நேசம் + ப்ரணவ பீடம் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை


 நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் திரு ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
 இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில்  உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி.  இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும். 

நிகழ்ச்சி நடக்கும் இடம் : 

ப்ரணவ பீடம், 
பொன்னுரங்கம் ரோடு, 
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம் 

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை


இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.
 


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com**************************

மன்னிக்கவும் ஓம்கார், நான் சுவாமி என்ற பதத்தை பயன்படுத்துவதில்லை!

5 வாங்கிகட்டி கொண்டது:

கோவி.கண்ணன் said...

//மன்னிக்கவும் ஓம்கார், நான் சுவாமி என்ற பதத்தை உபயோகிப்பதில்லை!//

அது போல் 'உபயோகிப்பதில்லை' என்பதையும் பயன்படுத்துவதில்லை என்று மாறுங்கள்.

பயனிருக்கும் போது ஏன் நீங்கள் இன்னும் 'உப யோகி'யாக இருகிறீர்கள்

:)

வால்பையன் said...

பயன்படுத்தியாச்சுங்கண்ணா!

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

இந்திரா said...

Next announcement???

வழக்கமான பதிவுகள் எப்பங்க வரும்??

இந்திரா said...

//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
//


அய்யயோ... இது இன்னும் முடியலையா???

!

Blog Widget by LinkWithin