதோ பாத்து சொல்லுங்க‌ //


படைப்புவாத கொள்கை பொய் என சொல்லவே அப்படி சொன்னேன், நான் எங்கே வேதங்கள் அனைத்தும் உண்மை என்று சொன்னேன்!

jothi said...

//சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை, நமக்கு பின் இருக்கும் செவ்வாய் கிரகம் பூமியை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடயது என்பதை இவ்விடத்தில் நியாபகபடுத்துகிறேன்!//

//பூமியில் ஆக்ஸிசன் அதிகமாக தங்க அதன் தட்பவெப்ப நிலையே காரணம் என்று தான் சொல்லியிருக்கிறேன்!, மேலே நான் எந்த வாதமும் செய்யலைங்க//

கொஞ்ச‌ம் தெளிவான‌து மாதிரி இருந்துச்சு,.. இப்ப‌ இன்னும் குழ‌ப்ப‌மாயிருச்சு,.. வ‌ர்ரேன் த‌ல‌

jothi said...

//படைப்புவாத கொள்கை பொய் என சொல்லவே அப்படி சொன்னேன், நான் எங்கே வேதங்கள் அனைத்தும் உண்மை என்று சொன்னேன்!//

வேத‌ம்னாலே என‌க்கு கொஞ்ச‌ம் உத‌ற‌ல் எடுக்கும்(ஒரே ம‌ர்ம‌ தேச‌ம் இல்லையா). இந்த‌ வேத‌ம் டாப்பிக் என‌க்கு சுத்த‌மா தெரியாது,..

ந‌ல்ல‌ ப‌திவை த‌ந்த‌திற்கு ந‌ன்றி த‌ல‌

Sukumar said...

புரியறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு பாஸ்.. ஆனா நல்ல பதிவுன்னு மட்டும் நல்லா புரியுது பாஸ்..

Anonymous said...

ம்...இன்னொரு தடவ படிக்கிறேன்....அறிவியல் பாடம் எனக்கு அலர்ஜி

RAVI said...

அன்பு தம்பி வால்ஸ்க்கு நன்றி.

உங்கள் புரிதல் என்னோட தியரில இருந்து ரொம்ப மாறுபட்டுருச்சு.
அஞ்சு வருடம் ஆச்சில்லயா.
பரவால்ல என்னோட விளக்கங்கள் பாருங்க.

www.ravidaa.blogspot.com

அக்கப்போரு said...

நல்ல தியரி ........

அண்ணே, இது நான் சொன்னது அல்ல, ரவியண்ணன் சொன்னது!
சே , பெறவி ப்லாக்கருங்க நீங்க

jothi said...

//பரவால்ல என்னோட விளக்கங்கள் பாருங்க.//

பார்த்தேன்,ஆனால் என் எண்ண‌ங்க‌ளை ப‌திவு செய்யலாமுன்னு பார்த்தா அதுக்கு வ‌ழியே இல்லை??? என் விள‌க்க‌ங்க‌ளை எப்ப‌டி உங்க‌ளுக்கு தெரிவிப்ப‌து,..

சாரி அருண், அங்க‌ இட‌மில்லை இங்கே வ‌ந்து போட்டுட்டேன்

வால்பையன் said...

@ jothi

உங்க விளக்கங்களையும் இங்கேயே போடுங்க தல!

jothi said...

//வட துருவ பனிமலையின் அளவு "ஆஸ்திரேலியா" கண்டத்தவிட பெரிசு சார்.//

தெரிந்த‌ விஷ‌ய‌ம்தான் இங்கே சொல்ல‌வ‌ருவ‌து ஏன்?


//அப்புறமென்ன சுனாமிதேன்........
சரி.தமிழ் நாட்டுல மட்டும் உள்வாங்குற காரணம் என்ன ?//

அப்ப ஜ‌ப்பான்ல‌ வ‌ர்ர‌தெல்லாம் என்ன‌வென்று சொல்வ‌து,.

//துருவப் பகுதிகளில் காற்றோட்டம் தடைபட்டுள்ளது. இதற்குத்தக்க நடவடிக்கை எடுக்காவிடில் இனிமேலும் சுனாமிகளும்,
பூகம்பங்களும் வந்துகொண்டேதான் இருக்கும். இது உறுதி. //

பூக‌ங்க‌ம் வ‌ருவ‌து பூமிக்குள் ந‌ட‌ப்ப‌து,.. காற்றோட்ட‌ம் என்ப‌து பூமிக்கு வெளியே ந‌ட‌ப்ப‌து. எப்ப‌டி இதையும் அதையும் தொட‌ர்புப‌டுத்தி, அதை உறுதியாக‌வும் கூற‌முடிகிற‌து.

jothi said...

// (இதற்குமேல் வருவது ரொம்ப ரொம்ப ஹைடெக் மேட்டரு என்பதால்
தயவுசெய்து ஆதரங்களுடன் வந்து உங்கள் வாதங்களை தொடருங்கள் ப்ளீஸ்).

வெப்பத்தின் இயல்பு என்னன்னா அது மேல்நோக்கிதான் செல்லும்.
துருவங்களை நோக்கி அல்ல.//

என்ன‌ கொடுமை இது??? எப்போதும் வெப்ப‌ம் அதிக‌மான‌ இட‌த்திலிருந்து குறைவான‌ இட‌த்திற்கு செல்லும். அதற்கு மேல் நோக்கி கீழ் நோக்கி என்றெல்லாம் கிடையாது.

உதார‌ண‌மாக‌ ஒரு சொம்பில் ந‌ன்கு கொதித்த‌ த‌ண்ணியை எடுத்துக்கொள்ளுங்க‌ள். அதை ரெண்டு ட‌ம்ப்ள‌ரில் பிரித்துக்கொள்ளுங்க‌ள். ஒன்றை சாதார‌ண‌மாக‌ வெளியில் வையுங்க‌ள். இன்னொன்றை த‌ண்ணீர் சூழ‌ப்ப‌ட்ட‌ ஒரு பாத்திர‌த்தில் வையுங்க‌ள். ஒரு ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து ரெண்டு ட‌ம்ப‌ள‌ரிலும் கை வையுங்க‌ள், விடையை நான் சொல்ல‌த்தேவையில்லை. இது ஹைடெக் மேட்ட‌ர் இல்லை. சிம்பிள் மேட்ட‌ர். சுய‌ப‌ரிசோத‌னையை விட‌ சிற‌ந்த‌ க‌ற்ற‌ல் ஏதும் கிடையாது இந்த‌ ஆதார‌ம் போதும் என‌ நினைக்கிறேன்.

jothi said...

//உலக விஞ்ஞான முட்டாள்களிடம் ஒரு கேள்வி.
நியாயமான கேள்வி.
குளோபல் வெப்பம் என்பது தற்போது எத்தன டிகிரி சென்டிகிரேடு ? //

குளோப‌ல் வெப்ப‌ம் என்ப‌து ஒரு வெப்ப‌ஆற்ற‌ல். அது 10 டிகிரியிலும் 15 டிகிரியிலும் அள‌ப்ப‌த‌ல்ல‌. டிகிரி சென்டிகிரேடு என்ப‌து வெப்ப‌னிலையை அள‌ப்ப‌து. உதார‌ண‌மாக‌ உங்க‌ள் உட‌ம்பின் வெப்ப‌னிலை என்ன‌வென்று கேட்க‌வேண்டும், உங்க‌ள் உட‌ம்பு வெப்ப‌ம் என்ன‌வென்று கேட்க‌கூடாது.

முத‌லில் நீங்க‌ள் என்ன‌ கேட்கிறீர்க‌ள் என்ப‌தை புரிந்து எங்க‌ளுக்கு முன் வையுங்க‌ள். எங்க‌ள் த‌ர‌ப்பு வாத‌ங்க‌ளை வைக்க‌ எளிதாக‌ இருக்கும். குலோப‌ல் வெப்ப‌மா இல்லை குலோப‌ல் வெப்ப‌னிலையா? குலோப‌ல் வெப்ப‌னிலை என்ப‌து சீரான‌து அல்ல‌. சென்னையில் ஒன்று இருக்கும், கொடைக்கான‌லில் ஒன்று இருக்கும் அண்டார்டிக்காவில் ஒன்று இருக்கும்.

jothi said...

//ஏனென்றால் நீ சம நிலையில் இருக்கியாம்.
ஒரு பக்கம் மைனஸ அளக்க வேண்டியது.
இன்னொரு பக்கம் ப்ளஸ்ஸ அளக்க வேண்டியது.
ரெண்டையும் கூட்டி ரெண்டால வகுத்துட்டா போதுமா ? //

இது அத்த‌னை எளிதான க‌ண‌க்கில்லை..முழுக்க‌ ந‌ச்சுக்காற்று உருவாதாலும்,ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ஏற்ப‌டும் வெப்ப‌ இழ‌ப்புக‌ளாலும் ஓசோன் துளை எந்த‌ அள‌விற்கு பாதிப்ப‌டைகிற‌து அத‌ன் துளை அக‌ல‌மென்ன‌,அதிலிருந்து எந்த‌ அள‌விற்கு புறஊதாக்க‌திர்க‌ள் பூமியை தாக்குகின்ற‌ன‌, அதனால் எந்த‌ அள‌விற்கு பூமி சூடாகிற‌து அதனால் நில‌ப்ப‌ர‌ப்பு எந்த‌ அள‌விற்கு சூடாகிற‌து அந்த‌ சூடு எந்த‌ அள‌விற்கு க‌ட‌லில் உள்ள‌ த‌ண்ணீரை எந்த‌ அள‌விற்கு சூடாக்குகிற‌து, அத‌னால் துருவ‌னிலை ப‌னிக்க‌ட்டிக‌ள் எந்த‌ அள‌விற்கு உருகிற‌து அத‌னால் திர‌வ‌மாகும் கொள்ள‌ள‌வு என்ன‌? அதனால் க‌ட‌ல்ம‌ட்டும் எந்த‌ அள‌விற்கு அதிக‌ரிக்கிற‌து, அதானால் எத்த‌னை நாடுக‌ள் நீரில் மூழ்கும்,எத்த‌னை ஆண்டுக‌ளில் மூழ்கும்,.. இப்ப‌டி வ‌ந்து கொண்டே இருக்கும்.

நீங்க‌ ஒண்ணாங்கிளாஸ் பைய‌னுக்கு சொல்லிக்கிட்டு இருக்கிற‌ ஒன்னு ரெண்டு க‌ண‌க்கை இங்க‌ வ‌ந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க‌?

jothi said...

//துருவங்களின் தற்போதைய நிலை என்னன்னா அங்க இருக்கற காத்தே (காற்று)
அடர்த்தி அதிகமாப்போயி,எடை ஏறிப்போயி யாரும் தள்ளிட்டுப்போக முடியாத
நிலையில் உள்ளது.//

காற்றின் அட‌ர்த்தி அதிக‌மாயிருச்சு சொல்லுறீங்க‌ளே,.. அதை எப்ப‌டி என‌ சொல்லுங்க‌ள். இம‌ய‌ம‌லை உச்சியிலும் ப‌னி இருக்கே காற்று அங்கேயும் அட‌ர்த்தியா இருக்குனுமே?? அப்ப‌டின்னா அங்க‌ ம‌ட்டும் ஏன் அதிக‌ ம‌ழை பெய்யுது?? சூறாவ‌ளி அடிக்கிது?

jothi said...

ஹி ஹி 50 நானே

jothi said...

//சம்பளம் வாங்குவது மட்டும்தான் நோக்கமா?
ஆராய்ச்சிபண்ணி ஒரு (&%#)-ம் கிழிக்கல.
நமக்கு உதவாத பள்ளிகளும்,கல்லூரிகளும் பட்டங்களும்,தேவையாங்க?
ஏட்டுச்சொரக்காய வச்சு ஒன்னும் புடுங்க முடியாதுங்க. ///

எத‌ற்கு இந்த‌ கோப‌ம்,.. மேலே சொன்ன‌ விள‌க்க‌ங்க‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேளுங்க‌ள். ஆரோக்ய‌மாக‌ விவாதிக்க‌லாம்,..நாளை மாலை ச‌ந்திக்க‌லாம். GN

jothi said...

என்ன‌ங்க‌ அருண், ச‌த்த‌த்தையே காணோம்,..

jothi said...

இதென்ன‌ திடீர்னு ஒப்புத‌ல் கேட்குது? நான் ஏதும் த‌ப்பா ந‌ட‌ந்துகிட்டானா அருண்???

நாட்டாமை said...

அம்மணக்குண்டி ஊர்ல கோவணாண்டி நாட்டாமை. கந்தசாமி ஐயா சொன்னது போல் Pseudo Intellectuals பேசும் Pseudo science தான்.

நல்ல வைத்தியரிடம்தான் போக வேண்டும்.

RAVI said...

உங்கள் மறுப்புகளுக்கு நன்றி.
இவ்ளோ சொல்லுறிங்களே
அப்படியே இனி பூகம்பம்,சுனாமி,எரிமல வெடிப்பு,புயல்கள் வருமா வராதான்னு சொன்னா நல்லாருக்கும்ல.

jothi said...

//உங்கள் மறுப்புகளுக்கு நன்றி.
இவ்ளோ சொல்லுறிங்களே
அப்படியே இனி பூகம்பம்,சுனாமி,எரிமல வெடிப்பு,புயல்கள் வருமா வராதான்னு சொன்னா நல்லாருக்கும்ல.//

jothi said...

//உங்கள் மறுப்புகளுக்கு நன்றி.
இவ்ளோ சொல்லுறிங்களே
அப்படியே இனி பூகம்பம்,சுனாமி,எரிமல வெடிப்பு,புயல்கள் வருமா வராதான்னு சொன்னா நல்லாருக்கும்ல.//

வ‌ரும்

நாட்டாமை said...

இதே போல்தான் ஒருத்தரு நியூட்டன், ஐன்ஸ்டீன்,ஸ்டீபன் ஆகியோருக்குபின் நான்தான் சொல்லி, என்கிட்ட ஒரு ரகசியம் இருக்கு அதை சொல்லப் போறேன்னு ஒன்பது பாகம் எழுதிட்டார். http://chandroosblog.blogspot.com/2011/02/9.html
ஆனால் ரகசியத்தை சொல்லமாட்டேன்கிறார். அவரும் பூகம்பம், சுனாமி,கடல், ஐஸ்க்கட்டின்னு எழுதறார்.

நிறையப் பேர் அலையறாங்க போல இருக்கு.

RAVI said...

//வரும்//
அப்ப மக்களுக்கு எச்சரிக்க கொடுத்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்காட்டி என்ன அர்த்தம்..?

Rajasankar said...

வால்பையன்,

கமெண்ட் போடக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா இத சீரியசா பேசிக்கிட்டிருக்கறதுனால போடனுமின்னு தோணிச்சி. நான் அந்த வீடியோ ஒரு காமெடிக்காக எடுத்ததுன்னு நினைச்சேன் ஆனா விஷயம் சீரியஸாத்தான் இருக்கு :-)))

சரி,அறிவியல் மேட்டருக்கு வருவோம். உப்பு,மரத்தூள் எல்லாம் பனிக்கட்டியை கொஞ்ச நேரம் அதிகமா வச்சிருக்கும். உப்பு சேர்க்கறதால மட்டும் பனி உருகாம இருக்கும்னா நம்ம வீட்டுல குளிர்சாதனபெட்டியே தேவையில்லையே :-))) ஏன் கொஞ்சம் நேரம் வச்சிருக்கிறது அப்படீன்றதுக்கும் உப்புக்கும் சம்பந்தம் இல்லை இது நீரோட இயல்பு சம்பந்தப்பட்ட விஷயம். மரத்தூள் கூட சேம் எபக்ட் தரும். இரண்டாவது பூமிக்கு எப்படி ஆக்சிஜன் வந்தது, கடலில் ஏன் உப்பு வந்தது அப்படீன்றதுக்கெல்லாம் விளக்கங்கள் இணையத்திலேயே இருக்கு. தேடி படிச்சா போதும். மூணாவதா பூகம்பம் வருவதை கணிக்கும் முயற்சியை உலக அளவிலேயே யாரும் செய்வதில்லை ஏன்னா அதுக்கு தேவைப்படற கம்ப்யூட்டிங் பவரும், கண்கானிக்க வேண்டிய அளவுகள் கணக்கிடலங்கா. சுருக்கமா சொன்னா ஒரு கேரம்போர்டில் இருக்கும் காய்களை சுண்டி விட்டா 16 ஆவது ஹிட் எந்த காய்ல எந்த பக்கம் போகும்னே கணிக்க முடியாது. அதே மாதிரி அணு உலையில் கிரிட்டிகல் என்று சொல்லப்படும் நிகழ்வும். எப்ப வரும்ன்னு சரியா சொல்ல முடியாது. இதுக்கெல்லாம் புள்ளியில், தெர்மோடைனமிக்ஸ்,இண்ட்கரல் கால்குல்ஸ் எல்லாம் படிக்கனும்.

ஈரோட்டில் நல்ல பிசிக்ஸ் புரொபஸர் இருந்தா அவங்ககிட்ட விவாதிச்சு பாருங்க. இணையத்திலேயே ஏராளமான விஷய்ங்களுக்கு விளக்கம் இருக்கு.

நான் குவாண்டம் பத்தி எழுதியிருக்கறது http://rajasankarstamil.blogspot.com/2010/08/41.html

Butter_cutter said...

எனக்கு ஏனோ அறிவியலை விட மொக்கை தான் பிடிக்குது

Stock said...

ராஜசேகர்,
////உப்பு,மரத்தூள் எல்லாம் பனிக்கட்டியை கொஞ்ச நேரம் அதிகமா வச்சிருக்கும்.///

உப்பும் மரத்தூளும் ஒன்றல்ல.

தண்ணீரோடு உப்பு சேர்க்கையில் தண்ணீரின் உறை வெப்பநிலை குறைகிறது. எனவே தண்ணீர் பனிக்கட்டி யாவது தடுக்கப்படுகிறது. பார்க்க : http://science.howstuffworks.com/nature/climate-weather/atmospheric/road-salt.htm

ஆனால் மரத் தஊளின் வெப்பம் கடத்து திறன் வெகு குறைவு. எனவே அது பனிக்கட்டியின் வெப்ப இழப்பு வேகத்தை மட்டுபடுத்துகிறது (கவனிக்க: முழுவதுமாக நிறுத்தவில்லை.)
பார்க்க: Pykrete http://en.wikipedia.org/wiki/Pykrete

Rajasankar said...

ஸ்டாக்,

நானும் அதை தான் சொல்ல வந்தேன். இது உப்புக்கோ மரத்தூளுக்கோ என்றில்லாமல் இந்த எபக்ட் எது தந்தாலும் அந்த விளைவு நடக்கும். ஐஸ்கீரிம் பண்ணும்போது உப்புநீர் வச்சு தான் பண்ணுவாங்க. ஒரு இடத்துல வெப்ப நிலைய அதிகரிக்கவும் இன்னொரு இடத்துல குறைக்கவும் உப்பு பயன்படும். இது உப்பு இல்லாம வேற ஒரு பொருள் அதே எபக்ட் தந்தால் அதையும் பயன்படுத்தலாம். தேவை நீரோட இயல்ப மாத்தனுமே தவிர உப்போ மத்ததோ காரணிகள் கிடையாது.

jothi said...

//ஒரு இடத்துல வெப்ப நிலைய அதிகரிக்கவும் இன்னொரு இடத்துல குறைக்கவும் உப்பு பயன்படும்//

புதிதாக‌ இருக்கிற‌து. கொஞ்ச‌ம் உதார‌ண‌த்துட‌ன் விள‌க்க‌ முடியுமா?

Rajasankar said...

ஐஸ் கட்டிகளின் மேல் உப்ப தூவினா அது உருக ஆரம்பிக்கும். ஆனா உருகும் தண்ணி ஐஸ் கட்டியை விட வெப்பநிலை குறைவா இருக்கும்.
ஐஸ்கீரிம் செய்யறப்ப உப்புதண்ணியில் வச்சா அந்த ஐஸ்கீரிம் மிக்சர் ஐஸா மாறும். இல்லாட்டி மாறாது. ஏன்னா குறிப்பட்ட வெப்பநிலைக்கு குறைவான இருந்தாதான் அதுனால கட்டியா மாறமுடியும். இல்லாட்டி மாறாது.

ஆங்கிலத்தில் இருக்கும் இந்த சுட்டிகளை பாருங்க.
http://science.howstuffworks.com/nature/climate-weather/atmospheric/road-salt.htm
http://www.waynesthisandthat.com/saltice.html
http://www.chem1.com/acad/sci/aboutwater.html
http://www.waynesthisandthat.com/saltice.html

இந்த பேஸ் டிராஸ்சிஷன் அப்படீன்றது ஒரு பெரிய கான்செப்ட். சர்க்கரையை கட்டியா மாத்தி எடுக்கறது, எண்ணெயில் இருந்து மெழுகு முதலான அசுத்தங்களை பிரிக்கறது, எண்ணயை வனஸ்பதியா மாத்தறது என பல இடத்துல பயன்படும். சும்மா இத இதுல போட்டா கரையும் அப்படீன்னு இல்லாம அடர்த்திக்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு, அதுக்கும் மூலக்கூறுகளுக்கு இடையே இருந்து பந்தம், அத உடைக்க தேவையான சக்தி என இது கொஞ்சம் பெரிய கான்செப்ட்.

jothi said...

//இந்த பேஸ் டிராஸ்சிஷன் அப்படீன்றது ஒரு பெரிய கான்செப்ட். சர்க்கரையை கட்டியா மாத்தி எடுக்கறது, எண்ணெயில் இருந்து மெழுகு முதலான அசுத்தங்களை பிரிக்கறது, எண்ணயை வனஸ்பதியா மாத்தறது என பல இடத்துல பயன்படும். சும்மா இத இதுல போட்டா கரையும் அப்படீன்னு இல்லாம அடர்த்திக்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு, அதுக்கும் மூலக்கூறுகளுக்கு இடையே இருந்து பந்தம், அத உடைக்க தேவையான சக்தி என இது கொஞ்சம் பெரிய கான்செப்ட்.//

நானும் பரும மாற்ற‌ங்களை ப‌ற்றி ப‌டித்திருக்கிறேன்,..

இதில் த‌லையை போட்டு பிய்த்துக்கொள்ள‌ வேண்டிய‌தில்லை,.. நிறைமாற்ற‌லில் வேதிவினை இருக்க‌லாம் இல்லை இல்லாம‌லும் இருக்க‌லாம்,.. மூல‌க்கூறுக‌ளின் சேர்க்கை முழுக்க‌ முழுக்க‌ வெப்ப‌னிலை, அழுத்த‌ம், கொள்ள‌ள‌வை, மூல‌க்கூறுக‌ளின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகின்ற‌ன‌.

இந்த‌க்க‌ட்டுரையில் இருந்து என் புரித‌ல் இதுதான்.

ஹைட்ர‌ஜ‌ன், ஆக்ஸிஜ‌ன் சேர்க்கையால் உருவாகிற‌ நீர் ஆறுக‌ளின் வ‌ழியாக‌ க‌ட‌லை அடைகிற‌து. அப்ப‌டி வ‌ரும் போது உப்பையும் தாதுக்க‌ளையும் அள்ளிக்கொண்டு வ‌ருகிற‌து. தாதுக்க‌ள் ப‌ல்வேறு உயிர்க‌ளுக்கு எடுத்துக்கொள்ள‌ப்ப‌ட்டாலும், த‌ண்ணீர் ஆவியாகி உப்பை க‌ட‌லிலேயே விட்டு செல்லுகிற‌து. இது ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ந‌ட‌ந்தாலும் உப்பு க‌ட‌லைவிட்டு வெளியே செல்ல‌ வ‌ழியே இல்லாத‌தாலும் மீண்டும் மீண்டும் ப‌டிந்து க‌ட‌ல் நீரை இன்னும் உப்பாக்கிவிட்ட‌து.துருவ‌னிலைக‌ளில் உப்பு அந்த‌ அள‌விற்கு உப்புக்க‌ரிக்காம‌ல் இருப்ப‌தற்கு கார‌ண‌ம் க‌ட‌ல் நீரோட்ட‌மே,..

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

jothi said...

my views

1.துருவ‌ப்ப‌குதிக‌ளில் வெப்ப‌னிலை குறைவாக‌ இருப்ப‌தால் அங்கு ஆவியாத‌ல் குறைவு,என‌வே உப்பின் ப‌டித‌லும் குறைவு

2.ஒரு பொருளின் க‌ரைதிற‌ன் என்ப‌து வெப்ப‌னிலையை பொறுத்து நேர்விகிதத்தில் இருக்கும்,அதாவ‌து சுடு நீரில் உப்பின் க‌ரைதிற‌ன் அதிக‌ம், துருவ‌ப்ப‌குதியில் வெப்ப‌ம் குறைவாக‌ இருப்ப‌தால் உப்பின் க‌ரைதிற‌னும் குறைவாக‌ இருக்கும்,

3.இன்னொன்று ம‌ற்ற‌ ப‌குதிக‌ளை விட‌ துருவ‌ப்ப‌குதியில் நீரோட்ட‌த்தின் தாக்க‌ம் குறைவு என்ப‌தால் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளில் இருப்ப‌து போல் இங்கே நீரோட்ட‌ங்க‌ளின் க‌ல‌த்த‌ல் இல்லை,ப‌னிக்க‌ட்டியால் மேலெ மூடி இருப்ப‌தால் மேல்ம‌ட்ட‌ நீரும் ஆழ‌த்தில் உள்ள‌ நீரும் க‌ல‌த்த‌ல் குறைவு

4.ஆனால் ஏரிக‌ளில் ஆவியாத‌ல் இருந்தாலும், ஏரி நீரான‌து வெளியேற்ற‌க்கூடிய‌ வ‌ழிக‌ள் இருப்ப‌தால் அவை உப்புக்க‌ரிப்ப‌தில்லை,.. உல‌கின் ப‌ள்ள‌ம் க‌ட‌ல் என்ப‌தால் க‌ட‌ல் நீர் வெளியேற‌ வ‌ழியில்லை, உப்பும் வெளியேற வ‌ழியில்லை

5. ஆறு முக‌த்துவார‌ங்க‌ளில் உள்ள‌ க‌ட‌லில் உப்பு குறைவாக‌ இருக்கும். இன்னும் வ‌ங்காள‌ விரிகுடாவைவிட‌ அர‌பிக்க‌ட‌லில் உப்பின் அள‌வு அதிக‌ம். வங்காள‌விரிகுடாவில் க‌ங்கை, மகான‌தி, கிருஷ்ணா, பிர‌ம்ம‌புத்திரா என‌ ப‌ல ஆறுக‌ள் க‌ல‌க்கின்ற‌ன‌.

ஆரோக்யமாக‌ விவாத‌ம் ந‌ட‌த்த‌ க‌ள‌ம் அமைத்து த‌ந்த‌ வால்பைய‌னுக்கு ந‌ன்றி.

Itsdifferent said...

எங்க வீட்டுக்கு நாலு பக்கமும் சேர்ர பனி (snow) சீக்கிரம் கரைய நாங்க உப்பை தான் தூவறோம்..

நெல்லை கபே said...

எனக்கென்னமோ டாக்டர் அவரை உப்பு சேர்க்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்னு தோணுது...அதான் இந்த கடுப்பு....

RAVI said...

என்னோட கட்டுரய நீங்க எல்லோருமே படிக்காம விவாதம் செய்யுரீங்கன்னு நெனக்கிறேன்.
என்னோட கட்டுரயின் முக்கிய செய்தியே -- குளோபல் வெப்பத்தால் துருவபனிகள் உருகாது என்பதுதான்.

இதை நீங்கள் ஆதரிப்பதும்,ஆதரிக்காததும் உங்கள் அறிவு சார்ந்த விசயம்.
அதில் நான் தலயிட மாட்டேன்.

2004,டிசம்பர் 26 --க்கு பிறகு பூகம்பங்கள்,சுநாமிகள்,எரிமலை வெடிப்புகள்,புயல்கள் வந்தேதீரும் டா என்று
உறுதியாக அடித்துக்கூறியுள்ளேன். பத்திரிகைகளுக்கு எனது கட்டுர அனுப்புன தேதி 13.05.2005.
(இங்கு டா என்ற எழுத்து எனது கருத்தின் உறுதியான வாதத்திற்கு மட்டும் பயன்படுத்தியுள்ளேன்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. அப்படி நீங்க நெனெச்சா மன்னிப்பு கேக்குறேன்.)

சரி.இவையெல்லாம் வந்ததே.
இன்றுவரை ஏன் இதெல்லாம் வந்தேதீரும்னு உலக ஆராய்ச்சி நிறுவனங்கள்
தெரிவிக்கவில்லை..?
அப்ப தெரியாதுன்னுதானே அர்த்தம்..!

//வரும்// என்பது ஒரு பெரிய விளக்கமல்ல.
வந்தேதீரும் என்பதுதான் விஞ்ஞானிக்கு அழகு.

Rajasankar said...

அப்போ இதுக்கு முன்னாடி வந்த பூகம்பம்,எரிமலை,சுனாமி க்கு எல்லாம் எது காரணம்?

சும்மா இது வரும் அது வரும் மின்னு சொல்லாம எது எங்க வரும், எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வரும் அப்படீன்னு சொல்ல முடியுமா?

அப்படி சொல்ல முடிஞ்சு அது ஒரு குறைந்த படசம் ஐந்து இடங்களில் சரியா நடந்தா வேணுமின்னா உங்க தியரி அறிவியல் ன்னு நம்பலாம்.

Unknown said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..

எங்க ஊர்ல ஒருத்தர் இருக்கர்.
அவர் பேர் ஆனந்தன்.
அவர் பூகோளத்தை ஆராயிச்சி பண்ணீட்டு,
சூரிய ஒளியை மையபடுத்தி.. ஒரு தியரி சொல்றார்.

அது என்னன சூரியனில் இருந்து வரும் ஈர்ப்பு, மற்ற கோளங்களில் இருந்து வரும், ஈர்ப்பு ,பூமியின் சுழற்சி இது எல்லாம் சேர்ந்து தான் பூமிக்கு அடியில் இருக்கும் லாவாவின் இயக்கத்தை தீர்மானிக்குது..

லாவா தான் பூமியின் மேலடுக்கான நாம் வாழும் மண்ணை சுமந்து இருக்கு, அதில் ஏற்படும் மாற்றம் பல வகையில் வெளிப்படுது, நில நடுக்கம் அதில் ஒன்று.

சுரிய ஒஈயை வைத்து, மழை, காற்றுன்னு பல விஷயங்களை முன்னறிவிக்க முடியும்.

பல பூகம்பங்களை முன்னரிவிச்சு இருக்கர்.

குஜராத் பூகம்பத்தை நான் பார்க்கவே முன்னறிவிச்சர்.

ஒரு முறை அவர் எதிர் பார்த்த மாதிரி குறிப்பிட்ட இடத்தில் பூகம்பம் வரல..

அது ஏன்னு ஆய்வு பண்ணி, அப்பரம் தான் கண்டுபிடித்தார். அது என்னனா.

அமெரிக்கா அணு குண்டு சோதனை பண்ணிச்சு.
அதன் சக்தி, பூகம்ப சக்தியை சம படுத்திடுச்சு.

அவர் எதிர் பார்க்காம ஒரு ஆய்வுமுடிவு கிடச்ச

இதில் முக்கியமான ஒன்று. பூமியின்

பூமியில் ஃபுயூஸிங் பாய்ண்ட்டில் .. அணு ஆயுதத்தை குறிப்பிட்ட சக்தியை வெளிப்படுத்துமாறு வைத்தால் எந்த நாட்டையும் நோக்கியும் பூகம்பத்தை உருவாக்கி அனுப்ப முடியும்... என்பது...
நீங்கள் சொல்வது போல் இவரும் அப்துல் கலாம், நாசா உட்பட பலருக்கும் கண்டுபிடிப்பை நிரூபித்தும் , அனுப்பியும் பயன் இல்லை.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோது சோவியத் யூனியனின் தலைமை விஞ்ஞானி திரூப்பூர் வந்து இவரின் ஆய்வை பார்த்து சென்றார்.

நீங்கள் அவரை தொடர்புகொள்ள விரும்பினால்
என்னை அழைக்கவும் அவர் எண் தருகிறேன்.

வினோத்..
glomoinc@gmail.com
9003650160

RAVI said...

//சும்மா இது வரும் அது வரும் மின்னு சொல்லாம எது எங்க வரும், எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வரும் அப்படீன்னு சொல்ல முடியுமா? //

இது விதண்டாவாதமே தவிர வேறில்லை.

பூமி ஒரு ஒழுங்கற்ற வடிவம் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.
அதாவது நிலப்பரப்பும்,
கடலுக்கு அடியில் உள்ள
நிலப்பரப்பும் மேடுபள்ளமாக அமைந்துள்ளது.
இதில் வலுவான பகுதிகள் எவை,
வலுவற்ற பகுதிகள் எவை
என்று உங்களுக்கு தெரியுமா..?

உங்கள் கேள்விக்கு என்னோட ரெண்டாவது பதில்.

1.பூகம்பம்,சுனாமி,எரிமலை வெடித்தல் மற்றும் புயல்கள் - தற்போது
வந்துகிட்டே இருக்கே. இவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன?
சரி இனி இவை வருமா வராதா - ஏன்?

இதுக்கு விடைசொல்ல முடியலன்னா இந்த பூமியில்
Tsunami Institution-கள்
Earthquake Institution-கள் மற்றும்
எரிமல ஆராய்ச்சி மையங்கள் இவைகளெல்லாம்
(நாம் வரிகட்டும் பணத்தில்!) என்ன (&%#)-க்கு இயங்குது.இருக்குது.

சம்பளம் வாங்குவது மட்டும்தான் நோக்கமா?
ஆராய்ச்சிபண்ணி ஒரு (&%#)-ம் கிழிக்கல.
நமக்கு உதவாத பள்ளிகளும்,கல்லூரிகளும் பட்டங்களும்,தேவையாங்க?
ஏட்டுச்சொரக்காய வச்சு ஒன்னும் புடுங்க முடியாதுங்க.

ஆராய்ச்சின்னு எத்தன கோடி செலவு..?

ஆனா நான் உறுதிபட சொன்னத அவுங்க சொல்லல.

//எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வரும் அப்படீன்னு சொல்ல முடியுமா? //

அப்படி சொல்ல முடியாட்டி உலக விஞ்ஞானிகளும் முட்டாள்கள்தானே.

//அப்போ இதுக்கு முன்னாடி வந்த பூகம்பம்,எரிமலை,சுனாமி க்கு எல்லாம் எது காரணம்?//

தற்போது வருவது விரிவடைய முயற்சிப்பதால்.
முன்னாடி வந்தத நான் சொல்லாட்டி இப்ப என்ன ஆச்சு..?

இனியும் அடிச்சு சொல்லுறேன்.
இவைகள் வந்தேதீரும்.

இனி வரும் காலத்தில் சுருக்கமாதலின் நிகழ்வுகள் வேறுமாதிரியிருக்கும்.
அப்பவும் இதெல்லாம் நிகழும்.
ஆனால் அதெல்லாம் சற்று மாறுபடும்.

அப்பவும் என்னய மாதிரி எவனோ வந்து சொல்லும் காரணத்த இதோட ஒப்பிட்டு மறுக்க நிறயபேரு வருவாங்கன்னு புரியுது.


நிற்க.இங்கன என்னோட விவாதிக்க யார்வேணா வாங்க.
உங்களுக்குன்னு ஒரு கேள்வி;ஒரேஒரு கேள்வி இருக்கு.
அது ரொம்ப ப்ராக்டிகலா இருக்கும்.

தயாராகிக்கொள்ளுங்கள்.

Rajasankar said...

பூகம்பம் வரும் மின்னல் இடிக்கும் மழை பெய்யும் அப்படீன்னும் விஞ்ஞானிகள் சொல்லிகிட்டுதான் இருக்காங்க. நீங்க அதுல என்ன புதுசா சொல்லிட்டீங்க? வரும்மின்னு தெரிஞ்சா எங்க வரும்? எப்போ வரும்? எப்படி வரும்? இதெல்லாம் சொல்லுங்க? உங்க தியரி என்ன? ஏதுன்னு ரகசியங்களை சொல்லவேண்டாம் ஆனா எங்க என்ன நடக்குமின்னு சொல்லுங்க

இதுவரைக்கும் இத யாரும் சொன்னது கிடையாது. இனிமேலும் அப்படி சொல்லவும் முடியாது. முடிஞ்சா அத சொல்ல முயற்சி செய்யுங்க. அதில்லாம வீண்வாதம், விதண்டாவாதம் மின்னு திட்டவேண்டாம். சும்மா நான் கண்டுபிடிச்சிருக்கேன். எங்கிட்ட விவாதத்திற்கு வா, அறிவியலில் கேள்வி வச்சிருக்கேன் அப்படீன்னாலாம் சொல்லிட்டு இருக்காம எல்லாரும் நம்பறமாதிரி ஏதாவது சொல்லுங்க.

உங்களுக்கு ஓர் தகவல். இப்போ இருக்கும் எல்லா கண்டங்களும் ஒன்னா இருந்தது அப்படீன்னு ஒருத்தர் சொன்னார். சொன்னப்ப எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா அவர் நீருபிச்சார். தடயங்கள், ஆதாரங்கள் மூலம் நீருபிச்சார். இன்றைக்கு அவருடைய தியரிதான் பிளேட் டெட்டானிக்ஸ் இல் பயன்படுது. கலீலியோவில் இருந்து நீயூட்டன், டார்வின், ஐன்ஸ்டைன் என எல்லார் தியரிகளையும் முதல்ல ஏதுக்கல. ஆனா அவிங்க மத்தவங்க அங்கீகாரத்துக்காக காத்திருக்காம தனியா நின்னு நீருபிச்சு காமிச்சா. முடிஞ்சா அவுங்களை பாலோ பண்ணுங்க.

Chandru said...

ரவி அண்ணே நீங்க எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

மாறாக தெளிவில்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களது பிளாக்கிலும் இது பற்றிய உங்களது அடிப்படை அறிவைக் கடை விரித்திருக்கலாம் அதுவும் செய்யவில்லை.
மொட்டையாக விஞ்ஞானிகளை அவமதிப்பது உங்களையே கேவலப் படுத்துவது போல் உள்ளது. சம்பந்தப் பட்ட மேட்டரைப் பற்றி நீங்கள் 1% கூட சொல்லவில்லை.உங்களிடம் கேள்விமட்டுமே உள்ளது எனத் தெரிகிறது.
எரிமலை,சுனாமி இவையெல்லாம் பூகம்பத்தின் by products. வினோத் குறிப்பிட்ட ஆனந்தனைப் பற்றி, நான் 10 வருடங்களுக்கு முன் பூகம்ப விழிப்புணர்வுக்காக அடித்த பிட் நோட்டீஸில், குறிப்பிட்டுள்ள தகவலை எனது பிளாக்கில் அந்த (நோட்டீஸூடன்)மீள் பதிவு செய்துள்ளேன் பார்க்கவும்

http://chandroosblog.blogspot.com/2010/04/blog-post_3892.html

ஆனந்தன் ஒரு டிவி நிகழ்ச்சியில் சொன்ன விஷயங்களைத்தான் பதிவு செய்துள்ளேன். அவ்வளவு விவரமா இருக்கிற ஆளுக்கே மதிப்பு இல்லையாம் இப்படி,மயிரு தயிரு, போடா, வாடான்னு பேசுனா ராமர் பிள்ளை கதிதான்.

jothi said...

//இப்படி,மயிரு தயிரு, போடா, வாடான்னு பேசுனா ராமர் பிள்ளை கதிதான்.//

ராம‌ர் பிள்ளை என‌க்கு பிடிக்கும்,.. அவ‌ரையும் இவ‌ரையும் ஒப்பிட‌ வேண்டாம்.

ராம‌ர் பிள்ளைக்கு ஏதோ மாற்று எரி பொருளை உருவாக்க வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருந்த‌து. அவ‌ர் போன‌ வ‌ழி முழுக்க‌ முழுக்க‌ லூசுத்த‌ன‌மான‌து என்றாலும் அந்த‌ எண்ண‌ம் உய‌ர்ந்த‌துதான். எத்த‌னையோ ப‌டித்த‌ வேதிய‌ல், பொறிய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ளும் நினைக்காத‌ ஒன்றை அந்த‌ ஆள் நினைத்தார்.அந்த‌ எண்ண‌த்திற்காக‌ என‌க்கு பிடிக்கும்

jothi said...

//நிற்க.இங்கன என்னோட விவாதிக்க யார்வேணா வாங்க.
உங்களுக்குன்னு ஒரு கேள்வி;ஒரேஒரு கேள்வி இருக்கு.
அது ரொம்ப ப்ராக்டிகலா இருக்கும்.

தயாராகிக்கொள்ளுங்கள்.//

எப்ப‌டியும் நீங்க‌ள் கேள்விதான் கேட்பீர்க‌ள் என‌ தெரியும். ஒரே ஒரு கேள்விதான் என்ப‌தால் ந‌ன்கு யோசித்து ஆராய்ந்து பின் கேட்க‌வும்,..

jothi said...

////வரும்// என்பது ஒரு பெரிய விளக்கமல்ல.
வந்தேதீரும் என்பதுதான் விஞ்ஞானிக்கு அழகு.//

வ‌ரும், வ‌ந்தே தீரும் முடிவின் ப‌டி
ரெண்டுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

jothi said...

ர‌விய‌ண்ண‌ன் எங்க‌ளால‌ முடிய‌ல‌,..

பூக‌ம்ப‌ம் வ‌ரும், நில‌ ந‌டுக்கம், சுனாமி வ‌ரும்ன்னு எல்லாரும் சொல்ற‌துதான். எல்லாரும் வ‌ரும்னு சொல்லுறாங்க‌ நீங்க‌ வ‌ந்தே தீரும் அப்ப‌டின்னு சொல்லுறீங்க‌,..வ‌ந்தே தீரும்னு இவ்வ‌ள‌வு துல்லிய‌மாக‌ க‌ண‌க்கு போட்டு சொல்லும் நீங்க‌ள் அடுத்த‌ பூக‌ம்ப‌ம் எந்த‌ நாட்டில் வ‌ருகிற‌து? எப்போது வ‌ருகிற‌து? ஏன் வ‌ருகிற‌து? இதை ம‌ட்டும் சொல்லுங்க‌ள் (சும்மா குத்தும‌திப்பா ஆசியாவில் வ‌ருகிற‌து, பூமியில் வ‌ருகிற‌து, 2011 2015 என்று சொல்ல‌ வேண்டாம்).

RAVI said...

துல்லியமா
எங்க வரும்
எப்பவரும்னு
என்ன அளவுல வரும்னு
சொல்ல முடியாதவர்கள்
விஞ்ஞானியல்ல என்று
கூறியதற்கு நன்றி.

ஏன்னா அவுங்களத்தான் விஞ்ஞானின்னு
உலகம் நம்பிட்டிருக்கு.

என்னோட வீடியோ பார்த்துட்டும் எப்ப வரும்னு கேக்குறிங்க பாருங்க.
விளக்கம் எளிதா புரியுமே.

கடல் ஓதம் நடக்கும்போது இதெல்லாம் வரும்.
அப்ப கடல் நீரோட்டத்தின் விளைவாக
வடதுருவத்தில் ஏற்படும் அமுக்கம்தான் பூமியை விரிவடைய வைக்கிறது.

எங்க தாக்கும்னு தெரிஞ்சா மக்கள அழிவிலிருந்து எளிதா காப்பாற்றிவிடலாமே.

வலுவற்ற பகுதிகள் எவையோ அங்கு தாக்குதல் ந்டக்கும்.

தென் துருவத்தில் பட்டு எதிரொலிக்கும் ஒத நீரோட்டம் வடதுருவத்தை நோக்கி மீண்டும் பயனித்து தன்பங்கிற்கு மறு தாக்குதல்
நடத்துவதால் தொடர் பூகம்பங்கள் வருகிறது.


சரி.அஸ்திவாரம் ஒடஞ்ச கட்டிடம் எப்ப சரியும்..?

அது மாதிரி பூமி தானே அட்ஜ்ஸ்ட் செய்யும் போது ஓதமற்ற நாட்களிலும்
பூகம்பங்கள் தொடற்கிறது.

RAVI said...

பூகம்பம்,சுனாமி,கடல் உள்வாங்குதல்,எரிமலை வெடித்தல்
காரணம்
www.avasaramda.blogspot.com -ல் உள்ள
வீடியோல தெளிவா விளக்கி உள்ளேன்.
மறுப்பவர்கள் அல்லது இதற்கு வேறுகாரணம் தெரிந்தவர்கள் விளக்கலாம்.

!

Blog Widget by LinkWithin