எதிர் கருத்துடையவன் எதிரி அல்ல!...

அதிமுகவை கேள்வி கேட்டால் திமுகவை கேட்டியா என்பது
பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸை கேட்டியா என்பது
இந்து மதத்தை கேள்வி கேட்டால் இஸ்லாமை கேட்டியா என்பது..

நீ ஒழங்கா என்ற கேள்விக்கு , ஆம் ஒழுங்கு அல்லது ஒழுங்கில்லை என்ற இரு பதில்கள் தான் இருக்க முடியும். அட நீ ஒழுங்கான்னு கேள்வி கேட்பவனை திருப்பி கேட்டால் கூட பரவாயில்ல. அவன் ஒழுங்கா என மடை மாற்றுவது எப்படி பதிலாகும்

விஜயகுமார் என்ற நபர் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஃபாருக் அகமது என்ற நபருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்லை.எனக்கு விமர்சனம் உங்கள் கருத்தியல் மீது. உங்கள் கருத்தை சரியென நிறுவ முயல்வது உங்கள் கடமை, உரிமை. எனக்கு கருத்தியில் தவறென்று சாத்தியகூறுகளுடன் விமர்சிப்பதும் உங்கள் உரிமை.

நான் இஸ்லாமை விமர்சித்து அவர்களிடம் காவி பட்டம் வாங்கியது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை உங்களுக்கு நிரூபித்து உங்களிடம் நல்ல பேர் வாங்கனும் என்ற அவசியமும் எனக்கில்லை

ஆனால் நீ ஏன் இஸ்லாமை விமர்சிக்க மாட்ற, ஏன் கதைக்கு இஸ்லாம் பேர் வைக்க மாட்ற என்பது என் தைரியத்தை சோதிப்பது போல் தெரியவில்லை. மாறாக உங்களுக்கு இஸ்லாம் மேல் இருக்கும் வன்மத்தையே காட்டுகிறது. இதை தான் கொண்டைய மறைக்க தெரியலையே என்பார்கள். எனக்கும் இஸ்லாம் நண்பர்கள் இருக்காங்கன்னு ஆதார் அட்டைய தூக்கிட்டு வராதிங்க. பாம்பு எப்ப கொத்தும்னு கடப்பவனுக்கு தெரியாது. பாம்புக்கு தான் தெரியும்.சீனிவாசன் என்ற நபர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அவர் கருத்தியலுக்கும், நம்பிக்கைக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்ற விமர்சனம் உங்கள் கருத்தியல் மேல் தான். உங்களை முட்டாளாக நீங்களே நினைத்துக்கொண்டால் அதற்கு ஏன் எப்படி பொறுப்பாக முடியும்.

ஒரு மதவாத பாஸிச அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் பொழுது அதன் முகதிரை டார்டாராக கிழிப்பது தான் தைரியம். இந்த இந்து பெரும்பான்மையில் இந்து மதத்தை கிழிப்பது தான் தைரியம். இஸ்லாம் நாட்டில் இஸ்லாமை கிழிப்பது தான் தைரியம். அதை சிறுபான்மையினரும் சண்டைக்கு போன்னு என்னை உசுப்பேத்துகிறங்க.மதவாதிகளுக்கு எப்போதும் ஒரு பதில் சொல்லுவேன். எனது விமர்சனம் உங்கள் நம்பிக்கையை புண்படுத்துமேயானல் தவறு என் விமர்சனம் மீதல்ல. உங்கள் நம்பிக்கையில் தான் பிசுகு

பத்து வயசு பையனை ஒண்டிக்கு ஒண்டி வர்றியான்னு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் என்னை விட பலசாலிகளுடன் தான் மோதுவேன். மனிதமும், உண்மையும் வெல்லும்.

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin