குவியல் (28.01.2012)

மிக மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் குவியல். ஆயிரம் பாலோயர்கள் தொட்டபிறகு ஒவ்வொரு நூறுக்கும் சொல்லும் நன்றி கூட சொல்ல முடியவில்லை. இணையம் பக்கம் நெருங்க முடியாமலும், தன்னிச்சையான சிந்தனைகளுக்கு முட்டுகட்டை போடுமளவுக்கு வேலை பளுவும் இருந்தது, இப்போதும் அப்படி தான், ஆனால் அவை எனது சிந்தனை ஓட்டத்திற்கு மிகவும் தடையாகவும், தன்னம்பிக்கை குறைவாகவும் சிந்திக்க வைப்பதால் மாற்றம் வேண்டி மறுபடி பழைய வால்பையன் திரும்ப வந்துவிட்டான். பலமுறை அலைபேசியிலும், மெயிலிலும் அங்கே அந்த பழைய வால்பையன் என கேட்டு உசுப்பி விட்ட நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இந்த குவியல் அர்பணம்!

****

இதை எழுதி கொண்டிருக்கும் பொழுது 1249 பாலோயர்ஸ் யார் அந்த 1250 ஆவது பாலோயர்னு தெரியல, என் பழைய குவியலை படித்தவர்களுக்கு தெரியும், என்னை பாலோ செய்யும் அனைவரையும் ப்ளாக் இருந்தால் கண்டிப்பாக நான் பாலோ செய்வேன், ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் தெரியப்படுத்தவும்!

****

நான் இப்போது சென்னையில் இருப்பது பல நண்பர்களுக்கு தெரியாது, முன் செய்த தொழிலில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிப்பார்கள், மேலும் என்மீது அக்கறை கொண்ட பலர் அது தனக்கு நேர்ந்த இழப்பாய் நினைப்பார்கள் என்பதே மிக முக்கிய காரணம். இன்று அறிந்தவர்கள் மன்னிக்கவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்!, நான் இழந்தது கொஞ்சம் பணத்தையும், நிறைய நேரத்தையும் தான், நம்பிக்கையை அல்ல.

****

10 வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த சென்னை சத்தியமாக இது இல்லை. இன்று எல்லாமே தலைகீழ். sky walk, express avenue என வாழ்க்கை எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. ஒரு சினிமாவுக்கு போகனும்னாலும் 500 வேணூம், எப்படி மக்கள் சமாளிக்கிறாங்கன்னு தெரியல, அதே நேரம் 15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!, எங்கேயும் எப்போதும் படத்துல சொல்ற மாதிரி இது சென்னை இல்ல, மொத்த தமிழ்நாட்டின் அடையாளம்னு சொல்லலாம்!


****

”மெளனகுரு” ன்னு ஒரு படம் பார்த்தேன். நீண்ட நாள் கழித்து நல்லதொரு திரைக்கதையை பார்த்த மகிழ்ச்சி, அதே நேரம் ஆனந்தவிகடனில் அவர் அளித்த பேட்டியில் கமர்சியலுக்காக நான் நகைச்சுவையையோ, சண்டை காட்சிகளையோ, பாடலையோ புகுத்த மாட்டேன் என பேட்டி அளித்திருந்தார், நியாயமா பார்க்கனும்னா மெளனகுரு படத்தில் ஆர்த்தி என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை, அது வலுகட்டாயமாக திணிக்கப்பட்டது தானே, ஒருமுறை ஜெயித்ததும் தலையில் கணம் கூடிகொண்டது போல, அவரது ஆசிரியர் தருமி ஐயா கொஞ்சம் சொல்லி தட்டி வைக்கவும்!(இதுல ஐயா கடைசியில் நாயகனும், நாயகியும் சைக்கிளில் போவது போல் எதிர்பார்த்தாராம், அது தானே எல்லா படத்திலும் நடக்குது, இங்கேயும் எதற்கு)
மற்றபடி நான் மிகவும் ரசித்த the game என்ற திரைபடத்திற்கு நிகரான திரைக்கதை.
நாயகன் தவிர்த்து வில்லன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தம். நாயகன் மட்டும் காலைகடன் கழிக்க தவறியவர் போல் முகத்தை வைத்து கொண்டு திரிகிறார், அவர் சிரிக்கவே கூடாதுன்னு இயக்குனர் கட்டளை போல!. நாயகன் வசனங்கள் அனைத்தும் கூர்மை ஆனால் முகத்தில் எந்த பாவமும் இல்லை(இது அந்த பாவம் இல்லை, நான் சொல்றது முகபாவம்), அதுவும் இருந்திருந்தா அருள்நிதி இன்னொரு சூர்யாவாக, விக்ரமாக வாய்ப்பிருக்கிறது. நான் முழுநீள விமர்சனங்கள்(முழுநீள படம் தானே எடுப்பார்கள்) எழுதுவதில்லை அதுக்கு நம்ம அண்ணன் ஊனா தானா இருக்கிறார், அங்கே படித்து கொள்ளலாம்! :)

சாந்தகுமாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, சினிமாவை எடுத்தால் அதை தமிழ்சினிமாவின் இலக்கணங்களுள் எடுத்தால் காலம் புறந்தள்ளி விடும்!

******

தனது தளத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு இலவச விளம்பரம் அளிப்பதாக அறிவித்திருந்தேன். கோவையில் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கல்யாணத்திற்கு தயாராக ஒரு மாப்பிள்ளை இருக்கிறார். சாதி, வசதி பிரச்சனையில்லை. மேற்படிப்புக்கு விருப்பப்பட்டாலும் அதை செய்து தர அவர் குடும்பம் தயாராக இருக்கிறது. தாய், தந்தை இல்லை. மாதம் 12,000 சம்பாதிக்கிறார்.
பெற்றோர் அற்ற ஆதரவற்ற பெண்ணுக்கு முன்னுரிமை. பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தால் இவருக்கு சூட்டாகாது, உங்களுக்கு தெரிந்து அப்படி எதாவது பெண் இருந்தால் எனது அலைபேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தவும்!

9994500540

arunero@gmail.com

மேலதிக தகவல்கள் தனிப்பட்ட முறையில் தரப்படும்!

****

ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு, அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை(டோண்டு மூடிட்டார் போல) திறக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கேள்வி எதுவானாலும் எனது புரிதலில் நிச்சயம் பதிலளிக்கிறேன்.

கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியாள் இல்லை தான், இருப்பினும் பதில் தேடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை தான்!

****

கவிதை மாதிரி..

குடியும், குடித்தனமும்.

கூடிக்கழித்து
குடித்து கும்மாளமிட்டதை தவிர
வேறொன்றும் மிச்சமில்லை
நலமா, சாப்பிட்டியா
என்பதை விட
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
என்பதே இன்று
நட்புகளில் உரையாடல்கள்!
நீண்ட தூரம் சென்று
திரும்பிய பின் தான் தெரிகிறது
குடித்தனத்தை மறந்து விட்டோம் என்று!
முதல் தேதிக்கு இன்னும்
நான்கு நாட்கள் இருக்கிறது
அது வரை மாதசம்பளக்காரனின்
தத்துவம் தொடரும்!..

****

குடிவெறி எதிர்ப்பாளர்கள் அதிஷாவிற்கும், லக்கிக்கும் இது அர்ப்பணம்! :)

52 வாங்கிகட்டி கொண்டது:

சாகசன் said...

அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை திறக்கலாம் என்றிருக்கிறேன் //
நாங்க எதுக்கு இருக்கோம் ??? எங்க கேக்கனும் கேள்விய ??

டிஸ்கி : ஐ ஆம் தி பஸ்ட்

வால்பையன் said...

பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விகளை கேட்கலாம்!

Philosophy Prabhakaran said...

// ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு //

தெரியுது... சரியாகிடும்...

வால்பையன் said...

Philosophy Prabhakaran said...
// ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு //

தெரியுது... சரியாகிடும்...//

90% ஆகிடுச்சு, இன்னும் 10% தான் மிச்சம், அதும் அடுத்த போஸ்டில் ஆகிடும் பாருங்க!

Romeoboy said...

வாங்க தலைவரே .. :)

மேவி... said...

வாழ்த்துக்கள் அண்ணே ... சென்னைல தான் இருக்கீங்களா ??? முடிஞ்சா சந்திப்போம்

மேவி... said...

"15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!"

சத்யம் தியேட்டர் எதிர்க்க கறி வைச்ச சோறே 17 / 20 ரூபாய்க்கு கிடைக்குதுங்க

Paleo God said...

வெல்கம் பேக்.

அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை திறக்கலாம் என்றிருக்கிறேன் //

சாப்டீங்களா?

வால்பையன் said...

மேவி .. said...
"15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!"

சத்யம் தியேட்டர் எதிர்க்க கறி வைச்ச சோறே 17 / 20 ரூபாய்க்கு கிடைக்குதுங்க//

கேபிள் சங்கர் அதை பத்தியெல்லாம் எழுத மாட்டிங்கிறாரே ஏன்? :)

ராஜ் said...

பாஸ்,
இப்ப தான் முத முறையா உங்க ப்ளாக்க்கு வரேன்....உங்கள நிறைய பின்னூட்டதில் பார்த்து இருக்கேன்....ஆனா உங்க ப்ளாக் வரது இது தான் பர்ஸ்ட் டைம்...
ரொம்ப & நிறைய எழுதி இருக்கேங்க.....கொஞ்ச கொஞ்சமா உங்கள படிக்கிறேன்...
நீங்க ரொம்ப சிம்பிளா எழுதரேங்க...I Like ur Style...

வால்பையன் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வெல்கம் பேக்.

அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை திறக்கலாம் என்றிருக்கிறேன் //

சாப்டீங்களா?//


உங்களது அறிவு பூர்வமான கேள்வியை பார்த்து மெய் சிலிர்த்தது, சாப்பிட்டேன் ரைட்டு, நீங்க கேட்டட்து காலைக்கா, மதியத்துக்கா இல்ல நைட்டுக்கா?

:)

வால்பையன் said...

நீங்க ரொம்ப சிம்பிளா எழுதரேங்க...I Like ur Style... //

ராஜ் இது சிம்பிள் இல்லைங்க

அவ்ளோ தான் எனக்கே தெரியும்.
மனசில் தோணுவதை அப்படியே டைப்பிருவேன்!

வால்பையன் said...

அருண்மொழித்தேவன் said...
வாங்க தலைவரே .. //

நான் வால்
தலைவர் இல்லைங்கோ! :)

மேவி... said...

இன்னொன்னு ... அதுக்கு பக்கத்திலையே லக்ஷ்மி ஆந்திரா மெஸ்ல 40 ரூபாய்க்கு அன்-லிமிடெட் மீல்ஸ் போடுறாங்க,

வால்பையன் said...

@ மேவி

இதுவும் அன்லிமிடேட் தான்.
டேஸ்ட் பட்டைய கிளப்புது, உடல் நிலை சரியில்லாத பொழுதும் சாப்பிட தூண்டுதுன்னா பாருங்களேன், ஒருநாள் மதியம் சூளைமேட்டுக்கு வாங்க, லஞ்ச் என் செலவு!

மேவி... said...

"நான் வால்
தலைவர் இல்லைங்கோ! :)"

இதே மாதிரி நானொரு வாட்டி ஒன்றை உங்களிடம் சொல்லி, அதுக்கு நீங்க சாட்ல சொன்ன பதிலை நினைச்சா இப்ப கூட சிரிப்பு சிரிப்பா வருது

மேவி... said...

கட்டாயம் வரேன் வால்ஸ்

வால்பையன் said...

மேவி .. said...
"நான் வால்
தலைவர் இல்லைங்கோ! :)"

இதே மாதிரி நானொரு வாட்டி ஒன்றை உங்களிடம் சொல்லி, அதுக்கு நீங்க சாட்ல சொன்ன பதிலை நினைச்சா இப்ப கூட சிரிப்பு சிரிப்பா வருது//

ஆனா நான் மறந்துட்டேனே! :)

மறதி சில நேரங்களில் மகிழ்ச்சியை நீடிக்கும் தல!

மதுரையில நான் பண்ண அலும்புக்கு திரும்ப நீங்க ஃப்ரெண்ட்லியா இருக்குறதே பெரிய விசயம்!

மேவி... said...

சாவை நோக்கிய வாழ்க்கைல எது முக்கியம்ன்னு எனக்கு தெரியும் தல. நட்புகள், உறவுகள் தான் முக்கியம் .... மரியாதை, அந்தஸ்து, கௌரவம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை

வால்பையன் said...

சாவை நோக்கிய வாழ்க்கைல எது முக்கியம்ன்னு எனக்கு தெரியும் தல. நட்புகள், உறவுகள் தான் முக்கியம் .... மரியாதை, அந்தஸ்து, கௌரவம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை //

குஜராத் உங்களை ஞானியாக்கும்னு நான் எதிர்பார்க்கல தல! :)

Anonymous said...

// நலமா, சாப்பிட்டியா
என்பதை விட// இப்படி கேட்டால் பதில் அளிக்க குறைந்த பட்சம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மணி அல்லது நாட்கள் எத்தனை?

வால்பையன் said...

// நலமா, சாப்பிட்டியா
என்பதை விட// இப்படி கேட்டால் பதில் அளிக்க குறைந்த பட்சம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மணி அல்லது நாட்கள் எத்தனை? /

இணையம் கிடைப்பதை பொறுத்து!

தீபாவளிக்கு துணி எடுத்தாச்சான்னு கேட்டா நீங்கள் கொள்ளும் கொள்ளும் மணி அல்லது நாட்கள் எத்தனை? அது மாதிரி தான் இணையத்திற்கு எப்போதாவது வர்றவனுக்கும்!

Anonymous said...

15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!// இது மும்பை மாதிரித்தான் ஆகிறது...அங்கேயும் இப்படித்தான். என்ன சென்னையில் மிடில் கிளாஸ் கௌரவக் குறைச்சலா ஃபீல் பண்ணினா இதிலயும் சாப்பிடமுடியாது.ஸ்டார் ஓட்டலுக்கும் போக முடியாது. வீட்ல தான் சமைக்கணும். சரவணபவன் ஒரு ஸ்டார் ஓட்டல்தான்....

என் வலையில்;
தேள் விஷம் - நாட்டுப்புற பாலியல் கதை! (18+)

Unknown said...

///நான் இழந்தது கொஞ்சம் பணத்தையும், நிறைய நேரத்தையும் தான், நம்பிக்கையை அல்ல.///

:))

நெல்லை கபே said...

நல்லா இருக்கு.இன்னும் இருக்கலாம்.பழைய வால்பையன் வந்துருவாருன்னு வெய்ட்டிங். உங்க பதிவுகளை எல்லாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு தடவை படிச்சி பாக்கறேன். பதிவுலகின் வரலாறு தெரிவதற்காக...


என் வலையில்;
உங்கள் நேரத்தை வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி? Time Management

kaduvul said...

பாவம் உன்னை நம்பி காசை போட்ட உன் பார்டனரை சொல்லனும்

உனக்கு இன்று இருக்கும் மன நிலையில் எந்த வித தொழில் செய்தாலும் ஓடாது. நீ ஒரு அழிக்கும் சக்தி, சும்மா சீன் போடனும்ன்னு ஏதாச்சும் விட்டேத்தியே பேசிகிட்டு இருக்கும் ஒரு லூசு

உன்னோட நான் நெருக்கி பழகி இருக்கிறேன். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.

பிழைக்கிற வழிய பாரு அடுத்தவனை குத்தம் சொல்றதை நிறுத்து

தன் வாழ்க்கையை ஒழுங்காக வைத்து கொள்ளாத நீ எல்லாம் எப்படி அடுத்தவனுக்கு நியாயம் சொல்லாம்??

kaduvul said...

உன் தன்னம்பிக்கை எல்லாதைய்ம் குப்பையில் போடு ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாத நீ எல்லாம் எப்படிடா அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய வரே?? உனக்கு மேல் மாடி காலியா?

kaduvul said...

இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற

தூ

Balakumar Vijayaraman said...

அண்ணே வணக்கம், நல்ல இருக்கீங்களா!

Anonymous said...

ஆஹா...உங்க வலைக்கு கடவுளே வந்திருக்கிறார்...நாராயணா!நாராயணா!...சேவிச்சுக்கிறேன்!

சில்க் சதிஷ் said...

வாழ்த்துக்கள் அண்ணே

எல் கே said...

மீண்டு(ம்) வருக

Arthanaari said...

அன்பின் வால்பையன் ,
உங்களுக்கு சில கேள்விகள்.

உங்களுக்கு பொதுவில் விவாதிக்க பிடிக்கும். ஆகையால் நானும் பொதுவில் கேக்கிறேன். நான் வலை பதிவர் இல்லை.

நீங்கள் பணம் நஷ்டம் என்று சொன்னீர்கள். அப்புறம் எதற்காக, பணம் பண்ணலாம் ஷேர் மார்க்கெட்-ல் என்று கூவி கூவி அழைத்தீர்கள்.? உங்களை நம்பி யாரும் வர மாட்டார்கள் என்பது வேறு. இப்பொழுது, பணம் நஷ்டம் வந்த வுடன், கடையை சாத்திவிட்டு, அடுத்த நபரிடம் வேலைக்கு சேர்ந்து விடீர்கள். உங்களை நம்பி பணம் போட்டிருந்தால், என்ன வாகி இருக்கும் என நினைத்து பார்த்தீர்களா?
நீங்கள் இப்பொழுது வேலை பார்க்கும் வேளையில், கடவுள் போட்டோ இருகிறதா? இருந்தால், வேலையை விட்டு விட்டு போய் விடவும்.
சில வருடங்களில், நீங்கள், உங்கள் பாஸ் ஆபீஸ்-ல் வேலை, அப்புறம், ஹோட்டல் பிசினஸ்(அதன் முடிவு என்ன ஆச்சு என்று கூறவும்.. அந்த முதலாளி என்ன ஆனார்), அப்புறம் ஷேர் மார்க்கெட்(அதன் நிலவரம் என்ன).., என பல வேளைகளில் , என் நிரந்தரம் இல்லாமல்,வேலை செய்கிறீகள்..!!!!!!

உங்கள் பெண்ணிற்கு ஸ்கூல்-ல் certificate தர மாட்டேன் என்கிறீர்கள். நல்லது. உங்களிடம் ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், ஸ்கூல் TC , மற்றும் எதாவது இருக்குமாயின், தயவு செய்து கிழித்து போட்டு விட்டு, அதை போட்டோ எடுத்து ப்ளாக்-ல் போடவும். உங்கள் பெண்ணிற்கே, நீங்க ஜாதி certificate தராதவர், நீங்கள் மேற் சொன்னவற்றை அப்பளை செய்யும் போது கண்டிப்பா கொடுத்து இருப்பீர். அதெல்லாம் உங்களுக்கு தேவை கிடையாது.
உங்கள் பெண்களின் பெயர் பற்றி கூறும் போது, நான் தமிழ் தமிழ் என்று எப்போ சொன்னேன் என்று தத்துவமாக பேசினீர்கள். வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. வேண்டுமானால், ஸ்கேன் செய்து அனுப்புகிறேன், உங்களால், அந்த பெயரை, இப்போ gazette மாற்ற முடியுமா.. தூய தமில் பேர் , அங்கவை, சங்கவை.

உங்கள் கல்யாணம் வீட்டில் பார்த்து பண்ணியதா? உங்கள் கல்யாண் அழைபிதழ் இருகிறதா? அதில் ஜாதி உள்ளதா? அப்பொழுது பொங்கி எழுந்தீர்களா? ஜாதி இல்லை எனில், மிகவும் நன்று. முடிந்தால், உங்கள் அழைபிட்ஹழ் , ப்ளாக்-ல் போடவும்.
நீங்கள் கல்யாணம் பண்ணும்போது தாலி கட்டி , இந்து முறை படி நடந்துதா? அப்பொழுது உங்கள் moolai வேலை செய்யவில்ல என்றால், இப்பொழுது வேலை செய்யுமா?


பண்ணும் வேலை எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது.. வருத்தமா இருக்கு. எங்கள் ஊரில் , இதற்கு பெயர் விளங்காதவன். (leg Dhaadha ) . அந்த பெயர் உங்களுக்கு வராது இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,நான் ungal மனம் நோக இதெல்லாம் செய்யவில்லை. நீங்கள் மற்றவரை வம்புக்கு இழுக்கும் போது, " இந்த கேள்வி -கு இன்னும் பதில் வரலை" என்று இறுமாப்புடன் சொல்லுவீர்கள். நான் கேட்கிறேன், இதற்கு பதில் உண்டா? இதற்க்கு அந்த ஆயி மூஞ்சி ராஜன் கூட சேர்த்துகிட்டு , என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

Xyz said...

welcome back..

Xyz said...

@Arthanaari

என்னங்க நீங்க.. இப்படி பல கேள்விய புட்டு புட்டு வைக்கிறிங்க, எங்க அண்ணன் வாலு மானஸ்தன் இதெற்கெல்லாம் எப்பிடி பதில் வருதுன்னு பொருத்திருந்து பாருங்க..

கேட்குறாங்களாம் கேள்வி!

Xyz said...

//பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விகளை கேட்கலாம்!//

சுஜாதா இறந்த பிறகு கேள்வி கேட்க யாருமில்லையே என ஏங்கிட்டிருந்தேன்..
உங்கள் சேவை எங்கள் சமூகத்துக்கு தேவை..

கேட்குற கேள்விக்கு கூகுல்ல பதில் தேடி தர மாட்டிங்களே.. ஏன்னா இணையத்துல இருக்கிற எல்லாம் நம்பகத்தன்மையுடையதா இல்லை அதான்.

Xyz said...

//அந்த ஆயி மூஞ்சி ராஜன்//

யாருங்க இவரு..? அந்த கடவுள் படத்துக்கு கீழே நின்னு கல்யாணம் பண்ணினாரே அவரா..? #டவுட்டு

சாகசன் said...

கேள்வி - 1 :
உங்கள மாதிரி மொக்கையா எழுத என்ன பண்ணனும் ?? ஏதாச்சும் தனியா ட்யூசன் போனுமா ??
கேள்வி - 2 :
கிரியேட்டிவிட்டி கிரியேட்டிவிட்டிங்கிறீங்களே அப்டின்னா என்னாங்கண்ணா ??
கேள்வி - 3:
தினமும் மொக்கை போட்டா மூள வளருமாமே ?? உங்களுக்கு வளந்துருக்கா ??

சாகசன் said...

@Arthanaari

தமில் பேர் , அங்கவை, சங்கவை.//

யெப்பா அவரு தமிழ்ல பேரு வக்கிறது இருக்கட்டும் முதல்ல நீங்க தமிழ ஒழுங்கா எழுதுங்க

தருமி said...

ada... chennai vasiya?

Unknown said...

சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?

Unknown said...

சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?

Sana said...

கேள்வி எல்லாம் கேட்க சொல்றிங்க..

தெரியாதத கேட்குறதும் சொல்லி கொடுக்கிறதும் நல்ல விஷயங்கள்தான்..

என்னிடமும் சில கேள்விகள் உண்டு அப்புறம் வாரேன்.

Sana said...

@Arthanaari

யோவ்!

அறிவுபூர்வமா ஏதாவது கேளுங்கப்பா என்று எவ்வளவு பெருந்தண்மையா அவரு சொல்லிருக்காரு அதெல்லாம் விட்டுபோட்டு

குழந்தைக்கு ஏன் அந்த பேரு வெச்சே,
பாஸ்போட்ட கிழி ரேசன் காட்ட கிழின்னு அவரு சொந்த வாழ்க்கைப்பிரச்சினையெல்லாம் கிளர்ரிங்க..

அது வேற இது வேறயா..

Xyz said...

//தருமி said...
ada... chennai vasiya?//

//Unknown said...
சென்னை வாசியா இருக்கட்டும் மொதல்ல மேல உள்ள எல்லாத்தையும் வாசியா?//

பெரியவாள அப்பிடியெல்லாம் சொல்லப்படாது,அதுவும் அவர் பேராசிரியர் வேறு.. அவர் தளத்துக்கு போய் பாருங்க பகுத்தறிவு கருத்தெல்லாம் சும்மா அள்ளி வீசியிருப்பார்.

Xyz said...

@ kaduvul said...
//இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற//

அவரே எந்தக்கடவுளும் வேணாம்னு அவர் பாட்ல இருக்கிறார்.. இதுக்குள்ள இந்தக்கடவுள் வேற!

Xyz said...

@kaduvul said...
//உனக்கு மேல் மாடி காலியா?//

ஏன் காலின்னு சொன்னா நீங்க வாடகைக்கு எடுக்க போறிங்களாக்கும்..

யூடுப்ல காமெடி சீன் பார்த்து சிரிக்கிறதவிட இங்கவந்தா அதிகம் சிரிக்க முடியும் போலயிருக்கே.

ஷர்புதீன் said...

welcome back vaal!

வால்பையன் said...

பதில் போட்டாயிற்று!

கேள்வி பதில் (29.01.2012) http://valpaiyan.blogspot.com/2012/01/29012012.html

Thuvarakan said...

vtthuvarakan.blogspot.com

இந்திரா said...

Welcome back

அப்டினு இப்பயாவது சொல்லலாமா?
என்னைய மாதிரியே நீங்களும் அப்பப்ப நா வந்துட்டேன்.. நா வந்துட்டேன்னு சொல்றீங்க.. அதான் கேட்டேன்.
ஹிஹி..

aotspr said...

மௌனகுரு ...உண்மை கருத்தை கூறும் படம்......."நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

!

Blog Widget by LinkWithin