திட்டுதல், ஏசுதல், வைதல்,பேசுதல் இன்னும் பிற வட்டார வார்த்தைகள்.

திட்டுதல்:
இது தமிழில் அனைவராலும் அறியப்பட்ட பொதுவான வார்த்தை.
ஒருவன் என்னை திட்டினான் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியில் வாழ்பவர்களாலும் புரிந்து கொள்ளமுடியும்.

ஏசுதல்:
இது நெல்லை சுத்துவட்டார வார்த்தை,
என்ன ஏசிபுட்டான் என்று அன்போடு(!?)சொல்லுவார்கள். இதை கூட மற்ற பகுதியில் வாழ்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
"மெதுவாய் கொடுங்க" என்பதற்கு "பைய தாங்க" என்று சொல்லுவதன் மூலம் பல சினிமா மற்றும் பத்திரிக்கை நகைசுவைகளுக்கு வித்திட்டவர்கள்.

வைதல்:
இது அக்மார்க் மதுரை வார்த்தை.
"வஞ்சிட்டான்" என்று தான் வட்டார மொழியில் சொல்வார்கள்.
"வஞ்சித்துவிட்டான்" என்ற சொல்லிருந்து வந்திருக்கலாம். தமிழ் வளத்த மதுரை அல்லவா.
"லந்த கொடுத்தல்","சத்தாய்த்தல்" போன்ற சொல்லிற்கு மதுரையில் பிறந்திருந்தாலும் இன்றும் எனக்கு அர்த்தம் தெரியாது,
முழு மரியாதை இல்லாவிட்டாலும் "அண்ணே" என்று அன்போடு அழைக்கும் ஊரிது.

பேசுதல்:
கொங்கு வட்டார பகுதிகளில் மேலே இருக்கும் மூன்று தலைப்பிற்கும் இது தான் பெயர் இங்கே. முழு மரியாதைக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால், திட்டுவதை கூட இங்கே இப்படி தான் சொல்லுவார்கள். சிறு குழந்தை கூட "வாங்க","போங்க" என்று அழைப்பது இனிமையாக இருக்கும், வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் அனைவரையும் கையெடுத்து கும்பிடும் பழக்கம் இவர்களிது,
ஒரு கையால் ஹாய் சொல்லி திரியும் இந்த நாகரிகத்தில், இன்றும் கும்பிடும் பழக்கத்தை வைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி

சென்னை தமிழ்:
"இன்ன நைனா" இன்று அனைவரையும் அன்போடு(!?) தான் இங்கே அழைப்பார்கள்.
வாய் பேச தெரிந்த சிறு குழந்தை கூட "ங்கோத்தா" என்ற வார்த்தையை அழகாக சொல்லும்.
"பாடு","லவடிகபால்" போன்ற வார்த்தைகளுக்கும் இதை பேசும் நிறைய பேருக்கு அர்த்தம் தெரியாது, சென்னை தமிழும் சங்கம் வளர்த்து ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த வேண்டிய மொழி போல் எனக்கு தோன்றுகிறது.

உங்கள் கருத்துகளையும், இது போன்ற இன்ன பிற வட்டார வார்த்தைகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்

16 வாங்கிகட்டி கொண்டது:

சயந்தன் said...

இலங்கையில் யாழ்ப்பாண வழக்கில் பேசுதல் தான் பயன்படுகிறது. சாதாரணமாய் பேசுவது கதைத்தல் எனப்படுகிறது.

Anonymous said...

வால்பையன்;

எனக்குத் தெரிந்தவரை வட்டார வழக்கு அல்லது வட்டார வார்த்தைகள் என்பன தமிழில் உள்ள வார்த்தைகள் சில பிறழ்வுகளுடன் சில வட்டாரங்களில் அதாவது சில இடங்களில் மட்டும் பாவிக்கப்படுவது. உதாரணமாக 'இன்னா பேசுறே?' என்பதில் இன்னா என்பது வட்டார வழக்கு. தமிழில் இன்னா என்பதன் அர்த்தம் துன்பம் எனினும் வட்டார வழக்கில் இதற்கு என்ன எனும் அர்த்தம் உள்ளது.

நீங்கள் மேலே கூறியுள்ள நான்கில் மூன்று சொற்கள் வட்டார வார்த்தைகளாக இருக்கலாகாது என நம்புகிறேன். ஏனெனில் திட்டுதல், ஏசுதல் மற்றும் வைதல் என்பன வசைபாடல் அல்லது நிந்தித்தல் எனும் ஒரே கருத்துடையன. இவற்றைத் தமிழிலக்கியங்களிலும், கவிதைகளிலும் காணமுடியும்.

பேசுதல் என்பது வட்டார வழக்குத்தான். ஏனெனில் கதைத்தல், சொல்லுதல் மற்றும் துதித்தல் எனும் அர்த்தங்களைக் கொண்ட பேசுதல் எனும் வார்த்தையானது நிந்தித்தல் அல்லது வசைபாடல் எனும் அர்த்தம் கொண்டு சில இடங்களில் (எமது இடத்திலும் இதையே பாவிக்கின்றோம்) பாவிக்கப்படுவதனாலாகும்.

வவ்வால் said...

தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்டான் என்றும் சொல்வார்கள்.

சத்தாய்க்கிறது மட்ராஸ் பாஷை ஆட்சே.

சதா ஏய்க்கிறது... எப்போதும் ஏய்க்கிறான் என்ற அர்த்தம்.

பாடு என்பது மீனவர்கள் வட்டாரத்தில் இருப்பது, படகு இல்லாதவர்கள் வாடகைக்கு போய் மீன் பிடிப்பார்கள் ,அவங்க பிடிக்கிற ஒரு மீன் அளவுக்கு பாடு என்று பெயர் , ஒரு பார்த்தால் இவ்வளவு பணம் தருவாங்க, கூலிக்கு மாறடித்தலை பாடு என்று திட்டவும் பயன் படுத்துகிறார்கள் என நினைக்கிறேன்.

லவடைக்கா பால் என்றால் நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ... சுன்னி மசுரு என்று அர்த்தம் சொல்கிறர்கள், விவரம் தெரிந்தவர்கள் சரியா என்று சொல்லலாம்.

ஆனால் மெட்ராஸ் பாஷை பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்யலாம், ஆள் ஆளுக்கு ஒரு அர்த்தம் சொல்வார்கள்.

காரூரன் said...

மிண்டுதல் ‍_ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்தார் சொல்லிக்கொள்வதுண்டு.
கத்துதல் ‍ ‍_ உரக்க கோபமாய் சொல்லுதல்

வால்பையன் நல்ல தலைப்புத் தான்! முதல் வருகை.

g said...

ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்துக்கும் மேல உள்ளது. என் பிளாக் 0 மட்டும் காட்டுதே எண்ண பண்ணலாம். நான் தெரியலையா?
///tvmalaionline.blogpot.com///

வால்பையன் said...

சாதாரணமாய் பேசுவது கதைத்தல் எனப்படுகிறது.

கதைத்தல் என்பது உரையாடுதல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது இல்லையா

வால்பையன்

வால்பையன் said...

//சில பிறழ்வுகளுடன் சில வட்டாரங்களில் அதாவது சில இடங்களில் மட்டும் பாவிக்கப்படுவது. //

அதாவது வார்த்தைகள் மருவி வேறொரு வடிவம் பெரோகிறது என்று சொல்கிறீர்களா

வால்பையன்

வால்பையன் said...

//தொண்டை மண்டலத்திலும் திட்டுறதை மானாவாரியா பேசிட்டான் என்றும் சொல்வார்கள்//

மானாவாரி என்பது பயிர் சாகுபடி இல்லையா!

