பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.
மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

ஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540

9 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ஸ்டாப் லாஸ் என்ற பதத்தைப் பற்றி கொஞ்சம் விளக்க இயலுமா?

Unknown said...

ஃபாலோ அப்க்காக!

பல்பு பலவேசம் said...

வியாபார பையன்னு மாத்திடு!ஒரே போர்!ஜாலிய எதனா படிக்கலாம்னா இங்கயும் பணமா?ஆள உடுங்க!

பல்பு பலவேசம் said...

பீ.ஜேவிடம் காசு வாங்கி கொண்டு நாத்திக கருத்து எழுதுவதை நிறுத்திய ராஜன்!ஐயோ!
http://picturepush.com/public/7090793

Unknown said...

வால்பையன் அவர்களே..
கமாடிட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
என்னுடைய வலை பூவிற்கும் வாருங்கள்
http://mydreamonhome.blogspot.com

Suresh Subramanian said...

nice post about share market.... www.rishvan.com

பட்டுக்கோட்டையான் said...

Nalla pathivu. Neengal tharpoluthu athigam yeluthuvathillai.

ATOZ FOREX DETAILS said...

நீங்கள் சொல்வது சரியான ஒன்று.

ATOZ FOREX DETAILS said...

கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :

ஓட்டுனர் எப்படி ரிஸ்க் எடுக்கிறார் பார்த்தீர்களா? தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம்? விமானம், ரயில், வாகனத்தில் செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம்? ஆனால் இந்தவகை ரிஸ்க் எல்லாம் தேனில் நனைத்த மருந்து மாதிரி, ரிஸ்க் ரிஸ்க் தான் . எடுத்துதான் ஆக வேண்டும்.

அதுபோல்தான் மார்க்கெட்டிலும் கட்டாயம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் தயவு செய்து...மறுபடியும் உங்கள் மேல் அக்கறையோடு சொல்கிறேன், தயவு செய்து நம்பாதீர்கள். ரிஸ்க்கின் அளவைக் குறைக்கலாமே ஒலிய, கண்டிப்பாக ரிஸ்க் எடுக்காமல் டிரேடில் பணம் சம்பாதிக்கவே முடியாது.

ரிஸ்க் என்பது என்ன?

ஒரே வரியில் சொன்னால் வரலாம்,வராமலும் போகலாம், நடக்கலாம் நடக்காமலும் போகலாம்,படித்தவுடன் வேலை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்,காப்பாற்றலாம் இல்லை காப்பாற்றாமல் கூடப் போகலாம். இது தான் ரிஸ்க்.
நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 30% ரிஸ்க் என்பது 30,000 ரூபாய். இந்த 30,000 ரூபாய், 31,000.....32,000....33,000...40,50,60, 70,000 ரூபாய் லாபமாகக் கூட மாறலாம் அல்லது 29,000...28,0000....27,20,15,5000.....500...100...என்று நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்து 30,000 ரூபாயும் இல்லாமல் கூட போகலாம். ஓபன் ஆகச் சொன்னால் இதுதான் ரிஸ்க் என்பது. நான் ஓபன் ஆகச் சொல்லிவிட்டேன், மற்றவர்கள் தேன் கலந்து கொடுப்பார்கள் நம்ப வேண்டாம்.

இதுதான் ரிஸ்க் என்பது, நீங்கள் முதலீடு செய்யும் போதே கட்டாயம் இவ்வளவு சதவீதம் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லவும், இவ்வளவு ரிஸ்க் எடுத்தால் என்ன லாபம் கிடைக்கலாம் என்பதைக் கேட்கவும் கட்டாயம் மறக்கக் கூடாது. இதை விட முக்கியமான விஷயம் உங்கள் முதலீடு உங்கள் பெயரில் தான் 100% இருக்க வேண்டும்,நிறைய பேர் ஏமாருவது இங்குதான். என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம். பாஸ்வோர்ட் விபரங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்க வேண்டும், மெயில் ஐ டி ( MAIL ID ) உங்களுடையதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவர்கள் பாஸ்வோர்ட் மாற்றினால் கூட உங்கள் மெயில் ஐ டி-க்கு வந்து விடும். உங்கள் மெயில் ஐ டி பாஸ்வோர்ட் கட்டாயம் கொடுக்கக் கூடாது. காண்டாக்ட் நம்பர் கூட உங்கள் நம்பராகத் தான் இருக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அக்கௌன்ட் உங்கள் பெயரில் இருந்தால் தான்,பணம் எடுக்கும் பொழுது உங்கள் பேங்க் அல்லது டி மேட் அக்கௌன்ட்க்கு பணம் வரும். அது மட்டுமின்றி, உங்களால் தினமும் கண்காணிக்க முடியும், ஒருவேளை உங்கள் டிரேடர் 30% க்கு மேல் ரிஸ்க் எடுத்தால் நீங்கள் போதும் என்று நிறுத்தி,உங்கள் மீதம் உள்ள 70% பணத்தையாவது மேலும் நஷ்டம் இல்லாமல் காப்பாற்ற முடியும். சந்தேகம் இருப்பின் என்னை மொபைலில் அழைக்கலாம். முடிந்தவரை அவர்களின் ஆலோசனையுடன் நீங்களே டிரேடு செய்வதே நல்லது. இல்லையெனில் நீங்கள் கற்கும் வரை அவர்கள் டிரேடு செய்ய அனுமதிக்கலாம். ஆனால் தினம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

நான் மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க் இல்லாமல் டிரேடு செய்வதோ, லாபம் பெறுவதோ கட்டாயம் முடியாவே முடியாது. ஆனால் உங்கள் ரிஸ்க் அளவை 100% முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.

நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.

50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே . மற்ற டிரேடர் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் தான் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் பணம் கொட்டும் என்று யார் தேன் குழைத்து சொன்னாலும் நம்பவேண்டாம்.
http://atozforexdetails.blogspot.in/
9500535386.

!

Blog Widget by LinkWithin