பாலியல் குற்றங்கள்!..........

சமீபமா #metoo என்ற ஹேஷ்டாக் மூலம் பெண்கள் தாங்கள் அடைந்த பாலியல் தொல்லைகள் வெளிபடுத்தி வருகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் குறித்தான விரிவான கட்டுரை..

ஏற்கனவே சொன்னது தான். எதாவது ஒரு வகையில் பெண்களை கவருகிறதே எல்லா ஆண் உயிரினக்களும் இயற்கை அளித்த விதி, ஆனால் மனிதம் மற்ற விலங்குகளில் இருந்து நாகரிகம் அடைந்துவிட்டான். உளவியல், உடலியல் எல்லாம் கற்றுக்கொண்டான், ஆனாலும் பாலியல் குற்றங்கள் தொடர்கின்றன,

பெருவாரியான காரணமாக வாய்ப்புகளே பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. இறுதிசுற்று படத்தில் அந்த ட்ரெயின் காட்சி ஒரு உதாரணம் மட்டுமே, அதே போல் பரிட்சையில் பாஸ் ஆக, வேலை பெற என வாய்ப்புகள் வேண்டிய எல்லா பகுதிகளிம் ஆண் பாலியல் தொந்தரவு செய்கிறான்.



அடுத்ததாக ப்ளாக்மெயில், உதாரணத்திற்கு அண்ணியின் மாற்று உறவை காட்டி கொழந்தன் ப்ளாக் மெயில் செய்து தன் இச்சைக்கு அழைப்பது. அது போல் தவறுகளை காட்டி நீ இதை சொன்னால் நான் அதை சொல்வேன் என ப்ளாக்மெயில் செய்வது போன்றவன்றிலும் பாலியல் தொந்தரவு நடக்கிறது.

ஆப்ரிக்க வளராத நாடுகளில் குழந்தைகள் சிறுவயதில் கர்ப்பமாவது அதிகமாகியிருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் குழந்தைகள் திருமணம் சகஜமாக நிகழ்கிறது. வளர்ந்த மேலை நாடுகளில் மட்டுமே குழந்தைகள் தனியாக தூங்கவைக்க படுகிறார்கள். இங்கே அண்ணன், மாமா, தாத்தா என நாம் நம்பி குழந்தைகளை தரும் ஆட்களால் பாலியல் தொந்தரவு நடக்கிறது.

சாதியம் விட்டு போகக்கூடாது, சொத்து சொந்தத்தில் தான் இருக்கனும் என பெற்றோர்களால் கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைப்பதும் ஒரு பாலியல் குற்றம் தான். அந்த பெண் பொம்மை தான் அந்த பாலியல் வாழ்கையை அனுபவிக்கிறாள். நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்

ஆழ்கடலில் கட்டவிழ்ந்து
விடப்பட்ட உயிர்
தப்புதலுக்கு ஒப்பானது
ஒரு பிரியமில்லா
கலவியின் முடிவை
எதிர்நோக்கம்
ஆசுவாசம்

அந்த கவிதையில் பாலியல் குற்றத்தின் வலி உணரப்பட்டால் உங்களுக்கும் மனசாட்சி இருக்கிறது

உலகின் நேரடியான 56% பெண்களுக்கும் மேல் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். வன்புணர்வையும் சேர்த்து. என்னை கேட்டால் இது 80% இருக்கும் என்பேன். இதை விட பெரிய அவலம் இந்த தொடர் தொல்லை தாங்கமுடியாமல் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் ஏன் பெரும்பாலனா குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை?



ஒரு சிலர் நான் கொடுத்த விலைக்கு பலன் கிடைத்துவிட்டதாக தன்னை தானே சமாதானம் செய்துகொள்கிறார்கள், அதனால் அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை.

பலர் சமூகம் நம்மை தப்பாக பார்க்கும் என குற்ற உணர்வை தனக்குள் புதைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, பின்னாளில் அந்த பெண்ணுக்கு மனநோய் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு கூட போகலாம்.

ஒருகாலத்தில் தாய்வழி சமூகமாக வாழ்ந்த மனித இனம், சாதி, மதம், கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை பூட்டி வைத்தது பெரிய காரணம். சமூகத்துக்கு செக்ஸ் கல்வி அவசியம், பெண்களுக்கு ஒழுக்கம் சொல்லி கொடுப்பதை விட ஆண்களுக்கு ஒழுக்கம் சொல்லி கொடுப்பதே சரியான சமூகம்

மொத்த உலகிலும் பெண்களை விட ஆண்களுக்கே செக்ஸ் புரிதல் குறைவாக உள்ளது. ஆண்கள் தங்களை துணையிடம் உறவுக்கு அனுமதி கேட்கலாம். வற்புறுத்தக்கூடாது. செக்ஸ் என்பது win-win method முறை, அதாவது நீங்கள் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும். உன்னை சந்தோசபடுத்தி நான் பார்க்கனும் என்பது. ஒருவர் மட்டுமே சந்தோசம் அடைவது உண்மையில் செக்ஸ்க்கு தோல்வியே.

பாலியல் கல்வியை குழந்தைகள் அம்மனாக திரியும் போது கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முழுமையான புரிதல் இல்லை என்பதே இங்கே பிரச்சனை. பிற உயிர்களை மதிக்கனும், பிறர் மனதை காயபடுத்தாமல் வாழும் அடிப்படை நேர்மை இருந்தாலே போதும், பாலியல் குற்றங்கள் மறைய தொடங்கும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin