இந்தி சினிமாவும், தமிழகமும்,,,...

போன் எடுத்துட்டு போனா சரியா முள் எடுத்து மீன் சாப்பிட முடிவதில்லைன்னு இன்னைக்கு போனை வீட்லயே வச்சிட்டு போனேன், ஆனாலும் கை சும்மா இருக்காதே, அங்கே பார்சல் மடிக்க வைத்திருந்த பழைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பேப்பரை எடுத்து புரட்டினேன், அதில் நான் படித்த கட்டுரையின் சுருக்கம் இது

breaking language barriers என்ற தலைப்பு தான் அந்த கட்டுரை படிக்கத்தூண்டியது. கட்டுரை ஆசிரியர் வட இந்தியர் என்பது பெயரை பார்க்கும் பொழுதே தெரிந்து, அவர் சொல்றார்.

2001-2011 நடந்த கணக்கெடுப்பில் அதாவது உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்ற பகுதியில் அதற்கு முன்பை விட 50%க்கும் அதிகமானோர் இந்தி தெரியும் என குறிப்பிட்டுள்ளனர், அதனால் இந்த ஆட்சி தான் இந்தியை திணிக்கிறது என சொல்லமுடியாது

1968 ஆம் ஆண்டு ராஜ்கபூர், வைஜெயந்திமாலா நடிந்த சங்கம் என்ற திரைபடம் சென்னை சாந்தி தியேட்டரில் 188 நாட்கள் ஓடியது, 1969 ஆம் ஆண்டு வெளியான ஆராதனா(ருப்புதரா மஸ்தானா பாட்டு) என்ற திரைபடமும் மாஸ் ஹிட்.ஆரம்பத்தில் இருந்து சமீபத்தில் வந்த dangal படம் வரை தமிழகத்தில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது, dangal திரைப்படம் தமிழகத்தில் 153 திரையங்களில் திரையிடப்பட்டது எங்கிறார்

மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன் அவ்ளோ ஏன் இளம் நடிகர் தனுஷ் கூட இந்தியில் நடிப்பதை பெருமையாக கருதிகிறார், ஆனால் இந்தி நடிகைகளை தவிர ஆண் நடிகர்கள் தமிழ் படங்களில் லீடிங் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றது இந்தி என முடிக்கிறார்.



மறுத்து பேசும் திரைதுறை பிரமுகர் சொல்கிறார். நகரமயமாக்கலின் காரணமாக மக்கள் CBSE மற்றும் ISBE!?(அப்படி ஒன்னு இருக்கா) பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்கிறார்கள், அங்கே ஹிந்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

ஆதியில் இருந்தே சென்னையில் மார்வாடிகள் அதிகம், மேலும் மேல் சொல்லப்பட்ட படங்கள் தமிழகத்தில் ரிபீட் ஆடியன்ஸை பெற காரணம் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். dangal  திரைபடம் நேரடி இந்தியில் 24 திரையரங்களில் மட்டுமே திரையிடப்பட்டது, தமிழில் டப் செய்யப்பட்டது தான் 153 திரையிரங்களில் வெளியிடப்பட்டது.

சென்னை, வேலூர் பகுதிகளில் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களும், நாகை, கோவை பகுதியில் மலையாளப்படங்கள் வெளியிடுவதும் இயல்பான ஒன்று, அங்கே அந்த மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருப்பதால். மற்றப்படி மக்கள் சினிமாவில் மொழியை தேடுவதில்லை என முடிக்கிறார்

இந்த கட்டுரை வெளிவந்தது நவம்பர் 2018 ஆம் ஆண்டு. எங்க இழுத்து எதுல கொண்டு போய் முடிச்சி போடுறான் பாருங்க, இவனுங்க மொழி வன்புணர்வுக்கு தமிழ் தான் கிடைச்சதா கிறுக்கு கூவைங்க.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin