கடைபிடிக்கனும்

1. பிரச்சனைன்னு யாராவது போன் பண்ணா நாம அவசரத்தில் இருந்தாலும் இரண்டு நிமிசம் ஒதுக்கி, நான் இருக்கேன் எதுவாக இருந்தாலும் சமாளிச்சிகலாம்னு நம்பிக்கை கொடுக்கனும்.
2. கடன் கேட்டா இருந்தா கொடுக்கனும், இல்லைன்னா இப்ப இல்ல, நானும் ட்ரை பண்றேன் நீயும் ட்ரை பண்ணுன்னு சொல்லனும். அட்வைஸ்குற பேர்ல வெந்த புண்ணுல வெந்நீர் ஊத்தக்கூடாது.
3. நமக்கு ஒரு விசயம் தெரியும்னு தெரியாதவரை ஏளனமா நடத்தக்கூடாது, ஏன்னா நமக்கே தெரியாத விசயங்கள் நிறைய இருக்கு.
4. தெரியாதுன்னு சொல்லலாம். முடியாதுன்னு சொல்லக்கூடாது. உலகில் யாரோ ஒருவரால் முடியுமானால் நிச்சயமாக உன்னாலும் முடியும்னு நம்பனும்.
5. நடந்துமுடிந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதோ/கோவப்படுவதோ கூடாது. அதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கமுடியாது.
6. ஒருத்தரை பத்தி மற்றவர்கள் சொன்னதை வச்சி ஒரு பிம்பம் கட்டமைக்கக்கூடாது. நம்மகிட்ட எப்படி பழகுறாங்களோ அதை வைத்து தான் நட்பை கொண்டாடனும்.
7. எவ்ளோ முயற்சி பண்ணியும் ஒருத்தருக்கு நம்மை புரிய வைக்க முடியலைன்னா பிறகு எதற்கும் விளக்கம் கொடுத்து பயனில்லை. அதுனால் ஆமா நான் அப்படித்தான்னு சொல்லிட்டு போயிறனும்.
8. எந்த சூழல்நிலையிலும் ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்ததை சொல்லிக்காட்ட கூடாது.
9. நம் சுதந்திரம் அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே, மூக்கை தொடும் வேலை வச்சுக்கக்கூடாது.
10. ஒழுங்கின்மையே ஒழுங்கு. யாரும் இப்படித்தான் இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது. அது வெட்டியா நம்மை டென்சன் பண்ணும்.
இதெல்லாம் நான் கடைபிடிக்கும்/பிடிக்க நினைக்கும் கோட்பாடுங்கள். முடிஞ்ச அளவு என் மனசாட்சி படி ஃபாலோ பண்றேன். எங்கேயுனும் சறுக்கியிருக்கலாம். ஆனாலும் இவை தான் என் வாழ்க்கை கோட்பாடுகள்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin