எனது 500-வது பதிவு

2006 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் வலைபக்கங்கள் மூலம் ப்ளாக்ஸ்பாட் அறிமுகம் ஆகும் முன் வரை யாஹூ மெசஞ்சரில் தான் கடலை போட்டுகிட்டு இருப்பேன். அப்ப என் புனைபெயர் கைப்புள்ள.

முதலில் அறிமுகம் ஆனது இட்லி வடை வலைப்பூ. கமெண்ட் போடுவதற்காக கூகுள் அக்கவுண்ட் துவங்கினேன். பின் அறிமுகமான தருமி Sam George அவர்களின் வலைப்பூ பார்த்த பின் தான் எனக்கும் எழுதனும் என்ற ஆர்வம் வந்தது. கமெண்டுகளில் என் விவாதத்தை பார்த்து என் வலைப்பூவும் வேகமாக ஃபாலோயர்ஸ் சேர்ந்த்தது..

இணையம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு நான் முதலில் பார்த்த பிரபலம் தருமி அவர்கள் தான். இன்னும் அதே தந்தையின் அக்கறையோடு அறிவுரையுடனும், நலமும் விசாரிப்பார். அடுத்து பார்த்தது மறைந்த டோண்டு அவர்கள். அவரிடன் நான் கற்றுக்கொண்டது கருத்து வேறு நட்பு வேறு என்ற கோட்பாட்டை. அவரது பக்கத்தில் என்ன கமெண்ட் வந்தாலும் அழிக்காமல் அப்படியே வைத்திருப்பார். அவருடன் நான் எவ்வளவு முரண்பட்டாலும் அடிக்கடி போன் பண்ணி இணையம் சம்பந்தமில்லாமல் என் நலன் விசாரிப்பார். அவரிடமும் ஒரு தந்தையின் அன்பு இருந்தது

நான் துவண்டு கிடக்கும் பொழுதெல்லாம் என் தோள் தட்டி, உன் திறமை நீயே அறியாமல் இருக்க வால், இதெல்லாம் உனக்கு ஒரு பிரச்சனையா. உன்னால் முடியாட்டி யாரால் முடியும் என நம்பிக்கை கொடுத்து ஆரம்பத்தில் இருந்து உடன் பயணித்த அண்ணன்கள்
ஜ்யோவ்ராம் சுந்தர் M.m. Abdulla P Kathir Velu ஈங்கூர் ரகு Saadiq Samad Shallum Fernandas Ramesh Vaidya மிக முக்கியமானவர்கள்

தோள் மீது கை போட்டு, ஒரே சிகரெட்டை மாறி மாறி அடித்து, சியர்ஸ் சொல்லி, ஒரே படுக்கையில் ஒன்றாய் படுத்து, எனக்கு ஒரு பிரச்சனையென்றால் இது வேண்டுமானாலும் எனக்காக செய்யும் தோழமைகள்
Murali Krishna Shathish S S சாந்த குமார் வா.மு. கோமு Rasu Rasu Krenn Samuel Rajesh Coimbatore Mony Coimbatore முக்கியமானவர்கள்

என் தந்தை மரண படுக்கையில் கிடந்த பொழுதும், நான் தலையில் அடிபட்டு முகவாதம் வந்து கிடந்தபொழுதும் எனக்கு நம்பிக்கை அளித்து அனைத்து உதவிகளும் செய்த நண்பர்களை மறந்தால் நான் மனிதனே அல்ல. அவர்கள் இல்லையென்றால் இன்றும் எனக்கு பேச்சு வராமலே போயிருக்கும்

என்னுடன் விவாதிக்க முடியாமல் என்னை அசிங்கமாக திட்டிவிட்டு, ப்ளாக் செய்து போன பின் என்றோ பார்க்க நேர்ந்தால் நான் முன் சென்று கை கொடுத்து தல எப்படி இருக்கிங்கன்னு கேட்கும் பொழுது வெட்கி மன்னிப்பு கேட்டவர்களும் என் நட்பு வட்டத்தில் உண்டு.

சூழலால் பிரிந்த காதல், உன்னுடைய இந்த காதலுக்கு நான் தகுதியானவள் தானான்னு தெரியலன்னு பிரிந்த காதல் என சில காதல் கதைகளும் எனக்கு இணையத்தில் நடந்தது. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் இனி கனவிலும் எனக்கு கிடைக்காது. பிரிவுக்கு கூட நானே தான் காரணமாய் இருப்பேன். எனக்கு கோவமோ, மகிழ்ச்சியோ இயல்பாய் வெளிபடுத்த தெரியாது. அதீதமாய் வெளிப்படுத்தி மூச்சுமுட்ட செய்துவிடுவேன். எதேனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிய நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேனோ என பயந்தே கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னையே வெறுக்கும்படி செய்து மொத்தமாக விலகி சென்றாள் கண்ணம்மா!

இதை ஏன் மச்சி எங்கிட்ட சொல்றிங்க என்றால், நீ அடி வாங்கினா கூட வெட்கமில்லாம எழுதுவ மச்சி, ஆனா உன் பர்சனல் மட்டும் எழுதுவுவே தவிர பிறர் பர்சனல் எழுத மாட்ட, நான் உன்னை நம்புறேன் மச்சி என நெகிழசெய்யும் தோழிகளும் நிறைய. துரதிர்ஷ்டவசமாக கண்ணம்மா யார் என்று சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவருக்கும் மியூச்சுவல் நண்பர்கள் அதிகம் என்பதால்.. என் பதிவும், முந்திரிகொட்டை மாதிரி முதல் ஆளாய் போடும் கமெண்டும் போதுமே. ஆனாலும் கண்ணம்மா நல்ல மெச்சூர்ட். அவளிடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு யாரிடமும் பேச்சை வளர்க்க மாட்டா. இருப்பினும் நடந்த தவறுக்காக மனப்பூர்வமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவையல்லாது
இணையத்தில் என் தம்பி Rajan Radhamanalan
என் மகள் காயத்ரி
என் மருமகன் ராஜேஷ் பச்சையப்பன்

நான் ஒன்பதவாது வரை தான் படிச்சிருக்கேன்னு சொன்னா பொய் சொல்றேன்னே நினைக்கிறாங்க. படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை. என் ப்ளஸ்னு நான் பார்த்த வரையில் படிக்கும் காலத்தில் எனக்கு பொழுது போகலைனா பாடபுத்தகம் தான் எடுத்து படிப்பேன். கணக்கு, ஆங்கிலம் தவிர்த்து அனைத்தியும் படிச்சிருவேன். இதை படித்து மார்க் வாங்கனும் என்பதை விட, இதில் எதோ இருக்கு அது என்னான்னு தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வம் எனக்கு சின்ன வயதில் இருந்தே உண்டு.

காலை இரண்டு மணி நேரம், இரவு இரண்டு நேரம் வீட்டில் விழித்திருக்கும் நேரம்(அதிகபடியாக) மற்ற எல்லா நேரமும் எனக்கு இணையம் தான். இணையம் தான் கற்றுக்கொடுத்தது, இணையம் தான் சம்பளம் கொடுத்தது, இணையம் தான் நம்பிக்கை கொடுத்தது, இணையம் தான் உயிர் கொடுத்தது. என் வாழ்க்கையை நான் இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறேன். என் ஆசானாக என் இணைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யபோறேன்னு தெரியல.

உண்மையில் அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா, நீண்ட வருடங்கள் உயிர் வாழும் ஒரு மரமாக பிறந்து என் நன்றியை காணிக்கை ஆக்க விரும்புறேன்..

8 வாங்கிகட்டி கொண்டது:

பொன்.பாரதிராஜா said...

வாழ்த்துக்கள் வாலு...வது பதிவுக்கும் இதே மாதிரி வந்து வாழ்த்து சொல்லுவேன்..ஆனா இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதுங்க...ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் ரொம்ப லேட் ஆகுது.

Yaathoramani.blogspot.com said...

ஐநூறு பதிவுகள் கடப்பது என்பது
எத்தனை சிரமம் என்பது
அதைக் கடந்தவர்களுக்கே புரியும்

கடந்தும் முதலில் இருந்த துடிப்புடன்
தொடர்வதற்கு எத்தனைஅர்ப்பணிப்பு
வேண்டும் என்பதுவும் தொடர்பவர்களுக்கே
நிச்சயம் புரியும்

நன்றியுடன் அனைவரையும் நினைவு கூர்ந்த விதம்
மனம் கவர்ந்தது

பதிவுகள் ஆயிரமாயிரமாய்த் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ஈங்கூர் ரகு said...

அருமை வாழ்த்துகள் தல.இன்னும் அதிகமா எழுதுங்க

Unknown said...

Congrats! keep rock!

http://www.viyanpradheep.com/

சாமக்கோடங்கி said...

உண்மையை மனம் திறந்து பேசுபவர்கள் மிகக் குறைவு. உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் பலம் புரிகிறது.வாழ்த்துக்கள்.நன்றி.

தருமி said...

அட.... என்னப்பா இது இங்க யாருமே வரலை! அநியாயமாப போச்சே...blogனா என்னன்னே மக்களுக்குத் தெரியாமல் போச்சா. நானும் fbல பாத்துட்டு இங்க வந்தேன். கடை வெறிச்சோடிக் கிடக்குது. இங்க தான் எழுதுறது எல்லாமே "எப்போதும்" கொட்டிக்கிடக்கும் - காலத்துக்கும். பிறகு ஏன எல்லாரும் இப்படி வெறுத்துட்டாங்க?

500வது பதிவு. தொடரட்டும்.

Unknown said...

அருமை

ராஜவம்சம் said...

இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்
வாழ்த்துக்கள்.

!

Blog Widget by LinkWithin