வாழ்வென்ற வஸ்து!

பிறப்பிற்கும் சாவிற்கும்
ஆன இடையில்
வாழ்வென்று ஒன்றிருக்கிறது
அது முதலில் என்னை மகன் என்றது
பின்னர் சகோதரன் என்றது
பின் கணவன் என்றது
பின் அப்பா என்றது
முடிந்தவரை 
கடமைகளை செய்தேன்
ஒன்றிற்கும் உதவாதவன் என்றது
செத்தபின் அழுதது
பின் பிணம் என்று
தூக்கி போட்டது


********

முற்றிலுமாக தொலைத்த
ஒருவன் தன்னை
தொலைந்துபோனவனாக தானே
கருத முடியும்
யாரிடம் கேட்பது
தொலைத்த வாழ்வை
அறிந்தவர்களுக்கு தானே தெரியும்
இவன் கற்றுக்கொள்ளவே
வாழ்வை தொலைத்தான் என்று

********
வீதி என்பது
நேராக செல்வது
நாம் இடவலம் பாப்பதில்லை
ஆங்கோர் சாவு என்றால்
என்ன சாதி என
முதலில் கேட்ப்போம்
எவன் செத்தால்
நமக்கென்ன
நம் சாவுக்கு வருபவன்
வாங்கிவரும் ஜவ்வாது மழை
நமக்கு மணக்கவா போகிறது

********

பேசிக்கொள்ள
விசயம் தோணும் போது
நான் பயன் படுவேன்
ஆம் நான் அயோக்கியன்
உங்கள் பணத்தை 
கொள்ளையடித்தவன்
நீங்கள் விருப்பியவளை
கவர்ந்து சென்றவன்
உங்கள் குழந்தைகள் உணவை
பிடிங்கி தின்றவன்
நாத்திகனாய் வாழ்தற்கு
ஒரு அடையாளமாக
இருக்க வேண்டாமா!
துகில்கையில்
குற்ற உணர்வு வரலாம்
இருக்கவே இருக்கு
சரக்கு!


*******

செத்த பிறகு
சங்கூதறவன் வந்து
காசு கேப்பான்
டிப்ஸ் கொடுங்க
நாம் தான் வள்ளலாச்சே


********

கண்ணாடியில் தெரியும்
பிம்பத்தை தவிர
வேறதும் நான்
உருவாக்கியதில்லை
நீங்களே
கற்பனை கொண்ட பிம்பத்திடம் கேட்போம்
நான் உங்களை
காயப்படுத்தினேனா
ஆம் நான் மத மறுப்பாளன்
நான் உங்களை காயப்படுத்தினேனா
ஆம் நான் சாதி மறுப்பாளன்
நல்ல வேளை எந்த மனிதனையும்
காயப்படுத்தவில்லை
சாவு சந்தோசமாக இருக்கும்


*********

தொலைந்து போன
பொருளை தேடிக்கொண்டிருக்கும்
குருடனை பார்த்து
எங்கு தொலைத்தாய்
என கேட்பவனே
இங்கு
அவர்கள் சமூகத்திற்கு
தேவையளவு செய்து விட்டதாய்
நம்புகிறார்கள்


********

இரு கைகள் பொத்தி
அழுவதென்பது
கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது
எனக்காக தானே அழுகிறேன்
பின் ஏன் என்று,
ஏன் இந்த பிம்பத்தை
வளர்த்தேன்று தெரியவில்லை
பிம்பத்திற்கும் எனக்குமான சண்டையில்
யாரோ ஒருவர் இறப்பார்
யாரோ ஒருவர் இருப்பார்.


********

என் அழுகை சத்தம் கேட்க வில்லையே
அது உங்களை தொந்தரவு படுத்தலாம்
நாம் தான் என்றுமே
எவன் செத்தாலும் கவலை பட்டதில்லையே
நமக்கு வழிப்பாதை என்பது
தெளிவான நீரோடையாய் வேண்டும்
சிறுதுளி ஒருவேளை
நாளை ஸ்டேட்டஸ் போட உதவலாம்
எதையும் பெறுவதற்கோ
எதையும் இழப்பதற்கோ
நாம் ஆயுத்தமாய் இல்லை
நாம் நாமாய் இருக்கிறோம்
எழுதினாயா ஒரு லைக்
செத்தாயா ஒரு மாழை
அவனவன் வாழ்வு அவனுக்கு********

சோதனைகள் மேருகேற்றுவதற்கு
என்பதெல்லாம் தங்கத்திற்கு தான்.
காகிதத்தை கொழித்தி பாருங்கள்
சோதனையின் வேதனை தெரியும்
உங்கள் அறிவுரைகளை
அடக்கி கொள்ளல் நலம்
நான் வேற மாதிரி
உங்களையும் கொழித்தி விடுவேன்,
சாவை பார்த்தவனுக்கு தான்
வாழ்வு தெரியும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

ராஜி said...

டிப்ஸ் ஹைக்கூ யோசிக்க வைக்குது

!

Blog Widget by LinkWithin