//பாடு என்பது மீனவர்கள் வட்டாரத்தில் இருப்பது, படகு இல்லாதவர்கள் வாடகைக்கு போய் மீன் பிடிப்பார்கள் ,அவங்க பிடிக்கிற ஒரு மீன் அளவுக்கு பாடு என்று பெயர் //

பாடு என்பது தெலுங்கு வார்த்தை என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையா என்று தெரியவில்லை.

//லவடைக்கா பால் என்றால் நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ... ********** என்று அர்த்தம் சொல்கிறர்கள், விவரம் தெரிந்தவர்கள் சரியா என்று சொல்லலாம்.//

இவ்வளவு கொட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
தெரிந்திருந்தால் அந்த வார்த்தையை இங்கே உபயோக படித்திருக்க மாட்டேன்.

வால்பையன்

வால்பையன் said...

//மிண்டுதல் ‍_ என்னிடம் மிண்டாதே என்று யாழ்ப்பாணத்தார் சொல்லிக்கொள்வதுண்டு.
கத்துதல் ‍ ‍_ உரக்க கோபமாய் சொல்லுதல் //

அப்படியா, தகவலுக்கு நன்றி,
இலங்கை தமிழுக்கும் இங்கே உள்ள வட்டார தமிழுக்கும் உள்ள வித்தியாசங்களை வகைபடுத்தும் எண்ணம் உண்டு, நேரம் கிடக்கும் போது செய்யலாம்,
முழு இலங்கை தமிழில் எழுதப்பட்ட புத்தகம் இருந்தால் சொல்லுங்க்கள்

வருகைக்கு நன்றி

வால்பையன்

வால்பையன் said...

//ஹலோ வால்பையா. உன் பிளாக் மதிப்பு மட்டும் ஆயிரத்துக்கும் மேல உள்ளது. என் பிளாக் 0 மட்டும் காட்டுதே எண்ண பண்ணலாம்.//

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது.
அதனால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்க முடியாது.
பிளாக் மதிப்பு நமது வலையை பார்வையிடுபவர்களை வைத்து மதிப்பிடபடுகிறது.
தமிழில் பிளாக் எழுதுங்கள், எல்லோருக்கும் பின்னூட்டம் இடுங்கள்.
தானாகவே உங்கள் பிளாக் மதிப்பும், உங்கள் மதிப்பும்(!?) உயரும்

வால்பையன்

தியாகு said...

no comments

g said...

நான் ஒரு பதில சொன்னா, வால்பையன் எனக்கு ஒரு பதில சொல்லுறான்.

நான் தான் ஜெய்.

கோயம்பத்தூரிலே சரக்கு சாப்பிட்டோ மோ ஞாபகமில்லையா?

"இல்லையா"

எம்ஜிஎம் வொட்கா சாப்பிட்டோ மே!

அப்பாடா! உனக்கு புரிய வைக்கவே இவ்வளவு நேரமாச்சு. சரி மேட்டருக்கு வருவோம் கொஞ்சம் துட்டு சம்பாரிக்க வழியிருந்தா சொல்லுங்க. மிஸ்டர் வால்பையன்ஜி.

வால்பையன் said...

இன்னும் எதாவது புது வார்த்தைகள் இருந்தால் வந்து சொல்லிவிட்டு போங்கள்

வால்பையன்

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Madras_bashai


full Chennai Tamil dictinory

வால்பையன் said...

நன்றி அனானி

வால்பையன்

ரமேஷ் வைத்யா said...

பாடு என்பதன் பொருள்: மனைவியைத் திருப்திப்படுத்த முடியாமல், அவளைப் புணரும் வெளியாளுக்குக் கைச்செலவுக்குக் காசு கொடுத்து பராமரிப்பவன்.
லவடா என்றால் விலைமாது. பால் என்பது மகன் அல்லது மகள். சத்தாய்த்தல் மதுரை பாஷை அல்ல, சென்னை வழக்கு.
லந்து என்பது கிண்டல்.
மானாவாரி என்பது மழையை நம்பி நடத்தப்படும் பாசனம்/விவசாயம்.

!

Blog Widget by LinkWithin