தேர்தல் பயத்தில் மோடி....

சர்வதேச அரசியல் களத்தில் இம்ரான்கானின் இந்த முன்னெடுப்பு பாகிஸ்தான் பற்றிய முன் முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வைத்துள்ளது. நான் பல முறை சொல்லி வந்துள்ளேன், உலக அரங்கில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவது இந்தியா மட்டுமல்ல, அதற்கு நிகராக பாகிஸ்தானும் தான் என்று

இந்தியாவில் ராணுவ தளபதி ஆட்சியை பிடிக்க வழியில்லை, பாகிஸ்தானில் நடந்தது. பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் பெனாசீர் பூட்டோ(இஸ்லாமிய நாடுகளில் பெண் அரசியல் களத்தில் இருப்பதே பெரிய விசயம்) படுகொலை செய்யப்பட்டார்ஷீயா பிரிவு இஸ்லாமியர்கள், சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களில் வெடிகுண்டு வீசுவார்கள், மதம் என்பதே மடதனம் என்பது என் நிலைப்பாடு, மதம் பிடித்து விட்டால் குழந்தை, பெண் என்று கூட பார்க்காமல் கொலை வெறியோடு நோக்கும் சைக்கோதனம் வந்துவிடும்

இஸ்லாம் மட்டுமல்ல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின் நடந்த வன்முறையில் ஒரு கர்ப்பவதி பெண்ணில் கருவை உருவிய கொடுரம் இந்துதுவா தீவிரவாதிகளால் செய்யப்பட்டது. இந்த கொடூரங்களின் மூளையாக செயல்பட்டது அப்போதைய குஜராத் முதல்வர் மோடியும், இன்ன பிற ஆர்,எஸ்,எஸ் தலைவர்களும் தான், ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கை உடைத்துவிட்டார்கள்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்பு ப்டை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது துயரமான சம்பவம். கவனிக்க, இதே போன்ற வன்முறையில் தன் பாட்டியை, தந்தையை இழந்த ராகுல் அதை வைத்து அரசியல் செய்யவில்லை, ஆனால் மோடியோ இறந்த வீரர்களின் புகைபடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்நான் ஏழைதாயின் மகன், டீகடையில் டீ ஆத்திய டக்ளஸ் நான் தான் போன்ற உருட்டுகள் எடுபடாமல் போனதால் இப்படி கீழ்தரமான அரசியல் செய்வதோடு மட்டுமல்லாமல் இன்றைய பிரச்சாரத்தில் பாகிஸ்தானை நம்பாதீர்கள், இந்திய ராணுவத்தை நம்புங்கள் நாம் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என பேசியுள்ளார்

நான் ஹிட்லர் காலத்தில் பிறக்கவில்லை, ஆனால் ஹிட்லரின் பிரச்சாரம் எப்படி இருந்திருக்கும் என்பதை மோடியின் பிரச்சாரத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. மக்களிடம் அன்பை விதைக்காமல், சமத்துவத்தை விதைக்காமல், பிரிவினையை தூண்டி வன்முறை சம்பவத்தை ஏற்படுத்துவதே மோடியின் நோக்கமாக தெரிகிறது

,

தேர்தலில் வெற்றி பெற அமைதிபடை அம்மாவாசைக்கு நிகராக எல்லா வேலையும் மோடி செய்வார் என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகம் இல்லை, நான் மக்களை நம்புகிறேன், நிச்சயம் யோசிப்பார்கள், என் பக்கத்து வீட்டில் இருக்கும் இஸ்லாமிய சகோதரன் நிச்சயம் என்னை விரோத பார்வையில் பார்க்கவில்லை, அவனுக்கு ஆபத்தென்றால் அவனுக்கு பாதுகாப்பாக நான் நிற்பேன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin