சரணமா, சங்கராபரணமா.........

முன்னொரு காலத்தில் ஒரு குருகுலம் இருந்தது, அதில் பல மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். குரு தினமும் பாடம் எடுப்பார், இவ்வாறு நன்றாக போய்கொண்டிருந்த குருகுலத்தில் ஒரு நாள் ஒரு பூனை நுழைந்தது, அது மாணவர்கள் படிக்கும் பொழுது குறுக்கும் மறுக்குமா நடந்து மாணவர்கள் படிப்பவர்களுக்கு தொல்லை தந்தது.

அதனை கவனித்த குரு, அந்த பூனையை பிடித்து தூணில் கட்ட சொன்னார், மறுநாளும் பூனை வந்தது, குரு தூணில் கட்ட சொன்னார், இவ்வாறு குரு வரும் முன்னரே பூனையை பிடித்து தூணில் கட்டும் அளவுக்கு மாணவர்கள் பழகிபோயினர்,

ஒருநாள் அந்த குரு இறந்து விட்டார், புதிதாக ஒரு குரு வந்தார். பாடம் எடுக்கும் பொழுது தூணில் பூனை கட்டியிருப்பதை பார்த்து ஏன் அதை கட்டி வைத்துள்ளீர்கள் என வினவினார், முன்பு இருந்த குரு பாடம் நடத்தும் பொழுது இவ்வாறு பூனையை தூணில் கட்ட சொல்லியுள்ளார் என்றார்கள். ஒருவேளை இது எதாவது சடங்காக இருக்கும் என நினைத்த புதிய குரு, அப்படியே ஆகட்டும் என்றார், ஒருநாள் அந்த பூனையும் இறந்தது.

மறுநாள் புதிதாக ஒரு பூனை எங்கிருந்தோ பிடித்து வரப்பட்டு தூணில் கட்டப்பட்டது

எதற்காக இந்த கதை என்று உங்களுக்கு புரிந்திருக்கும்

ஏன் சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என நீதிபதி கேட்டார், அது பழக்கத்தில் இல்லை என்று பதில் சொன்னார்கள். அப்ப பழகிகோங்கன்னு தீர்ப்பு சொல்லிட்டார்,

சமய சடங்குகள் எல்லாமே இதை ஏன் பண்றோம்னு தெரியாமலே செய்யப்படுபவை தான். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். ஆனால் அந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் பொழுது, அந்த பிற்போக்குதனத்தை கட்டுடைக்கும் பொழுது. நம்பிக்கையாளர்கள் தங்களை நிர்வாணபடுத்தியதை போல் உணர்கிறார்கள், அதனால் தான் அவர்களால் நிதானமாக அதனை எதிர்கொள்ள முடியவில்லை



சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பின்புலத்தை ஆராயவேண்டிய தேவை பாஜகவுக்கு என்ன இருக்கிறது? நீங்கள் ஆராய்ந்து தான் அனுப்பீவீர்களானால் நீங்கள் தான் அய்யப்பனை காப்பாற்றுகிறீகளா? மேலும் பாஜகவினரின் அறிக்கைகளை புலி வருது கதை தான்

மெரினாவில் பொது மக்கள் போராடிய பொழுது காவல்துறை என்ன அட்டாகாசம் செய்தது என்பதை அறிவோம், ஆனால் பாஜகவோ காவல்துறை தன் கடமையை செய்தது என அறிக்கை விடுத்தனர், தூத்துகுடியில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் என்றனர், ஆனால் இன்றோ காவல் துறையின் அராஜகம் என்கிறார்கள்..

ஆணுக்கு மட்டும் என ஒரு கடவுள் இருக்குமானால் உலகில் ஆண்களை மட்டுமே படைத்திருக்க வேண்டியது தானே கடவுள். இதுக்கு ,மேல நாம என்ன தான் லாஜிக்கா பேசினாலும் நீ நாத்திகம், உனக்கு என்ன அக்கறை என்பார்கள்.

உங்கள் முகதிரையை கிழிக்க என்போல் ஆட்கள் வேண்டுமே சங்கீஸ்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin