குடியை நிறுத்துவது எப்படி?

குடியை நிறுத்துவது எப்படி?

எனது அனுபவத்தை, நான் கடைப்பிடிப்பதை பகிர்கிறேன், ட்ரை பண்ணி பாருங்க.

எல்லாத்துக்கும் முன்னால முதல் விசயம் நீங்க குடியை உங்களுக்காக நிறுத்துறிங்க, வேற யாருக்காகவும் விடுவதா கமீட் பண்ணிகிட்டா அவங்க கூட பிரச்சனை வரும் போது அவங்களை வெறுப்பேத்த இரு மடங்காய் குடிப்பீர்கள், ஆக இது முழுக்க முழுக்க உங்களுக்காகன்னு கமீட் பண்ணிக்கோங்க

என்னை பொறுத்தவரை தம்மை விடுவது தான் கஷ்டமா இருந்தது, ஏன்னா காசு இல்லைனா சரக்கு அடிக்க முடியாது ஆனா 5 ரூபாய் இருந்தாலும் பீடியாவது வாங்கி குடிக்கச்சொல்லும், உங்களுக்கான முதல் டாஸ்க் பாக்கெட்டில் பணம் வச்சிக்காதிங்க, டெபிட் கார்டை வீட்டில் வச்சிட்டே வெளிய போங்க,

இது இரண்டாவது டாஸ்க், எப்பவும் வயிறை காலியா வச்சிக்காதிங்க, வீட்டை விட்டு வெளிய போகும் போது கண்டிப்பா சாப்பிட்டு வெளிய போங்க, குடிப்பதாக இருந்தாலும் சாப்பிட்ட பிறகு மொடா குடி குடிக்க முடியாது, குடியை நிறுத்தனும்னு நினைப்பவர்கள் இதை கண்டிப்பா செய்யனும்



ஆனாலும் எனக்கு படிப்படியா விடுவது, குறைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, விட்டா உடனே எல்லாத்தையும் விடனும். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாவே அதிகமா குடிப்பாங்க, ஏன்னா நாக்கில் சரக்கு சுவை மாற சிகரெட். மீண்டும் சிகரெட் சுவை மாற சரக்கு, ஒன்னு இருந்தாலும் அது இன்னொன்னுக்கு இழுத்துட்டு போயிரும்

குடி பழக்கமாக இருந்து நோயாக மாறிய பின் அதற்கு அறுவை சிகிச்சைக்கு சமமான வலியை அனுபவித்து தான் வெளியே வர முடியும், சட்டுன்னு தண்ணியை விட்டவுடன் உங்களுக்கு நாலு நாட்களுக்கு தூக்கம் வராது. தூக்க முயற்சி பண்ணி கண்ணை மூடினால் யாரோ காதில் பேசுவது போல் இருக்கும், எதிர்மறை சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிக்கும், பய உணர்வு மீண்டும் தண்ணி அடிக்க இழுத்துட்டு போயிரும்

ஆக, தண்ணி விட நினைப்பவர்களுக்கு சப்போர்ட் வேணும், மனைவி அல்லது டீவி இல்லாம அவர்களால் தண்ணியில் இருந்து வெளிய வர முடியாது. விடிய விடிய முழிச்சிருந்து உடம்பு சூடு பிடிச்சிக்கும், அதுனால நிறைய தண்ணி குடிக்கனும், ஒரு லிட்டர் தண்ணிர் பாட்டிலில் எலக்ட்ரால் பவுடர் பெரிய பாக்கெட் ஒன்னை கலந்து குடிப்பது இன்னும் நலம், உடல் பதட்டத்தை குறைக்கும்

குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம், தண்ணிய விட்ட சில நாட்களுக்கு கோவம் பயங்கரமா வரும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவோம், மப்பில் செய்வதை விட அதிகமா கோவம் வரும். அச்சமயத்தில் குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம், அவங்க திரும்பி கோவபட்டாலோ, உங்களை உதாசினபடுத்தினாலோ மீண்டும் தண்ணி அடிக்க சொல்லும், அதிலிருந்தும் மீழ்வது தான் பெரும் சவால். ஏன்னா பெரும்பாலும் விட நினைப்பவர்கள் முடியாமல் இருக்க காரணம் குடும்ப சப்போர்ட் இல்லாதது தான்.



கூச்சபடாமல், ஆம் நான் தண்ணியடிப்பதை விட்டுட்டென்னு சொல்லுங்க, அவர்கள் அவமான படுத்தினாலும் உங்களால் முடியும்னு உங்களுக்குள்ளே சொல்லிகொள்ளுங்கள், உங்கள் மேல் அக்கறையுள்ள நண்பர்களிடம் அதிகம் நேரம் செலவழியுங்கள், குடி பழக்கம் இல்லாத நண்பர்களிடம் பேசுங்கள், எக்காரணம் கொண்டும் குடியை மறக்க ஹான்ஸ், பாக்குன்னு வேறு பழக்கத்திற்கு போகாதிங்க, தம் பழக்கம் இருந்தாலும் டெம்ட் ஆகும் போது மிட்டாய் சுவைக்கலாம், நான் ஆர்பிட் எடுத்துகிறேன்.

குடிப்பதற்கு ஆயிரம் சாக்கு(காரணம்) சொல்றமே அதுபோல இன்றே குடியை நிறுத்த காரணத்தை பட்டியலிடுங்கள். கூச்சபடாமல் நீங்கள் அவமான பட்டது, ரோட்டில் விழுந்து கிடந்தது, குடிக்க பணமில்லாமல் வீட்டில் திருடியது என எல்லா காரணத்தையும் எழுதுங்கள், இதுவா உங்கள் இயல்பு? இதுவா உங்கள் சுயம் என உங்களையே கேளுங்கள். இனியும் அவமானப்பட கூடாதென்றால் இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு உறுதி எடுங்கள்.

எல்லா அரசு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இருக்கும், ஒரு தடவை சும்மா போய் பாருங்க. எத்தனை பேர் போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரியும். அந்த நிலமை உங்களுக்கும் தேவையான்னு கேட்டுக்கோங்க

விடுபட்ட முயற்சிகள் எதாவது இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin